இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் – மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம

இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் குறிப்பாக 13வது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும் – வடக்குகிழக்கில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை நிலங்கை மீள அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை கொழும்பில் இடம்பெற்ற மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம முன்வைத்துள்ளார்.

 

தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

தூய்மையானஅரசியல் என்பதை நாங்கள் வலியுறுத்தவேண்டும், இதற்கு ஒரு வரைவிலக்கணத்தை வழங்கவேண்டும்.

 

வீடு இடிந்துள்ள நிலையில் வீட்டுக்கு மேலோட்டமான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமா அல்லது வீட்டை முற்றாக மாற்றவேண்டுமா என்பதே எங்கள் முன்னால் உள்ள கேள்வியாகும்.

 

நாங்கள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும்போது அவர்கள் தூய்மையான அரசியலை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாகயிருக்கவேண்டும்.

 

மக்கள் விதிக்கின்ற எல்லா நிபந்தனைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களாகயிருக்கவேண்டும்.

 

கிட்டத்தட்ட 10 அல்லது 15 நிபந்தனைகைளை நான் இங்கு முன்வைக்கவிரும்புகின்றேன்.

 

இலவசகல்வி இலவச சுகாதாரத்திற்கு தேசிய வருமானத்திலிருந்து மூன்று வீதத்தினைஒதுக்கவேண்டும்.

 

தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையயான நிரந்தரமான தீர்வை காணவேண்டும் குறிப்பாக 13வது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும்.

 

மலைய மக்களின் காணி உரிமை வீட்டுரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்திஉத்தரவாதப்படுத்தவேண்டும்.

 

வடக்குகிழக்கில் பாதுகாப்பு படையினர்ஆக்கிரமித்த பொதுமக்களின் காணிகளை நிலங்கை மீள அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

 

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நஸ்டஈட்டை வழங்க வேண்டும் காணாமலாக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை நேர்மையாக எடுத்துரைக்கவேண்டும்.

 

சட்டவிரோதமான சட்டங்களை இல்லாது ஒழிக்கவேண்டும் இந்த நாடு ஜனநாய நாடு என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களை தெரிவிப்பதற்கும்தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்கும் உரிமையுண்டு அந்த உரிமையை பேணி பாதுகாக்கவேண்டும்.

 

நிறைவேற்று அதிகார முறையை முற்றாக இல்லாது ஒழித்து அதற்கான சட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 

ஊழல் இலஞ்சம் போன்றவற்றை முற்றாக ஒழிக்கவேண்டும் . பொருளாதார ரீதியில் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களிற்கு நிவாரணங்களை வழங்கவேண்டும்

 

இந்த நிபந்தனைகளை எந்த அரசியல்வாதி ஏற்க தயாராக இருக்கின்றாரோ அவரின் சார்பாத்தான் நாங்கள் செயற்பட முடியும்.

 

போலி வாக்குறுதிகளை நம்பி நாம் ஒன்றும் செய்யமுடியாது.

 

மார்ச் 12 இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் நதீசானி பெரேரா உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,

தூய அரசியல் எழுச்சிக்கான இந்த நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் வந்திருப்பது புத்துணர்ச்சியளிக்கின்றது.

 

ஒன்பது வருடங்களிற்கு முன்னர் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியது மார்ச் 12 இயக்கம் – இன்றுவரை நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.

 

இந்த நாட்டில் இயற்கை வளம் உள்ளது மழை வெயில் உள்ளது நாடு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ளது ஆனால் நாங்கள் பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

 

காரணம் என்ன?

 

அரசியல் நேர்மையின்மை பொறுப்புக்கூறல் இன்மை வெளிப்படைதன்மையின்மை ஆகியவையே காரணம்.

 

இதன் காரணமாக ஊழல் மோசடி போன்றவை இடம்பெறுகின்றன.

 

நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.

 

2022 இல் அமைப்புமுறை மாற்றத்திற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள் புரட்சி இடம்பெற்றது.

 

அந்த மக்கள் புரட்சிக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆண்டு இது.

 

இந்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ளமையே இதற்கான காரணமாகும்.

 

அனைத்து இனத்தவர்களும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *