நமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவுங்கள்…

cvili.jpgஇடம் பெயர்ந்துவரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது அணிந்த பழைய ஆடைகளை வழங்க வேண்டாம். அவர்களுக்கு புதிய ஆடைகளையே வழங்குங்கள் என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது எவ்வாறு நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி னோமோ அதேபோன்று தென் பகுதி மக்களின் மனிதாபிமான உணர்வுகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுனாமியின் போது நாம் பழைய அணிந்த ஆடைக ளையே அவசர தேவைக்காக வழங்கினோம். ஆனால் வன்னியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களுக்கு அப்படி வழங்காமல் புதிய ஆடைகளையே வழங்குவோம். அவர்கள் எமது மக்கள் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலர் உணவு பொருட்கள், பிஸ்கட்வகைகள், குடிநீர் போத்தல்கள், பால்மா, திரவப்பால் பக்கற், குழந்தைகள் பால்மா, குழந்தைகளுக்கான பால் போத்தல், பற்பொடி, பற்பசை, பிரஷ்கள், டவல்கள், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள்,  பெண்களின் உள்ளாடைகள், நுளம்பு வலை, சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்க முன்வாருங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பிரதான சேகரிப்பு நிலையமாக பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபமும் இயங்குகிறது.

உதவ விரும்பும் அமைப்புகள், தனி மனிதர்கள், நலன் விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலோ, மாவட்ட செயலகத்திலோ, உதவி பிரதேச செயலகத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளையும் அழைத்து அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா மனிதாபிமான உதவி குறித்து விளக்கமளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தொடர்ந்தும் உண்ணாவிரதமென்றும் ஊர்வலமென்றுமிருக்கும் புலத்துப் புண்ணாக்குகள் அந்த மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காத போது, தென்னிலங்கை மக்கள் சுனாமியின் போதுதவியது போல் இன்றும் உதவுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த மனப்பான்மை என்றும் தொடர, தென்னிலங்கை மக்களும் அரசும் இணைந்து தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க முனைப்புக் காட்ட வேண்டும். சகல இனங்களும் எல்லா உரிமைகளும் பெற்று சகோரத்துவத்துடன் உழைத்து, ஒரு உன்னதமான இலங்கையை வேறுபாபடுகளின்றி கட்டி எழுப்ப வேண்டும்.

    Reply
  • tax
    tax

    ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை ‘மீட்பின்” பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

    இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் ‘மீட்பு” ‘மனிதாபிமான நடிவடிக்கை” என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

    தொடரும் ஒரு இனச் சுத்திகரிப்புக்கு ஏற்ப, பிடித்த மக்களை ‘அகதியாக” காட்டி உதவக் கோருகின்றனர் கொலைகாரர்கள். சொந்த உற்றார் உறவினர்கள் கூட உதவமுடியாத வகையில், ஒரு திறந்தவெளிச் சிறையில் அந்த மக்கள். அந்த மக்களுக்கு உதவ முன்வரும் உற்றார் உறவிரை தடுக்கும் பாசிசக் கும்பல், உதவு என்று கோருகின்றது. அங்கு அந்த சொந்த உறவுகள் உதவக் கூடாது என்று ஆணையிட்டு அரச பாசிசம், புலம்பெயர் மண்ணிலும் உள்நாட்டிலும் அரசியல் செய்யவே உதவியைக் கோருகின்றனர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Tax உங்கள் “ஓநாயின் முதலைக் கண்ணீர்” சிறுகதை நன்றாக இருக்கின்றது. எனி நீங்கள் நாவலும் எழுதலாமே ??

    இன்று உலகம் இணையத்தினூடாக உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது. அதனால் எவரும் எவரையும் ஏமாற்றி விட முடியாது…..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குளத்தை உடைப்பவர்கள் குடிதண்ணீரில் நஞ்சை கலந்துவிடுபவர்கள் நித்திரையில் கொலை செய்பவர்கள் அப்பாவி குடும்பத்தை தூக்கில் இட்டு பலநுhறு மாணவ மாணவிகளை காவுகொடுத்தாவது அரசை உலகத்திற்கு “பயங்கரவாத அரசு” என காட்ட முற்படுபவர்கள் இன்னும் எம்மினத்தில் இருக்கும் வரை…..
    நாட்டுமக்களின் நன்மை தீமைகளுக்கு பதில் கூறவேண்டிய அரசு முட்கம்பி மட்டுமல்ல அவர்களின் பாதுகாப்புக்கு இன்னும் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும் நாம் புரிந்துகொள்ளக்கூடியதே!
    ஒரு இனத்தில் அக்கறையுள்ளவன் முதலில் அந்தஇனத்தில் தோன்றிய நச்சுபூண்டுகளை துப்பரவு செய்தல் வேண்டும். ஆரோக்கிய சமூகமாக ஜனநாயதன்மையுள்ளவர்களாக எம்மை முன்நிறுத்தி கொண்ட பின்பே எமது வேண்டுகோளையோ கோரிக்கைகளையோ உலகசமூகத்திடம் முன்வைக்கமுடியும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // tax on April 25, 2009 8:21 pm ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை ‘மீட்பின்” பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

    இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் ‘மீட்பு” ‘மனிதாபிமான நடிவடிக்கை” என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

    தொடரும் ஒரு இனச் சுத்திகரிப்புக்கு ஏற்ப, பிடித்த மக்களை ‘அகதியாக” காட்டி உதவக் கோருகின்றனர் கொலைகாரர்கள். சொந்த உற்றார் உறவினர்கள் கூட உதவமுடியாத வகையில், ஒரு திறந்தவெளிச் சிறையில் அந்த மக்கள். அந்த மக்களுக்கு உதவ முன்வரும் உற்றார் உறவிரை தடுக்கும் பாசிசக் கும்பல், உதவு என்று கோருகின்றது. அங்கு அந்த சொந்த உறவுகள் உதவக் கூடாது என்று ஆணையிட்டு அரச பாசிசம், புலம்பெயர் மண்ணிலும் உள்நாட்டிலும் அரசியல் செய்யவே உதவியைக் கோருகின்றனர்.
    //
    உங்களைப் போன்றவர்களது பரபரப்புகளை தடுக்கவே அரசு போட்டுள்ள தடுப்பு.

    வந்தவர்கள் மனநோயாளர்கள் போல் இருக்கின்றனர் என்று புலி தளம் ஒன்றில் போட்டிருக்கிறார்கள். அதற்கு தாங்கள்தான் காரணம் என்பதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தளவு புத்திசாலிகள். வந்தவர்கள் எல்லாம் நலிந்து போய் வேற இருக்கினமாம். கனடாவில இருந்தில்ல வந்தவங்க. டையட்டுக்காக ( உடல் மெலிய) சாப்பிடாம விரதம் இருந்தவையாம்?

    Reply