புலிகளிடமிருந்து தப்பி வருவோர் நிலை – உச்ச அளவில் வசதிகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு

Wanni_War_Boat_Refugeesபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு உச்ச அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென சுகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்ஸில் நேற்று கூடி ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக 300 க்கும் அதிகமான மருத்துவர்களும் 550க்கும் அதிகமான தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது- வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சகல வசதிகளும் அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலில் விளக்கமளித்தேன். 300 டாக்டர்களுக்கு மேலதிகமாக வதிவிட மருத்துவர்கள் 200 பேரும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் அங்கு அனுப்பப்படுவர்.

நோய்வாய்ப்பட்டு வரும் மக்களில் மேலதிக சிகிச்சை தேவையானவர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் கட்டில்களை ஒதுக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரண்டு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி வழங்க முன்வந்துள்ளது.

தப்பி வரும் மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளை பெற்று அந்த மக்களுக்கு உதவ அரசு ஆவன செய்து வருகிறது.

வன்னியில் இருந்து வரும் மக்களை அழைத்து வருவதற்கென 150 க்கும் அதிகமான பஸ்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் பஸ்கள் தேவைப்படுமானால் மேலதிக பஸ்கள் அங்கு அனுப்பப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஏற்கனவே 50 க்கும் அதிகமான பஸ்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • palli
    palli

    அப்படியே அந்த போகாத மண்(வணங்காமண்) கப்பலுக்காக சேகரித்த பொருதளையும் வேண்டி அந்த மக்களிடம் கொடுக்கவும். இல்லையேல் மக்கள்கடையில் வித்து காசாக்கி போடுவார்கள். இப்ப கணக்கு கேக்க தமிழேந்தியும் இல்லை. அம்முட்டும் கழிவில்லாத சீட்டுபோல் அமுக்கி விடுவார்கள்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    thats certainly the message in his upcoming election,but what about south singales people,

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    தேசம்நெற்:
    கிழக்கு விடுவிக்கப்பட்டு இவ்வளவு காலம் ஆகியும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாமல் இன்னமும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனரே.

    உயர்ஸ்தானிகர்:
    இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது. பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். இலங்கை ஒரு வறியநாடு. எங்களால் செய்யக் கூடியவற்றை செய்கிறோம்.

    Reply
  • accu
    accu

    நேர அவகாசமே இல்லாமல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்யவேண்டிய அவசியத் தேவை அனைத்து மக்களின் முன்னும் இருக்கிறது. இன்று பிபிசியில் முகமாலையில் வந்துசேர்ந்துள்ள மக்களுக்கு உணவு வழங்க கோயில்கள் மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து மக்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியுடன் உணவு பார்சல்கள் சேகரிக்கும் செய்திகள் வவுனிய மக்கள் மற்றும் புளொட் உறுப்பினர்களின் நேர்காணலுடன் ஒலிபரப்பானது. நெஞ்சு கனத்தது. அவர்களுக்கான அந்த அவசர உதவியை எப்படிச் செய்வதென்பது புரியவில்லை? எனது வேலைத்தளத்தில் உள்ள சிலர் புலி ஆதரவாளராக இருந்தவர்கள் கூட என்னை அணுகி [20 வருடங்களாக வேலை செய்கிறேன்] தாம் உதவி செய்ய ஆவலுடன் இருப்பதாகவும் என்னை சரியான வழிமுறைகளை சொல்லும்படி அல்லது என்னிடமே பணம் தருவதாகவும் என்னை எப்படியாவது அந்த மக்களுக்கு உதவிகள் சென்றடைய செய்யும்படி. என்மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கையில் நன்றி சொன்னேன். ஆனால் எனக்கு எந்த வழியும் தெரியவில்லை.

    இங்கே கனடாவில் இந்த மக்களைப் பற்றி எந்த வானொலிகளும் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்க முனைகின்றன. தாங்கமுடியவில்லை. உதாரணத்திற்க்கு இங்கு ரொரன்ரோவில் இயங்கும் ஒரு ஓரளவு மிதவாதக் கருத்துக்களை வைக்கும் ஒரு வானொலியின் தென்புலோலியூர் அறிவிப்பாளர் சில வாரங்களுக்கு முன் நடத்திய கலந்துரையாடலில் …….. கூறுகிறார் ‘நான் ஒட்டாவில் போராட்டம் நடத்துகின்ற சில இளையோரை சந்தித்தேன். அவர்களிடம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த மக்களுக்கு உதவி செய்ய சிலர் விரும்புவதாகவும் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்க்கு அவர்கள் கூறினார்கள் போர்ப்பகுதியில் இருக்கும் மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் வெளியில் வந்தவர்களுக்கு தேவையில்லை என்று. நான் கேட்டேன் போர்ப்பகுதிக்கு எவராலும் போகமுடியாது அதனால்தான் வெளியில் வந்தவர்களுக்கு உதவப் போவதாக உடனே அவர்கள் பச்சையாக ஒரு பதிலை எனக்கு தந்தார்கள். அதை வானொலி நாகரீகம் கருதி காற்றலையில் மாற்றிச் சொல்கிறேன் என்று கூறிச் சொன்னார். அவர்கள் கேட்டார்கள் உன்னுடைய மனைவி இயலாமல் இருந்தால் நீ விலைமாதிடம் போகப்போகிறேன் என்பது சரியா? என்று. அவர்கள் கேட்டது நியாயமாக இருப்பதாக தனக்குப்பட்டது என வேறு சொன்னார். இப்படி எத்தனையோ கேவலங்கள் கனடாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

    நண்பர்களே மீண்டும் விசயத்துக்கு வருகிறேன். பார்திபன், பல்லி, சந்திரன்ராஜா, மாயா, துரை, முருகன், பிசி, சுபன், படம்மான் இன்னும் விடுபட்டோர் பலர் முகம் தெரியாத உங்கள் மேல் நிறையவே நம்பிக்கை உள்ளது. யாராவது அந்த மக்களுக்கு உடனடியாக உதவ வழிதெரிந்தால் அறிவியுங்கள். அது எவர் மூலமாகவும் போகலாம் ஆனால் போய்ச் சேரவேண்டியதுதான் முக்கியம். நன்றி.

