விடுதலைப் புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் “டைம்ஸ் நவ்” தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் ” விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி . அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை”என தெரிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியிந்தார்” என பிரதமர் மன் மோகன் சிங் டைம்ஸ் நவ் தொலக்காட்சிக்கு தெரிவித்திருந்தார். “பிரபாகரன் நல்ல நண்பன் ” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்திற்கே மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“கருணநிதியின் கருத்து அவரது தனிப்பட கருத்தாகும். ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடானது விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி ” என காங்கிரஸ் கட்சி பேச்சாளர் கபில் சிபால் தெரிவித்தார்.
Kullan
பெருமானே! இது எல்லோருக்குமே எப்போதே தெரிந்து விடயம். இந்த உண்மையை இந்தியா கண்டு விடிக்க முன்னர் தமிழ்மக்களில் பல புத்தியீவிகள் கண்டு பிடித்து விலகிக்கொண்டார்கள். மனமோகன் சிங்குக்கு நேற்றுத்தான் புரிந்திருக்கிறது போலும்
thurai
அன்று சந்தையில் மீன் வாங்க வந்த இராணுவவீரரை சுட்டு விட்டு ஓட, பலாலி இராணுவம் வந்து யாழ்மக்களைத் தாக்கினார்கள்.(25 வருடத்திற்கு முன்)இன்று வன்னி மக்களின் பிணத்தினை உலகிற்குக் காட்டுவோரும் அன்று சுட்டு விட்டு ஓடியவர்களே.
அன்றும் இன்றும் தமிழரின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாத போராட்டமே. இந்தியாவினதும் உலகினதும் ஆதரவினைத் தமிழர் பக்கம் திருப்ப முடியாதவர்களிற்கு ஈழத்தமிழர் விடுதலைக்கும் எது வித சம்பந்தமுமிலலை.
துரை
thanie
மன் மோகன் சிங்! பிந்தரன் வாலாவும் பிரபாகரனும் சேர்ந்தளித்த பதவி உமக்கு. நன்றியாக இருங்கள். பயங்கரவாதம் பத்தை(Bush)யோடு போகட்டும்
அகிலன் துரைராஜா
முப்பது நாற்பது வருடங்களாக வல்வெட்டித்துறை கடத்தல் வள்ளங்கள் அடிபட்டு பிடிபட்டு போனதெல்லாம் 26ஆம் திகதியில்தான். இதனால் பின்னர் 26ஆம் திகதி ஒரு கேடான திகதி என்று 26ஆம் திகதியில் ஒன்றும் செய்வதில்லை. அண்மையில் கனடாவில் நடந்த வல்வெட்டித்துறை ஒன்று கூடலிலும் 26ஆம் திகதி பிறந்த வேலுப்பிள்ளையின் மகன் எப்பதான் அடிபடபோகுதோ என்று பலர் பயந்தனர். தமிழருக்கு எட்டாம் நம்பர் ஒரு நாளும் சரி வராதாம்.
பிரபாகரன் தனது புத்தியீனம் படித்தவர்கள் கிட்ட வந்தால் தெரிய வந்து ஊரெல்லாம் பரவி விடுமோ என்ற அச்சத்தில் ஒரு படித்தவனையும் கிட்ட விடவில்லை பத்தாம் வகுப்பு படித்த போலீஸ் கான்ஸ்டபில் நடேசனுக்கு பதிலாக சிவா பசுபதி அல்லது வேறு ஏதாவது நன்கு விஷயம் தெரிந்த சாணக்கியமாக கருமம் ஆற்றக்கூடிய ஒருவரை நியமித்திருக்கலாம் ஒரு விஷயம் தெரிந்தவனையும் பிரபாகரன் தன்னை மீறி விடிவார்கள் என்று கிட்டவேவிடவில்லை. எம் ஜீ ஆர் மூன்றாம் வகுப்பு தான் படித்திருந்தாலும் மெத்தபடித்த பல அனுபவசாலிகளை தன் அருகே எப்போதும் வைத்திருந்தார்.
பிரபாகரனோ தன்னை பப்பா மரத்தில் ஏத்திய தன்னை சூரிய தேவன், திட்டம் வைத்திருக்கிறார் என்று புளுகிற படிப்பறிவில்லாதவர்களை தன் அருகே வைத்து கொண்டதுடன் கடத்தல் மாபியா பாணியில் ஒன்றில் மண்டையில் போடுவது இல்லையேல் காசு கொடுத்து ஆட்களை வாங்குவது இதை விட்டால் பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது. சுத்த அரசியல் சூனியம் ராணுவ சூனியம் இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் இருந்த பொடியளையும் அநியாயமாக புதை குழிக்கு அனுப்பி வடக்கு கிழக்கில் இருந்த பொருளாதாரத்தையும் அடியோடு அழித்து விவசாயிகளின் நெல்லை புசல் முன்னூறு ரூபாக்கு துப்பாக்கி முனையில் வாங்கி அவர்களுக்கு மண்ணெண்ணையை போத்தல் முன்னூறு ரூபாவுக்கு வித்து டிராக்டர் எல்லாத்தையும் பறித்து மீனவரின் போட்களையும் அவுட்போட் எஞ்சின்களையும் வாகனங்களையும் பறித்து ஆமா போடா மறுத்த அத்தனை சமூகத்தின் அறிஞர்களையும் துணுக்காய் சித்திரவதை முகாமில் அடைத்து பரலோகம் அனுப்பி இந்த சூனியம் மொத்தத்தில் வடக்கு கிழக்கில் இருந்தவர்களின் பிழைப்பையும் பிள்ளைகளையும் சூறையாடி இந்தியா கொண்டுவந்த வடக்கு கிழக்கு இணைந்த தீர்வையும் பிரேமதாசாவுடன் சேர்ந்து இல்லாமல் பண்ணி எங்கட காசிலை வாங்கின இத்தனை சாம் செவேனையும் ஒன்று கூட பாவிக்காமல் மண்ணிற்குள் தாட்டுவிட்டு கேம்ஓவர் என்று பங்கருக்குள் இருக்கும் இந்த வங்குரோத்து தலைவன் தமிழரை வங்குரோத்தாக்கி இன்று இலங்கையில் அகதி முகாம்களிலும் வெளி நாட்டில் தெருக்களுக்கும் கொண்டு வந்து விட்டு தானும் இன்றோ நாளையோ வலையன்மடத்திலோ அல்லது கரையாம் முள்ளிவாய்க்காலிலோ செத்தொழிந்து போக வெளிநாடு புலிஆதரவாளர்களுக்கும் இந்தியாவில் படமெடுக்கிற புலிபினாமிகளுக்கும் மில்லியன் கணக்கில் யூரோக்களும் டாலர்களும் ருப்பிகளும் சேர புலிக்கு பணம் கொடுத்தவனும் இலங்கையில் பாதிக்கப்பட்டவனும் அம்போ அதோகதியாக புலி என்ற கதை அழிந்து போகும்.-அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம் –