சொறிப் புள்ளைக்கொரு பொம்பிளை தேவையோ? : ஈழமாறன்

Mahinda Rajapaksaதமிழீழப் போராட்டம் முல்லைத்தீவில் வந்து நிற்க உலக நாடுகளின் நெடுஞ்சாலைகளை மறித்து, தேம்ஸ் நதியில் குதித்து,  சுவிஸ் ரயிலை மறித்து, பொலிஸ் குண்டித்தோல் உரிக்கும் நிலையில் வந்திருக்கும் இந்த வேளையில், இன்று வன்னி மக்கள் அனுபவிக்கும் அனர்த்தங்கள் அனைத்திற்கும் புலிகளைச் சாட்டி விட்டு வெறுமனே வியாக்கியானம் பேசுவதில் பலன் இருக்குமா என்பது இன்றைய கட்டாய கவனிப்புக்கு உரியதாகும்.

ஏப்ரல் 20, 21 நாட்களில் மட்டும் அண்ணளவாக அறுபதினாயிரம் வன்னிச் சனங்கள் தப்பி வெளியே வந்துள்ளார்கள். இந்தச் சனங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இன்றைக்கு ரோட்டில் இறங்கி வன்னி பூர்வீக மண் என்று முழங்கும் இந்த இளசுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மக்களை மறந்துவிட்டு தங்கள் தங்கள் பாடுகளைப் பார்க்க போயிடுவினம். இருந்தாலும் இவர்கள் அந்த மக்களுக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதை புலிப் பினாமி அமைப்புகள் தங்கள் நோக்கத்திற்காக ஹைஜாக் பண்ணி புலிக்கொடிக்கு புது விளக்கமும் குடுத்து வன்னிச் சனம் தங்கட இடத்திலைதான் இருக்க வேணும் என்று அண்ணையை காப்பாத்தும் நாடகமும் போடுகிற சுத்துமாத்தை வெட்டியோட்டத்தை புரிந்து கொள்ள இளசுகளுக்கு அனுபவமும் இல்லை. யாழ்ப்பாணத்திலை வளரவும் இல்லை. அது ஒரு புறம் இருக்க இன்றுவரை மௌனமாக இருக்கும் புலியை மட்டும் எதிர்க்கும் கூட்டம் அரசாங்கத்தோடு நிற்கும் கூட்டம் கால்களையும் கைகளையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கும் அந்த வன்னிச் சனங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள். சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக இல்லாமல் அந்த மக்கள் நியாயமான உரிமைகளோடு வாழ என்ன வழி?

மகிந்தவுக்கு ஜனநாயக போறம் காறரின்ரை பாசையில் சொல்வதானால் அண்கொண்டிசினல் சப்போட் குடுக்கும் முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தவைக் கூப்பிட்டு மகிந்தவுக்கு நாதஸ்வரக் கச்சேரி வைக்கும் இந்தப் புலத்து மக்கள் அமைப்புக்கள் புலியை அழிப்பதற்க்கு மகிந்த சொல்லும் விளக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு எண்டதையும் ஒருக்கா சொல்லுங்கோ எண்டு கேட்கக்கூட மனமில்லாதது எதற்காக. ஒரு வேளை 95 வீதத்திற்கும் மேலானவர்கள் (இந்த அமைப்புக்களில் இருப்பவர்கள்) வன்னி அல்லாதோர் என்றபடியினால் வன்னி மக்களை அழிக்க ஏதேனும் அவையின்ர மொழியிலேயே ஹிடின் அஜெண்டா ஏதேனும் வைத்திருக்கினமோ?

1958ல் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உயிரைக் காவு கொண்டு தொடங்கிய சிங்கள இனவெறியை இரும்புத் தமிழன் மரத்தமிழன் என்று எல்லாம் ஜடத்தைப் பற்றியே பேசி, அரிவு வெட்டி, ஜயநாருக்கு படைத்து விட்டு சிவனே என்று கிடந்த சனத்தையெல்லாம் சீறி எழ வைத்து, தரப்படுத்தல் முறை ஏதோ கறிப்பட்ட முறிப்பு கந்தசாமியின்ரை மகனுக்கு மெடிசின் கிடைப்பதை தடை செய்யும் சட்டம் போல, பூச்சாண்டி காட்டி தொடங்கப்பட்ட போரில் மீண்டும் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் வன்னி மக்கள். தமிழீழப் போராட்டத்திற்கான நியாயப்பாடுக்ள அத்தனையும் தரப்படுத்தலில் இருந்து தொடங்கவில்லை என்றாலும் மேற் சொன்னதே உண்மை.  நான் பேசுவது பச்ச பிரதேசவாதமாக இருந்தால்…… அதைப் பேசியதற்காக நான் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறிக் கொள்ள வேண்டும்.

என்ன தலைப்புக்கும் இவன் பேசுபொருளுக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ண வேண்டாம். விடயத்திற்கு வருகிறேன். புலிகளிடம் இருந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை புடுங்கி எடுத்து முதலமைச்சர் நாற்காலியில் இருந்து சொகுசனுபவிக்கும் கனவில் இருக்கும் சக அரசியல் அமைப்புக்கள், தலைவர்களுக்கும் இந்தத் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

கதையின் சுருக்கம் இதுதான். ஒரு நரி ஆற்றின் மறு பக்கத்தில் செத்துக்கிடக்கும் ஒரு மானைச் சாப்பிடுவதற்காக காத்திருக்கிறது. நரிக்கோ நீந்தத் தெரியாது. அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கும் நரியைப் பார்த்து ஆற்றில் இருந்த முதலை கேட்டது. என்ன பிரச்சனை என்று. நரி சொல்லிற்று “அந்தக் கரையில் உனக்கு ஒரு பொம்பிளை பாத்திருக்கிறன். அதுதான் யோசிக்கிறன்” என்று.

முதலைக்கு உச்சி வரைக்கும் மகிழ்ச்சி. “அதற்காக ஏன் யோசிக்கிறாய்” என்றது முதலை. “இல்லை நீந்த……..” என்று விசயத்தை சொல்லி முடிக்க முதலே ‘முதுகில் ஏறு நான் உன்னை மறுகரைக்கு ஏற்றிச் செல்கிறேனே’ என்றது முதலை.

முதலையின் முதுகில் சவாரி செய்த நரி மான் இறைச்சியை சாப்பிட்ட பின் திரும்பி வந்தது. இன்னும் பாக்கி இறைச்சி இருப்பதால் வருகிற வழியில் “எல்லாம் சரி பெட்டையின்ரை தகப்பன் வெளியிலையாம். அவர் வந்தவுடனை பேசி முடிச்சிடலாம் என்று சொன்னது நரி. மறுநாள் மீண்டும் சவாரி. முதலைக்கும் ஒரே கிழுகிழுப்பு. (கொழும்புக் குழுவிலை மனிசிமாரைப் பற்றிக் கதைச்சவருக்கு மாதிரி) நாள் நெருங்க நெருங்க சும்மாவா பின்னே…

மிகுதி இறைச்சியையும் தின்று விட்டு திரும்பிய நரி கரை சேரும் வரைக்கும் கதை கொடுத்து விட்டு கரையிலை ஏறியவுடன் முதலையைப் பார்த்து “சொறிப் புள்ளைக்கு ஒரு பொம்பிளை கேட்குதோ” என்று விட்டு போய் விட்டதாம். சிங்களப் படைகளின் மூர்க்கத்தனத்திற்கு பலியாகிப் போன எனது ஊர்ப் பெரியவர் சொன்ன கதை இது. இனி விடயத்திற்கு வருவோம்.

இன்று வன்னி மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திக் கொண்டிருப்பது யுத்தம் அல்ல. தமிழ் மக்களை கூண்டோடு முடித்துக் கட்ட மகிந்த சிந்தனை போட்டிருக்கும் இந்திய சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு இன அழிப்பின் முதல் அத்தியாயம். அது என்னவோ அழிவு என்று வரும்போது பண்டார வன்னியன் என்ற முட்டாள் ஆகட்டும் இப்போ முடிசூட்டி வைத்திருக்கும் கரிகாலன் ஆகட்டும் இந்த வன்னி மக்கள் பலிகடா ஆக்கப்படுவது வெறும் வருடங்கள் கொண்ட வரலாறல்ல. பழைய மாணவர் சங்கம் வைத்து தொகை தொகையா காசு சேர்த்து யாழ்ப்பாணத்திலை இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிப் போட்டு வன்னி மண், அடங்கா மண், பூர்வீக மண், புடுங்கா மண் என்று உசுப்பேத்தி அந்த மக்களை கொன்று தொலைத்து, சின்னா பின்னமாக்கி ஒரு சந்ததியை அழித்துக் கொண்டிருக்கும் யாழ் மையவாத சிந்தனையாளர்களின் சூட்சுமம் புரியாமல் செத்து மடியும் அந்த மக்களின் வரலாறு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 

Karuna Colஎடுத்ததற்கெல்லாம் கடிதம் எழுதும் சங்கரியாகட்டும் சூழைமேட்டில் சுழட்டிச் சுட்ட டக்ளஸ் ஆகட்டும் மகிந்வின் முன் மானம் கெட்டுப்போய் நிற்க்கும் அம்மான் ஆகட்டும் கிடந்த மிச்ச ஆயுதத்தையும் கொடுத்து விட்டு சிறுபிள்ளைத்தனமா பேசிக் கொண்டிருக்கும் பிள்ளையான் ஆகட்டும் அந்த்தப் புள்ளையானுக்கும் அம்மானுக்கும் விலக்குப் பிடிக்கும் தலித் முன்ணியாகட்டும், டெல்லிக்கும் கொழும்புக்கும் ஆலாய்ப் பறக்கும் ஜனநாயகக்காறர் ஆகட்டும், உல்லாசக் கப்பலில டிஸ்கஸன் நடத்துகின்ற ஜேர்மனி என்ஜிஓ க்கள் ஆகட்டும் அதுக்கையும் இதுக்கையும் எண்டு நிற்கும் தமிழ் போறம் காறர் ஆகட்டும் லண்டனிலை இருந்து ஆலாப் பறக்கும் அக்காமார் ஆகட்டும் (இந்த லிஸ்டில யாராவது விடுபட்டு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். அடுத்த கட்டுரைகளில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன்.) வன்னி மக்களின் அழிவுக்கெல்லாம் பிரபாகரன் மேல் பழி போட்டு விட்டு தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக அப்பாவித் தழிழர்களின் இன அழிப்பை மௌனமாக இருந்து போற்றிக் கொண்டிருக்கும் இந்த தமிழின விரோதிகளின் அரசியலுக்கு தமிழ் பேசும் மக்கள் தகுந்த பாடம் புகட்டும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.

Douglas Devanandaபுலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனை, கண்டவனைப் பற்றிச் சொன்னதை, கேட்டவனை, கேட்டுக்கொண்டு நின்றததைக் கண்டவனை, பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத் தள்ளப்படும் அப்பாவி மக்களின் பிணங்களை சிலவேளை நாம் எண்ண மறந்திருக்கலாம். மகிந்தவும் பிரபாவும் சுட்டுக் குவிக்கின்ற பிணங்களின் எண்ணிக்கை அதை விட கூட என்பதாலும் கொல்லப் படப்போபவர்களில் அண்ணையும் ஒருவர் என்றதாலும் தமிழ் போறம் காறருக்கு இந்தக் கணக்கு ஒன்றும் பெரிதாகப் பட்டிருக்காது.

தீவுப் பகுதியில் சின்னஞ் சிறு பிள்ளைகள் உட்பட தாய் தகப்பன் என்று ஒரு குடும்பத்தையே படுக்கையில் வைத்து சுட்டுப் பொசுக்கியது மாத்திரமல்லாமல் உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு, புலி ஆதரவாளர்களுக்கு கெலிவரச்செய்ததை யாரும் வெகு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பின் வளவில், தெரு முனையில் கடற்கரையில் பள்ளிக்கூட மைதானத்தில் என்று சுட்டுத் தள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை, புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது சுட்டுப் பொசுக்கிய மக்கள், போராளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது ஒரு அப்பட்டமான உண்மை. புலிகள் அல்லது ஆதரவாளர்கள்  என்று ஈபிடிபி சுடுவது நியாயம் என்றால்,  நீங்கள் புலிகளை அராஜகவாதிகள் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது.

கிளிநொச்சியில் வளைத்துப் போட்ட காணியெல்லாம் பறிபோய் விட்டது என்ற ஏக்கத்தில் கடிதம் கடிதமாயே எழுதிக் கொண்டிருக்கும் சங்கரிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி டக்ளசுக்கு போய்விடும் என்று தெரிந்ததும் தான் கொத்துக் குண்டு போடுற விசயமும் வன்னிச் சனம் சாகிற விசயமும் தெரியவந்தது போல. ஏதோ இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாட்டில் நாடுகளின் ஓட்டங்களைச் சொல்வது போல் புலிகள் 200, 300, இப்ப 1500 என்று தினம் அறிவிக்கும் பிணங்கள் எல்லாம் உங்களைப் போல சொகுசாகச் சாப்பிட்டு மகிந்தவின் விருந்திலே திளைத்துப் போய் உறங்கிக் கிடக்கும் ஈனர்களது அல்ல. பதிலே போடமாட்டார் என்பது தெரிந்திருந்தும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் ஜயா பக்கத்திலை இருக்கும் மகிந்தவுக்கு ஒரு போஸ்ற் காட் போடுவதற்கு அப்ப உமக்கு நேரம் கிடைக்கவில்லையா? இப்பதான் நேரமும் காலமும் கூடி வந்திருக்குப் போல. கூட்டணியில் எம்பியாக இருந்த காலத்தில் அங்கிருந்த வறிய தமிழர்களின் காணிகளை வளைத்துப் போட்டு ராசதானியம் நடத்திய ஜயா, அந்த காணி பறிகொடுத்த மக்களையே புலிகள் இன்று கேடயமாக வைத்திருப்பதும், சிங்கள இனவெறி இராணுவம் தினம் தினம் சுட்டு விழுத்துவதும் இப்பவாவது உங்களுக்குத் தெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே? பிரபாகரன் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதிலும் கடிதம் போடுவதிலும் காலத்தைக் கழிக்காமல், பறிபோன காணியெல்லாம் மீட்டெடுக்கும் கனவில் மிதக்காமல், வன்னி மக்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது (காகத்திற்கு எப்பவும் …………..) நல்லது என்று நினைக்கிறேன்.

