கடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.