ஹெல உறுமய போன்ற கட்சிகள் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயலுகின்றன. மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான யோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பில் நடைபெற்ற ஐ.தே.க.பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது கேள்வி எழுப்பினார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் நாட்டில் ஒரு முக்கிய தேர்தல் மக்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகரித்துவருகிறது என்றார்.
சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தமது உரையில் (உண்மையான சம்பவங்களை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பல ஊடக வியலாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
மேல் மாகாண சபைத்தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்: மாகாண சபையின் மூலம் நீர்கொழும்பில் ஆளும் கட்சியினர் என்ன செய்தனர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பில் எத்தனைபேர் சித்திபெற்றனர். ஐ.தே.க.ஆட்சியின் போது தனியார் கத்தோலிக்க பாடசாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசு அடிப்படைவாதத்துடன் செயற்படுகிறது.
மேல்மாகாண சபைத்தேர்தலில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். ஊழல் மோசடியற்ற ஒரு அரசை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் நீர்கொழும்பு தொகுதியில் இருந்து முவரும் வெற்றிபெறுவார்கள் என்றார்.