டக்ளசை விட்டுவிடுங்கள். வெளிப்படையாகவே எனக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை கிடையாது. அதிலும் வன்னி மக்களைக் கொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை. யாழ்ப்பாணத்து மக்களைச் சுடுவதற்கே எனக்கு ஆள் பத்தாது. இதிலை வன்னி மாடுகளை சுடுவதற்கு எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்று சொல்லி மகிந்த ஜயா நீங்கள் எத்தினை பேரைச் சுடுகிறீர்கள் என்பதல்ல முக்கியம், வடக்கு மாகாண சபை எனக்குத் தான், பிறகு கருணாவை கொண்டு போய் முதலமைச்சர் ஆக்கிப் போடவேண்டாம் என்று முதலமைச்சர் பதவிக்காக அணில் ஏறவிட்ட நாய் போல மகிந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர் கொலைகளை நிறுத்தும்படி கேட்க முடியாது. முதலைமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலைக்கு வடக்கு மாகாண பொம்பிளைக் கனவு என்பது வன்னி மக்களின் அதி உயர் எண்ணிக்கையில் நடந்து கொண்டிருக்கும் மரணங்களில அல்லவா தங்கியிருக்கிறது.

Anandasangaree Vசங்கரி முதலை டக்ளஸ் முதலைக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை நிருபிப்பதற்காக மக்களின் கொலைகளை எல்லாம் பிரபாகரன் தான் செய்கிறார், இராணுவம் ஆகாயத்தைப் பார்த்துதான் சுடுகிறது என்பது போன்று கதைவிட்டவர் கடிதம் போட்டவர். ஒரு நாளைக்கு கிளிநொச்சிக்கு போவியள் தானை குறைஞ்சது பறிபோன காணிகளுக்கு எல்லை போடுறதுக்காவது.. அப்ப தெரியும் மக்களின் பலம் என்பது என்ன என்று.

நான் போடச்சொன்ன கடிதம் தமிழ் மக்களை அழித்தொழிக்க நடக்கிற திட்டத்தை நிறுத்தும்படி கேட்டு எழுதச் சொன்ன கடிதம்.  அதென்ன கடிதம், காலையும் மாலையும் பிஸ்கற் அதோட தேத்தண்ணி. சங்கரி ஜயா நீங்கள் காணி புடிப்பியள். வால் புடிப்பியள். மன்மோகன் சிங்கனுக்கு…… புடிப்பியள் எண்டு தெரியும். ஜோக் அடிப்பியள் எண்டு சடவன்குளத்து ஜயனாணை எனக்குத்  தெரியாது. அதுவும் அடிபட்டு நொந்து உறவிழந்து உடுத்த உடைகூட தங்கள் மானத்தின் பாதிமறைத்த நிலையில் தப்பி வந்திருக்கும் அப்பாவி வன்னி மக்களை வைத்து நீங்கள் ஜோக் அடிப்பீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

தழிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் 70களில் எப்படி இருந்ததோ அதை விட பத்து மடங்கு தேவை இப்போது இருக்கிறது. எத்தனை பேர் சாகிறார்கள். எத்தனை பேர் அங்கவீனர்களாகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. புலிகள் அழியவேண்டும் என்று சொல்கிற இனவெறி அரசு, அதற்கு முண்டு கொடுப்பதற்கும் முண்டி அடித்துக் கொண்டு போய் கோப்பத்தாயாவுக்கு விசுவாசிகள் என்று காட்டி பேப்பருக்கு பேட்டியும் கொடுக்கிற டொக்டர் மாரும் இருக்கிற வரையில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.

கொழும்புக்குப் போய் என்ரை மனிசி படிச்சவா. நல்லா சமைப்பா. மினுக்கிக் கொண்டுதான் வேலைக்குப் போவா என்று இலங்கை வானொலி சக்கடத்தார் பாணியில் அவவுக்கு பாசிலைப் பிடிக்கும். கிரிபத்தும் கட்டச் சம்பலும் தொட்டுத் தொட்டுச் சாப்பிட மனிசிக்கு விருப்பம். என்று தன்னைப் பற்றியும் தன் மனிசியைப் பற்றியும் பேசியிருக்கும் இந்த டொக்டர்மாரும் அக்காமாரும் எப்படி தமிழ் மக்களின் பிரச்சனை பற்றிப் பேசப் போனார்கள் என்று எண்ணும் போதே வெட்கமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் தொடங்க முன்னரே வெளிநாட்டுக்கு வந்து படிப்பு பிறகு வேலை குடும்பம் குட்டி …… மண்ணாங்கட்டி என்று அத்தனையும் முடிஞ்சு, புலி பலமாக இருக்கும் போது எதுக்கு வீண் வம்பு என்று எலிகளாக இருந்த இந்த புலம்பெயர் மக்கள் கொழும்புக்குப் போய் நடாத்தி வந்திருப்பது கொமடி சோ.

அட அதிலை ஒரு டொக்டருக்கு ஜயின்ஸ்ரைனின் தியறி வேறை. டொக்டர் ஜயா இதென்ன சக்கரை வியாதிக்கு ஊசி போடுற விளையாட்டா தமிழ் மக்களின் பிரச்சனை. ஆரப்பா உங்களை எல்லாம் தெரிவு செய்தது. சத்தியமா சன் ரிவி அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனர் கண்ணிலை பட்டிருந்தா எல்லாரையும் அந்தாள் இந்தியாவுக்கு கொண்டு போயிருக்கும். மனிசியைப் பற்றி ஒருவன் ஜோக் அடிக்கிறான். பேட்டி குடுக்கிறன் என்று ஒராள் ஜோக்கடிக்கிறா. தியறி சொல்லிறார் ஒருவர். சில வேளை வன்னி மக்களுக்கு இப்ப தேவை சிரிப்புத்தான் என்று சிம்போலிக்கா சொல்லியிருப்பாங்களோ. கொன்ஸ்ரன்ரைன் நீங்கள்தான் மீண்டும் ஒரு ஆக்கத்தில் சொல்ல வேண்டும். ஆனா அடுத்த விசிற்றில உங்கட சீற் காலி என்றது மட்டும் எனக்கு தெளிவாத் தெரியுது.

வன்னியில் சிங்கம் அண்ணேன்ரை ஆக்களின்ரை அடி ஒரு பக்கம். புலி அண்ணையின்ரை ஆக்களின்ரை அடி இன்னொரு பக்கம். பசி பிணி நோய் மறுபக்கம் என்று மத்தளத்திலும் மோசமான நிலையில் வன்னி மக்கள் இருக்க கொழும்புக்கு போனவைக்கு மனிசி புராணம் பாடுவதற்கும் மகிந்த புராணம் பாடுவதற்க்குமே நேரம் இருந்திருக்கிதென்றால் அதிலும் ஒராளுக்கு பிளேனிலை ஏறினதிலிருந்து 25 பவுண் ரிக்கற்றுக்கு காணாது என்று கேட்டதிலிருந்து, போய் இறங்கின கையோட சாப்பிட்டது, மற்றது போட்டதிலிருந்து கூட்டம் எப்படா முடியும் பேட்டி எப்படா கொடுப்பன் என்ற அக்கறையிலை திரிஞ்சது வரையிலை யாருக்கும் வன்னி மக்கள் என்ற ஒரு துன்பியல் (அண்ணையின்ரை துன்பியல் கிடையாது) நிகழ்வே அவர்களின் அக்கறைக்கு வரவில்லை என்றால் சிங்கள அரசுகள் எமது பிரச்சனையை தீர்ப்தில் அக்கறையீனம் கொண்டிருப்பதை எப்படி சாடுவது.

லண்டனில இருந்து ஆலாய் பறந்து போனனீங்கள் கதைக்கிறதுக்கு தன்னும் நேர காலத்திற்கு போறியளே. விடிய கூட்டத்திற்கு மதியானம் எழும்பிப் போறியள். அதுசரி ரைம்க்குப் போயும் என்னத்தை கிழிக்கப் போறியள். டொக்டர் ஜயாவுக்கு படுத்துக்கிடுத்து போனாத்தான் தியறி எல்லாம் கிளியராய் வருமோ என்னவோ.

Pillaiyanஅம்பாறையில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வண்புணர்ச்சிக்கு உட்படுத்திய கொடூரத்தைச் சொன்ன தாயிடம் பிள்ளையான் சொல்கிறார் எனக்குப் பவர் இல்லை. அம்மானிட்டைப் போங்கோ என்று. இரண்டு கிழமை களித்து அம்மான் அம்மணமாய் போய் நின்று பதவிப் பிரமாணம் செய்கிறார். பத்திரிகைகள் சொல்கின்றன மாண்பு மிகு அமைச்சர் என்று. எக்கோணமிக்ஸ் பத்திரிகையின் ஓடியோ பேட்டியில் மக்களுக்கு பொலிஸ் பவர் தேவை இல்லை காசிருந்தா போதும் என்று தமிழ் மக்களின் 30 வருட போராட்டத்திற்க்கு காசையும் வேலுப்பிள்ளையிரை மகனையும் சாட்டிவிட்டு பிள்ளையானுக்கு அறிவில்லை என்று யாழ்ப்பாணத் திமிரில் பேட்டி கொடுத்திருக்கும் இந்த முதலை மகிந்தவை சுமப்பதற்க்கும் கிழக்கு முதலமைச்சர் போஸ்ற் தான் காரணம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இவைக்கு முண்டு குடுத்த தலித்தியம் கிழக்கியம் குலுக்கிற சங்கங்களை என்ன என்றது. லண்டன் கிருஸ்ணணோடு கருணாவுக்கு மதியுரைஞர் வேலைபார்த்து களைத்துப் போய் இப்ப பிளையானுக்கு மதியுரைஞரா இருக்கினம். பிரான்ஸ் லண்டன் என்று தலித்திய மாநாடு வைச்சு வாய் கிழிய தலித்தியம் பேசியன எல்லாரும் இப்ப மகிந்தவுக்கு அண்கொண்டிசனல் சப்போட்டாம். யாழ் மையவாதத்தால் வேளாள மேலாதிக்கத்தால் எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த போன நீங்கள், இதே யாழ் மேலாதிக்கத்தால் படு மோசமாகப் பாதிக்கப்பட்டு கல்லி இழந்து இன்று மிஞ்சியிருந்த கோவணமும் இழந்து நிங்க்கும் மக்களின் மரணங்களை உங்கள் கொள்கைகளை விற்கும் ஆயுதமாகப் பயன் படுத்துகிறீர்களே ஒடுக்கு முறை பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஜனநாயகக்காறரோட சேர்ந்து திஸ்ஸ விதாரணவுக்கு புரப்போசல் கொடுத்ததோட தலித் பிரச்சினை முடிஞ்சுது என்று நினைப்புப் போல. அன்றைக்கு நிசாம் காரியப்பர் சொன்னவர் நல்ல காலம் ஹெல உருமயாக்காரன்கள் வரேல்லை வந்திருந்தா தலித் முன்னணிக்காரரையும் ஜனநாயகக்காறரையும் கட்டி அணைத்து கூட்டுக்கலவியே செய்திருப்பாங்கள் என்று. அன்றைக்கு சொன்னாங்கள் இன்று போராடிக் கொண்டிருப்பவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் தலித் மக்கள் என்று. இன்று நீங்கள் சொன்ன தலித் மக்களும்தான் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள். ஏன் வாயடைத்துப் போய் நிற்கிறீர்கள். துக்கம் தாங்க முடியவில்லை என்று ரீல் விடுகிற பிளானோ. அதென்ன பிரதீபனின் குறும்படத்தில் இலங்கை இராணுவத்தை மோசமாகச் சொல்லியாச்சு என்று வேற பீல் பண்ணுறீங்களாம் உண்மையோ?

Uthayarajah_Sri_TELOமுதலை என்று சொல்ல முடியாது. வேண்டும் என்றால் கபறக் கொய்யா என்று சொல்லலாம். வேறுயாருமல்ல. சிறீ ரெலோதான். அட அங்கை இருக்கிறவங்களுக்குத்தான் விட்ட காணியைப் பிடிக்கிறதும் பட்டென்று போடுறதையும் தவிர வேறு தெரியாது விட்டுவிடலாம். ஜயா சிறீ ரெலோ தலைவரே வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போனனீங்கள் கொஞ்சம் காசு உளைச்சுக் கொண்டு போயிருப்பிள். போன கையோட வன்னி மக்களுக்கு அள்ளிக் கொடுத்து அரசியல் செய்யப் போறியளாக்கும் எண்டு பாத்தா. போறியள். வெள்ளை வான் ஒண்டு வாங்கிறியள். வாங்கின கையோட வங்கி மனேச்சரைக் கடத்திறியள். காசும் கேக்கிறியள். கேட்டா புலிகள் சாட்டு. லண்டனிலை அவங்கள் வணங்கா மண் என்று பேரை வைச்சு வெளிநாட்டிலை சுருட்ட நீர் வெளிநாட்டிலை ஒரு கோயிலைத் திறந்திருக்கலாம். வெண்புறா மாதிரி ஒரு சரிற்றியை தொடங்கியிருக்கலாம். அல்லது இளையோர் முதியோர் கன்னி கழியாதோர். சாமத்தியவீடு செய்தோர். செய்வதற்காக எப்ப மகளுக்கு மாதவிடாய் வரும் என்று பாத்துக் கொண்டிருப்போர் என்று ஏதாவது ஒரு அமைப்பைத் தெடங்கி உண்டியலைக் குலுக்கி காசு சேத்திருக்கலாம். அதெல்லாத்தையும் விட்டுப் போட்டு வெறும் கோவணத்தோடு மட்டும் நிற்க்கும் மக்களைக் கடத்தி உது என்ன விளையாட்டு. உருப்படுமோ உந்த அரசியல். அட கோதாரி விழுவார் என்ன செய்தாலும் இந்த வன்னிச் சனத்தை அல்லவா சாகடிக்கிறியள்.

