பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் இன்று கொழும்பிலிருந்து எம்.ஐ.17 ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங்கொமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு விமானப் படைப் பேச்சாளர் மேலும் கூறியதாவது,
புலிகளிடமிருந்து சிவிலியன்களை விடுவிக்கும் போராட்டத்தில் விமானப் படை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வான் வழியாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் படையினரின் முன்நகர்வுகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு வலயத்தில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த 238 பேர் விமானம் மூலம் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமானப் படையினரால் பனிஸ் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பார்த்திபன்
நன்றி உங்கள் சேவைகளுக்கு. இதன் மூலம் நீண்ட காலப் பாதிப்பிற்குள்ளான அந்த மக்களின் மனங்களை வெல்லுங்கள். அதன் மூலம் தான் இனி இலங்கையில் ஒரு புதிய பரிணாமத்தைக் கட்டி எழுப்பலாம்.
ramesh
ஐரோப்பிய நாடுகளில் தமிழ் மக்களால் வாரிவழங்கப்பட்டு தேங்கிக்கிடக்கும் பொருட்களை வன்னியிலிருந்து வெளியேறிய மக்களின் பாவனைக்கு அனுப்புவதற்கு இதுவே தகுந்தநேரம்…வணங்காமண் புறடப்ப ஆயத்தமா??
chandran.raja
கோவில் நிதியாக மட்டும் இரண்டு லட்சம் பவுண்ஸ் நன்கொடை கிடைத்ததாக அறிந்தேன். பணமாக மட்டும் இன்னும் எத்தையோ எத்தனையோ… வணங்காமண்லில் சம்பந்தப்பட்டவர்கள் சுறுட்டுவதையோ நோக்கமாக கொண்டவர்கள் நிதிவழங்கியவர்களே நிதியை திரும்பப் பெற்று இன்றைய நிலையில் உரியஇடத்திற்கு சென்று அடைவதற்கு வழிதேட வேண்டியராவர். தேசம்நெற் இதில் தலையிட்டு உரியவழியை கண்டுபிடிக்குமா?