புது வருடத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டிருந்த 48 மணித்தியால போர்நிறுத்தம் முடுவடைந்ததையடுத்து இரு தரப்பும் மோதல்களை மீள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை புலிகளிற்கு எதிரான மோதலை பாதுகாப்பு படையினர் மீள் ஆரம்பித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து விடுதலை புலிகளும், இராணுவத்தினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை மேற்கொள்வதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.