அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஓகஸ்ட் மாதம்: நான்கு நாட்கள்: டெங்கு ஒழிப்பு தினங்களாக அரசாங்கத்தால் பிரகடனம்

ஆகஸ்ட் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தினதும், இரண்டாம் வாரத்தினதும் திங்கட் கிழமையும், மூன்றாம், நான்காம் வாரங்களின் சனிக்கிழமையும் இவ்வாறு டெங்கு ஒழிப்பு தேசிய தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்புக்கான பணிகளை தேசிய மட்டத்திலும், மாகாண, உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் பரந்துபட்ட அடிப்படையில் மேற்கொள்ளுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

இந்தியாவில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை

parvathi-ammal.jpgஇந்தியா வுக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து சிரமப்பட்டு சென்னை வந்தார். ஆனால் மத்திய அரசு அவரை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பார்வதி அம்மாளின் விருப்பத்தை தெரிந்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,  கோர்ட் உத்தரவின்பேரில் கொழும்பில் இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் 2 பேர் கொழும்பில் சிகிச்சை பெற்று வரும் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்தனர். அவர் சுயநினைவுடன் பேசக்கூடிய நிலையில் இருந்தார். அப்போது இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு எங்கள் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்ற விருப்பத்தை சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்.

அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். அவருடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் கவனித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி விட்டனர். மறுநாள் சம்பந்தர் எங்களிடம் பார்வதி அம்மாள் சார்பில் பதில் கொடுத்தார். அதில் இப்போது பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற விரும்பவில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சொல்கிறோம். இதுதான் அவரது விருப்பம் என்று தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டம்.

par.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்னொரு பதவிக் காலத்தை கொடுக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்புத் திருத்தத்தை அரசு கை விட வேண்டும், 13 ஆவது அரசமைப்புத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னின்று நடத்தினார்.

par.jpg

வவுனியா தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு சித்திரப் போட்டியில் 1ம் இடம்

pr.jpgதேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் புதிய முத்திரைக்கான உருவப்படத்தை வரைந்து முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு ஜனாதிபதி பரிசை வழங்கினார்.

ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டம்

wimal-weerawansa.jpgகொழும்பு பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐநா அலுவலர்கள் எவரையும் அலுவலகத்துள் நுழையவோ அன்றி அலுவலகத்திலிருந்து வெளியெறவோ விடாமல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையர் இப்போதும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் மீளாய்வு அறிக்கையில் ஐ.நா.

இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம்கோரும் இலங்கையரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை. இடைநிறுத்தியிருந்தது. அகதிகளுக்கான ஐ.நா. முகவர் நிலையம் (யூ.என்.எச்.சி.ஆர்.) நாடுகளுக்கான தனது ஆலோசனையை புதுப்பிக்கும்போது தனது தீர்மானத்தை மீளாய்வு செய்வதாக அவுஸ்திரேலிய அரசு கூறியிருந்தது.

இதேவேளை,தனது மீளாய்வு செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை நேற்று இரவு ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சில பிரிவுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சல்மான்கான்களின் வருகையால் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர் பாராளுமன்றத்தில் எம்.பி. சுனில் ஹந்துநெத்தி

இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சட்டத்தின் ஆதிக்கத்தை அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். ஆனால், அண்மைய சம்பவங்கள் வேறுமாதிரியாகவுள்ளன. கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொங்கிறீட் கட்டைகளால் தாக்கிக் கொல்லப்படுகின்றனர். தற்போது கொழும்பில் கொங்கிறீட் கட்டைக் கொலைக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து சல்மான்கான் படம் தயாரிக்க வரும் போதுதான் இந்தப் பிச்சைக்காரர் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிச்சைக்காரர்கள் இன்று சுதந்திரமாக பிச்சையெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் வருவது பிரச்சினையல்ல. ஆனால், “பிச்சைக்கான்’கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை.

அவசரகால சட்டம் 132 வாக்குகளால் நிறைவேற்றம் – பட்ஜட் குழுநிலை விவாதமும் நிறைவேறியது

parliament.gifஅவசரகால சட்டம் நேற்று சபையில் 132 வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் ஐ. தே. க., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜ. தே. முன்னணி ஆகியன எதிராக வாக்களித்தன.

ஐக்கிய தேசியக் கட்சி கண்டி மாவட்ட எம். பி. அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்றுக்காலை ஆரம்பமானதுடன் விவாதத்தின் முடிவில் ஜனநாயக தேசிய முன்னணி எம். பி. விஜித ஹேரத் வாக்களிப்புக்கு கோரினார். இதனையடுத்து வாக்களிப்பு நடைபெற்றதுடன் 100 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் சபையில் நிறைவேறியது.

இதேவேளை; வரவு செலவுத் திட்டக் குழுநிலை மீதான விவாதமும் 131 வாக்குகளால் சபையில் நிறைவேறியது. ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஐ. தே. க. எம். பி. அப்துல் காதர் ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜ.தே. முன்னணி ஆகியன நடுநிலை வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம். யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ¤க்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார். அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை யாழ்.அரச அதிபராக கணேஷ்

imalda.jpgபொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார். இந்த அறிவுறுத்தல் நேற்றுக் கிடைத்த தாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் அரச அதிபர் கே.கணேஷ் ஓய்வுபெறுவதாக இருந்ததையடுத்து யாழ்.அரச அதிபராக முல்லைத்தீவு அரச அதிபராக பணியாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டிருந்தார். ஜூலை முதலாம் திகதி இமெல்டா பதவியேற்க இருந்த நிலையில் முதல்நாள் இரவு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் அவர் பதவியேற்கவில்லை.

இதேசமயம் யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் தொடர்ந்து அந்தப் பதவியை வகித்துவருகிறார்.மறுஅறிவித்தல்வரை கடமையாற்றுவார் என்ற அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது.