இலங்கை அவலம்-ஐநாவில் விளக்க மறுத்த நம்பியார்

vijaynambiar.jpg இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • ராஜன்
    ராஜன்

    //இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.//
    //நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.//

    இவையனைத்தும் நம்பியாரின் இந்திய தேசபக்தியையும் தமிழர்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளார்கள் அழிக்கப்பட போகிறார்கள் என்பதை தான் காட்டுகிறது. ம்… தமிழர்களை கொல்வதில் அலாதிபிரியம் நம்பியாருக்கு. பொதுச்செயலர் சீனவிசுவாசி இணைச்செயலர் இந்திய விசுவாசி. நசிபட்டு சாக வேண்டியது தான் தமிழன் தலைவிதி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு வேளை ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார் பொதுச்செயலாளருடன் கலந்து பேசியோ அல்லது பொதுச்செயலாளரிடம் மட்டுமே தனது விளக்கத்தை சொல்ல விரும்பியிருக்கலாம். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம். அவர் தனது விளக்கத்தை அளிக்காமல் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது. அதற்காக இந்தியாவும் இலங்கை அரசும் தமிழர்களை அழித்துவிட முடிவெடுத்து விட்டதாக புரளி கிளப்புவதில் பயனென்ன ராஜன்??

    Reply
  • BC
    BC

    //தமிழர்களை அழித்துவிட முடிவெடுத்து விட்டதாக புரளி கிளப்புவதில் பயனென்ன//

    புரளிகள் நம் ஆட்களிடம் நன்றாக வேலை செய்யும்.

    Reply
  • ramesh
    ramesh

    திரு.விஐய் நம்பியார் புத்திசாலி.இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரு.சம்பத்குமாருக்கு நடந்ததை இவர் மறக்கவில்லை போன்று தெரிகின்றது. 1987ல் ஐ.நா.அகதிகள் அமைப்பின் தெற்காசிய மேசைக்கு பொறுப்பான இவர்-தவறான சமயத்தில் பிழையான முறையில் செயல்படுத்தப்பட்ட “அகதிகள் மீள்குடியேற்றம்” பலனளிக்கத் தவறியதால் கண்டணத்துக்குள்ளாகியதை மறக்கமுடியுமா??

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    http://www.innercitypress.com/bansri7lanka042109.html

    One well-placed Council diplomat said that despite all 15 members, including China and Russia, agreeing to an “informal interactive dialogue” with Mr. Nambiar, who has just returned via India from three days in Sri Lanka, they were told that Nambiar views the matter as “too sensitive” even for discussion behind closed doors. Nambiar argued that as a “mediator,” what he discussed with Sri Lanka’s president Mahinda Rajapaksa and his brothers was “confidential,” even from the Security Council.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //சீனா விசுவாசி இந்தியா விசுவாசி.நசிபட்டு சாகவேண்டியது தான்தமிழன் தலைவிதி// ராஜன்
    ஈழத்தமிழன் அழிவை அவலத்தையும் சந்தித்தது புலத்துப் புலிகளாலேயே என்ற மாபெரும் உண்மையை இலகுவாக மறந்து போகக்கூடிய காரியம் இல்லை. பிரபாகரன் உள்ள அமெரிக்க படங்களை பார்த்து தமிழ்மக்களுக்கு சொர்கத்துக்கு பாதைதேட புறப்பட்டு இரண்டு சகாப்தங்களுக்கு பிறகு தான் தோண்டி எடுத்த பாதை நரகத்திற்கு போகும் பாதை என்பதை புலத்துப்புலிகள் இனியாவது புரிந்துகொள்ளல் வேண்டும்.

    எமது போரட்டத்தையும் ஆர்பாட்டங்களையும் வேண்டுகோள்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவிசுவாசி இந்தியா விசுவாசி என்று புலம்புவதில் எந்தபயனும் இல்லை. அடாவடித்தனத்தை புகலிடம்தேடி வந்த நாட்டிலும் பிரபாகரன் வேலைத்திட்டத்தை காட்டியிருக்கிறீர்கள்.
    ஆயுதத்தை கையாளுவதைவிட புலத்து அரசியலைக் கற்றுக்கொள்வது தான் ஈழத்தமிழருக்கு நன்மை பயிற்கும் என புலத்துப்புலிகள் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.

    Reply
  • msri
    msri

    விஐய் நம்பியார்>ஐ.நா.சபை இணைச்செயலாளரா? அல்லது மகிந்தாவின் இணைச்செயலாளரா?

    Reply