ஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நான் முன்னர் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டிருந்தது. என்று அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நானும் ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன்தான். நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். இன்று புலிகள் மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த முறைதான் கிழக்கு மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினர் தலைகால் புரியாமல் செயற்படுகிறார்கள். எதனைச் செய்வதற்கும் நமக்கு நாடு ஒன்று வேண்டும். நாடு இருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். ஐ. தே. கவினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மாவிலாறு அணையை மூடியதன் சாபத்தைத்தான் இன்று பிரபாகரன் அநுபவிக்கின்றார். அந்தப் பாவத்தால்தான் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.’