அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

sampanthar.jpgஇலங்கை யின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு நீதிமன்றம் பிணை

tissanayagam.jpgஇலங் கையில் இருபது வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்திபிணையில் செல்ல கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. .

திஸ்ஸநாயகத்தின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திற்கு கையளிக்க வேண்டுமென்றும் திஸ்ஸநாயகத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 

விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள்

வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவ ர்களும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். எனவே தற்போது சிறைகளில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிடுமாறு சட்ட மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோருக்கே வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் சட்ட மாஅதிபர் கூறினார்.

சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்கலாக சுமார் 600 பேர் வரை விடுதலை செய்யப்படவுள்ளதாகக் கூறிய அவர், கைதிகளின் விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். வழக்குகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக 11 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழு ஆராய்ந்து வருகின்றது. இதன்படி மிகக் குறைவானோருக்கே வழக்குப் பதிவு அவசியமாகுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென சட்ட மாஅதிபர் கூறினார். நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 577 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  கொழும்பு மகசீன், சீ.ஆர்.பீ, வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநு ராதபுரம், கண்டி ஆகிய சிறைச் சாலைகளில் கைதிகள் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இவர் களுள் சிலர் தளர்வடைந்ததா கவும் அவர்களை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் சிறைச் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் பல்கலைக்கழகத்தில் வடமாகாண அபிவிருத்தி மாநாடு – புலம்பெயர் குழுவும் கலந்துகொள்கின்றது : வி அருட்செல்வன்

இன்று டிசம்பர் 12ல் Conference on Rehabilitation Reconstruction and Development என்ற மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுக்கொண்டு உள்ளது. இம்மாநாடு சமூக சேவைகள் சமூகநலத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாட்டுக்கு பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நோர்வே, ஆகிய நாடுகளில் இருந்து 20 பேர்வரை கலந்துகொள்கின்றனர். இம்மாநாடு யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புலம்பெயர்ந்த மக்களின் உதவிகளைக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உயர்மட்ட மாநாடு ஒன்று இன்று காலை 8.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் நோக்கம் வெளிநாடுகளில் குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் உள்ளவர்களையும் வடக்கு கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களையும் அவர்களது அனுபவங்களையும் பகிர்வதன் மூலம் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதாகும். இம்மாநாட்டின் இணைப்பாளராக கனடாவில் இருந்து யாழ் சென்று செயற்படுகின்ற மித்திரன் மரியாம்பிள்ளை இருக்கின்றார்.

மேற்படி மாநாட்டில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ். சிவச்சந்திரன், பேராசிரியர் எஸ். சத்தியசீலன், கலாநிதி நொயெல் நடேசன், திரு. ஏ. சந்திரஹாசன், கலாநிதி என். நரேந்திரன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி திரு. டெரின் கொன்ஸ்டன்டைன், பொறியியலாளர் எம். இராமதாஸன், பேராசிரியர் வி. பி. சிவநாதன் ஆகியோர் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.

இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்:

Conference on Rebuilding Jaffna with the Sri Lankan Diaspora
Tuesday, January 12, 2010
Venue – Jaffna University Auditorium

Agenda

(இந்நிகழ்சி நிரலில் இறுதிநேர மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது என்பதை கவனத்திற்கொள்ளவும்.)

Opining Session with the Vice Chancellor of the Jaffna University 08.00 am – 08.15 am
Welcome speech by Minister Douglas Devananda  08.20 am – 08.40 am
Introduction by the Coordinator  Dr. Noel Nadesan  08.45 am – 08.55 am
Rebuilding Jaffna Mr. A. Chandra Hassan (Architect)  09.00 am – 10.00 am 

Coffee break and Interactive session 10.00 am – 10.25 am

Presentation by participants and discussion  10.30 am – 12.00 noon

Lunch break 12.00 noon – 1.00 pm 

Jaffna University and Expatriates contribution   Dr. Narendran  1.15 pm – 2.00 pm 
Interactive session with submissions by delegates/ guests   2.00 pm – 3.00 pm 
Tourism prospective Mr. Tarrin Constantine   3.00 pm – 3.30 pm

Tea break and Interactive session 3.30 pm – 4.00 pm

Suggestions/proposals by participants  4.00 pm – 5.30 pm 
Closing Remarks by Hon Minister Douglas Devananda  5.30 pm – 5.45 pm 
Vote of Thanks  by the Jaffna Mayor 5.45 pm – 6.00 pm

ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கை உருவாக்கப்படும்! மஹிந்த சிந்தனை 2 வெளியீட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை 2 இன்று முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்தினார்.

ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கையை விளங்கச் செய்யும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கியதாக மஹிந்த சிந்தனை 2 வகுக்கப்பட்டுள்ளது.

உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல்

சட்டம்,  ஒழுக்கம் மற்றும் நேர்மையுள்ள சமூகத்தை உருவாக்கல்

அனைவருக்கும் வசிப்பிடம்,  குடிநீர்,  மின்சாரம் மற்றும் தொடர்புசாதன வசதிகள் கொண்ட நாடாக மாற்றியமைத்தல்

முன்னேற்றம் காணப்பட்ட வகையிலான நெடுஞ்சலைகளுடன் அனைவருக்குமான போக்கு வரத்து வசதியுள்ள நாடாக உருவாக்கல்

வெற்றிகொண்ட நாட்டை மீண்டும் பிரிய விடாமல் ஒரே நாடாக கட்டிக் காப்பது

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல்

காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கப்பட்ட இலங்கையை உருவாக்கல்

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதலிடம் வழங்குதல்
போன்றவை உட்பட பல முக்கிய வடயங்கள் மஹிந்த சிந்தனை 2இல்உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

mahinda_jaffna.jpgதமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அதேநேரம் சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் புதிதாக மேல் சபையொன்றும் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் ஏற்கனவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இனிமேல் இந்த நாட்டில் அகதிகள் யுகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எவரும், எங்கும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக சென்று வரலாம். இதில் எதுவிதமான கட்டுப்பாடுகளுமே இராது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடம், விவசாயப் பீடம் என்பனவற்றை உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ். குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என முழு நாட்டு மக்களும் அச்சம், பீதியின்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், சந்தைகள் என எல்லா இடங்களுக்கும் பயமில்லாமல் சென்று வருகின்றனர். ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கின்ற அதே சுதந்திரத்தையும், உரிமைகளையும் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக உள்ளோம். மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. தென்பகுதி நதியொன்றை திசை திருப்பி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் தகவல், தொழில்நுட்ப கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்யப்படும். ஏற்கனவே யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

அன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் யாழ் தேவி ரயிலில் இங்கு வந்து சென்றிருக்கிறேன். அந்த யாழ் தேவி ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாம் ஒரு தாய் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும்.

எல்லா மக்களையும் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும். இங்கு இன ரீதியான அரசியல் இனித் தேவையில்லை. இன, மத, குல, மாகாண பேதங்களும் நமக்கு அவசியமில்லை. சேர் பொன்னம்பலம் ராமநாதன், சேர் பொன்னம் பலம் அருணாச்சலம் போன்ற அரசியல் தலைவர்கள் இப்பூமியில் உருவாக வேண்டும். நான் உங்கள் சகோதரன், உங்கள் நண்பன், நான் உங்களை நம்புகிறேன் என்றார்.

பொன்சேகாவின் 10 அம்சத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வருகை – ஜே.வி.பி.

jvp.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் பத்து அம்ச வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க, சம்பந்தனுக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்த போது கூச்சல் போட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே அறிவிப்பை செய்திருப்பதையிட்டு என்ன செய்யப் போகிறார்? எனவும் ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் ஜெனரல் பொன்சேகாவின் இணைஊடகப் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா பத்து அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றார். அதனடிப்படையிலேயே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இதே 10 அம்ச வேலைத்திட்டத்தினை முன்வைத்தே பேசினார். இந்த வேலைத்திட்டத்தின் மீது திருப்தி கண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது தவிர சம்பந்தனுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ ஜெனரல் பொன்சேகாவோ, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளோ எந்தவிதமான உடன்படிக்கைகளையோ, இரகசியப் பேச்சுகளையோ நடத்தவில்லை.

சில ஊடகங்கள் தெரிவிக்கும் விதத்தில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் எவருடனும் ஜெனரல் பொன்சேகா செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒரு சிங்கள வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஜெனரல் இணங்கியதாகவும் அதனாலேயே அவரை ஆதரிக்க முன்வந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறான எந்தத் தகவலையும் தான் கூறவில்லை என சம்பந்தன் மறுத்திருக்கிறார். சில ஊடகங்கள் மீது அரச தரப்பு தமது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஊடகங்களும் அதற்குத் துணைபோகும் நிலை காணப்படுகின்றது. எந்தவொரு ஊடகத்தையும் நாம் கட்டாயப்படுத்த முற்படவில்லை. ஊடகங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டல்: லண்டனில் மூன்று பயணிகள் கைது

heathrow-airport.jpgலண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.

இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் புறம்பாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது.

715 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte-rele.jpgபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ltte-rele.jpg