வன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அந்த மக்களுக்கு உதவ விரும்பும் நலன்விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள், வர்த்தகர்கள், அமைப்புகள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து உலர் உணவுப் பொருட்கள், திரவப்பால், குழந்தைகள் பால் மா, குளுக்கோஸ், பிஸ்கட் வகைகள், சமபோஷ, அரிசி, சீனி, மா உட்பட பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் போன்றவற்றை சேகரித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கோ, அல்லது தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ, உதவி பிரதேச செயலகத்திற்கோ, மாவட்ட செயலகத்திற்கோ ஒப்படைக்கலாம்.
புலிகளின் பிடியிலிருந்து சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் படையினரின் பாதுகாப்பைத் தேடி வருகின்றனர், வந்துள்ளனர், வந்துகொண்டிருக்கின்றனர்.
மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக விசேட கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவன பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
mukilvannan
may i just say what a simply marvellous job you are doing, well done indeed.
மாயா
ஆயுதங்களுக்காக ஆட்களின் பணத்தை பகல் கொள்ளையடித்த மலைக் கள்ளர்கள் தமது பகுதி மக்களுக்கு புலிகள் பெயரிலாவது உதவி செய்யலாமே? சிங்களவன் சிங்களவன் என மக்கள் மனதில் விஷம் ஏத்தும் புலத்துப் புலிகள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஆட் கொல்லி ஆயுதங்களுக்கு பணம் இறைக்கும் உங்களால் ஆள் பிளைக்க ஏதாவது செய்வீர்களா?
கடைசி நேரத்திலும் சுருட்டுவதற்கே திட்டம் தீட்டும் உங்கள் மனங்களில் அந்த மனிதர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஒரு அறிக்கையாவது விடுவீர்களா? நாம் தெரிந்து கொள்ளத்தான். இவை உங்களுக்குள் எழ வேண்டிய வினாக்கள்?
//வன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அந்த மக்களுக்கு உதவ விரும்பும் நலன்விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள், வர்த்தகர்கள், அமைப்புகள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து உலர் உணவுப் பொருட்கள், திரவப்பால், குழந்தைகள் பால் மா, குளுக்கோஸ், பிஸ்கட் வகைகள், சமபோஷ, அரிசி, சீனி, மா உட்பட பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் போன்றவற்றை சேகரித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கோ, அல்லது தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ, உதவி பிரதேச செயலகத்திற்கோ, மாவட்ட செயலகத்திற்கோ ஒப்படைக்கலாம்.
மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். //
அவர்களின் மனித நேயத்தை விட உங்களுக்கு அதிகமான மனித நேயம் இருக்க வேண்டும்? காரணம் அவர்களை காட்சிப் படுத்தி, அவர்கள் பிணக் குவியல்களை படம் எடுத்து பணம் சேர்த்தவர்கள்? அதில் 10 சதவீதம் உதவிகளை செய்தாலும் பெரியது. வணங்கா மண்ணில் சேர்த்தவற்றை அம் மக்களுக்கு அனுப்ப இலங்கை அரசோடு பேசுங்கள். அது சாத்தியமாகும்.
வன்னிக்கு கொண்டு போக முடியாத கப்பலை கொழும்புக்கு கொண்டு போவது சிரமமல்ல. இல்லை பாதுகாப்பு பிரச்சனை என்றால் ஒரு உதவி நிறுவனம் வழி அனைத்தையும் அனுப்பலாமே?
அரசு அனுப்பிய உதவி உணவுப் பொருட்களையே கொள்ளை அடித்து, அந்த அப்பாவி மக்களுக்கே விற்ற மலைக் கள்ளர்கள் அல்லவா நீங்கள்? இதற்கு மனம் ஒப்புக் கொள்ளுமா?
உண்மையாகவே அந்த மக்களுக்காகவே உங்கள் போராட்டம் என்றால், இதுவே உங்களை அடையாளம் காட்ட நல்ல தருணம். என்ன செய்வீர்கள் உங்கள் வன்னி மக்களுக்காக?
balasooriyan2
உயர்ஸ்தானிகர்:
ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.
