கண்துடைப்பு அறிவிப்பு : தேவை நிரந்தர போர் நிறுத்தம் – விடுதலைப் புலிகள்

lttelogo.jpgஇலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.

Show More
Leave a Reply to MUKILVANNAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மாயா
    மாயா

    நிரந்தர போர் நிறுத்தம் என்பது இனிமேல் இலங்கையில் மோதல்களே இருக்காது. அதற்காக நீங்கள் ஆயுதங்களை கீழேவைப்பதல்ல. கீழே வைத்தால் எடுப்பதற்கு சுலபம்? ஆயுதங்களை ஒப்படைத்து விடுவதற்கு வழி செய்வது புலிகளின் கைகளிலேயே இருக்கிறது.

    உங்கட போர் நிறுத்தக் கதை எல்லாருக்கும் தெரியும்?

    ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்என்று அறிக்கை விடுங்கள். ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கிறோம் என்று அறிக்கை விடுங்கள். அதுவரை புலிகள் செய்வதும் கண்துடைப்புதான்?

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    GIVE EAR,O LIBERTY, HEAR US,O MOTHER OF ALL PEOPLE,AND LOOK TO US SPEAK NOW.
    ONE CLOUD ALONE COMES THE LIGHTNING,WHICH LIGHTS UP WITH A SINGLE FLASH THE SPACE OF THE VALLEYS AND MOUNTAINTOPS.
    HAVE MERCY,SAVE US,STRENGTHEN OUR HEARTS.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நடேசன் சும்மா சும்மா அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், பேசாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டு மக்கள் வெளியேற வழி விடுங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இதுதான் சொல்லுறது சீ சீ புளிக்கும் பழம் என. இது ஒன்றும் புலம் பெயர் நாட்டு சதிராட்டாத்தால் வந்த அறிவிப்பு அல்ல. ஏதோ அவர்களுக்கும் மூச்சு விட நேரம்(காலம்) தேவைப்பட்டதால் அவர்களாகவே முடிவு செய்தது. இந்த சதிராட்டத்துக்கு இதுவரை எந்த நாடோ அல்லது நகரமோ கிராமமோ செவி சாய்க்கவில்லை. கோவில் திருவிழாக்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது போல் இந்த சதிராட்டத்தை புலி புண்ணாக்குகள் செய்வது பல நாட்டுக்கும் தெரிந்து விட்டது. இதில் கலந்து தலமை தாங்கும் பலர் சமுதாய சீர்கேட்டில் சம்பந்த பட்டவர்கள்.(ஆர்பாட்ட வீடியோக்க்களை கவனிக்கவும்) இவர்கள் தமக்கு சாதகமாய் மாணவர்களையும் இந்த வலையில் வீழ்த்தி விட்டது தமிழரது சாபகேடு.

    1983ல் பாடசாலை ஓரமாக நின்று பிள்ளை பிடித்து அமைப்பு கட்டி பலரது வாழ்க்கயை தொலைத்தது போல் இன்று புலம் பெயர் தேசத்தில் வந்து பாடசாலைக்கு போகாமல் ….திரிந்த பலரை புலி பினாமிகள் தமக்காக களத்தில் இழயோர் என்னும் வேடம் போட்டு இறக்கி விட அவர்களும்…………… நீந்த இடம் கிடைத்த மகிழ்ச்சியில் கேவலமாக ஆடுகிறார்கள். பல பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வியையும் குழந்தைகளையும் தொலைத்து விட்டனர். இதை பல்லி சொல்லவில்லை பல சம்பந்தபட்ட பெற்றோரே கண் கலங்குவது தெரிகிறது. ஒரு ஊடகத்தில் ஒருவர் சொல்லுகிறர் படிப்பு தேவையில்லை. அதை பின்பு பார்க்கலாம் இப்போது வீதியில் இறங்குங்கள். இப்படி பலர் ஏற்க்கனவே இறங்கி விட்டதாக. இன்னொருவர் சொல்லுகிறார் வீதிக்கு வராத(கேவலபடாத) யாரும் தமிழரே கிடையாதாம். இதை சொல்லும் போது பேட்டி எடுத்தவர் முற்போக்குவாதி. அறிவு ஜீவி. ஒருஅமைப்பில் இருந்தவர். ஊடகவியாளர். எல்லாத்துக்கும் மேலாக இலக்கியம் வளர்க்க புலம்பெயர் தேசம் வந்த தாடிகாரர். சிறிதேனும் சமுதாய அக்கறை வேண்டாமா???

    உன்னாவிரதம் இருப்பதில் யாராவது ஒரு புலி உள்ளதா?? ஏன் இடைகாட்டார் அல்லது அல்லது பாலசந்திரனோ அல்லது பாஸ்கரனோ இருந்திருக்கலாமே. புலம் பெயர் தேசத்திலும் கரும்புலிகள் உண்ணாவிரதம் என்னும் போர்வையில் பினாமிகளால் அரங்கேறுகிறது. நேற்று ஒரு செய்தி கேள்வி பட்டேன் (பாதிக்கபட்ட ஒரு பெற்றோரின் ஆதங்கம்) ஆர்பாட்டத்துக்கு முடிந்தளவு பிள்ளைகளையே அனுப்பும் படியும். பெண் பிள்ளைகளை சுடிதார் அல்லது எமது கலாசார உடை அணிந்து வரும்படியும் அங்கு சேவையில் (புரிந்து கொள்ளுங்கள்)துள்ளி விள்ளையாடும் இழயோர் அன்பு(வம்பு) கட்டளை இட்டனராம். ஏன் என ஒரு பிள்ளை கேட்டதுக்கு அப்போத்துதான் நாம் தமிழர் என பாற்ப்பவர்களுக்கு தெரியும் என விளக்கினராம். என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என பெருமையாய் சொன்ன பலர் தங்களது பிள்ளைகளை தம் தலைவனை காக்க எண்ணி அழிந்து சீரழிந்துபோக தாமே கூட்டி சென்று விடுவது மனதை நெருடுகிறது. பல்லி சொல்வது தவறாயின் ஒருதரம் ஏதாவது ஒரு ஆர்பாட்டத்துக்கு போய் பார்க்கவும். நாலு பேரை உயிரைவிட வைக்க ஆயிரம் பேர் சுத்தி நின்று வேடிக்கை பார்க்கும் எமது முட்டாள் தனத்தை நாம் எப்படி எழுதுவது. தயவு செய்து அங்கு வாழும் தமிழரை காக்க என புருடாவிட்டு புலிகாக்க இங்கு உள்ள குழந்தைகளையோ அல்லது அவர்களது எதிர்காலத்தையோ கெடுப்பதை பார்த்து கொண்டு இருக்காமல் பினாமிகளின் தந்தரத்தை வெளிபடுத்தலாமே.

    Reply