சுகு அணி – சித்தர் அணி என்று அறுபத்தெட்டு அணிகளா பிரிந்திருக்கும் இந்தக் கட்சிகள் குறைந்த பட்சம் ஒரு கூட்டறிக்கை. அணிய எதுவும் இல்லாத வன்னி மக்களைச் சுடாதையுங்கோ என்று ஒரு அறிக்கை.  புலிகளை அழிப்பதற்க்கு எங்கள் பூரண ஆதரவு உண்டு. ஆனா புலியின் பெயரில் ஒரு சந்ததியையே அழிப்பது ஏற்றுக்ககொள்ள முடியாது. என்று. உடல் சிதறி ஊனம் பட்டு இறந்த சிசுவைக்கூட புதைக்க நேரம் இன்றி ஓடி ஓடி மடிந்து கொண்டிருக்கும் இந்த வன்னி மக்கள் உங்கள் அக்கறைக்குள் வரவில்லை என்றால் நீங்கள் பிரபாகரன் இருப்பதற்கான நியாயத்தை இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கே வழிகோலுகிறீர்கள் என்ற வரலாற்று உண்மையை மறந்து விடவேண்டாம்.

சரி ஸ்ரீறிலங்காவில் இருக்கிற அணிகள் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்க வேண்டும். ஏதாவது கதைத்தால் மகிந்த பாதுகாப்பை தளர்த்துவார் அவையின்ர வெள்ளை வானிலை வந்தே அவைய போடுவாங்கள்;. அதனால அவை வாய் திறக்கிறதேயில்லை. ஆனால் இந்த புலத்தில உள்ள புலிக்கு எதிரான அரசுக்கு ஆதரவான சங்கங்கள் போறங்கள் எல்லாம்? லண்டன் பாரிஸ் ஸ்ருட்காட் என்று கூட்டத்திற்கு மேல் கூட்டம் போட்டு போன் மேல் போன் போட்டு உலகத்தில உள்ள எல்லாரையும் திரட்டி கையெழுத்து வேட்டையும் நடத்துகின்ற பலம் இருக்கிற உங்களுக்கு வன்னிச் சனங்களுக்காக ஏன் வாயே திறக்க முடியவில்லை? இந்த இளவு விழந்த வன்னிச் சனங்களுக்கு இங்கிலுசும் தெரியாது. மேல்தட்டு பழக்கவழக்கங்களும் தெரியாது. ஆதாலை போறங் காறற்ரை மொழி விளங்காது எண்டு விட்டுட்டியளாக்கும்.

கேதீஸ்க்கு நினைவுக் கூட்டம் வைக்கிறியள். நல்ல விசயம். லசந்தாவுக்கும் போராட்டம் நடத்தினியள். கட்டாயம் செய்யத்தான் வேணும். ஆனால் வன்னிச் சனத்திக்காக ஒரு கூட்டமும் இல்லை. ஒரு போராட்டமும் இல்லை. வன்னி மாடுகளுக்கு படிக்கவும் தெரியாது அதைவிட சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்றதாலையோ? அது மட்டுமே லசந்தாவுக்கு போராட்டம் நடத்தினியல். உலகப் புரட்சிக்காரரும் வந்தாங்கள். பெரும்பாலும் இலங்கையை உலகப்படத்தில தான் பார்த்திருப்பாங்கள். ஆனாலும் ஒரு சொலிடாரிட்டிக்காக அவங்களும் குரல் கொடுக்கிறாங்கள். உலகப் புரட்சியை வெல்லுறாங்களோ இல்லையோ அவங்கள் பனரைக் கொண்டு வந்து கட்டினா ஜனநாயகத் தலைவி புலி மாதிரிப் பாய்ஞ்சு பனரை அவுக்கிறா? ஜனநாயகத் தலைவர் கொண்டுவந்து வீசிட்டு போறார். நீங்கள் நுனி நாக்கில டெமோகிரசி கதைச்சுக் கொண்டு இன்னும் உந்த இயக்கப் பறியலை காவிக்கொண்டு தான் திரியிறியள். நாங்கள் முன்னாள் உறுப்பினர்கள் என்று சொல்லாட்டி உங்களுக்கு அரசியல்ல இடமில்லைப் போலத்தான் கிடக்கு. ஆனால் கொழும்புக்கு போன கொமடி கோஸ்டி ஒரு பெக்கோக்கள். உங்க மீடியாவில தங்கட விலாசத்தை காட்டேக்க வேட்டி அவிழிறதும் தெரியாம உளறிப் போடுவினம். ஆனால் நீங்கள் ஆபத்தான பேர் வழிகள். சிமிக்கிடாம போய் வந்து காதும் காதும் வைச்சமாதிரி உங்கட கிச்சினிலயே எல்லாம் முடிஞ்சிடும். நீங்கள் மஹிந்தவுக்கு பின்னுக்கோ ரணிலுக்குப் பின்னுக்கோ இல்லை சந்திரிகாக்குப் பின்னுகோ என்றது எல்லாம் அந்தக் கதிர்காமத்தானுக்குத்தான் வெளிச்சம். இந்த முதலைகள் ஒன்றும் அந்த முதலைகளுக்கு குறைந்தவர்களில்லை.

அது இருக்க, தப்பி வந்த மக்களை அரசாங்கம் நன்றாக நடத்துகிறதாம் என்று ரிபிசி வானொலியில் கொமடிக் குழுவில் பங்கு பற்றிய அறிவிப்பாளர் சொல்கிறார். இவர் மாற்றுக் கருத்து, ஜனநாயகம், தலித்தியம் பெண்ணியம் இலக்கியச் சந்திப்பு என்று ஐரோப்பாவில எங்காவது கூட்டம் நடந்தால் அங்க இவரைச் சந்திக்கலாம். வன்னியில் மாடுகளைக் கூட கம்பி வேலி போட்டு அடைத்து வைத்தது கிடையாது. கூடாரங்களை அடித்து சுத்தி கம்பி வேலி போட்டு வைத்திருப்பதை பற்றி புகழ்ந்து பேசும் இந்த முன்னாள் போராளியை என்ன சொல்வது. 80 களின் நடுப்பகுதியில் பூசா முகாமில் படு மோசமாக அடைத்து  வைக்கப்பட்ட கைதிகளில் நானும் ஒருவன். திறந்தவெளி கட்டடத்தில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு எம்மை அடைத்து வைத்திருந்தர்கள். (எனது சகோதரி அப்போது ஒரு கடிதம் போட்டிருந்தார். கடவுள்தான் உன்னைக் காப்பாற்றி வைத்திருக்கிறார் என்று. நான் எழுதிய பதில் கடவுள் கம்பிவேலி போட்டுத்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டுமா என்று. கம்பி வேலிக்கு வெளியே நின்று சேறு படாமல் பிஸ்கற் கிடைக்கிறதா என்று கேட்டு விட்டு வந்த கொமடிக் குழுவுக்கு மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் போது ஏற்படும் வலியை உணர்கிற பக்குவம் இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.)  அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாம்களை பார்வையிட்ட இந்த கொமடிக் கிங் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக பேசப் போயிருக்கிறார்கள் என்றால் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டுவதை சிங்கள அரசுகள் இழுத்தடிக்க வேறு என்ன ஆயுதம் வேண்டிக்கிடக்கிறது.

வன்னித் தேர்தல் கனவில் மிதக்கும் இவர் வவுனியா போய் பத்திரிகையாளர் மாநாடு வேறு நடத்தி இருக்கிறார். அரசாங்கத்திடம் வாங்கிற பணம் போதாது என்று வன்னி மக்களிட்டை புளொட் அடிக்கிற கொள்ளை ஒன்றும் பரம ரகசியமல்ல. தங்கள் முன்னாள் போராளிக் குடும்ப உறுப்பினர்களையே கடத்தி அட்டகாசம் பண்ணும் இவர்கள் சாதாரணமானவர்களை எவ்வாறு நடத்துவார்கள். அவர்களிடமே சில ஆயிரத்திற்கு டில் போட்ட சிங்கன் இவர். இவருக்கு ஒரு சின்ன அட்வைஸ். லெக்சன் கேக்க வன்னிக்கு போகேக்க அண்டவெயாரை சொஞ்சம் இறுக்கிப் போட்டுக் கொண்டு போங்கோ. வன்னி மக்கள் இருக்கிற கொதிக்கு என்ன நடக்கும் எண்டு என்னாலை ஆருடம் கூற முடியாது.

இவற்றை இன்னும்மொரு தோஸ்துவும் உந்த கொமடி கோஸ்டியோட போனவராம். அவர் பசிலோட தோள்ள கைபோட்டுத் தானாம் கதைப்பார் அவ்வளவு குளோஸ். உங்களுக்கு கொழும்பிலை யாரையாவது தூக்கோணுமெண்டா அவருக்கு போன் போட்ட போதுமாம். இந்த அறுவார் அந்த அறுவாரோடு சேர்ந்து தாஜ்சமுத்திராவில சாப்பிட்டு மற்றதையும் போட்டுட்டு வன்னிச் சனத்தை துலைக்கிறது என்றே முடிவெடுத்திட்டாங்கள்.

தமிழ் மக்களுக்கு பிரச்சனை ஒன்று இருந்ததே கிடையாது. இந்த வன்னி படிப்பறிவில்லாததுகள் தான் சும்மா சுட்டுத் திரியிறாங்கள் என்பது போல் எத்தனை பேர் செத்தாலும் மகிந்த செய்வதெல்லாம் சரி என்று தம்பட்டம் அடிக்கும் இவர்கள் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முனைகிறார்கள் என்றால் இவர்கள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டிய கடமை தமிழ் பேசும் மக்களுக்கு உண்டு. இல்லை தூங்கும் போது கோவணத்தை உருவிக் கொண்டுபோய் மகிந்த சகோதரர்களுக்கு பரிசாக் கொடுக்கவும் இந்த முதலைகள் தயங்க மாட்டார்கள். 

இதுக்குள்ள சில வட்டன்கள் தகப்பன்ர பொலிற்றிக்கல் இன்புலவன்சில கொமடிக்குழுவில சேர்க்கப்பட்டவை. அவை அங்க வந்த செக்கிற்றரி பொம்பிளையளுக்கு கிஸ் அடிக்க முயற்சியாம். தமிழனைக் கொண்டே அடகு வைக்கிறதுக்கு என்றே திரியுறாங்கள்.

பொம்பிளைக் கனவில் முதுகில் சுமந்த முதலை போல தங்கள் முதலமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலையாகட்டும் சங்கரிப் பேயாகட்டும் சித்தாத்தப் பிசாசாகட்டும் இல்லை வெளிநாடுகளில் இருந்து சென்ற கொமடிக் குழுவாகட்டும் ஒன்றரை இலட்சம் மக்களைக் காவு கொடுத்து முல்லைத்தீவின் ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இந்தப் போராட்டம் வெறும் வன்முறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் ஏற்பட்ட போராட்டமல்ல. அந்தப் போராட்டத்திற்கான நியாயத் தன்மைகளை ஏகபிரதிநிதித்துவத்துக்குள் குழிதோண்டிப் புதைத்த புலிகளும் புதினம் பாத்துக் கொண்டிருந்த இந்த முதலைகளும் சேர்ந்து விட்ட வரலாற்றுத் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புலிகளை ஒழித்துக் கட்டிய கையோடு மகிந்த அரசு சொல்லும் சொறிப்புள்ளைக்கு முதலமைச்சர் பதவி வேண்டிக் கிடக்கோ என்று. இது பெரிய அரசியல் ஆய்வுகளை செய்து நான் கண்ட முடிவல்ல. இலங்கையின் சரித்திரத்தில். தமிழ்பேசும் மக்களின் உரிமை மறுப்புக்காக சிங்கள அரசுகள் தமிழர்களையே பயன்படுத்திய வரலாறுகளை கண்டதும் கேட்டதாலும் கண்டுகொண்ட முடிவு. இன்று எமக்கு முன்னால் இருக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றே ஒன்றுதான். புலிகள் பலம் இழந்திருக்கும் இந்த வேளையில் தமிழர்களி;ன உரிமைகளை நசுக்குவதற்கான திட்டங்கள் தயாராகவே இருக்கும். இலங்கையில் எல்லா இன மக்களும் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கான அடிப்படையாக இருக்கும் ஒரு அரசியல் தீர்வு வென்றெடுக்கப் பட வேண்டும். சிங்களவர்களை தமிழர்கள் நம்புவதற்க்கும். தமிழர்களை முஸ்லீம்கள் நம்புவதற்கும் என்று பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப இந்த்த தீர்வு மிக மிக அவசியம். அந்தத் தீர்வை இன்று இருக்கும் எந்தத் தலமையும் வென்றெடுக்காது என்பதே நிஜம். அந்தத் தீர்வுக்காக குரல் கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதே இன்றைய அவசர அவசியமாகும்.

