மேல் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரது விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி மேல்மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
இதற்காக இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாகப் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தக் கடமைக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் மேல் மாகாணத்துக்கு வரவழைக்கப்படவுள்ளனர். தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றது. தேர்தல் தினத்தன்று தேவைப்பட்டால் படையினரின் உதவியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.