ஈழத் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. ஈழத்தமிழர்களை அழிக்க ராஜபக்சே முடிவு எடுத்து உள்ளார். இப்போது போரை நிறுத்துங்கள் என்றால் அவர் எப்படி நிறுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. எனவே ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.