மாயா
// balasooriyan2 on April 24, 2009 2:46 pm உயர்ஸ்தானிகர்:
ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.//
அப்ப அவர்கள் சிறீலங்காவின் மக்கள்.ஏனைய நாடுகள் ஏன் உங்களுக்கு உதவ வேணும்?
உங்கள் மக்களுக்கு உதவும் மனம் உங்களிடம் இல்லையென்றால் பிறகேன் அடுத்தவரிடம் புடுங்க வாறீங்கள்.
accu
நேர அவகாசமே இல்லாமல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்யவேண்டிய அவசியத் தேவை அனைத்து மக்களின் முன்னும் இருக்கிறது. இன்று பிபிசியில் முகமாலையில் வந்துசேர்ந்துள்ள மக்களுக்கு உணவு வழங்க கோயில்கள் மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து மக்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியுடன் உணவு பார்சல்கள் சேகரிக்கும் செய்திகள் வவுனிய மக்கள் மற்றும் புளொட் உறுப்பினர்களின் நேர்காணலுடன் ஒலிபரப்பானது. நெஞ்சு கனத்தது. அவர்களுக்கான அந்த அவசர உதவியை எப்படிச் செய்வதென்பது புரியவில்லை? எனது வேலைத்தளத்தில் உள்ள சிலர் புலி ஆதரவாளராக இருந்தவர்கள் கூட என்னை அணுகி [20 வருடங்களாக வேலை செய்கிறேன்] தாம் உதவி செய்ய ஆவலுடன் இருப்பதாகவும் என்னை சரியான வழிமுறைகளை சொல்லும்படி அல்லது என்னிடமே பணம் தருவதாகவும் என்னை எப்படியாவது அந்த மக்களுக்கு உதவிகள் சென்றடைய செய்யும்படி. என்மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கையில் நன்றி சொன்னேன். ஆனால் எனக்கு எந்த வழியும் தெரியவில்லை.
இங்கே கனடாவில் இந்த மக்களைப் பற்றி எந்த வானொலிகளும் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்க முனைகின்றன. தாங்கமுடியவில்லை. உதாரணத்திற்க்கு இங்கு ரொரன்ரோவில் இயங்கும் ஒரு ஓரளவு மிதவாதக் கருத்துக்களை வைக்கும் ஒரு வானொலியின் தென்புலோலியூர் அறிவிப்பாளர் சில வாரங்களுக்கு முன் நடத்திய கலந்துரையாடலில் …….. கூறுகிறார் ‘நான் ஒட்டாவில் போராட்டம் நடத்துகின்ற சில இளையோரை சந்தித்தேன். அவர்களிடம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த மக்களுக்கு உதவி செய்ய சிலர் விரும்புவதாகவும் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்க்கு அவர்கள் கூறினார்கள் போர்ப்பகுதியில் இருக்கும் மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் வெளியில் வந்தவர்களுக்கு தேவையில்லை என்று. நான் கேட்டேன் போர்ப்பகுதிக்கு எவராலும் போகமுடியாது அதனால்தான் வெளியில் வந்தவர்களுக்கு உதவப் போவதாக உடனே அவர்கள் பச்சையாக ஒரு பதிலை எனக்கு தந்தார்கள். அதை வானொலி நாகரீகம் கருதி காற்றலையில் மாற்றிச் சொல்கிறேன் என்று கூறிச் சொன்னார். அவர்கள் கேட்டார்கள் உன்னுடைய மனைவி இயலாமல் இருந்தால் நீ விலைமாதிடம் போகப்போகிறேன் என்பது சரியா? என்று. அவர்கள் கேட்டது நியாயமாக இருப்பதாக தனக்குப்பட்டது என வேறு சொன்னார். இப்படி எத்தனையோ கேவலங்கள் கனடாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
நண்பர்களே மீண்டும் விசயத்துக்கு வருகிறேன். பார்திபன், பல்லி, சந்திரன்ராஜா, மாயா, துரை, முருகன், பிசி, சுபன், படம்மான் இன்னும் விடுபட்டோர் பலர் முகம் தெரியாத உங்கள் மேல் நிறையவே நம்பிக்கை உள்ளது. யாராவது அந்த மக்களுக்கு உடனடியாக உதவ வழிதெரிந்தால் அறிவியுங்கள். அது எவர் மூலமாகவும் போகலாம் ஆனால் போய்ச் சேரவேண்டியதுதான் முக்கியம். நன்றி.
