அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கண்டியில் – பரீட்சை எழுத வந்த மாணவி கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவியொருவர் நேற்று க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்திருந்த போது, பாடசாலை வகுப்பறையொன்றில் வாயும் கைகளும் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்க ப்பட்டார். குறிப்பிட்ட மாணவி பரீட்சை மண்டபத்தில் காணப்படாத நிலையில் பரீட்சை அதிகாரிகள் அவரைப் பற்றி மற்றைய மாணவிகளிடம் விசாரித்துள்ளனர்.

அந்த மாணவி பரீட்சையில் தோற்றுவதற்காக பாடசாலைக்கு வந்ததை கண்டதாக சில மாணவியர் பரீட்சை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் நடத்திய போது, குறிப்பிட்ட மாணவி வாயில் பழந்துணி அடைக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டு, நாற்காலி ஒன்று டன் சேர்த்து வெறுமையாக இருந்த வகுப்பறையொன்றில் இருந்ததை அதிகாரி கள் கண்ணுற்றுள்ளனர். பரீட்சை தொடங்கி அரை மணி நேரத்துக்கு பின்னரே இந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அதி காரிகள் அனுமதி வழங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் இந்த மாணவி பாடசாலை அதிபர் ஒருவரின் மகள் என்றும் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்கின்றன.

மேர்வினின் அலுவலகம் மூடப்பட்டது

mervyn.jpgமுன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகம் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் பலி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பின் தடுக்க சென்ற சக கைதியொருவர் காயமுற்ற நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

245 கிலோமீற்றர் நடக்க வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் சபையை நோக்கிய மனித நேயப் பயணத்தில் சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர் நடக்க வேண்டும். ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி அவர் 19 ஆவது நாளாக இன்று நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

நிதிச்செயலாளர் பதவிக்கு முரளி ரகுநாதன்

mano.jpgஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் பதவிக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை கட்சித் தலைவர் மனோ கணேஷன் முன்மொழிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் வழிமொழிந்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

சிறுவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை சட்ட ரீதியான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முறையான வேலைத் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வசதிகளுடன் உள்ள மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் வகையில் உள்ள சிறுவர் இல்லங்களை இனங்கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  (09) அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கூறிய பணிப்புரையை விடுத்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன் பேணல் பற்றி கண்டறிய சகல சிறுவர் இல்லங்களின் அருகிலும் சிவில் கமிட்டியொன்றை நியமிப்பதன் அவசியம் பற்றியும் அவ்வாறான கமிட்டியில் கிராமப்புற விஹாரையின் தேரர், பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச அரச அதிகாரியொருவரும் உள்ளடங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

வெளிநாடு செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் தடுப்புக் காவலில் உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளின் மன நிலையை கட்டியெழுப்புவதற்கான விசேட திட்டங்களை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.

அதேவேளை பெண்கள் எவ்வித இம்சையும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்களை தைரியமூட்டும் மற்றும் அவர்களது நலன் பேணுவது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ள தாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் தாய், மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கு உரிய இடத்தை வழங்குவதுடன் சிறுவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் அளிக்க வேண்டிய பொறுப்புகளை வழங்குவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அங்கு விளக்கினார்.

முன்பள்ளி சிறுவர்களுக்கு ஒரு குவளை பால் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும், பாடசாலை செல்லாத சிறுவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறும் சகல சர்வதேச பாடசாலைகளிலும் சரித்திரத்தை படிப்பிக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சிறுவர் குற்றவாளிகள் மற்றும் சத்தேகநபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் தொடர்பான திட்டத்தை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேர்வின் சில்வா பதவி நீக்கம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தம்

mervyn.jpgகம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேர்வின் சில்வா பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலர் விஜயானந்த ஹேரத் நேற்றுத் தெரிவித்தார்.

அத்துடன் மேர்வின் சில்வா எம். பியை ஸ்ரீல. சு. கட்சியிலிருந்தும் இடை நிறுத்துவதற்கு கட்சி நேற்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீல. சு. கட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

களனிப் பகுதி யில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருடன் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கட்சி அதிகாரிகள் குழு நேற்று கூடி ஆராய்ந்தது. இக்கூட்டத்தின் முடிவிலேயே மேர்வின் சில்வா எம்.பியை கட்சி யிலிருந்து இடைநிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேர்வின் சில்வாவை பிரதி அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார். களனி சமுர்த்தி உத்தியோத்தருடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வா எம். பிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளன.

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்த மேர்வின் சில்வா எம். பி களனியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிப்போட்ட சம்பவ மொன்று கடந்த வாரம் நடைபெற்றது.  இதனடிப்படையிலேயே இவர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.

ஜீப் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 3 பொலிஸார் பலி

கலவானை கொஸ்வத்த பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் பொலிஸ் ஜீப்பொன்று குக்குலேகங்க ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா, சார்ஜன்ட் குணபால, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிமானே ஆகியோரே உயிரிழந்துள்ளனர். கலவானை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வண்டி கலவானை கொஸ்வத்தையிலுள்ள பள்ளத்திலிருந்து குடைசாய்ந்து ஆறு ஒன்றினுள் விழுந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: – நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் வெற்றி

india.jpgஇலங்கை – இந்தியா – நியூசி லாந்து ஆகிய அணிகளுக்கிடையி லான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையே தம்புள்ளயில் நடைபெற்ற முதலா வது போட்டியில் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசி லாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரொஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் ஸ்கொட் ஸ்டை ரிஸ் 89 ஓட்டங்களையும் நியூசி லாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்த னர். பந்து வீச்சில் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 3 விக்கெட்டுகளையும் பெற்ற னர். பதிலளித்து ஆடிய இந்திய அணி 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்க ளையும், விரேந்தர் சேவாக் 19 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டெரல் டஃபி 3 விக்கெட்டுகளையும், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓராம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற் றனர்.