ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.
meerabharathy
புகலிடங்களில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களே! அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்!!!
நீங்கள் உண்மையிலையே இலங்கையின் இனப்பிரச்சனை தீரவேண்டும் என விரும்புகின்றீர்களாயின்… நீங்கள் பின்வரும் கோரிக்கைகளையே முன்வைத்து போராடவேண்டும்..
யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!
இடையில் அகப்பட்டிருக்கும் மனிதர்களை விடுவிப்பதற்கு இருபகுதியினரும் முயற்சிக்கவேண்டும்.
இன முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வு முன்வைக்கப்படவேண்டும்.
புலிகள் ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி அரசியல் வழியில் போராடவேண்டும். (கருணாவைப் போன்றல்ல)
சர்வதேச சமூகங்கள் இருபகுதியினருக்கும் இதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட தமிழ் பிரதேசங்களில் வாழும் மனிதர்களின் அபிலசைகளை அடிப்படையாகக் கொண்டே இன்று நடைபெறும் போராட்டங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும்.
இதற்கு மாறாக
நமது தலைவர் பிரபாகரன் என்பதும்……
புலிகளின் தடையை நீக்கு என்பது
புலிகளே நமது பிரதிநிதிகள் என்பதும்
(தீர்மானிக்கவேண்டியது தமிழ் பிரதேசங்களில் வாழும் மனிதர்களே…. புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களல்ல….)
மேலும் இவ்வாறான கோரிக்கைகள்.. யுத்தத்தில் அகப்பட்டிருக்கும் மனிதர்களை காப்பாற்றவோ அல்லது பிரச்னையை தீர்ப்பதற்கான சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதற்கோ வழிவகுக்காது…
மேலும் தங்களது கோரிக்கைகளை மாற்றாது தொடர்ந்தும் முன்வைத்தீர்களேயானால்… புலம் பெயர் நாடுகளில் தங்கள ;பிள்ளைகளை பாதுகாப்பாக வாழவைப்பதை விடுத்து.. நன்றாக படிக்க வைப்பதை விடுத்து… ஆயுதம் கொடுத்து போராட அனுப்புங்கள்.. இதுவே நியாயமான செயற்பாடாகும்…
புலிகளும் ஆகக் குறைந்தது வீட்டுக்கு ஒரு பிள்ளையைத் தான் கேட்கின்றனர்… உங்களால் இவ்வாறு அனுப்ப முடியவில்லை எனில்…தாங்கள் இன்று முன்வைத்துள்ள கோரிக்கைகளை மாற்றுங்கள்.. அல்லது போராட்டத்தை கைவிடுங்கள்.. பிழைப்புவாத அரசியல் நடத்தவேண்டாம்… தங்களது பிள்ளைகளை கட்டாயமாக போராட்டத்திற்கு இழுத்துச் செல்ல… இங்கு புலிகளின் ஆதிக்கம் இல்லை.. ஆனால் என்போன்றவர்களுக்கு தங்களின் இரட்டைவே செயற்பாடுகின் மீது இருக்கும் கோவத்திற்கு…
புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கேள தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்… தலைமைகள் மாறும்..மாறிக்கொண்டு இருக்கின்றன… ஆனால் இன்றுவரை பிரச்சனை மட்டும் தீரவில்லை… இதற்கு காரணம் அடக்குபவர்கள் மட்டுமல்ல…அடக்கப்பட்டவர்களின் அரசியலும் செயற்பாடுகளும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல…
தங்களது உறுதியான அர்ப்பணிப்பான செயற்பாட்டிற்கு தலைவணங்குகின்றேன்…ஆனால் தங்களது கோரிக்கைகளுக்கு அல்ல..
கோரிக்கைகள் அடக்கப்பட்ட மனிதர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துமாயின்…வெளியிலிருக்கும் என்போன்ற பலர் இன்று நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடலாம்..
காட்டுக்கத்தலும் எரிச்சல் இசையும் இல்லாது… பிற இன மனிதர்களை கவரும் வகையில் அழகாக கோசம் இட்டு… அழகான இசையை வழங்கி கவருங்கள்… அவர்கள் ஆதரவு மிக முக்கியமானது… குறிப்பாக புகலிட நாடுகளில் நாம் செயற்படும் பொழுது…. புரிந்து கொண்டிர்களேயானால் அடக்கப்பட்ட மனிதர்களுக்கு வெற்றி…
நான் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கு ஆதரவாளர்…ஆனால்..புலிகளின் தலைமையின்….மனித உரிமை மீறல்களுக்கும்…குழுந்தை இராணுவ செயற்பாடுகளுக்கும்… வரட்டுத்தனமான முட்டாள்தனமா அரசியலற்ற ஆயுதமோகத்ததிற்கும் எதிர்ப்பாளர்…ஆகவே அரசாங்கத்தினதும் சட்டபூர்வமான அனைத்து பயங்கரலவாத செயற்பாடுகளுக்கும்..எதிர்ப்பாளர்…
நேற்யை தங்களின் இரண்டாம் கட்ட தலைவர் பிரபாகரனின் அடுத்த மட்ட தலைவர் கருண அம்மான் என அழைக்கப்பட்டவரின் இன்றைய அரசியலை புரிந்து கொள்வீர்களேயானால்… புலிகளின் தலைமையின் அரசியல் அறிவை புரிந்துகொள்ளலாம்… புரிந்து கொண்டால் வெற்றி அடக்கப்பட்ட மனிதர்களுக்கே!
நன்றி
மீராபாரதி
meerabharathy
மேலும் புலிக் கொடி….
தமிழ் பேசும் மனிதர்களின் கொடி அல்ல…
அது புலிகளின் கொடி…
அது மட்டுமல்ல…
ஆண்டான்டு காலமாக தமிழ் பேசும் மனிதர்களை….
சாதியால்.. மதத்தால்…பால் அடையாளத்தால்…அடக்கி ஆண்ட…
சேர சோழ பாண்டியர்களினதும்…பண்டார வன்னியன்களினதும்…சங்கிலியன்களினதும்…
கொடியே புலிக் கொடி…
இது தமிழர்களின் கொடியல்ல..
தமிழ் பேசும் மனிதர்களது வாழ்வை வாழ்விடத்தை அடையாளப்படுத்துவதாகவே
தமிழ் பேசும் மனிதர்களின் கொடி இருக்கவேண்டும்…
ஆனால் இப் புலிக் கொடி
நமது மிருகத் தனத்தையல்லவா வெளிப்படுத்துகின்றது…
அல்லது தமிழர்களும் மிருகத்தனமானவர்கள் என்பதா இதன் அர்த்தம்…
அப்படியாயின் என் அறியாமைக்கு மன்னிக்கவேண்டும்
நன்றி
மீராபாரதி
Theepan
Feel sorry for you Meera Bharathy. We have fought politically for 30 years since 1948. Arm struggle has started because the Sinhala government never implemented what they promised to Father Selva.
OK, how to fight politically?? Like Douglus? or Like Snagari?? Or like Pillayan?? Wake up!!!!