இலங் கையின் மோதல் வலயத்திலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதர ஆரம்பித்திருப்பதாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த அகதிகளை முகாம்களுக்கு அனுமதிக்க முன்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர். தினமும் சராசரியாக மூன்று, நான்கு அகதிகள் தமிழக கரையில் படகு மூலம் வந்து இறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் அநேகமானோர் மோதல் வலயத்திலிருந்தே வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இதுவரை வரவில்லை. 45 – 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும் 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே வந்துள்ளனர். நாகபட்டினம் பகுதியிலேயே தற்போது அதிகமானோர் வந்திறங்குகின்றனர் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அகதிகளென்ற போர்வையில் புலி உறுப்பினர்கள் ஊடுருவுவதை தடுக்க தமிழக கரையோர நிர்வாகம் அதிக விழிப்புடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த அகதிகள் கூறுவது துன்பங்கள் , மரணங்கள் பற்றியதாகவே உள்ளது. சண்டையில் ஏற்படும் துன்பங்களுக்கு அப்பால் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவோ குடிக்க நீரோ இல்லை என்று அவர்கள் கூறுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Kusumpan
தமிழ் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை. என்றும் எதிரியுடனேதான் கூடியிருக்க விரும்புகிறார்கள். இது என்ன பழக்க தோசமா? சிங்களவருடன் சேர்ந்து வாழுவோம் என்று அடம் பிடித்து தமிழ்மக்களை அடைவு வைத்தார் இராமநாதன். இவருக்கு சேர் பட்டம் வேறு….. . இப்பகூட மக்கள் எதிரிகள் யார் என்று அறியாமல் புலிகளுடன் போய் இருந்தார்கள். இப்போ இந்தியாவுக்கா? எப்பதான் உண்மையை உணரப்போகிறார்களோ? இந்தப் பாவப்பட்ட மக்கள்
azan
நிச்சயமாக இவர்கள் புலிகளுடன் நெருக்கமானவர்கள்தான். அதால்தான் காயம் படாமலும் இருக்கிறார்கள்.
msri
இது தமிழ்மக்களின் பழக்க தோசமல்ல! இந்தியா எம் தாய்நாடு> தொப்புள்கொடி உறவு என கற்கவைத்த தமிழ்த்தேசியத்தின் (ஏகாதிபத்திய அடிமைப் புத்தி)குறைபாடு!