![]()
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.
கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

பார்த்திபன்
ஏற்கனவே தீக்குளித்து இறந்த முத்துகுமார் போல், இவரும் புலிகளிடம் பயிற்சி பெற்றவராக இருக்கக் கூடும்.
ராஜன்
புலிகளிடம் உள்ள கோபத்தில் அவர்களது உணர்வை கொச்சைப்படுத்த வேண்டாம் தயவு செய்து…!
Ramasamy thasan
ஒரு தமிழக சகோதரன் தன் உயிரையே அர்ப்பணிக்கும் போதும் கூடவா உங்களது பொறுப்பற்ற விமர்சனங்கள். மற்றவர்களை விமர்சிப்பதை விட்டு உருப்படியாக எதாவதை செயலில் காட்டுங்கள்.
babu
உருப்படியாக எதாவது என்றால்; புலிக்கொடியை வைத்துக்கொண்டு தொண்டை கிழிய கத்துதல். சரிவராவிட்டால் அதை மடக்கிவைத்துவிட்டு கத்துதல். தேம்ஜ் நதிக்குள் குதித்தல் தன்னைத்தானே கொழுத்துதல். சிங்களவருடன் மோதுதல். ……… இன்னும் ஒருவர் உயிரை அர்ப்பணித்துள்ளார். உண்மை. ஆனால் வழமைபோல் ஒரு வித்தியாசத்தையும் இலங்கை அரசியல் நிலைப்பாட்டில் ஏற்படுத்தாதென தெரிந்தும்.
murugan
இலங்கை சொந்த சகோதரர்கள் இலட்சக்கணக்கில் மரணித்தே ஒன்றும் ஆகவில்லை. தமிழக சகோதரன் தீக்குளித்தா தமிழ ஈழம் வரும்?
பார்த்திபன்
புலிகளின் மேலுள்ள கோபத்தில் அப்படி நான் எழுதவில்லை. ஒரு உயிரை எந்தவித பிரயோசமுமில்லாமல் அழித்துக் கொள்கின்றார்களே என்ற ஆதங்கம் தான். அத்துடன் முத்துக்குமார் ஏற்கனவே புலிகளில் இணைந்து பயிற்சி எடுத்தவரென்பது அவரது உறவினர்களே ஒப்புக் கொண்ட தகவல். அத்துடன் இன்றுவரை புலித் தலைவர்களின் வாரிசுகள் எவராவது தற்கொலைப் போராளியாகி இருக்கின்றார்களா?? மாறாக சொகுசு வாழ்க்கையே ஊரான் வீட்டுப் பணத்தில் வாழ்ந்துள்ளார்கள். பின் எதற்காக இவர்கள் போன்றவர்கள் தங்களை அழிக்கின்றார்கள். மக்களைக் காக்கவென்று இவர்கள் நினைத்திருந்தால் இன்று அரச கட்டுப்பாட்டிற்குள் வந்த இலட்சக் கணக்கான மக்களுக்கு ஏதாவது உதவ முனைந்திருக்கலாமே?? புலத்திலும் சரி இந்தியாவிலும் சரி இவர்கள் காப்பாற்ற நினைப்பது புலிகளைத் தானே?? எவர்கள் மக்களுக்காக போராடுகின்றார்கள்?? அவர்களை தயவு செய்து எனக்கு அடையாளம் காட்ட உங்களால் முடியுமா??
chandran.raja
இராமசாமி தாசன் அவர்களே!
உயிர் வாழ்வதற்கே போராட்டமே ஒழிய தற்கொலை செய்வதும் உயிரை விடுவதும் போராட்டம் அல்லவென்று பல தடவை பதிவு செய்து விட்டோம். அறிவுரை கூறிவிட்டோம். இப்ப நீங்கள் மாய்ஜலாக் கண்ணீர் வடிக்கச் சொல்லுகிறீர்கள். உங்கள் போக்கில் போனால் இன்னும் பத்துப்பேர்………!!!
