புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் நேற்று 484 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அழைத்து வரப்படுகையில் கப்பலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் தாய் ஒருவர் குழந்தை ஒன்றையும் பிரசவித்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியில் இருந்து 22 வது தடவையாக கீறீன் ஓஷியன் கப்பல் நேற்று பிற்பகல் 4 மணியளவில் புல்மோட்டைக்கு வந்தடைந்துள்ளது. அழைத்து வரப்பட்டவர்களுள் சுமார் 150 பேர் காயமடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.