வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மத்திய அமைச்சர் வயலார் ரவி, சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு, அவ்வளவுதான்.
இலங்கை அரசின் போர் நிறுத்தம் குறித்து?
இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. உலக நாடுகளும் இதை வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். இதனை ஏற்று உலக நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்தியது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த போர் நிறுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி தான்.
வேறு நாட்டு எம்.பி. இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் இந்திய அரசை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவரின் இந்த தேர்தல் பிரச்சாரம் இந்திய சட்ட திட்டத்துக்கு எதிரானது.
Thirumalai vasan
இந்தியா மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. (செய்தியாளர் அருட்செல்வன் என்ன குழப்பகிறார். இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டதா? ஐயா து}ங்கியது போதும் விழித்தெழுங்கள். செய்திகளைத் தரும்போது பயனுள்ளதா என்று முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். செய்தியை அனுப்பவேண்டும் என்பதற்காக வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மத்திய அமைச்சர் வயலார் ரவி போன்றொரின் உளறல்களைச் செய்தியாக்கி விடாதீர்கள்.