இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின் உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளனர்.
இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும் தெரிய வருகிறது.