Related Article :

வணங்கா மண்!!! : ஈழமாறன்

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே! : ஈழமாறன்

Show More
Leave a Reply to S Nirmalan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

52 Comments

  • ilanko
    ilanko

    ஐயா ஈழமாறன்,
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வன்ட்கிருக்கு வெல்டன்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஈழமாறனின் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது ஈழமாறனை ஈழத்துச் சோ என அழைக்கலாமோ என்று தோன்றுகின்றது. காரணம் சோவும் அரசியலில் எல்லோரையும் விமர்சிப்பார் ஆனால் பிரைச்சினைக்குரிய தீர்வொன்றையும் வைக்க மாட்டார். அதே நிலை தான் இங்கு ஈழமாறனின் கட்டுரையிலும் காண்கின்றேன். முதலில் இன்று வன்னியில் அகப்பட்டுள்ள மக்களில் கிட்டத்தட்ட 25 வீதத்திற்கு மேல் யாழ்ப்பாண அப்பாவி தமிழர்களும் அடங்குவார் என்பது எப்படிக் கட்டுரையாளருக்கு தெரியாமல் போனது. இவர்கள் 95 இல் யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்ட போது புலிகளின் பின்னால் ஓடி வந்தவர்கள்.

    ஆயுதப் போராட்டமாக விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டு அது பின் திசைமாறி சகோதரப்படுகொலைகளாக என்று பரிநாமம் பெற்றதோ, அன்று ஆரம்பித்தது தமிழனின் அழிவு. இந்தச் சகோதரப்படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் புலிகள் தானே?? பின் மற்றைய இயக்கங்களும் பழிக்குப் பழி வாங்குவதாக அவர்கள் பங்கிற்கும் தொடங்கினார்கள்.

    டக்கிளஸ் போன்றவர்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வது போல் தற்போது பல நல்ல காரியங்களும் செய்யத் தொடங்கியுள்ளார்கள். இதை மறுக்க முடியாது. டக்கிளஸின் அமைப்பிலிருந்ததற்காகவே மகேஸ்வரி வேலாயுதத்தைக் கூட புலிகள் போட்டுத் தள்ளினார்கள். ஆனால் சிறையிலிருந்த பல தமிழரை (புலிப் போராளிகள் உட்பட) வெளியில் மீட்டெடுப்பதில் தான் பெரும் பங்காற்றியபடியால் தனக்கு என்றும் ஆபத்திருக்காதென்ற நம்பிக்கையிலேயே மகேஸ்வரி வேலாயுதம் இருந்தார். ஆனால் புலிகள் உண்டி கொடுத்தவனுக்கே வாய்க்கரிசி போடும் வல்லவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்தவர்கள். அதுவும் பெண்களைக் கொல்வதென்றால் அவர்களுக்கு அலாதி பிரியம். ரஜனி திரணகமவில் தொடங்கி திருமதி யோகேஸ்வரன் என்று தொடர்ந்து நீணடு கொண்டிருந்தவை அந்தப் பட்டியல். ஆனால் புலிகளால் போட்டுத் தள்ளப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை சரியாகக் கட்டுரையாளர் அறியவில்லையென்பது அவரின் கட்டுரையில் தெளிவாகவே தெரிகின்றது.

    மகிந்த ஆட்சிக்கு வந்த போது புலிகளே மகிந்த வித்தியாசமானவரென்ற ஒரு புகழுரையை முன் வைத்தனர். அதை நிரூபிப்பது போல் புலிகளை முறியடிப்பதில் முன்பு ஆட்சியிலிருந்தவர்கள் செய்த தவறுகளை சரிசெய்து தனது சாதுரியத்தால் இன்று வித்தியாசமாகவே புலிகளுக்கெதிரான போரை கையாண்டு வெற்றிக் கனியையும் பறித்திருக்கின்றார். மாவிலாற்றில் புலிகள் ஆரம்பித்த போர் இன்று மணலாற்றையும் தாண்டி மகிந்த அரசின் வெற்றியை பறைசாற்ற வைத்திருக்கின்றது. இதற்கு யார் காரணம் என கட்டுரையாளர் ஏன் சிந்திக்கவில்லை??

    மகிந்த அரசு ஒரு நியாயமான அரசோ இல்லையோ என்பதை, எனி வரும் காலங்களில் அவ்வரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமே தீர்மானிக்க முடியும். மகிந்த அரசு வன்னிப் போரில் முழுத்தமிழரையும் அழிக்க நினைத்திருந்தால் தாராளமாக அழித்திருக்கலாம். புலிகளின் இணையத்தளங்கள் பொதுமக்கள் போர்பயிற்ச்சி பெறுகின்றார்கள் என்று புலுடா விட போட்ட படங்களையே வெளிநாடுகளுக்குக் காட்டி அநேகரும் புலிகள் தான் என்று பம்மாத்தும் காட்டியிருக்கலாம். வெளிநாடுகளும் பெயருக்கு அந்த் தடை, இந்தத் தடை என்று கொஞ்சக்காலம் தங்கள் பங்கிற்கு பம்மாத்துக் காட்டிவிட்டு பின் தடைகளையும் எடுத்தவிட்டு எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள்.

    இன்று பொதுமக்களின் இவ்வளவு அழிவுகளுக்கும் புலிகளே காரணம் என்பது கட்டுரையாளருக்கு புரியவில்லையா?? பொதுமக்களுக்கான பாதுகாப்புப் பிரதேசமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் புலிகளுக்கென்ன வேலை?? எல்லாவற்றையும் கருணா கிளப்பிய பிரதேச வாதம் போல் கட்டுரையாளரும் கிளப்பி திசை திருப்ப நினைப்பதேனோ??

    எனியும் அடுத்தவரில் குறைசொல்வதையும் பிரதேச வாதங்களை கூறி சுகம் காண்பதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புலிகளின் பிடிகளிலிருந்து தப்பி வந்த அந்த மக்களுக்கு எவ்வகையில் உதவலாமென்பதை ஒருமித்து சிந்தித்து செயற்படுத்த முன் வாருங்கள். அதன் பின் எமக்கான சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்து அவர்கள்களோடு ஒருங்கிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ச் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.

    Reply
  • rajan
    rajan

    திரு.ஈழமாறன் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிப்பதில் நான் திருப்தி அடைகிறேன். திரு.ஈழமாறன் சொன்ன கருத்துக்களை யாரும் சொல்லவில்லையே என்று நான் பல தடவைகள் வேதனைப்பட்டிருக்கிறேன். எல்லோரும் தமது இயக்கப் பெயர்களில் தமிழர்களின் பெயர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். இதனைவிட எல்லோரும் புலிகள் எதிர்ப்பு முன்னணி என்று வைச்சு அரசியல் நடததினால் நல்லா எடுபடும்.
    எல்லா தலைமைகளும் தமிழனின் முதுகில் சவாரி செய்யவே முண்டியடிக்கிறார்கள்.

    என்ன செய்வது.. தங்களது அறிக்கையை படித்த பின்னராவது நல்ல முடிவெடுத்து செயற்பட வேண்டும். அரசின் செய்திகளை தூக்கிப்பிடித்து தமது தளங்களில் வெளியிடும் இணையத்தளங்கள் அங்குள்ள மக்கள் படும் துன்பங்களை தினமும் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் செய்திகளை வெளியிட்டு உலகத்துக்கு காட்டலாம் தானே..? இவ்வளவு அவலங்களுக்கும் காரணமாக நான் பார்ப்பது புலிகளின் தற்போதய பலவீனமான நிலை தான்.

    Reply
  • mano
    mano

    தற்போது தமிழர்கள் படும் இன்னலுக்குள் எப்படியோ காயங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கும் அரசியல் தலைமைகளைப் பற்றி வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறீர்கள் சரி> மகாப்பெரும் பலத்துடன் பாராளுமன்றம் சென்ற 22 ஜயும் விட்டுவிட்டீர்களா? அவர்கள் ஏகப்பிரதிநிதித்துவத்திற்குள் அடக்கமானவர்கள் என்பதாலா அல்லது ஜடங்கள் என்பதாலா தவிர்த்தீர்கள்.

    இன்றுள்ள எந்தத் தலைமையும் வென்றெடுக்காது என்று புதிய தலைமையைக் கொண்டுவரப்போகிறீர்களா? அதுவரை தமிழ் மக்கள் மகிந்தவின் தலைமையை ஏற்கட்டும் என்கிறீர்களா?

    நான் ஒரு யாழ் வாசி. தமது சொந்த வாழ்வில் எதையும் இழக்காத வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தெரியாது நாம் எமது பிள்ளைகள் வளர சிறிது நிம்மதியான சூழலுக்காக ஏங்குவது. எந்தத் தலைமையும் தமிழரின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது என்று எங்களுக்குத் தெரியும் அதனால் தான் எங்கள் சொந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கிற தலைமையாவது எமக்கு இருக்கட்டுமே என்கிறோம்.

    இங்கே மக்கள் நாளாந்தம் எத்தனையோ தவிர்க்கமுடியாத தேவைகளை நிறைவேற்ற முடியாமல் (அவற்றை என்னால் பட்டியலிட முடியவில்லை) திணறுகிறார்கள். அவர்களை வெந்து சாக விட்டுவிட்டு புதிய தலைமையைத் தேடி எங்களால் அலைய முடியாது. இன்றைய விளம்பரயுகம் பிரசார வசதிகள்> அந்தத் தலைமையை வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வந்து சேர்க்கும். அந்தத் தலைமை பல பட்டங்கள் பதவிகளுடன் மக்களை உங்களையும் ஏமாற்றும் சிறந்த தந்திரங்கள் நிறைந்ததாக வந்து இறங்கலாம்!

    கொலைகளை யார் செய்கிறார்கள்?
    எல்லோரும் செய்கிறார்கள்-
    எதற்காகச் செய்கிறார்கள்?
    தமிழ் மக்களை விடுவிக்க என்கிறார்கள்-
    எந்தச் சிறையிலிருந்து?
    ஒரேயொரு சிறைதான் என்றார்கள் –
    ஒன்றின் மேல் ஒன்றாய்>
    கொலைகளும் நீள்கிறது –
    சிறை வேலிகளும் கட்டப்படுகிறது

    Reply
  • vithusha
    vithusha

    இப்போது தெரிகிறதா ஏன் புலிகள் இன்னும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்று. தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக புலிகளைத் தவிர வேறு யாருக்கும் அக்கறை இல்லை பதலி மட்டுமே குறிக்கோள் என்பது தான் அடிப்படை உண்மை.

    Reply
  • rohan
    rohan

    Well done.
    Why nobody talked about akka’s open writing on her discussions with the Norwegian High Commissioner?

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், ஈழமாறனுக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தை பாராட்டுகிறேன்.

    Reply
  • murugan
    murugan

    புலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனை கண்டவனைப் பற்றிச் சொன்னதை கேட்டவனை கேட்டுக்ககொண்டு நின்றததைக் கண்டவனை பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத்தள்ளப் படும் அப்பாவி மக்களின் பிணங்களை சில வேளை நாம் எண்ண மறந்திருக்கலாம். மகிந்தவும் பிரபாவும் சுட்டுக் குவிக்கின்ற பிணங்களின் எண்ணிக்கை அதை விட கூட என்பதாலும் கொல்லப் படப்போபவர்களில் அண்ணையும் ஒருவர் என்றதாலும் தமிழ் போறம் காறருக்கு இந்தக் கணக்கு ஒன்றும் பெரிதாகப் பட்டிருக்காது.

    தீவுப் பகுதியில் சின்னஞ் சிறு பிள்ளைகள் உட்பட தாய் தகப்பன் என்று ஒரு குடும்பத்தையே படுக்கையில் வைத்து சுட்டுப் பொசுக்கியது மாத்திரமல்லாமல் உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு, புலி ஆதரவாளர்களுக்கு கெலிவரச்செய்ததை யாரும் வெகு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பின் வளவில் தெரு முனையில் கடற் கரையில் பள்ளிக்கூட மைதானத்தில் என்று சுட்டுத் தள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது சுட்டுப் பொசுக்கிய மக்கள்இ போராளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது ஒரு அப்பட்டமான உண்மை. புலிகள் அல்லது ஆதரவாளர்கள் என்று ஈபிடிபி சுடுவது நியாயம் என்றால் நீங்கள் புலிகளை அராஜகவாதிகள் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது”///

    கட்டுரையாளரும் ஊருக்கு போய் கனகாலமாயதான் இருக்கும். மேற் சொல்லப்படும் குற்றங்கள் அபாண்டமானவை. அவற்றிற்கு காலம் தக்க பதில் சொல்லும். பல தொண்டர்களை புலிக்கு பலி கொடுத்து தாக்குப்பிடித்த அமைப்பு ஈபிடிபி. அது தேவையா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    கட்டுரையைப் படிக்கும் போது பிரதேச வாதம் மிகையாக தூக்குகிறது. ஆனந்தசங்கரிகள் யாழ்ப்பாணத்திலும் இருக்கிறார்கள். 2002 ல் ஊருக்கு வராதே என்ற உறவினர்கள் வந்து பார் என்கிறார்கள். நிம்மதி என்கிறார்கள்.அதை நிலைபெற செய்ய வேண்டிய வேலைகளே இன்று தேவை.
    காயங்களை கிளறி சொறியும் வேலை வேண்டாம்!

    Reply
  • BC
    BC

    Vithusha-
    ஈழமாறனின் கட்டுரையின் நோக்கமும் அதுவென்றே நினைக்கிறேன். எல்லோரையும் குழப்பி கடைசியில் புலிகளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்று நினைக்க பண்ணும் முயற்ச்சி தான்.

    Reply
  • X and Y
    X and Y

    You make an impression in your article that no one rather than you and TNA has not got the ability to speak about the tamil cause, do you have this ability in your own?
    The whole tamil community contains not only politicians like you and TNA but also different kind of people and their own political approach. In my opinion in a democratic political system no one should join under an umbrella to voice his own problem as you mentioned in your article?

    Reply
  • murugan
    murugan

    விதுசா
    பதவிகள் பட்டங்கள் ஒன்றும் அருவருக்கத்தக்கவை அல்ல. அவை மக்கள் நலனை முன்னிறித்தி அதிகாரங்களை பயன்படுத்தும் போது ஒரு ஏழையின் கண்ணீரை தடுக்கும்போது அர்த்தமுடைவையாகின்றன. தமது சொந்த பொருள் வசதிகளை நோக்கி இயங்கும் போது தான் அருவருப்புக்கு உரிவையாகின்றன். இன்றைக்கு புலித்தலமை செய்தது அதைத்தான். நீங்கள் கூறுவது புலிகளுக்கே பொருந்தும். புலி சரியாக இயங்கியிருந்திருந்தால் இன்றைக்கும் அது மக்கள் மத்தியில் இருந்திருக்கும்.

    Reply
  • suban
    suban

    ஈழமாறன் .. நாங்கள் புரட்சிக் கருத்துக்களை உதிர்க்க வேண்டும் என்பதற்காகமட்டும் எல்லோரையும் நோக்கி சுட்டுவிரலை நீட்டக்கூடாது. நடைமுறை எதார்த்தங்கள் சாத்தியமான தீர்வுகள் பற்றிகதைப்பதே நல்ல கருத்து. மக்கள் மக்கள் என்று மக்களைக்காட்லும் அதிகமானோர் மக்களைப்பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறோம்…

    Reply
  • murugan
    murugan

    பார்த்திபன் லீலாவதி, சுதந்திராதேவி போன்ற பெண்களை மறந்து விட்டீர்கள்.

    Reply
  • palli
    palli

    பல்லி மட்டும்தான் எல்லாரையும் விமர்சித்து எல்லோரிடமும் திட்டு வாங்கி வந்த தேசத்தில் ஈழமாறன் வரவு பல்லிக்கு தெம்பாக உள்ளது. சில வேளைகளில் பல்லியே தன்னை தானே திட்டி கொள்ளும். காரனம் எல்லோரையும் விமர்சித்தால் யார்தான் செயல்படுவதென. ஆனால் ஈழமாறனின் கட்டுரைக்கு பின் பல்லி போல் பலர் மக்களை மக்களே ஆள வேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் அதிகாரங்களும் கொலை மிரட்டல்களும் அவர்களது கருத்தை இருட்டில் முடங்க செய்கிறது. ஆகவே பல்லியை பொறுத்த மட்டில் புலி இருந்து சிங்கம் வரை விமர்சிக்கபட வேண்டிய மிருகங்களே.
    இடையில் புகுந்து திருட்டுபால் குடிக்கும் பூனைகளும் மக்கள் முன் குற்றவாளிகளே. இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை புலி தப்ப விட்டவர்களை இவர்கள் கொல்வார்கள். இவர்களுடன் பேசினாலே புலிகள் போடுவார்கள். ஆகவே ஈழமாறனின் கட்டுரையில் பல்லிக்கு உடன்பாடுதான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் எல்லா அரசியல் தலைவருக்கும் மஞ்சள்தண்ணி தெளித்து துடக்கு நீக்கியது போல ஈழமாறன் தற்போதைக்கு ஆயுதம் இல்லாமல் துடக்கு நீக்கியிருக்கிறார். தமிழ்மக்களுக்கு அதாவது ஈழத்து தமிழ்மக்களுக்கு முதல் தேவைப்படுவது புலிகளின் சங்காரமும்-அழிவுமே! ஜே.ஆர்.-ஜயவர்தனா பிரேமதாஸ ரணில் விக்கிரசிங்காகள் போன்றவர்களிடம் இருந்து மகிந்தராஜபச்சாவிவை வித்தியாசம் காணமுடியாதது தங்களிடம் உள்ள பரிதாபநிலை.

    டக்கிளஸ்தேவானந்தா மகாணங்களுக்கான சுயயாட்சி மத்தியில் கூட்டாச்சி. ஆனந்தசங்கரி அவர்கள் சமஷ்டி அல்லது இந்தியாவை போல ஒரு தீர்வு சிறீதரன் ஈபிஆர்எல்எவ் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மகிந்தாராபக்சாவும் நிச்சியம் தீர்வு வகைப்படும். சொல்லுகிறார். அதன் அகலநீளம் உண்மையில் யாருக்கும் தெரியாது ஏதோ ஒன்று நிச்சியம் வைக்கப்படும் என நம்பலாம்.

    மஞ்சள் கயிற்றுக்கு கழுத்தறுப்பவன் சிங்களவன் என நான் சின்ன வயதில் என் பெற்றோர் கதைப்பதை கேள்விப்பட்டது. அரசியல் அறிவே இல்லாத இவர்களுக்கு இந்தகதையை சொல்லிக்கொடுத்தவர்கள் யார்? நிச்சியம்எமது அரசியல்வாதிகளே இதில் இனவெறி கருத்தில்லையா? தமது பதவிகளுக்காக இனவெறி கருத்துக்களை வளர்த்துவிட்டு பெரும்பான்மை மக்களிடம் இனவெறி இருப்பதாக குற்றம் சுமத்தினால் எப்படி? எல்லோரும் ஏதோ ஒரு தீர்வுதிட்டத்தின் அடிப்படையில்தான் போராட்டம் நடத்துகிறார்கள் அது பிரபாகரனின் குரும்பட்டிதேர் தமிழ்ஈழம் அல்ல அதைவிட மேன்மையானது. தமிழ்மக்களை பாதுகாப்பது அவர்களுக்கு வாழ்வை தேடிக்கொடுப்பது ஐக்கியப்பட்ட வாழ்வை முன்நிறுத்துவது. மஞ்சள் தண்ணி தெளிப்பதல்ல. அது சரி ஈழமாறன் உங்கள் தீர்வுதிட்டம் தான் என்ன?

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளோ , தமிழ் தலைமைகளோ கொண்டு வராத ஒரு தீர்வையும் , தமிழர் மனங்களை வென்றெடுக்கும் முயற்சியையும் மகிந்த செய்ய முயல்கிறார் என்பதையும் அண்மைக் கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெரிகிறது.

    மகிந்த தரப்பால் அவருக்கு எதிரானவர்களை விட ஏனைய தமிழரிடத்தில் அன்யோன்யமாகவே இருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக அண்மைக் காலம் வரை இடம் பெற்ற பிரச்சனைகளை வெருட்டியோ அல்லது ஆயுத வழியோ நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

    ஒரு நாட்டில் பல காலமாக புரையோடிப் போயிருக்கும் ஒரு பூதாகரமான இனப் பிரச்சனையை தீர்க்க “மயிலே மயிலே இறகு போடு” தன்மை சரி வராது. ஒரு தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைமை தேவை. அது மகிந்தவாக இருக்கும் என்று பிரபாகரனைத் தவிர வேறு எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதனால்தான் மகிந்த ஜனாதிபதியாக பிரபாகரன் உதவினார்.

    மகிந்த மற்றும் மகிந்தவை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் இதுவரை இல்லாத ஒரு பரிமாணத்தில் சிந்திக்கிறார்கள். யாரை வைத்து எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக நகர்த்துகிறார்கள். உலகத்தையே தம்மால் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவரது சாணக்கியம் உயர்ந்திருக்கிறது என்றால் லோக்கல்கள் எம் மாத்திரம்?

    மகிந்த கீழ் மட்டத்தில் இருந்து உயர் நிலைக்கு வந்தவர். உயர்குல சிங்களவர்களைத் தவிர தெற்கு சிங்களவர்கள் எவருமே அரசியலில் ஒரு உயர் நிலைக்கு வராத தன்மையே இருந்தது.பிரேமதாஸ கூட கொழும்பு மக்களின் பலமும் , வாய் பேச்சு வல்லமையும் , சில பிடிகளையும் வைத்துக்கொண்டு ஜேஆரை மிரட்டியே தன்னை உயர்த்திக் கொண்டார்.

    கண்டி உயர் குல சிங்களவரிடமிருந்து இம் முறைதான அதி உயர் பதவியொன்று கீழ் மட்ட சிங்களவர்களுக்கு எட்டியுள்ளது. தவிரவும் மாத்தறை பகுதியில் வாழும் தமிழ் – முஸ்லீம்களது பலம் பலவீனம் என்பதை நன்கே அறிந்தவர் மகிந்த. ஆரம்ப காலம் தொட்டே தமிழர்களோடு மிக நெருக்கமாகவே மகிந்த இருந்து வந்துள்ளார். அதனால் அவர் தமிழ் பேசுவதை விட தமிழ் நன்றாகவே புரியும்.

    இதனால்தான் மட்டக்களப்பை கிஸ்புலாவை தவிர்த்து பிள்ளையானுக்கும் , யாழ்பாணத்தை டக்ளஸுக்கும் கொடுத்தார்.இங்கே சித்தார்த்தரைக் கூட தள்ளியே வைத்துள்ளார். தமிழரிடம் உள்ள சாதி முரண்பாடுகளைக் கூட அவர் நன்கு அறிந்தே வைத்துள்ளார்.

    இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது ஒன்று உள்ளது. இதுவரை இலங்கையில் ஆட்சி செய்த எந்த ஒரு தலைமையின் உறவும் படைகளில் தலைமைத்துவத்துடன் இருந்தததேயில்லை. அது அவர்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க பாதகமாகவே இருந்தது. எந்த ஒரு உறுதியான முடிவுவை எடுக்கவும் அச்சத்துடனே எடுக்க வேண்டி இருந்தது. அந்த அச்சமேயில்லாது முடிவெடுக்கும் ஒரு தலைவராக மகிந்த இருப்பதற்கு கோட்டாபய காரணமாக இருக்கிறார். மக்களை அணுகி சமயோசிதமாக காரியங்களை சாதிக்கும் திறனுடன் பசில் இடம் இருப்பதால் , அதற்காகவும் கீழ் மட்ட அதிகாரிகளை நாட வேண்டியதில்லை.

    சிங்களவர்களே அஞ்சும் அளவுக்கு மகிந்தவின் பலம் இருப்பதால்தான் ஜேவீபீ கூட அளவோடு கோஸம் போடுகிறது. எல்லை தாண்டினால் பேச வேண்டியவை பேசும். ஜேவீபியை மட்டுமல்ல ஐதேக பல கூறுகளாக சிதறியே இருக்கிறது. சிங்கள தேசியவாதம் பேசும் கெல உறுமய கூட அடக்கியேதான் வாசிக்கிறது.

    தற்போதைய நிலையில் வன்னியை மீட்பதுடன் அந்த மக்கள் மனங்களை வெல்லும் பணியை மகிந்த அரசு சார்ந்தவர்கள்தான் செய்கிறார்களே ஒழிய வேறு எந்த தமிழ் கட்சியும் அதற்குள் செல்லவே இல்லை.

    சுனாமி காலத்தில் புலிகள் முக்கியமாக கடைப்பிடித்த ஒரு விடயம் , அரச மற்றும் ஏனைய நாடுகள் கொடுத்த உதவிகளை அவர்கள் பொறுப்பேற்று மக்களுக்கு பகிர்ந்தளித்தார்களே தவிர நேரடியாக அவர்களுக்கு அந்த உதவிகளை வழங்க சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. பாதிப்புக்கு உள்ளான மக்கள் பெற்ற உதவிகளை புலிகள் வழங்கியதாகவே பெரும்பாலான பொது மக்கள் நம்பினர். இதை அங்கு சென்று பணியாற்றியவர்களால் நேரடியாகக் காண முடிந்த காட்சிகள். முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு SLMயைத் தவிர வேறு எவரையுமே புலிகள் செல்ல அனுமதிக்கவே இல்லை.

    அதையே மகிந்த பின்பற்றுகிறார். நேரடியாக எவரையும் இடைத் தங்கல் முகாம்களுக்கோ அல்லது ஏனைய பகுதிகளுக்கோ சென்று உதவுவதை கட்டுப்படுத்தியே வருகிறார். இதனால் அரசே பாதக்கப்பட்ட மக்களுக்கு உதவியதான தன்மையை உருவாக்குவதோடு , தேவையற்ற பிரசாரங்களையும் தடுப்பதற்கு அது வழி செய்துள்ளது.

    “வன்னியில் இருக்கும் மக்கள் அனைவரும் புலிகள்.அவர்களை மீட்க எதற்காக நம் வீரர்களை பலி கொடுக்க வேண்டும்” என மகந்தவிடம் கெல உறுமய கூறிய போது “அங்கே புலிகள் கொஞ்சம். அப்பாவிகள் அதிகம். அவர்களும் இந்நாட்டின் மக்கள்.அவர்களுக்கும்தான் நான ஜனதிபதி” என கடிந்துள்ளார்.

    ஏற்கனவே கெல உறுமய புத்த பிக்குகளுக்கு ஜேவீபீ ஊடாக மகந்த தாக்குதல்களை தொடுத்தார் என்பது கெல உறுமயவுக்கு தெரியும். அவர்களையும் இரண்டாக பிளவு படுத்தினார். இன்று அதைச் செய்த ஜேவீபியினருக்கும் அதே தாக்குதல் தொடரவே செய்கிறது.

