நாமக்கலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ’’எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன்.
இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.
இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?
1971 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?
இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ,
ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்’’ என்று பேசினார்
ramesh
பங்களாதேசுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததும் ஜெயலலிதாதான். இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை நடத்தியவரும் இவதானாம். ஏன் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியவரும் இவரே. வெகுவிரைவில் இந்தியாவின் பிரதமராய் வரவிருக்கும் இவரால் ஏன் தமிழீழத்தை பறித்துக்கொடுப்பதில் என்ன சிக்கல். சந்திரனைப்பார்த்து ஏதோ குலைத்ததாம். கிடைக்குமா?
மாயா
ரமேஷ் நீங்கள் தப்பாக புரிந்துள்ளீர்கள்?
ஜெ சொல்வது இந்திராவும் ராஜீவும் செய்ததை, தனக்கு சாதமான தலைமை வந்தால் ஏன் செய்ய முடியாதென்பதே? அவரது பேச்சு நிச்சயம் தமிழரைக் காக்கும்.ஜெக்கு சார்பாக இருந்த சோ போன்றவர்கள், தா.பாண்டியனால்தான் இவர் இப்படி மாறியிருக்கிறார் என்று விசனமாக இருக்கிறார்கள்.இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, தமிழருக்கு சாதகமான குரல்களை புலிகள் தகர்த்துவிட்டனர். புலிகள் இல்லாமல் போனாலும், இவர்களது கரிசனையை ஏனையவர்கள் காக்க வேண்டும். அது தமிழர்களுக்கான உரிமைக்காவது குரல் கொடுக்கும். இந்தியாவை மீறி உலகின் எந்த ஒரு நாடும், ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிடாது என்பதை நாம் மறக்கக் கூடாது. ஜெ தமிழர்களுக்காகத்தான் பேசுகிறாரேயன்றி புலிகளுக்காக அல்ல . இந்தியா மட்டுமல்ல , உலகமே அந்த கருத்தியலையே கொண்டுள்ளது.
thamba
1.இந்திய ராணுவம் அங்கேதான் நிக்கிறதே!! பிறகென் தாமதம்??
2.நீங்கள் சொல்லும் தனி ஈழம் என்பதும் தமிழீழம் என்பதும் வித்தியாசமானதோ??.
3.புலிகளுக்கு இந்தியாவையோ இந்திய ராணுவத்தையோ பிடியாதே?அப்புறம் அது எப்படிச் சாத்தியமாகும்??
msri
தனிஈழம் அமைவதற்கு>தன்சொல்லைக் கேட்கும் மத்திய அரசு வரவேண்டும் என்கின்றார் செல்வி யெயலிதா! அதற்கு தோழி சசிகலாவின் தலைமையிலான மத்திய அரசல்லோ வரவேணடும்!