இலங்கை பிரச்சினை குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டினைக் கண்டித்து இன்று லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய தூதரகத்தின் வீசா வழங்கும் பகுதி கட்டிடத்தினுள் ஆர்ப்பாட்டகாரர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கையில் இராணுவ நடடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
s.s.ganendran
அத்துமீறி உள் நுளைவதும் புலம் பெயர் புலிகளுக்கு அகிம்சைதானே இதில் என்ன ஆச்சரியம் ?
Kullan
மக்களை வெளியில் விடுமாறு சொல்ல உங்களுக்கு வக்கில்லை மற்றைய நாட்டு தூதரகத்துக்குள் நுழைய என்ன உரிமை இருக்கிறது?
thurai
புலிகளிற்கு ஓர் அறிவுரை. முதலில் தமிழகத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து விடுங்கள். அதன் பின் தமிழீழம் தானாகப் பிறக்கும்.
துரை
azan
லண்டனில இண்டைக்கு சரியான காத்தும் மழையும் குளிரும். அதாலை கொஞ்ச நேரம் உள்ளுக்குப் போய் “வோம் அப்” பண்ண போனவர்களை அடிபிடிக்கு வந்திட்டாங்கள் எண்டு தூதரக அதிகாரிகள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்கள் எண்டு புலி அறிககை விட்டாலும் விடும்.
இப்பவாவது நேரு சிலை உடைப்பின் மர்மம் தூதரககம் வெளிவிடாதா??
செல்வன்
இந்திய அரசுக்கு எதிராக கோஷம் இட்டு தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாவலர்கள் தடுத்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பலர், தூதரகத்தின் மீது கல் வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.
புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு செய்யும் உதவிகளை நிறுத்த வேண்டும் என வற்புறுத்தினர். இந்திய அரசு இலங்கைக்கு அளிக்கும் உதவியால் தான் ஏராளமான தமிழர்கள் செத்து மடிவதாக கருத்து தெரிவித்தனர்.
msri
புலம்பெயர் இளம்சந்ததிக்கு போராட்டப் பயிற்சி அளிக்கின்றார்கள்! புலம்பெயர் அரசுகளின் பொறுமையையும் சோதிக்கின்றார்கள்! இது நல்லதற்கல்லல!
சட்டம்பிள்ளை
தூதரக வாசல்கள் ஊடாக அத்துமீறி நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 5 பேரை பொலிஸார் கைதுசெய்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் இந்திய தூதரகம் விபரித்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
thevi
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஆசியர்களைக் கொண்டே அடிப்பித்த சந்தோசம் ஐரோப்பியருக்கு! இது ஒன்றே போதாதா எல்லாக் கூத்துக்களையும் நிறுத்தி உள்ளே போட!
thevi
தூதரக வாசல்கள் ஊடாக அத்துமீறி நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 5 பேரை பொலிஸார் கைதுசெய்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் இந்திய தூதரகம் விபரித்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.”
ஊரில் உள்ள இனந்தெரியாக் கலாச்சாரத்தினைப் போல் எல்லாம் அமுங்கி விடும்.
“வரலாற்று உண்மைகளையும், அனுபவங்களையும் இந்திய அரசு ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ, சீன செல்வாக்கை முறியடிப்பதற்கோ, வன்னியில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற தவறை இந்தியா செய்யக்கூடாது. இந்தியா அவ்வாறு செய்யுமாக இருந்தால், அது புலிகளுக்கு மீண்டும் புத்துயிரளித்து, ‘பாம்புக்கு பால் வார்த்த கதை’யாகவே முடியும். பிரபாகரனின் தணியாத இரத்த தாகத்துக்கு ராஜபக்சாக்கள் மட்டுமின்றி, காந்திகள், சிங்குகள், முகர்ஜிகள், மேனன்கள், நாராயணன்கள் போன்றோரும் நிறையத் தேவைப்படுகின்றனர் என்பதை மிகப்பெரிய இந்திய நாட்டின் தலைமை உணர்வது தான் இப்போதைய அவசர தேவையாகும்.”
பார்த்திபன்
//லண்டனில இண்டைக்கு சரியான காத்தும் மழையும் குளிரும். அதாலை கொஞ்ச நேரம் உள்ளுக்குப் போய் “வோம் அப்” பண்ண போனவர்களை அடிபிடிக்கு வந்திட்டாங்கள் எண்டு தூதரக அதிகாரிகள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்கள்.- azan//
அதானே அந்தக் காத்தும் மழையாலை கண்ணாடியும் உடைஞ்சுவிட அதை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்ததாக தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டார்கள். இதை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.