சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் சுதந்திரமாக வாழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மகாபொல புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தை முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி தான் அறிமுகப்படுத்தினார். அவர் இன்று எம் மத்தியில் இல்லை. என்றாலும் அவரது திட்டத்தை நாம் கைவிடவில்லை. அது நல்ல திட்டம். யார் என்ன திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் அத்திட்டங்களின் மூலம் நாட்டு மக்கள் அடையும் பலன்களைப் பொறுத்தே நாம் தீர்மானங்களை எடுக்கின்றோம். நாம் நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டுதான் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்றோம். தேர்தல்களை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்தால் அவை நாட்டை இருண்ட யுகத்திற்கே விட்டுசெல்லும். அப்படியான முடிவுகளை நாம் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.
இப்போது புலமைப்பரிசிலைப் பெறும் பட்டதாரி மாணவ மாணவிகள் பிறந்த காலம் முதல் பயங்கரவாதப் பிரச்சினையை அனுபவித்திருக்கிறார்கள். பிரபாகரனுக்கு நிர்வாகத்திற்கென ஒரு பிரதேசமும் எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் அச்சம், பீதியுடனேயே வாழவேண்டிய சூழல் நிலவியது. நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறோம். எழுதிப் பிரிக்கப்பட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.
உலகிலேயே அதிகளவு பணயக் கைதிகளை குறுகிய காலத்தில் எமது படைவீரர்கள் வெற்றிகரமாக விடுவித்திருக்கின்றார்கள். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகில் விடுவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதனால் பல்கலைக்கழக கல்வியைத் துரிதமாகப் பூர்த்தி செய்து விட்டு மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் முன்வர வேண்டும். புதிய நாட்டை கட்டியெழுப்பும் தற்போதைய சூழலில் பட்டதாரிகளின் சேவை எமக்கு மிகவும் அவசியமானது. ஒரே தடவையில் 45 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குச் ஏற்கனவே சேர்த்திருக்கிறோம். ஆயினும் அவர்களிடமிருந்து உச்ச சேவை பெறப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
thurai
முழு இலங்கையையும் ஒரு கொடியின் கீழ் கொண்டுவருவதற்கு உதவியவ்ர் புலியின் தலைவர் பிரபாகரனேயாகும். சிங்கள மக்கள் என்றும் பிரபாகரனிற்கே நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
ஈழத்தமிழரின் இன்றைய நிலக்கு புலத்தில் வாழும் புலியினை வளர்த்தெடுத்த தமிழரே பொறுப்பேற்கவெண்டும். இப்போதாவது புலியின் ஆதரவாளர்களே துரோகிகள் யாரென்பதை புரிவீர்களா?
துரை
Rohan
ஒரு கொடியின் கீழ் வாழலும் வாழ வைக்கப் படுதலும் இரு வேறு விடயங்கள், ஜனாதிபத்தித்துமா.
புலியும் ஒரு கொடியின் கீழ் தமிழரை வாழ வைக்கப் போய் தான் இப்போ இங்கு வந்துநிற்கிறது.
உங்கள் அபிமானப் பெறாமகள் நிருபமா ராஜபக்ச குடும்பம் தான் பண்டாரநாயக்கவின் புரட்சிகரக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதாக் வேறு பிரகடனம் செய்துள்ளார் என்பதும் அந்தப் புரட்சிகரக் கொள்கைகள் எவை என்றும் தமிழ் மக்கள் அறிவர்.
sullan
முழு இலங்கையையும் ஒரு கொடியின் கீழ் கொண்டுவருவதற்கு உதவியவ்ர் புலியின் தலைவர் பிரபாகரனேயாகும். சிங்கள மக்கள் என்றும் பிரபாகரனிற்கே நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்
What is the logic of this