பார்த்திபன்
Accu,உங்கள் கருத்திற்கு நன்றிகள். எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தின்படி இவ்விடயத்தைத தேசம் நெற்றே ஒவ்வொரு நாட்டிலும் தமக்கு நம்பிக்கையானவர்களை நியமித்து, அந்தந்த நாட்டிலுள்ளவர்கள் பணமோ அல்லது உடைகளையோ அவர்களிடம் வழங்கலாம். பின்பு அதனை ஒன்றாகச் சேகரித்து தேசம் நெற்றே இலங்கைத் தூதுவராலயம் மூலம் எம்மக்களுக்கு அனுப்பி வைக்கலாம். உதவியவர்களின் விபரங்கள் பொருட்களோ, பணமோ எவ்வாறு எம்மக்களைச் சென்றடைந்தன போன்ற விபரங்களை பின்பு தேசம் நெற்றிலேயே வெளியிடலாம். இதனை எவ்வளவு விரைவாகச் செயற்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செயற்படுத்துவது அவசியம். எனவே இதனைப் பற்றி தேசம் நெற்றும், ஏனைய நேயர்களும் தமது தலையாய கருத்துகளையும் தெரிவிக்கும்படி அன்பாக வேண்டிக் கொள்கிறேன்.
chandran.raja
பார்த்திபன் இப்படியான நடைமுறைகளுக்கு வாரக்கணக்கு மாதக்கணக்கு ஆகலாம். இதுவும் நல்லயோசனை எந்தவிதமாற்று கருத்தில்லாமல் சம்மதமே!. இவையெல்லாம் அவர்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்வதற்கு மட்டுமே! அதைதான் நாம் தற்பொழுது எதிர்பார்கிறோம்.
வாழ்வையும் அவர்களின் இருப்பிடத்தையும் தேடிப்போவதற்கு அரசியலாலேயே…..
palli
எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமலும் கருத்து வேறு பாடில்லாமலும் முக்கியமாக விளம்பரம் எதிர்பாராமலும் அத்துடன் அரசியல் கருத்து வேறுபாட்டுக்கு அப்பால் இது கண்டிப்பாக செய்ய வேண்டும். சில தேவைகள் கருதி எமது முகங்களை காட்ட முடியாததால் (சிலரது முகமூடி அகற்ற) இந்த விடயத்தை தேச நிர்வாகம் ஒரு ஊடகம் என்னும் வகையில் காலம் தாழ்த்தாது உடனடியாக எப்படி செயல்படுத்த முடியும் என்பதை சிந்திக்கவும். பல்லி எப்போதும் மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதில் தனது சிறுபங்கை ஆற்ற விரும்புவேன் நன்றி அக்கு கண்டிப்பாக செயல்படுவோம்.
குறிப்பு; இது பற்றி நேரடியாகவே(உடனுக்குடன்) பின்னோட்ட மூலம் நாம் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம். தேச நிர்வாகத்தினர் அதை முடிந்தால் தாமதிக்காது இன்றோ அல்லது நாலையோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை அறியதந்தால் அந்த நேரத்தில் பலர் பின்னோட்ட மூலமும், ஈமைல் மூலமும். கருத்துக்களை பரிமாறலாம். இதுவே மற்றய ஊடகங்களுக்கும் ஒரு முற்போக்காக இருக்கும் இதனால் ஒரு சிலரது உதவிகள் எம்மவர்க்கு கிடைத்தால் கூட அது இந்த ஊடக செயல்பாட்டுக்கு கிடைத்த பலா பலனே. இது பல்லியின் தனிபட்ட கருத்து மட்டுமே. தேச நிர்வாகத்துக்கு அழுத்தமல்ல.