‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ் அவசர கோரிக்கை

Douglas Devananda வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள்விடுத்துள்ளார். இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழ ங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யுமாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • ramesh
    ramesh

    ஐயா அமைச்சர் அவர்களே. அகதி முகாம்களில் தவிப்புடன் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு-வெளிநாட்டிலுள்ள உறவுகளிடம் பணம் பெற்றுத்தருமாறு சிலர் அளுத்தம் கொடுப்பது உண்மையென்றால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே முதலில் இங்கு இடர்படும் மக்களின் துயரைத் துடையுங்கள். பாவம் அப்பாவி மக்கள்.

    Reply
  • thaya
    thaya

    அன்புடன் அமைச்சர் அவர்களுக்கு…
    நீங்கள் உங்கள் அமைச்சு சார்பாகவும் இன்னும் பல உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இன்ற தமிழ் மக்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை. அரசுடன் சார்ந்திருக்கும் உங்களைளே நம்ப வேண்டிய துர்ப்பாகிய சூழல். என்ன செய்வது?.. தமிழ் மக்ளை நிவாரணங்களுக்காக அடுத்தவர்கள் காலடியில கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது எமது போராட்டம். வெளி நாட்டு தொடரபுகளுக்கு நீங்கள் வங்கிக்கணக்கோ அல்லது வெறு ஏதாவது ஏற்பாகளோ செய்து தரும் பட்சத்தில் எம்மால் இயன்ற உதவி புரிய முடியம். ஆனால் அது மக்களை உரிய முறையில் உடனடியாக போய் சேர வேண்டும் என்பதே எமது விருப்பம். இது விடயத்தில் நாம் உங்களை நம்பித்தான் ஆக வேண்டும். புலிகளை எதிர்ப்பவர்கள் புலிகளுக்கு பணம் கொடுப்பதில்லை. ஆகவே உங்களை போன்றவர்களக்கு ஊடாக நாம் நிதியதவி செய்வதில் எம்போன்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. புலிகளின் யுத்தத்திற்கு கொடுத்த போது அதில் அழிவுதான் மிச்சம். அழிவில்லாத
    உங்கள் முயற்சிக்கு அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுத்தால் எமக்கு திருப்தி ஏற்படும். உங்கள் முயற்சிக்கு பூரண ஆதரவு!இதே வேளையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் உடனடியாக உருவாக்க நீங்கள் உழைக்க வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தற்போதைய நிலையில் ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக வங்கிக் கணக்குகளை அறிவித்து அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக எம் மக்களுக்கு உதவுவதை விட வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதை வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு அறிவிப்பது சாலச் சிறந்தது. அரச அதிபரே என்னென்ன வேலைத் திட்டங்களைச் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து அதனை ஒவ்வொரு அமைப்பிடமும் பிரித்துக் கொடுத்து விடலாம். அதனை அவ்வமைப்புகள் செயற்படுத்தலாம். இதன் மூலம் தேவையில்லாத குற்றச்சாட்டுகள் மற்றும் புரளிகளைத் தவிர்க்க முடியும். அத்துடன் உதவிகளும் சீராக வீண் விரயங்கலில்லாமல் அம்மக்களைச் சென்றடையும்.

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    Inner City Press: On Sri Lanka, I wanted to know in light of the Secretary-General’s announcement last week that there will be a mission into the conflict zone by a humanitarian assessment, is that going forward or has it, as some of the reports have it, been blocked by the Government?
    Spokesperson Montas: This is what John Holmes is trying to arrange.
    Inner City Press: Currently, it was announced that it had been agreed to. Was it then un-agreed to?

    Spokesperson Montas: It was agreed to. We don’t know where things are at this point. Mr. Holmes is there and he is the only one who has the answer to your question

    Reply