அமெரிக்காவில் தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

_car2.jpgஅமெரிக்காவில் ஆலைத் தொழில் உற்பத்தி அளவு, கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மிகவும் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அமெரிக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் உபயோகிப்பாளர்கள் செலுத்திய விலைகளும் தொடர்ந்து சரிவைக் கண்டன. கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு அதிகமாக சரிவைக் கண்ட விலைகள், கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத முதலாவது வருடாந்திர விலை வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் ஆழ்ந்த மந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட நம்பிக்கைச் சுடர் மிகவும் பரீட்சார்த்த நிலையிலேயே இருக்கிறது என்பதனையே இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    இதுக்குபோய் அலட்டிக்கலாமா?? சின்ன சின்ன நாடுகளில் பிரச்சனையை உங்கள் தரகர்நாடுகள் மூலம் தொடக்குங்கோ. அதன் பின் ஆயுத தொழில்ல்சாலையை விரிவுபடுத்துங்கோ. தங்களுக்கு பொருளாதார பிரச்சனை பறந்து போய்விடும். இதுதானே தங்களுடைய குலதொழில். இடையில் வந்த சின்ன சின்ன வியாபாரம் வீழ்ச்சி அடைவதால் நட்டமா என்ன,,,,???

    Reply