மோதல் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக இந்தியா இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு நேற்று அனுப்பியுள்ளபோதும் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் “தெரிவுகள்’ மட்டுப்படுத்தப்பட்டவையென்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
என்.டி.ரி.வி. தொலைக்காட்சி சேவைக்கு நேற்று வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ள ஆனந்த் சர்மா.
அழுத்தம் என்பது பற்றி இங்கு கேள்விக்கு இடமில்லை. எமது கவலையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இதனைவிட நாம் மேற்கொள்ள வேண்டிய வேறு மேலதிகமான இராஜதந்திர நடவடிக்கை என்ன? நாம் இராஜதந்திர மார்க்கத்திலான சகல வழிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளோம் என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூறுவதை இலங்கை செவிமடுக்குமா? என்பது பாரிய கேள்வி என்று என்.டி.ரி.வி. கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள இறுதி கட்ட நடவடிக்கை தொடரும் என்றும் சர்வதேச அழுத்தத்தினால் அதனை கைவிடப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவாக கூறியிருந்ததையும் என்.டி.ரி.வி. சுட்டிக்காட்டியுள்ளது.