வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மட்டக்களப்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

vavu-stu.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வன்னியில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப்பொருட்களை வழங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு நகரப்பகுதியிலும், காத்தான்குடி, ஆரையம்பதி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகமான மக்கள் பொருட்களை வழங்கிவருகின்றனர்.

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களும் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட செயலகம் ஊடாக வன்னிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாவட்டத்தில் இயங்குகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களும் பெருமளவிலான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thurai
    thurai

    இலங்கையிலும்,உலகின் பல பாகங்களிலிருந்தும் உதவிகள் கிடைக்கும். வ்னனி மக்களின் துன்பம் துயரஙகள் தீரும்.

    புலத்தில் வன்னி மக்கள், வண்ங்காமண், அடங்காபற்று,என்று கூறிக்கொண்டு செயற்படும் உலகத்தமிழர் கொள்ளையமைப்புகள் இனியாவது தமது துரோகச் செயலைக் கைவிடுவார்களா.

    துரை

    Reply