கிராமிய மக்கள், அரசின் செயற்திட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர். மகிந்த சிந்தனை மூலம் கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் எமது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசை சூழ்ந்தும் நிற்கின்றனர் என்று தொழிற் பயிற்சி தொழில் வழங்கல் அமைச்சர் பியசேன கமகே கூறினார். கிங்கங்கைக்குக் குறுக்கே கல்வான என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது;
கடந்த காலங்களில் இந்த நாடு சகல துறைகளிலுமே அமைதியற்றுத் தவிர்த்தது கடந்த மூன்று வருடகாலமாக எமது ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளால் இன்று நாட்டிலே அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. அன்று கிழக்கிலே பயங்கரவாத நிலை ஏற்பட்டபோது அதனை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டது இன்று அங்கு அமைதி நிலவுவது மாத்திரமல்ல அபிவிருத்தி வேலைகளும் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது அதே போல் வடக்கிலும் மிக விரைவில் அபிவிருத்திச் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அதனை நாம் செய்தே தீருவோம்.
ஐக்கிய தேசிய கட்சி என்னதான் கூறினாலும் இன்று மக்கள் அக்கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கைகளை இழந்து விட்டனர். அக் கட்சியினரும் மக்களை விட்டுத் தூர விலகிக் கொண்டிருக்கிறது. இந் நிகழ்வில் தென் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெமடி சம்லிவிதானாச்சி உட்பட மற்றும் பலரும் உரையாற்றினர்.