இவ்வருட ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மூலம் கூடுதல் விலைக்கு அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்த 1424 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை 974 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மட்டும் 450 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொழும்பு புறக்கோட்டையில் 180 அரிசி மூடைகளும் கண்டியில் 44 அரிசி மூடைகளும் சவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கான விடுமுறை முடிவுற்றதும் குறிப்பிடப்பட்ட 450 வாத்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாயா
உங்களால் முடிகிறது
புலிகளால் முடியல்லயே? ஓ….மை காட்.
தேவனே என்னைப் பாருங்கள்