    Reply
  • மாயா
    மாயா

    இலகுவான வழி இப்போதைய தருணத்தில் செஞ்சிலுவை சங்க ஒரு அமைப்பு மூலமாக அனுப்புவது. சில இடங்களில் அது சிக்கல் நிறைந்தது. காரணம் சில இடங்களில் அவர்களது காரியாலயங்கள் இல்லை. இத் தருணத்தில் நம் நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதுவராலங்களை நாடலாம். அவர்கள் நிச்சயம் ஏதாவது வழி செய்வார்கள். அல்லது சொல்வார்கள். இது அங்குள்ள மக்களுக்கு தங்கு தடையின்றி போய்ச் சேர நிச்சயமான ஒரே வழியாக எனக்குப்படுகிறது.

    சுனாமி காலத்தில் சில பொய் அமைப்புகள் கொள்ளை அடித்தார்கள். அதில் அவதானம் தேவை.

    இம்முறை அனைத்து வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் சிறீலங்கா அரசு உடனடியாக உள்ளே விடுவதாக இல்லை. இது குறித்து அரசு சொன்ன ஒரு கருத்து இது. “உதவி நிறுவனம் என்ற பெயரில் உதவாமல் அங்கு நடப்பதை உலகுக்கு பரப்பி தம்மை வாழவைத்துக் கொள்ளும் அமைப்புகளை விடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். வன்னியில் இருந்த பல அமைப்புகள் அந்த மக்களுக்கு உதவவில்லை. அங்கு மக்களுக்கு உதவிய அமைப்புகள் மட்டுமே இம்முறை உள்ளே செல்லலாம்” என்று பாலித கோகண்ண தெரிவித்துள்ளார். இதில் புலிகளுக்கு உதவிய அமைப்புகளையும் கருத்தில் கொண்டுள்ளது மறைமுகமாக அவரது பேச்சு சொல்கிறது.

    இப்போதைக்கு இலங்கை தூதரகமே சிறந்த வழியாகப் படுகிறது. சிறீலங்கா அரசும் மக்களிடமிருந்து உதவிகளை கேட்டுள்ளது.ஒரு கொழும்பு பேக்கரி நேற்று 40 ஆயிரம் பாண்களை பண்டார சர்வதேச மண்டபத்தில் கொடுத்த போது, அதை உடனடியாக ஒரு கெலியில் கொண்டு போனார்களாம். சில சிங்களக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமைத்தும் கொண்டு வந்தும் கொடுத்தார்களாம்.

    இவை எதுவும் தமிழில் வருவதில்லை. அதை தேசத் துரோகம் என்று கருதுகிறார்களோ தெரியாது. இப்போதைய தேவை அந்த மக்களுக்கு எம்மால் முடிந்ததை செய்வது. கருத்துகளை முன் வையுங்கள். பேசலாம்.

    Reply
  • மாயா
    மாயா

    இந்த நேரத்தில் தமிழ் அரசில் தலைவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதையும் இது குறித்து கண்டுகொள்ளமல் இருப்பதையும் அனைவராலும் உணர முடியும். இவர்கள் இப்போது எத்தனையோ செய்திருக்கலாம்?

    அடுத்து புலிகள் தம்மை தவிர வேறு எவர் மூலமும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யக் கூடாதென்ற நிலைப்பாட்டின் கொடூரமும், தம்மைத் தவிர வேறு எவரும் இருக்கக் கூடாதென்ற மனோபாவபமும் அந்த அப்பாவிகளுக்கு உதவ முடியாத நிலையை உதவக் கூடிய அனைத்து தமிழினருக்கும் உருவாக்கியிருக்கிறது. இந்த பரிதாபத்துக்கு புலிகளும், புலம்பெயர் புலம் பெயர் ஆதரவாளர்களுமே காரணம். அவர்கள் உண்மையிலேயே வெட்கித் தலை குனிய வேண்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழர் அஸ்சு அவர்களுக்கு!
    உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க….
    சமூகசேவகி ராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் வவுனியா இடைதங்கல் முகாமை பார்வையிட்டு உள்ளவர்களை கலந்தாலேஷித்தனின் பெயரில் புலம்பெயர் வானொலிக்கு பேட்டி கொடுக்கும் போது உடனடியாக உதவிசெய்ய விரும்புவோர் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ்சுக்கு அனுப்பி வைத்தால் உரியவர்களுக்கு சென்றடையும் என்றார்.

    இரண்டாவது செஞ்சிலுவைசங்கம். சங்கம் எப்படியோ? அதில் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையோர் மனிதகுலத்தின் அடிப்படைதேவைகளை பூர்த்திசெய்ய உளசுத்தியுடன் பணிபுரிபவர்கள்.

    மூன்றாவது ஒவ்வொரு குண்டுத்தாக்குதலின் போதும் தமது தோழர்களை அனுப்பி இரத்ததானம் கொடுத்தவர்களான ஈ.பி.டி.பி அவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறுபட்ட கருத்திருக்கும் தெரிவு செய்வது உங்களைப் பொறுத்தது. எதுசெய்தாலும் ஒவ்வொரு சதத்திற்கும் கணக்கு தான் முக்கியம் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.நன்றி.

    Reply