அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் பதவி மேல் தனக்கு ஆசை இல்லை என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’அ.தி.மு.க., தமிழகத்தில் இடதுசாரிகள், பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதாக கூறியவர் மத்தியில் பா.ஜ., காங்., இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது கூட்டணியின் லட்சியம் எனவும் கூறினார்.
தேர்தலுக்கு பின் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடமாட்டார், அதனால் அம்மாதிரியான கூட்டணி தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அமைக்கப்படலாம். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது என்றார்.
வைகோ இலங்கை பிரச்னை குறித்து விடுத்து வரும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு, ‘’இலங்கை பிரச்சனையில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக வைகோ பேசவில்லை’’ என்று தெரிவித்தார்.