பேராதனை பல்கலைக்கழகம் இணைந்து சுகாதார கற்கை நெறிக்கான மாணவர்களுக்கு செயலமர்வு பயிற்சிக்காக பேராதனை போதனா வைத்தியசாலையினை உபயோகிக்க அனுமதிக்காமையை எதிர்த்து பேராதனை போதனா வைத்தியசாலையை சேர்ந்த 186 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நேற்றுமுன்தினம் முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெளிநோயாளர் பகுதியிலும் நோயாளர்களை பார்வையிடவில்லை. இதனால் நோயாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.எனவே சுகாதார அமைச்சு இதற்கு தீர்வு காணவேண்டுமென மருத்துவர்கள் கோரியுள்ளனர்.