இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு புளொட் இயக்கம் ஊட்டச்சத்து பிஸ்கட் சமைத்த உணவு உதவி

civiling_flee_vanni_02.png
வவுனியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரச செயலக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் மற்றும் சமைத்த உணவு என்பன கடந்த இருதினங்களாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்துள்ளதையடுத்து, அவர்களது அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டசத்துமிக்க 700 கிலோ பிஸ்கட் மற்றும் இரண்டு தினங்களாக 30 ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் என்பன பொதுமக்களின் பேருதவியோடு வழங்கப்பட்டுள்ளதாகவும் புளொட் அமைப்பி்ன் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்

Show More
Leave a Reply to Kusumpan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    ஊட்டச் சத்து குடுக்க நீங்களாவது இருக்கிறியள். திரும்பவும் உரத்தநாடு B கேம்ப் விளையாட்டுகளை துவங்கவும் நினையாதீங்கோ? புலிகளுக்கு நடக்கிறது. உங்களுக்கும் ஒரு பாடம்? சங்கிலியன் ஊட்டச் சத்து கொடுத்து அத்தான் எண்டுதான் போட்டவன். உள்ளுக்குள்ள போட்டவங்கள் இப்ப முக்கால்வாசி இல்லை. நீங்களும் லேசுப்பட்ட ஆக்கள் இல்லை. புள்ளை புடி கூட்டம்தான்? இல்லாட்டி இந்திரா சொன்ன உடனே முடம் குருடு செவிடு எல்லாத்தையும் கப்பல் சே….( கப்பல் இருந்ததா சொன்னது புளுகு)…படகுல ஏத்தி கடலினக்கரை போனோரே என 3 மாச டிரேனிங் கொண்டு போய் 3 வருசம் ஆடு….மேய விட்டனீங்கள்தானே? மறக்கயில்ல மோனே. இனியாவது நேரா போக பார்க்கோணும். நல்லா கதைப்பியள் எண்டு தெரியும். நல்லா செய்வியளோ? நல்லா செஞ்சா உங்கட கையில இருந்த வன்னி திரும்பவும் கைக்கு வரும். வுவுனியால இருந்து வன்னி தூரமே? ம்ம்……ஒரு எட்டு…கூப்பிடு தூரம் எல்லே?

    Reply
  • Kusumpan
    Kusumpan

    புளொட்டு ஊட்டம் பெற்றிக்கிறது ,ஊட்டச்சத்து பிஸ்கெட்டுகளுடன். புலி கூட உங்களைச் சேர்க்க மறுத்து விட்டார்களே இதுதான் சந்தர்பம் என்று வந்து சேர்ந்து விட்டியள். எங்கே சங்கரியண்ணையைக் காணேல்லை?

    Reply