    எனவே தமிழருக்கான அதிகார பகிர்வோ அல்லது தீர்வோ மகிந்தவால் வரும் என நம்பலாம். அவரை எதிர்க்க தமிழன் என்ன? சிங்களவனே நிற்க மாட்டான்.

    பலமான ஒரு தலைமை இல்லாத போது ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது.
    அது சர்வாதிகாரமாகவோ அல்லது அதன் தன்மையோடோ இருத்தல் வேண்டும்.

    இலங்கை சரித்திரித்திலேயே மகிந்த போன்ற பலமான ஒரு தலைவன் இல்லாமை தமிழர் -முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சிறீலங்காவின் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித பிணங்களின் மீது சவாரி செய்யும் ஒரு அரசியலாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

    “போராட்டம் என்றால் மனித இழப்புகள் இல்லாமல் இருக்காது ” என்ற தலைவர் பிரபாகரனின் தியரியை நாம் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டோமோ? அதே தியரியை நடைமுறைப் படுத்தி இத்தோடு இந்த சாவுகள் முடிவுக்கு வர வேண்டும்.

    பிரபாகரன் மகளின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்து இது ஒரு சிங்களத்தி. எங்களுக்கு என்ன பார்வை கோளாறே? என்று புலன் இழந்த புலத்தாரை விட அங்கு வாழும் மக்களுக்கு சிங்களவனாலாவது நல்ல வாழ்வு கிடைத்தால் அது போதும். அதுவே எமது பிராத்தனையாக வேண்டும். உலகத்தை சுதந்திரமாக பார்க்க முடிந்த தமிழன் நிலமையே இப்படியென்றால், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் மன நிலையை யோசிக்கவே வேண்டியதில்லை.

    அந்த மக்களை காட்டும் ஒளிப்பதிவுகளில் பார்த்தால் இராணுவத்துக்கு பயந்து மக்கள் ஓடி வருவது மாதிரியா இருக்கு. இல்லை போகிற இடத்திலயாவது நிம்மதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பாய் அல்லவா தெரிகிறது?
    அந்த மக்களுக்கு இன்று தேவை குண்டு சத்தம் கேட்காத ஒரு அமைதி.
    நிம்மதியாக தூங்க ஒரு பாய். மண் மீட்பும் மண்ணாங்கட்டியும்.
    போதும் செத்தது. இனியும் வேண்டாம் இந்தக் கொடுமை.

    வன்னி மக்களின் சாட்சியங்கள் வரும் போது உண்மைகள் புலப்படும்.
    அதையும் புலி வால்கள் ஆயுதத்துக்கு முன்னால இப்படித்தான் பேசுவாங்க என்று சொல்வார்கள் என்பதும் எமக்குத் தெரியும். இருந்தாலும் அந்த பிஞ்சு குழந்தைகளின் முகங்கள் எவருக்கும் பொய் சொல்லாது.

    அட பாவிகளா? எத்தனை பிஞ்சுகளை கொண்டுட்டீங்களடா?

    Reply
  • thuyaran
    thuyaran

    //அந்தப் போராட்டத்திற்கான நியாயத் தன்மைகளை ஏகபிரதிநிதித்துவத்துக்குள் குழிதோண்டிப் புதைத்த புலிகளும் புதினம் பாத்துக் கொண்டிருந்த இந்த முதலைகளும் சேர்ந்து விட்ட வரலாற்றுத் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்//
    ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட வரிகள்.

    Reply
  • உடும்பு
    உடும்பு

    ஏன் இவ்வளவு பேர் அவர் மீது பாய்கிறீர்கள்?,/நான் ஒரு யாழ் வாசி. தமது சொந்த வாழ்வில் எதையும் இழக்காத வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தெரியாது நாம் எமது பிள்ளைகள் வளர சிறிது நிம்மதியான சூழலுக்காக ஏங்குவது.–மனோ/—-இது சரிதானே!!,இதைதானே ஈழமாறன் “வன்னி மக்களுக்கு அளியுங்கள்” என்று கேட்கிறார்!!./இலங்கையில் எல்லா இன மக்களும் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கான அடிப்படையாக இருக்கும் ஒரு அரசியல் தீர்வு வென்றெடுக்கப் பட வேண்டும். சிங்களவர்களை தமிழர்கள் நம்புவதற்க்கும்.-ஈழமாறன்/–“இதை வேண்டாம் என்கிறீர்களா?,இதைதான் கருத்தியல் அழுத்தம் என்பதா?.ஒரு கால் அழுகிவிட்டால்(பிரபாகரன்) அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது சரி என்றாலும்,அரசியல் அங்கவீனம் தவிர்க்கமுடியாதது,ஏனென்றால்,கால் “உடலின் ஒரு பாகமே”.இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பதை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைப்பது ஈழமாறன் கூறிய மேற்சொன்ன விஷயங்கள்தான்.”தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்”,என்ற அதீத உண்ர்ச்சிக்கு, “பிரதேச வாத முலாம் பூசுவது” சரியல்ல.நீங்கள் அகதிகளாக வந்து இறங்கியவுடன் சோறும்,கோழியும் தந்து உபசரித்த “சர்வதேச சமூகம்”,அப்பாவி மக்கள்(அதுவும் இவர்களுக்கு தொல்லயில்லாத)பாதிக்கப்படும்போது பாராமுகமாக இருப்பார்களா?,எங்கே தவறு என்று இதை யோசித்தீர்களா???,நாம் எவ்வளவு “பிரசீடெண்ட்” கொடுத்திருப்போம்?.

    Reply
  • suban
    suban

    இன்று டக்ளஸ் கருணா மற்றம் சங்கரிகள் ஒன்றில் சுரேஸ் செல்வங்களாகவேண்டும் அல்லது இவ்வாறு தென்னிலங்கை அரச பாதுகாப்பில் வரவேண்டும் இல்யைே லண்டனெலி இருந்து தத்துவம் பேசவேண்டும். அல்லது அரசயில் துறவறம். இதைவிட வேறு ஏதாவது வழி இருக்கிறதா? சொல்லுங்கள்..
    இவர்களை இந்நிலைக்கு தள்ளியதற்க புலிக்கு பங்கில்லையா? ஏகப்பிரதிநிதித்துவம் ஜனநாயகமறுப்பு இவைவே தமிழ்மக்களை இந்நிலைக்கு கொண்டு வந்ததை மறுக்கிறீர்களா?

    புலிகள விட மற்றஅமைப்புகள் எண்ணிகையில் அதிகளவு கொலைசெயதிருக்கிறார்கள் என்ற உங்கள் தகவல் உங்கள் கட்டுரையிலுள்ள நல்ல பல தகவல்களையும் தகர்ககப்பார்கிறது. ஆய்வுகளின் போது கட்டுரையாளரின் தன்ப்பட்ட விருப்ப வெறுப்புக்கு இடமிருக்ககூடாது.

    Reply
  • murugan
    murugan

    ஈழமாறன் உங்கள் தீர்வுதிட்டம் தான் என்ன?

    அது தெரியாதா? அவரின் தலமையில் மஞ்சள் தண்ணி தெளித்து வர்க்கப் போராட்டம்தான்!

    Reply
  • kulam
    kulam

    //ஆனால் நீங்கள் ஆபத்தான பேர் வழிகள். சிமிக்கிடாம போய் வந்து காதும் காதும் வைச்சமாதிரி உங்கட கிச்சினிலயே எல்லாம் முடிஞ்சிடும். நீங்கள் மஹிந்தாவுக்கு பின்னுக்கோ ரணிலுக்குப் பின்னுக்கோ இல்லை சந்திரிகாக்குப் பின்னுகோ என்றது எல்லாம் அந்தக் கதிர்காமத்தானுக்குத்தான் வெளிச்சம். இந்த முதலைகள் ஒன்றும் அந்த முதலைகளுக்கு குறைந்தவர்களில்லை.//

    ஈழமாறன் அவர்களே யாழ்ப்பாண ஆங்கில வேளாள மேல்தட்டு வர்க்கத்தின் அரசியல் பிழைப்பு வரலாறு நீங்கள் சொல்வதுபோன்று உண்மையிலும் உண்மை. இலங்கை அரசியல் வரலாற்றை திரும்பிப்பார்த்தால் இப்படிப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாதிகளின் கபட வேலைகளினால்தான் இலங்கை அரசியல் இவ்வாறு சிக்கலை அடைந்துள்ளது. தங்களுடைய சொந்த விருப்பு லாபங்களுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். நாட்டில் இவர்களின் தலைமுறை எவ்வாறு ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்து இலங்கை அதிகார வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து சொந்தலாபங்களை ஈட்டிக்கொண்டதோ அதே வழிமுறையை பின் வந்த இந்த லண்டன் சனநாயகக்காறர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் பிழைக்கத்தெரிந்தவர்கள். பாவம் மக்கள்.

    Reply
  • padamman
    padamman

    ஈழமாறன் நீங்களும் அரசியல் கத்துகுட்டிதான் என்பதை மிக தெளிவாக தெரிவித்துள்ளிர்கள்.

    Reply
  • murugan
    murugan

    புலிகள விட மற்றஅமைப்புகள் எண்ணிகையில் அதிகளவு கொலைசெயதிருக்கிறார்கள் என்ற உங்கள் தகவல் உங்கள் கட்டுரையிலுள்ள நல்ல பல தகவல்களையும் தகர்ககப்பார்கிறது”

    யதார்த்தமான கருத்து.

    Reply
  • markandu
    markandu

    ஈழமாறனின் இதர கட்டுரைகளுக்கு ஆகா ஓகோ என்று விமர்சித்தவர்கள் பலர் இங்கு அவரில் குறை காண்கிறார்கள். புலிகளை விமர்சித்தால் ஓகே . மற்றவர்களை விமர்சித்தால் ஏன் ஏற்க முடியுதில்லை.?? புலிக்கும் விமர்சனம் பிடிக்காது. உங்களுக்கும் பிடிக்காது எண்டால் உங்களுக்கும் புலிக்கும் என்ன வித்தியாசம்??

    புலியிடம் கடந்த காலங்கள் விமர்சிக்கபபட வேணும், இதர அமைப்புகளைுடன் கதைத்து சேர்ந்து வேலை செய்ய வேண்டும் எனச் சொன்னால் அவர்களுக்கு பொத்துக் கொண்டுவரும். கடந்த காலங்களில் தவற விட்ட சந்தர்ப்பங்களை பற்றிக் கதைத்தால் சரி இப்ப உங்களிட்ட இதுக்கு என்ன தீர்வு இருக்குது எண்டு சொல்லுங்கோ பாப்பம் என்பார்கள். இப்ப அதேபோல புலிகளை ஆதரிக்காதவர்களும் ஈழமாறனை நோக்கி அதே கேள்விதான் கேட்கிறார்கள். மொத்தத்ததில் ஒரே குட்டை மட்டைகள்தான்

    மகிந்தாவிடம் கதைக்கப் போனவர்கள் தமிழர்க்கான அரசியல்த்தீர்வு என்ன? என்றாவது கேட்டார்களா? ஏன் கேட்கவில்லை என்று கேட்டால், அவர் ஏதோ தீர்வு வைத்துதிருப்பார், புலியை அடிச்சுமுடித்த பிறகு முன்வைப்பார், என்ற ஊகக் கதைகள்தான் மிச்சமாயிருக்குது.

    Reply
  • Anonymous
    Anonymous

    வன்னி மக்களுக்கான குரலாக ஈழமாறனால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைக் ஒரு சபாஷ் போடலாம் என்று சொன்னால். அது ஒருவனுக்கு வால் பிடித்து அவனை உச்சத்துக் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சமன் எனலாம் (கிட்டத்தட்ட தேசியத்தலைவரை தள்ளிவிடக் காத்திருப்பதுபோல்) பொறுப்போடு இக்கட்டுரையின் நோக்கம் பற்றி சொல்ல வேண்டுமானால் நானும் தாங்கள் கூறியிருப்பது போல் படிக்காத அந்த அப்பாவிகளின் வன்னி சமூகத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் ஆனந்தக் கண்ணீருடனான என்நன்றிகளை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு பக்கத்தே இருக்க தங்கள் கட்டுரையில் யாரையுமே நீங்கள் விட்டு வைக்கவில்லை என்பது ஒரு குறையாகவே இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

    அது போக போர் முடிவுக்கு வந்ததும் நம்வன்னி மக்களுக்கு தேவையானது அரசியல் தீர்வு அல்ல. வன்னி மக்களுக்கான தமிழர் பிரதிநிதிகள் யார் என்பதும் அல்ல அங்கு ஆனந்தசங்கரியார் வருவாரோ டக்கிளஸ் வருவாரோ என்பது கூட அல்ல. அவர்களுக்கு தேவையானது சற்று இளைப்பாறுவதற்கு தேவையான மரநிழல். களைத்துப்போயுள்ள அந்தமக்களுக்கு உடன் தேவையானது ஆறுதல். அரசியல் சாக்கடைகளோ விமர்சனங்களோ அவர்கள் தேவையல்ல. எனவே இந்த மக்களை முதலில் ஓய்வெடுக்க விடுங்கள் அரசியலின் எதிரொலிப்புகளில் இருந்தும் குண்டுகளின் ஓசைகளினின்றும் விடுபட்டு அவர்களை சற்று இளைப்பாற விடுங்கள். உங்கள் சாக்கடைகளை ஒரு ஐந்து வருடங்கள் களித்து அவர்களிடம் திணிக்க முற்படுங்கள். முதலில் இந்த மக்களுக்கு தேவையானது றிலாக்ஸ் தயவு செய்து இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். என்னைக் கேட்டால் வன்னி மண்ணுக்குள் அரசியல் அபிலாசைகளுடன் எவனையும் நுளையவிடாது வருபவன் அத்தனை பேரையும் செருப்பால் அடித்து வன்னிக்கு வெளியே கொண்டு சென்று தள்ளி விட்டு எம் வன்னி மக்களுக்கு எதுவுமே வேண்டாம் சிறுது காலத்துக்கு எம்மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றே கூறுவேன்.