மாயா
முத்துக்குமரன் பயிற்சிக்கென வன்னி சென்ற வேளையில் அவரது தகுதி புரிந்ததும் இங்கு இருந்து போராட வேண்டாம். நேரம் வரும் போது எங்களுக்கு உதவுங்கள் என்று ஆரம்ப பயிற்சிகளைக் கொடுத்து சென்னைக்கு திருப்பி அனுப்பி திரைப்படத் துறையில் பணியாற்ற ஊக்கம் கொடுத்தவர்கள் புலிகள். பின்னர் நேரம் வந்த போது தற்கொலை செய்து கொள்ள வைத்தார்கள். இப்படியான தற்கொலை போராளிகள் இன்னமும் சிங்களப் பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்.அவர்களில் யார் தப்புவார்கள்? யார் வெடிப்பார்கள் என்பது விரைவில் தெரியும்.
பிரபாகரனின் குடும்பம் அதைச் செய்யாமல், அடுத்தவர்களை செய்யச் சொல்லவதில் என்ன நியாயம்? அவங்க உயிர் மட்டும் உயிர். அடுத்தவங்க உயிர் மயிரா? ( ராஜீவின் உயிர் மட்டும் உயிர். எங்கள் உயிர் மயிரா? என புலிகள் சொன்னதை சற்று மாற்றியுள்ளேன்)
எந்த உயிரும் மதிக்கப்பட வேண்டும். இறந்தவனை நிந்திப்பது தவறு. அதை செய்ய வைத்த சுயநல போக்கிரிகளை நிந்திக்கலாம் இல்லையா?
Kusumpan
இனித்தற்கொலை தற்கொலை செய்யும் எல்லோருக்கும் புலிக்கொடிப்போர்வை மரியாதைதான். தற்கொலை செய்பவர்கள் எல்லோரும் மாவீரர்கள்தான். ஒரு சமூகத்தை பலாத்காரத்திற்குப் பணியவும் தன்னம்பிக்கையற்றுத் தற்கொலை செய்யவும் பழக்கி வளர்த்து வைத்திருக்கிறார்கள் புலிகள். மாவீரர் பட்டம் வேண்டுமாயின் எல்லோரும் தற்கொலை செய்யுங்கள்
Ramasamy thasan
புலிகள் 40 பேருடன் இருந்த போதும் சரி தற்போதைய வீழ்ச்சிக்கு முன் பெருமளவு பலத்துடன் இருந்த போதும் சரி,நான் அவர்களினது அரசியலற்ற தன்மையை என்றுமே ஆதரித்தது கிடையாது. எனது கேள்வி பொது எதிரி சிங்கள பாசிசமா அல்லது புலிகளா?
புலிகள் மற்றவர்களை அழித்தார்கள் என்றால்,நாம் ஏன் அதற்கு எதிராக போராடவில்லை?
இலங்கையிலும் புலத்திலும் ஒரு குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் கீழ் கூட எம்மால் ஒன்று பட்டு வேலை செய்ய முடியும் என்று கனவு கூட காண முடியுமா?
mano
சேனாதி எம்.பி. புலிக்கொடியைப் பாடாதபட்டு கடல்தாண்டிக் கொண்டுபோய் அங்க ஒரு அப்பாவிக்கு போர்த்திப்போட்டு லண்டனிலை அசைலம் கேட்கலாம் என்று நினைக்கிறாராக்கும்
மாயா
//Ramasamy thasan on April 23, 2009 12:14 am புலிகள் மற்றவர்களை அழித்தார்கள் என்றால்,நாம் ஏன் அதற்கு எதிராக போராடவில்லை?//
இதை யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்? மிருகங்களுக்கு முன்னால மனிதரால் நிற்க முடியவில்லை. ஆயுதம் தரித்தவர்களாலேயே நிற்க முடியவில்லை. அடுத்தவர்கள் மட்டும் எம் மட்டு?
புலத்திலாவது போராட முடியுதா? இங்க பேசினா அங்க குடும்பத்தில உள்ளவங்களைத்தானே தூக்கி வெருட்டினாங்க? இன்னமும் மகிந்தவை போட வேணும். ஒரு சிங்களவனையாவது கொல்ல வேணும் எண்டுதானே பேசுகிறர்கள். அதுக்கு மேல இவர்களுக்கு அரசியலாவது கத்தரிக்காயாவது? ஊர் சண்டியருக்கும் அரசியலுக்கும் என்னப்பா சம்பந்தம்? ரவுடியோட மோத ரவுடிதான் சரி. வீவீடியோட மோத மாத்தறைதான் சரி. நாங்களும் வல்வெட்டி என்று சொன்னவர்களை ஒரு கிழமை கழிச்சு பார்த்து விஸ் பண்ணவேணும். வெரி சொறியெண்டு.