புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு விநி யோகிக்கவென விமானம் மூலம் மாத்திரம் 21 திகதி முதல் நேற்று வரை 350 மெற்றிக் தொன் சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தரைவழியாக பொருட்கள் மற்றும் உலர் உணவுகளை விமானப் படையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
பொது மக்களுக்கு தேவை யான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப்படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறிகள் மூலமும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கென சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சமைத்த உணவுப் பொதிகள், பேக்கரி உற்பத்திப் உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் போத்தல்கள், குடிபான வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 350 மெற்றித் தொன் பொருட்களையே விமானப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.