    Reply
  • Eurasian
    Eurasian

    சிங்களவனை நம்ப முடியாது என்று காலங்காலமாக சொல்லிச் சொல்லியே தமிழருக்கு எந்தத் தீர்வும் கிடைக்காததற்கு தமிழர் தலைமைகளும் ஒரு காரணம். நீங்கள் எங்கே சென்று எப்படி சுற்றி வந்தாலும், இந்தியாவை, அமெரிக்காவை எல்லாம் கூட்டி வந்தாலும், ஆனானப்பட்ட சிவபெருமானையே கூட்டி வந்தாலும்…. கடைசியில் சிங்களவனோடு பேசித் தான் ஏதாவதொரு தீர்வை பெற வேண்டும். இன்னும் நூறு வருடங்களுக்கு போராடினாலும் இது தான் நடக்கப்போகிறது. அரசாங்கமும் தமிழ் தலைமைகளும் சில விட்டுக் கொடுப்புகளை செய்தே எதையும் தீர்க்க வேண்டும். பிடிவாதமாக இருந்தால் எதுவும் நடக்காது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் லீலாவதி, சுதந்திராதேவி போன்ற பெண்களை மறந்து விட்டீர்கள்.- murugan//

    நான் மறந்து விடவில்லை. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பெண்களை பட்டியலிடுவதென்றால் தேசத்தில் எனது பின்னுட்டத்திற்கே பக்கம் போய்விடும். அதுபோல் புலிகளின் முதல் பெண் கொலை ரஜனி திரணகம என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். முதல் கொலையாக பலி வாங்கப்பட்டவர் ஊர்மிளா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்த கட்டுரையில் முதலையும் நரியும் பாடம் அறிவுப்பாடம் புகட்டகூடிய கதை. கட்டுரையாளர் உவமைகளும் ஒப்பீடுகளும் தான் கேட்டதாகவும் அறிந்ததும் சொல்லுவது “வெண்புறா”இயக்குனர் டாக்டர் மூர்த்திக்கு நிகரானவர்.
    இன்று காலை மூர்த்தி ஜி.ரிவிக்கு பேட்டி அளிக்கும்போது அவர் கூறினார்….. “புலம் பெயர்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து விட்டது அது ருஷ்சியாவில் தோன்றிய பாட்டாளிவர்கப் புரட்சியை போன்றதாம்” இதை கேட்டு யாரும் பக்கத்தில்லுள்ள கிணத்தில் போய் விழுந்து விடாதீர்கள்.
    என்ன செய்ய எல்லாவற்றையும் நாம் கேட்க வேண்டியது விதி. பொறுமை…பொறுமை…பொறுமைக்கு வந்த சோதனை.

    Reply
  • rajan
    rajan

    பார்த்தீபன் நீங்கள் இப்போதும் பிழை பிடிப்பதிலேயே இருக்கிறீர்கள். நீங்களும் தற்போதய தமிழனின் சாவில் தான் சவாரி செய்ய எத்தனிப்பது போல் உள்ளது. தமிழன் பிழை பிடிப்பதிலும் பிடிவாதம் பிடிப்பதிலும் தனக்கு கிடைக்காவிட்டால் மற்றவனுக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான் என்பது உங்களது பின்னூட்டத்தில் தெரிகிறது. தயவு செய்து இந்த அறிக்கையில் எழுதப்பட்டதற்கு மட்டும் பின்னூட்டமிடுங்கள். சொல்லப்பட்ட கருத்திலிருந்து திசை திருப்பி செல்கிறீர்கள். புலிகள் மீதான கோபத்தை தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் சனத்தின் மீது காட்ட வேண்டாம். ப்ளீஸ்…..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஈழமாறன் அவர்களே யாழ்ப்பாண ஆங்கில வேளாள மேல்தட்டு வர்க்கத்தின் அரசியல் பிழைப்பு வரலாறு நீங்கள் சொல்வதுபோன்று உண்மையிலும் உண்மை.- Kulam //

    ஈழமாறன், குலம் போன்றவர்கள் மட்டுமல்ல பலர் பிரதேசவாதத்தை இலகுவாக பரப்ப கையாளும் முறை இது. உண்மையில் அன்று தொடக்கம் யாழ் மக்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினார்கள். அதனால் ஆங்கிலேயர் காலத்திலிருந்து அதற்குப் பின்னரும் பல அரச உயர்பதவிகளில் இருநதார்கள். இவர்களில் சிலர் பிழை விட்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா யாழ்ப்பாண உயர்சாதியினரையும் குறை சொல்வது முறையாகாது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைமை வகித்தவர்களும் தற்போது வகிப்பவர்களும் பலர் யாழ் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதை எவரும் புறந் தள்ளிவிட முடியாது. அதுபோல் குலம் “ஆங்கில வேளாள மேல்தட்டு வர்க்கமென்ற” பதத்தைப் பாவித்துள்ளார். ஆனால் தமிழ்ப் பறங்கிச் சமுதாயம் என்பது யாழ்ப்பாணத்தில் உருவாகவில்லை மாறாக கிழக்கில் தான் உருவானது என்பதை அவர் அறிவாரா?? மொத்தத்தில் கிழக்கில் படித்தவர்களையும் நல்ல அரசியல் தலைமைகளையும் உருவாக்க தவறியது யார் குற்றம். இந்த நிலை இன்று வரை தொடர்வதும் யார் குற்றம். பொதுவாக ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததற்கு தரப்படுத்தலும் ஒரு காரணம் என்று சிலர் கதையளப்பார்கள். ஆனால் உண்மையாக அந்தத் தரைப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மாவட்ட மாணவர்கள் தான். கிழக்கு மாகாண மற்றும் வன்னி மாவட்ட மாணவர்கள் இதே தரப்படுத்தலினாலத் தான் குறைந்த புள்ளிகள் பெற்ற போதும் பல்கலைக்கழக அனுமதி பெற முடிந்தது. மொத்தத்தில் இன்றும் பிரதேசவாதமென்ற மாயையை வைத்து குட்டையை குளப்பிச் சுகம் காண்பதை விடுத்து, தமது சமுதாயத்தை முன்னேற்ற அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். தீர்க்கமான சிந்தகனைகளும் மனச்சுத்தியும் இருந்தால் எவர் முன்னேற்றத்தையும் எவரும் தடுத்துவிட முடியாது…

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்தீபன் நீங்கள் இப்போதும் பிழை பிடிப்பதிலேயே இருக்கிறீர்கள்.- rajan //

    நான் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிந்திப்பதால் தான் சும்மா அடுத்தவன் மேல் குறை சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விமர்சிக்கின்றேன். ஈழமாறனின் கட்டுரை கூட புலிகளுக்கு வால் பிடிப்போருக்கு சும்மா வெறுவாயை மென்று கொண்டிருப்பவருக்கு அவல் கிடைத்தது போல் அமைந்துள்ளதே தவிர, அந்த மக்களின் விடிவிற்காய் எதையும் சொல்லவில்லை.

    நான் எழுதிய “எனியும் அடுத்தவரில் குறைசொல்வதையும் பிரதேச வாதங்களை கூறி சுகம் காண்பதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புலிகளின் பிடிகளிலிருந்து தப்பி வந்த அந்த மக்களுக்கு எவ்வகையில் உதவலாமென்பதை ஒருமித்து சிந்தித்து செயற்படுத்த முன் வாருங்கள். அதன் பின் எமக்கான சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்து அவர்கள்களோடு ஒருங்கிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ச் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்”. என்பதன் அர்த்தம் என்ன என்பது கூடவா தங்களுக்குப் புரியவில்லை??

    Reply
  • rajan
    rajan

    பார்த்திபன்-
    தங்களுக்கு தான் தெரியுமே தமிழ்த்தலைமைகளைப்பற்றி.. எத்தினை தலைவர்கள் வந்தும் ஒரு பயனுமில்லை. தமிழர்கள் மத்தியில் இருக்கும் தாழ்வுமனப்பான்மையும் உயர்வு மனப்பான்மையும் தான் எல்லாத்துக்கும் காலாக இருக்கிறது. இந்த வகையில் ஒருவரின் கட்டளையின் கீழ் செய்தாலே அதனை நடைமுறைப்படுத்தலாம். இதற்கு ஐநாவே நேரடியாக பொறுப்பெடுத்து செய்யவேண்டும். அப்போ தான் அவை உரிய முறையில் அந்த மக்களிடம் போகும். அல்லது அவனவன் தனித்தனியாக உதவி செய்ய சேர்த்து சொத்து சேர்ப்பது தான் நடக்கும். இது அனைவரும் கண்கூடாக கண்ட உண்மைகள் தானே….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Rajan, நான் கடந்த காலத்தவறுகளின் படிப்பினையை வைத்து நிகழ்காலத்தை சீராக்கும்படி தானே கேட்கின்றேன். கடந்த காலத்தலைமைகள் தவறு விட்டுவிட்டார்கள் என்றால், எனி எதிர்காலத்தில் நல்ல தலைமைகள் உருவாக முடியாதா என்ன ?? எல்லாம் உங்களில், என்னில் மற்றும் எல்லாத் தமிழர்களிலும் தானே தங்கியுள்ளது. சிந்திப்போம் செயற்படுத்துவோம்.

    Reply
  • vithusha
    vithusha

    புலிகளின் தலமைபோல் இனிஒரு தலைமை வருவது கடினம். புலிகள் உறுதியாக இருக்கும் வரையில் தான் சிங்களத் தலைமைகள் கொஞ்சமாவது தமிழர்களின் உரிமையை கொடுப்பதற்க்கு இணங்கும். மற்றையபடி டக்ளஸ் போன்றவர்களின் தலைமையில் உரிமைகளை வென்றெடுப்பது என்பது இந்த வருடத்திற்கான சிறந்த பகிடியாக எடுத்துக் கொள்ளலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //புலிகளின் தலமைபோல் இனிஒரு தலைமை வருவது கடினம்.- vithusha//

    உண்மை.. உண்மை. புலிகளின் தலைமை 30 வருடங்களுக்கு மேலாகச் செய்த சேவையால்த் தானே, தற்போது புலிகளை நம்பிய மக்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் எனி இப்படியொரு தலைமை தேவையில்லை என்பதில் தெளிவாகவே இருப்பார்கள். சில புலத்துப் புண்ணாக்குகளுக்கும் எதிர்காலம் தெளிவை ஏற்படுத்தும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //புலிகளின் தலைமைபோல் இனி ஒரு தலைமை வருவது கடினம்//விதுஷா..
    இங்கிருக்கும் வரை… இதுவும் சொல்லும் இதுக்கு மேலேயும் சொல்லும்.
    அங்கிருந்தால்…அந்த நோக்கமும் இல்லை அந்த சிந்தனையும் இல்லை.

    Reply
  • BC
    BC

    //புலிகளின் தலமைபோல் இனிஒரு தலைமை வருவது கடினம்.//
    இப்படி மோசமான தலைமை மீண்டும் வர தமிழ்மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தான் நானும் நினைக்கிறேன்.

    //புலிகள் உறுதியாக இருக்கும் வரையில் தான் சிங்களத் தலைமைகள் கொஞ்சமாவது தமிழர்களின் உரிமையை கொடுப்பதற்க்கு இணங்கும்.//
    இவ்வளவு காலமும் புலிகள் பெற்று கொடுத்தது போதாதா?

    Reply
  • murugan
    murugan

    “உரிமைகளை வென்றெடுப்பது” என்றால் என்ன என்று விதுசா நினைக்கின்றார்? தமிழ் மக்கள் பிள்ளை பெற்றுக் கொடுத்தல், கப்பம் கட்டுதல், வரி கொடுத்தல், அவரின் பிள்ளைகளை வெளிநாடு வரை அனுப்பி படிப்பித்தல், அங்கு …….. படம் எடுக்க அதை தமிழ் மக்கள் மெச்சுதல் இத்தியாதி விடயங்களா மக்களின் உரிமைகள் விதுசா?

    புலிகளின் தலமைபோல் இனிஒரு தலைமை வருவது கடினம்”
    அப்படி ஒரு தலைமை வரவே வேண்டாம். …………….

    Reply
  • X and Y
    X and Y

    Dear Mr. Eelamaran,
    We were born in Sri Lanka, but we have got different kind of experiences trough out our life style about our common ethnic problems in Sri Lanka. It is true that you have mentioned in your article, there has been genocide taking place in Sri Lanka. About your deep believe I would like to ask you some questions as follows:

    Who promots this tamils genocide?

    If any intellectuals from Tamils understood about this genocide, why did not they act?

    The past and present Tamil political leaders in Sri Lanka were well educated lawyers (layers) and they know the international human rights law better than the normal people. Why they did not act?

    I knew that our home land (Sri Lanka) is under the political games of regional powers and VETO nations, because they want to profit due to war and peace. Have you got any comments about this?

