ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழன்
பல பத்திரிக்கைகளில் தேடிவிட்டேன்… இந்த செய்தி எங்கேயும் வந்ததாக தெரியவில்லை!!, இலங்கை என்றால் என்னவென்று தெரியாத, தமிழ்நாட்டு தீக்குளிப்பு கலாச்சாரத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சில அறியாமை மனிதர்களின் தவறுகள் இலங்கைத் தமிழருக்கு நக்கலாக தெரிகிறது, இல்லையா!!!…. நீங்கள் அதை பிரதிபலிக்கும் விதத்தை விபரமறிந்தவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்….
Kusumpan
தீக்குழிப்பவர்கள்;தற்கொலை செய்பவர்கள் எல்லாம் தியாகி என்றும் புலிக்கொடி மரியாதையும் கிடைக்கும் பொது தீக்குளிப்பு தற்கொலைக்கலாச்சாரம் ஏன் வளராது. புலிகள் தானே தன்னம்பிக்கையற்ற தற்கொலைக்கலாச்சாரம் ஒன்றை உருவாக்கி இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு அது வாழுமாறு செய்திருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உலாவிவருகிறது. இது ஒருமனநோய் என்பதை உணர்க
msri
அ.தி.மு.க.விற்கு தீக்குளிக்காத குறையொன்று இருந்தது > ஆதுவும் அரங்கேறிவிட்டது!
மாயா
மக்கள் வாழத்தான் போராட்டமே தவிர மக்கள் சாவதற்கு போராட வேண்டியதே இல்லை. ஒவ்வொரு கட்சியும் தன் பங்குக்கு தீக்குளித்து ,தன் வாக்குப் பெட்டிகளை நிரப்ப இவை அக் கட்சிகளுக்கு பயன்படுமே தவிர, அங்கே போரில் சாகும் மக்களுக்கு எதையும் செய்யாது.
இறந்த அந்த அப்பாவிக்காக கண்ணீர் விடுவதைத் தவிர பெருமூச்சு விடவே முடிகிறது. அப்பாவிகளை தமிழ் தலைவர்கள் என சொல்லிக் கொள்வோர் சாகடிப்பதிலேயே குறியாக இன்னும் இருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழன்
திருப்பூரில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (42). கூலித் தொழிலாளி.இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், அங்கு தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற வேண்டியும் திருப்பூரில் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்து போனார்.இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டதாகவும், அதனால் இம் முறை பொது மக்கள் அதிமுகவிற்கு ஓட்டளிக்க வேண்டுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.தீக்குளிக்க வேண்டாம்.. ஜெ:மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து அவர் பேசுகையில், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய வேலை நிறுத்தம் இலங்கைத் தமிழர்களுக்காக அல்ல. சிவகாசி, மதுரையில் நடக்கும் எனது பிரசாரத்தை முடக்கவே.
வேலை நிறுத்தத்தைக் கண்டித்து அதிமுக தொண்டர் பண்ருட்டி மணி தீக்குளித்து உயிர் நீத்துள்ளார். அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பை நானும், கட்சியும் வழங்குவோம்.thatstamil.com