புது வருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவது முன்னரை விட மிகவும் குறைவடைந்துள்ளது. புலிகள் பொதுமக்கள் மீதான தடையை மேலும் இறுக்கமாக்கியுள்ளதையே இது காட்டுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்; இலங்கை நிலவரங்கள் குறித்து ஐ.நா சபையில் விளக்கிக்கூறியுள்ளார்.
பொதுமக்கள் இந்தவிதத்தில் பிணை வைக்கப்படவோ அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவோ கூடாது. எனவே புலிகள் தமது இந்த மனப்பாங்கை மாற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என மிகவும் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வெளியேற விருப்பமாகவுள்ளனர் என்பது எந்தஅடிப்படையில் கூறப்படுகின்றது? என ஊடகங்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த திரு ஹோம்ஸ், ஐ நா முகவர் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எமது பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் புலிகளது பிடியிலிருந்து தப்பிவருகின்றபோது அவர்கள் தங்களது விருப்பத்தி;ற்கு மாறாகத் தடுத்துவைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு தப்பித்துவர முயற்சிப்போர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் மிக கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் காரணங்களுக்கெல்லாமம் அப்பால் மிகப் பெரும்பாலனவர்கள் தமது பாதுகாப்புக்கருதி வெளியேறி வரவே விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஐ. நா யுத்தநிறுத்தமொன்றை கோருகின்றதா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த அவர் யுத்தநிறுத்தத்தைப் பொறுத்தவரை பணயமாக வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகளுக்கு முறையானதும் அமைதியானதுமான ஒரு முடிவைக் கண்டதன்பின்னர் ஒரு மனிதாபிமான யுத்தநிறுத்தத்தைக் கோரி அதனையே ஒரு நிரந்தர நடைமுறையாக மாற்ற முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு
அத்தகையதொரு போர்நிறுத்தம் தற்போதைய சூழ்நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில நாம் யதார்த்தமானதொன்றையே செய்ய முயறசிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
thevi
புலன் பெயர் தமிழர்கள் காதில் யாரால் சங்கூத முடியும்?