    Reply
  • விஷ்ணு
    விஷ்ணு

    ஈழமாறன் உங்கள் கட்டுரை ஓகே அத்துடன் பார்த்தீபனின் முதல் பின்ணுட்டத்தில் சொன்ன விடையங்களும் த.தே.கூட்டமைப்பின் வெறும் வாய்சவாலைப் பற்றியும் அவர்களின் தீர்வு சம்பந்தமான உறுதியான கருத்து பற்றியும் ஆராய்த்து உள்ளடக்கியிருந்தால் உங்களுக்கு 99 வீதம் மார்க் போட்டிருக்கலாம் யாதார்த்தங்களை அம்பலப்படுத்தியதற்காக. மகிந்தவை இலங்கையில் இயங்கும் கட்சிகளாக சொல்லிக்கொள்ளும் தமிழ் குழுக்கள் சந்திப்பில் பேசப்பட் பயனில்லா விடையங்களை விட புலம்பெயர் தமிழர் சிலர் அரசாங்கத்தை சந்தித்ததில் பேசப்பட்ட சில விடையங்கள் அல்லது கேட்ட கேள்விகள் சில ஆரோக்கியமானவை என நினைக்கிறேன். இன்றைய நிலையில் எப்படியோ சில மாதங்களில் பாறாளுமன்ற தேர்தல் வருவது நிச்சயம் வரும் தேர்தலில் வெல்பவர்கள் வாய்ச்சவால்மட்டும் விடாதவர்களாக சோரம் போகாதவர்களாக மக்கள் நலன்களுக்காக மட்டும் பேசக்கூடியவர்களாக உள்ளவர்களை பாறாளுமண்றம் அணுப்புவதற்கான வேலைகளை செய்யவே வேண்டும் உண்மையான மக்கள் நலம் உள்ளவர்கள் அதற்கான வேலைகளில் அறங்கவேண்டும் இன்று 20.30.. வருட ஆயுள் செல்லகின்ய கட்சிகள் நிராகாpக்கப்பட்டாலும் நலமே மக்களின் நலனில் அக்கறை உள்ள பிரதேச.கட்சி. சுயநலம் இல்லா மற்றவரை மிதிக்க எண்ணா விட்டுக்கொடுப்புள்ள தலைமைகளை உருவாக்க பாடுபடுவோம் பாறாருமண்ற உறுப்பே இன்றைய நிலையில் தீர்வுக்க அடிப்படை இதை நல்லவர் கைகளில் கொடுக்க தாயக மக்களுக்க உந்துதல் கொடுக்கலாம் புலம்பெயர் திமிழன் தீர்வுக்கோ சரி தாயக விடிவுக்ககோ சரி வெறும் உந்து சக்தி மட்டுமே தீர்மானிப்பதற்கு எமக்கு புலம்பெயர் ஊடகங்களாகட்டும் எவர்க்கும் அறுகதை இல்லை உருப்படியாக அவலப்படும் உறவுகருக்க எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை நானாகட்டும் இந்த விமர்சன கட்டுரையை எழுதிய ஈழமாறனாகட்டும் யாவருமே ஒரு வகையில் கையாலாகாதவர்கள்தான் போராட்டங்கள் ஆரம்பித்தவர்களின் திசைமாற்றத்தால் நாம் இன்று இப்படி ஆக்கப்பட்டுவிட்டோம் நவீன உலகுக்க ஏற்ப இலங்கை மக்களையும் பெருளாதார சுதந்திர சுவாசத்தக்கு இட்டுச்செல்ல மறப்போம் மன்னிப்போம் முடிந்தால் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டுவோம் நன்றி நான் இன்றைய தலைமுறையை சேர்ந்தவன் ஆதலால் பிழைகள் பிழைதான் என் தந்தையாக இருந்தாலும் திருந்துங்கள்…..

    Reply
  • palli
    palli

    தமிழ் மக்கள் தமிழராய் வாழ வேண்டுமாயின் இப்போதய தமிழ்தலைகள் (ஈழ) அது இருந்து இதுவரை அகதிகள் விண்ணப்பத்தை ஏதோ ஒரு நாட்டில் நிரப்புவது அவசியம். இல்லையேல் யார் ஆண்டாலும் ஏதோ ஒரு அடையாளத்துடனும் பயத்துடனும் தான் வாழவேண்டும். இப்போது இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு பிரபாகரந்தான். ஆனால் பிரபாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததால் தனது எண்ணத்துக்கு தமிழரை அழிக்கிறார். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து மகிந்தா பின் ஒழிகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்த கிழக்கு படும்பாடு தெரியாதா?? பிரபாவின் மொத்த வியாபாரத்தில் (கொலையில்) மற்றவர்களது சில்லறை வியாபாரம்(கொலைதான்) எமக்கு தெரியவில்லை என்பது
    தான் உன்மை. ஆக மொத்த வியாபாரி கடையை பூட்டும் நேரம் வந்து விட்டதால் பெட்டிகடை காரர்கள் தமது வியாபாரத்தை தமக்கு ஏற்றா போல் பெருக்குவார்கள். அதற்க்கான ஏற்பாடுகள் வவுனியாவில் இப்போதே ஆரம்பம். கிழக்கை சொல்லவே வேண்டாம்.வடக்கே சங்கரியர் யார் யாரை சந்திக்கிறார் என பார்க்க பலர் பொட்டரின் பதவியில் அமத்தபட்டுள்ளனர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //போராட்டங்கள் ஆரம்பித்தவர்களின் திசைமாற்றத்தால் நாம் இன்று இப்படி ஆக்கப்பட்டுவிட்டோம் நவீன உலகுக்க ஏற்ப இலங்கை மக்களையும் பெருளாதார சுதந்திர சுவாசத்தக்கு இட்டுச்செல்ல மறப்போம் மன்னிப்போம் முடிந்தால் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டுவோம் நன்றி நான் இன்றைய தலைமுறையை சேர்ந்தவன் ஆதலால் பிழைகள் பிழைதான் என் தந்தையாக இருந்தாலும் திருந்துங்கள்…..- விஷ்ணு //

    யதார்த்தமான வரிகள் வாழ்த்துகள் விஷ்ணு.

    Reply
  • msri
    msri

    ஈழமாறனின் கட்டுரை>எல்லோரையும் விட “டக்கிளசு-மகிந்த ரசிகர்களுக்கு” பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது! டக்கிளசு கொலையே (பசுவைககூட) செய்யாத ஓர் சீவகாருண்ணிய சஙகத் தலைவன் என தூக்கி நிறுத்திய ரசிகர்கள் பரிதவிக்கின்றனர்! மகிந்தா இதுவரை ஆட்சிக்கு வநத பேரினவாதத் தலைவர்களில் “வித்தியாசமானவராம்” இது இவர்களின் அரசியல்தத்துவார்த்தக் கண்டுபிடிப்பு! இதுவரை இன அழிப்பை செய்த மகிந்தா>பாரிய மனிதப்படுகொலையையே செய்வது> வித்தியாசமான பாசிச சர்வாதிகார நடவடிக்கைதான்! இதற்கு புலி காரணமென மக்களின் படுகொலைகளை ரசிக்கின்றனர்! உங்களின் டக்கிளசு -மகிநதா பட்டுவேட்டிக் கனவில் உள்ள கோவணமும் விரைவில் இல்லாது போய்விடும்!

    Reply
  • accu
    accu

    ஈழமாறனின் நீளமான கட்டுரை நிறையவே நக்கல்கள்,நையாண்டிகள்,உவமானமாய் அந்தமாதிரி ஒரு நரி முதலைக் கதை,அப்படியே எங்கட தேசத்தின் குரல் அண்ணையின் மாவீரருரையின் மொழிபெயர்ப்பில் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கென கலந்து விடும் ஊத்தைக் கதை மாதிரியும் கொஞ்சம் கலந்துவிட பிறகென்ன பின்னூட்டங்கள் வந்து குவியுது. ஆனால் மொத்தத்தில் ஆளை ஆள் மாறிக் கிழிக்கிறதை ஈழமாறன் தனியாளாக நின்று கிழிச்சுத் தள்ளியிருக்கிறார். கிழிக்கிறது சரியான சுலபம்.

    ஈழமாறன் முதலமைச்சர் பதவிக்காக மகிந்த மரத்தை அணில் ஏற விட்ட நாய் போல் பார்ப்பதாகவும் முதலையாய் மகிந்தவை சுமப்பதாகவும் கூறுகிறீர்களே முதலமைச்சர் பதவியென்ன மகிந்தா வேட்டியில் முடிஞ்சு வைச்சிருக்கிறாரா அவிட்டுக் கொடுப்பதற்க்கு? இது நியமன எம்பியும் இல்லை அந்தஸ்தற்ற அமைச்சும் அல்ல மகிந்த முடிவெடுக்க. மக்கள் மனதை வெல்லாமல் எந்த முதலைக்கும் முதலமைச்சர் பதவி கிடைக்கப் போவதில்லை.

    ஈழமாறன் நீங்கள் ஆசை தீர எல்லோரையும் திட்டித்தீருங்கள். அது உங்கள் இஸ்டம். ஆனால் இன்று வன்னியில் நடக்கும் மனித அவலத்துக்கு புலிகளும், புலிகளுக்கு காவடி தூக்கும் புலன் பெயர் கூட்டமும் தவிர வேறு யாருமே காரணமில்லை.

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    ஈழமாறனின் இதர கட்டுரைகளுக்கு ஆகா ஓகோ என்று விமர்சித்தவர்கள் பலர் இங்கு அவரில் குறை காண்கிறார்கள். புலிகளை விமர்சித்தால் ஓகே . மற்றவர்களை விமர்சித்தால் ஏன் ஏற்க முடியுதில்லை.?? புலிக்கும் விமர்சனம் பிடிக்காது. உங்களுக்கும் பிடிக்காது எண்டால் உங்களுக்கும் புலிக்கும் என்ன வித்தியாசம்??
    weldone markandu

    Reply
  • உடும்பு
    உடும்பு

    /Who promots this tamils genocide?
    If any intellectuals from Tamils understood about this genocide, why did not they act?.The past and present Tamil political leaders in Sri Lanka were well educated lawyers (layers) and they know the international human rights law better than the normal people. Why they did not act?.knew that our home land (Sri Lanka) is under the political games of regional powers and VETO nations, because they want to profit due to war and peace. Have you got any comments about this?./-x and y …
    There is nothing called Tamil intellectuals!, they are only basically “interpreters”, that means, lacking their own source – behaving as “SOLICITORS” – they din’t advised their clients (Tamil people)properly, eventhough they profited heavily from their problems – “not the regional powers. one example from theneeweb.de – “The problem in Srilanka is only the “FLAG” ,not the ethnic problem?-

    Reply
  • S Nirmalan
    S Nirmalan

    ஈழமாறனின் ஆக்கத்தில் தவிர்க்கப் பட வேண்டிய சில வார்த்தைகளை எடுத்துவிட்டால் இன்றைய சூழலுக்குத் தேவயைhன ஒரு கட்டுரை. கட்டுரையாளரைத் தீர்வு கேட்பதைக் காட்டிலும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய விடயங்கள் கவனத்திற்குரியனவாக இருந்தால் பாதிக்கப்படும் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள நாம் அது பற்றிச் சிந்திக்கவே ஆக்கங்கள் தேவைப் படுகின்றன். விவாதங்கள் நடைபெறும் போது கருத்து மோதல்கள் மட்டும் இடம் பெறுவதில்லை. அதனுடு ஒரு பக்குவ நிலையும் ஏற்படுகிறது. புதிய கருத்துக்கள் வெளியே வருகின்றன். அந்த வகையில் ஈழமாறனின் கட்டுரை ஒரு விவாத்ததைக் கிளப்பியிருப்பதும் அதனூடாக பல புதிய கருத்துக்கள் வெளியாகியிருப்பதும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளுக்கு தங்களை மீளாய்வு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் என்றே எண்ணுகிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //கடைசியில் சிங்களவரிடம் பேசித்தான் ஏதாவது ஒரு தீர்வைப் பெறவேண்டும்//உரோசியன்.

    இதுவே நித்தியமானதும் தீர்கமும்மான அம்சமுமாகும். இந்தக்கருத்து வன்முறையை எதிர்கிறது. ஜனநாயகத்தன்மையை தேடுகிறது. சகோதரதத்துவத்தை வலியுறுத்துக்கிறது. இறுதியில் கூட்டுவாழ்கையும் பல்லினமக்களையும் மகிழ்சியுடன் வாழ்வதற்கான ஐக்கிய இலங்கையை வேண்டிநின்று இறுதியில் இனவாதத்தை முற்றுமுழுதாக துடைத்தெறிகிறது.

    Reply
  • vinoth
    vinoth

    மிக விரைவில் இலங்கை இராணுவத்திற்க்க ஒரு பேரிடி காத்திருக்கிறது.புலி பலயீனப் பட்டவுடன் முதுகில் ஏறிச் சவாரி செய்தவர்களுக்கு எல்லாம் தகுந்த பாடம் புகட்டப்படும்.காத்திருங்கள்

    Reply
  • thurai
    thurai

    உலகத்தை ஏமாற்ரி அரசியல் அடைக்கலம் பெற்ரவரே புலத்துத் தமிழர். புலத்துத்தமிழரை ஏமாற்ரி தம்மை வளர்த்தவரெ புலிகளின் தலைவர்கள். புலிகளின் தலைவர்களை ஏமாற்றி வளர்பவ்ர்கள் புலியின் ஆதரவாளகள்.

    இந்தக் கொடியவர்களின் வலையில் சிக்கித்தவிப்பவரே வன்னிமக்கள்

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மிக விரைவில் இலங்கை இராணுவத்திற்க்க ஒரு பேரிடி காத்திருக்கிறது.- vinoth //
    நீங்கக புலிகளை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே…
    சிலவேளை பிரபாகரனும் சரணடையப் போறாரோ??

    Reply
  • sullan
    sullan

    All of you are fool.If india didn’t put fire in tamil community in 1983,now our contry Srilanka Big singapore!! That time tamils were emotion thats why they couldn’t concentrate Indias cunging behavihour,that was our bad luck.
    Wait and see what will happen in future! Hope President Mahinda will show to tamils good way!!!

    Reply