தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.
அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என தெரிவித்தார்.
Democracy
அப்பாடி.. “இலங்கைத் தமிழர்களுக்கு” இப்பவாவது நிம்மதியான வாழ்க்கை அமைந்ததே..!
ஜெய் சிங்கக்கொடி.. ஜிந்தாபாத்..! ரணில் விக்ரம் சிங் ஜி, எம்.ஏ.சுமந்திரன் ஜி, கனடா குணரத்னா ஜிந்தாபாத்..!