அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ்தேவி, உதயதேவி புறப்படும் நேரங்கள் மாற்றம் – 15 ஆம் திகதி முதல் அமுல்

கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் புறப்படும் தாண்டிக்குளம் யாழ்தேவி கடுகதி ரயில், மட்டக்களப்பு உதயதேவி கடுகதி ரயில் ஆகியவை புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி புறப்படும் ரயில் காலை 5.45 க்கு புறப்படும். தாண்டிக்குளத்திலிருந்து 11.30 க்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும். இதேபோன்று கொழும்பு – அநுராதபுரம், கல்ஓயா – மட்டக்களப்பு, கல்ஓயா – திருமலை, திருமலை – மஹவ, பொலன்னறுவை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பஸ் சேவை, கல்ஓயா – மட்டு ரயில் பஸ் சேவை, குருணாகல் – மஹவ பேபி ரயில், மஹவ – பொல்கஹவல பேபி ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் : மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் கைது

vijitha-herath.jpgபாராளு மன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலியில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தின் பின் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ய சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் பொலிஸார் மீது போராட்டத்தின் போது கல்வீச்சு செய்த இருவரை விடுதலை செய்யுமாறு வாக்குவாதப்பட்டு பொலிஸாருக்கு தாக்கமுறபட்டதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி கிங்ஸிலி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய் – காலி பிரதேசத்தில் போராட்டம்

galle12082010.jpgகாலி பிரதேசத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஊர்வலம் காலி பொலிஸ் நிலையத்தை அண்மிக்கும் போது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டை வீசியுள்ளனர்.

களனி பிரதேச சபை முன்பாக ஆர்ப்பாட்டம்

mervyn.jpgகளனி பிரதேச சபை உறுப்பினர்களும் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களும் தற்போது ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் களனி பிரதேச சபை முன்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேவின் சில்வாவின் கட்சி அங்கத்துவம் மற்றும் பிரதியமைச்சு பதவி, களனி தொகுதி அமைப்பாளர் என்ற பதவிகளில் இருந்து விலக்கப்பட்டமையை கண்டித்தும் அவருக்கு அந்த பதவிகளை மீண்டும் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

மேர்வின் சில்வா மீதான நடவடிக்கை ஜனாதிபதிக்கு சமுர்த்தி சங்கம் பாராட்டு

mervyn.jpgமேர்வின் சில்வாவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அவரின் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதன் மூலம் ஜனாதிபதி துணிச்சலாகச் செயற்பட்டிருப்பதாக சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் பாராட்டியுள்ளது.

சமுர்த்தி அதிகாரியொருவரை மரத்தில் கட்டிய மேர்வின் சில்வாவுக்கு ஜனாதிபதி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததற்காக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத்குமார பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கையெடுத்ததன் மூலம் தமக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தால் கூட பொறுப்பற்ற விதத்தில் எவராவது செயற்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார் என்று ஜகத்குமார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

சமுர்த்தி அதிகாரிகள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. அமைச்சருக்கு எதிராக மட்டுமே ஆர்ப்பாட்டங்களை அவர்கள் மேற்கொண்டனர். டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுவதை ஒருபோதும் அதிகாரிகள் வாபஸ்பெறப் போவதில்லை. இதற்குத் தொடர்ந்தும் அவர்கள் ஆதரவளிப்பார்கள். சட்டத்தை தமது கையிலெடுத்துக் கொள்வோருக்கு இது சிறந்த படிப்பினையாகும்.இந்தச் சம்பவத்தால் மேர்வின் சில்வா தனது நடத்தையைச் சிறப்பான முறையில் மாற்றிக்கொள்வார் என்றும் ஜகத்குமார கூறினார்.

ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ramadan.jpgபுனித ரமழான் மாதத்தின் தலைப்பிறை நேற்று புதன்கிழமை மாலை நாட்டின் பலபகுதிகளிலும் தென்பட்டதால் இன்று வியாழக்கிழமை முதல் புனித நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய பிறைக் குழுக்கூட்டத்தில் பெரியபள்ளிவாசல் உட்படக் கொழும்பு மாநகரின் பல பள்ளிவாசல்களின் நிருவாகிகளும் ஜெம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளும் பிறைக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டதாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இன்று வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாகப் பிறைக்குழுவும் பெரியபள்ளிவாசலும் அறிவித்துள்ளது.

நாட்டின் பால் தேவையின் அதிக அளவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

mr-p.jpgதேசிய பால் பண்ணையாளர் களை ஊக்குவிப்பதுடன் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பால் தேவையின் அதிக அளவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை செலவு முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று முன்தினம் (10) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி மேற்கூறிய ஆலோசனையை வழங்கினார்.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து உதவிகளை யும் வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா: மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

வவுனியா மாவட்ட நீதிமன்ற வளவினுள் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பற்றி பொலிஸார் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்துள்ளனர். மைக்ரோ கைத்துப்பாக்கி, அதற்குரிய ரவைகள், கிளேமோர் குண்டுகள் என்பனவற்றையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

நீதிமன்ற வளவிற்குள் இவை எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற வளவினுள் கிடக்கும் பலகைகளுக்கு கீழேயே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டி எலச பெரஹரா பாதுகாப்பு கடமையில் 6000 பொலிஸார்

kandy-perahera.jpgகண்டி எசல பெரஹரா உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆறாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப் படவிருப்பதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

விசேட கடமைகளுக்காக வெளியூர்களி லிருந்து சேர்த்துக்கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர் கள் மீது நீதிநேர்மையாகவும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சக்வித்தியை பிடிக்க உதவியோருக்கு இன்று பணப்பரிசில்

sakvithi.jpgநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சக்வித்தி ரணசிங்க மறைந்திருந்த இடம் தொடர்பாக தகவல் வழங்கிய சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் பணப்பரிசில்கள் வழங்கவுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் உட்பட சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.