அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அம்பாந்தோட்டையில் புதிய வர்த்தக வலயம்!

0000anura.jpgஅம்பாந் தோட்டையில் புதிதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க 200 ஹெக்டர் காணியை ஒதுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கைத்தொழில் அபிவிருத்தி  மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்பித்திருந்தார்.

மஹிந்தசிந்தனையின் கீழ் புதிதாக 12 சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அம்பாந்தோட்டையில் வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க குறிப்பிட்ப்பட்ட 200 ஹெக்டர் காணி வழங்கப்பட உள்ளது

மியன்மார் நாட்டின் தலைவர் இன்று இலங்கைக்கு வருகிறார்.

myanmar_president.jpgமியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று,  மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

நடிகர் ஹென்றி ஜயசேன காலமானார்

henre-jayasana.jpgபிரபல நாடகாசிரியரும், மேடை மற்றும் சினிமா நடிகருமான ஹென்றி ஜயசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 79. களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட இயக்குநர் லெண்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘கம்பெரலிய’ திரைப்படத்தில் பியல் என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தமை இவருக்கு மிகுந்த புகழை பெற்றுத்தந்தது.

அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம் – வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்

17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத்துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெறமுடியும். சாதாரணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கமைய கிராமங்களை கட்டியெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார் இராணுவப் பேச்சாளர்

தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சேவையில் ஈடுபட படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.  அந்த வகையிலேயே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங்களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர்.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவ குழுக்கள் மோதல்; ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நேற்று மூடப்பட்டது

arest.jpgஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தீவிரமடைந்ததையடுத்து நேற்று முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை இடம்பெற்ற மோதல்களில் ஐவர் காயமுற்றுள்ளதுடன் இவர்களில் மூவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மாணவர் களுக்கிடையில் இடம்பெற்ற சச்சரவுகள் நேற்றுக் காலை உக்கிரமடைந்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஆஸி. தென் ஆபிரிக்கா, மலேஷியா நாடுகளின் பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.

மார்ச் மாதமளவில் மீள்குடியேற்றம் பூர்த்தி; நாணய நிதியம் பாராட்டு

எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதென ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரி வித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஜனவரி மாதமாகும் போது பெருமளவு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். மார்ச் மாதமளவில் மீள்குடி யேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப் படும்.

கிழக்கு மாகாண மக்கள் மீள்குடி யேற்றப்படும் போது வாய்திறக்காத எதிர்க் கட்சிகளும் சர்வதேச அமைப் புகளும் வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துகின்றன. உலகில் எந்த நாடும் முன்னெடுக்காத அளவு மிக துரிதமாக வடபகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் குறித்து பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இலங்கை பொருளாதார முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்வதாகவும் துரித பொருளாதார அபிவிருத்தி கண்டு வருவதோடு மக்கள் நலபணிகளை முன்னெடுப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பிலும் அது திருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 2ம் கட்ட கடனுதவி கிடைப்பதை தடுப்பதற்காக ‘ஹியுமன் வோட்ச்’ அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு சர்வதேச நாணய நிதியம் அனுப்பியுள்ள பதிலில் இலங்கை குறித்து திருப்தி அடைவதாக கூறியுள்ளது என்றார்.

போராட்டங்களில் ஈடுபடுவோரைப் பதவி நீக்க நடவடிக்கை : அலவி மௌலானா

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் தமக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கக்கோரி இன்று முதல் சட்டப்படி வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து மேல்மாகாண ஆளுநரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலானா கருத்து தெரிவிக்கையில் “அரச நிறுவனங்களில் சட்டப்படி வேலை செய்யும் பேராட்டங்களில் முன்னின்று செயற்படுபவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக”  தெரிவித்துள்ளார். இப்போராட்டத்தை  நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன. 

பொலிஸ் மாஅதிபரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் சந்திக்கலாம்

mahinda-balasuriya.jpgவெள்ளிக் கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மா னித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளி க்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாகவும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.