அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையருடன் அமைச்சர் சமரசிங்க சந்தித்துப் பேச்சு

ma-sa.jpgஇலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட ஆதரவை பெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமென்று அமைச்சர் குறிப்பிட்டதுடன் பூரணப்படுத்தப்பட்ட இறுதி நகல் அமைச்சரவைக்கு அதன் கருத்துரை மற்றும் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளை நாட்டில் மனித உரிமைகளின் நிலை மோதல்களின் பின்னரும் தேர்தலின் பின்னரும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியால் பொறுப்பேற்பு

தகவல், ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி மேற்படி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளேன். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் அமைச்சுப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதியை கோரியுள்ளேன்.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஊடக அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கிறார். எனவே அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இந்த ஊடகவியலாளர் மாநாடு நான் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடாகக் கூட இருக்கலாம். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் அடங்களான சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

வன்முறை அரசியல் கலாசாரம் தலைதூக்க இடமளியேன் தங்காலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ

mahindaநாட்டில் இன்னொரு தடவை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் வன்முறைக் கலாசாரத்தை அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசியல் சுயநலனுக்காக இளைஞர்களை பலிக்கடாவாக்க வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பது தனது கடப்பாடு எனவும் அதற்கு ஊறு விளைவிக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.தங்காலை நகர மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாவது;

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்றுதான் உங்களைச் சந்திக்கின்றேன். என்னை மீண்டுமொரு தடவை உங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அரசியல் என்பது வன்முறையாகவோ, பழிவாங்குவதாகவோ இருந்துவிடக்கூடாது. வன்முறைக்கலாசாரம் தலைதூக்கினால் நாட்டின் எதிர்காலம் மிக மோசமானதாக அமைந்துவிடும். மக்களை அச்சுறுத்தி அரசியல் நடத்தும் கலாசாரத்துக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துள்ளேன்.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியல் செய்யும் உரிமை உண்டு. அதனை எவராலும் நிராகரிக்க முடியாது. ஆனால், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளுக்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சமாதானம், ஐக்கியம் என்பவற்றை சீர்குலைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இன்று தோல்வியை ஜீரணிக்க முடியாத சில அரசியல் சக்திகள் நாட்டை மீண்டும் பயங்கரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த நாட்டை பல சவால்களுக்கு முகம் கொடுத்து நாம் மீட்டெடுத்துள்ளோம். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சக்திகள் இன்று மூக்குடைபட்டுப் போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊழியர் உட்பட நாட்டுமக்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். வரலாற்றில் ஒருபோதுமில்லாத வகையில் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் சேறு அள்ளி வீசப்பட்டது. அவற்றுக்கு நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களில் கணிசமான மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக நான் அப்பகுதிகளை ஓரங்கட்டப் போவதில்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் இன்று நானே ஜனாதிபதி. எல்லோரையும் எனது நாட்டு மக்களாகவே கருதுகின்றேன். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். எனது கடப்பாடு கூட நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தான். இன்னொரு தடவை இளைஞர்களை பலிகடாவாக்க முனைய வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன். அரசியல் செய்யுங்கள் அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. ஆனால் அரசியல் செய்வதற்காக வன்முறைக் கலசாரத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அரசாங்கமும் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். இக் கூட்டத்தின் போது நாமல் ராஜபக்ஷ தனது முதல் அரசியல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

தேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

gl.jpgநாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவத்தில் இருந்த போது செய்த தவறுகள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்சேகாவை கைது செய்ததால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன்சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.

1000 இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

2010ம் ஆண்டில் ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கனடிய நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்த மொன்று நேற்று தொழிலமைச்சில் தொழிலுறவுகள், மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதுபற்றி அமைச்சர் தெளிவுபடுத்துகையில் :- கனடாவிலுள்ள கீ கின் கல்லூரியும் இலங்கையில் வடமேல் மாகாணத்திலுள்ள வயம்ப பயிற்சி நிறுவனமும் இணைந்தே மேற்படி வேலை வாய்ப்புக்களுக்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. கனடாவின் நடைமுறை நிர்வாக மொழி ஆங்கிலமாக உள்ளதால் மொழிப்பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சிகளை வழங்குவதுடன் தேர்ச்சியானவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் மேற்படி நிறவனங்களே முன்னெடுக்கும். அதற்கான ஒத்துழைப்புக்களை மட்டுமே தொழிலமைச்சு வழங்கும்.

தகவல் தொழில் நுட்ப பாடபோதனையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் தகவல் தொழில் நுட்ப பாட போதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தினருக்கு கணனிதொடர்பான அறிவினைப் போதிக்கும் நோக்கத்துடன் தகவல் தொழில்நுட்பக் கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணனிக் கல்வியைப் போதிப்பதற்கு வசதியாக பாடசாலைகளில் கணனி வள நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய கல்வியாண்டில் தகவல் தொழில்நுட்ப பாடபோதனைகளை மேலும் திறன்பட முன்னெடுக்கும் நோக்கத்துடன் விசேட செயற் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதேவேளை தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய தகவல் தளமொன்றினை அறிமுகம் செய்வதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாணவர்கள் மத்தியில் கையெழுத்து சஞ்சிகை போட்டி

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கையெழுத்து சஞ்சிகைப் போட்டியினை இந்த வருடத்திலும் நடாத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் கலை-இலக்கிய ஆக்கத் திறமைகளை விருத்தி செய்யும் வகையிலும், கூட்டு முயற்சி தலைமைத்துவம் மற்றும் ஆளுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் கையெழுத்து சஞ்சிகைப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.

தரம்-03 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்கள் பங்குபற்றும் வகையில் 06 பிரிவுகளாக இந்தப் போட்டி நடாத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை ரீதியாகவும், வலயம் மற்றும் மாகாண ரீதியாகவும் சிறந்த ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

பாடசாலை மட்டத்திலான போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும், வலய ரீதியான தெரிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தின் சிறந்த கையெழுத்து சஞ்சிகைகளைத் தெரிவு செய்யும் போட்டிகள் யூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இளைஞர், யுவதிகளுக்கு பண்ணிசை வகுப்புகள்

யாழ் குடாநாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளினது மத்தியில் இறையுணர்வுகளையும் ஆன்மீக சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் அகில இலங்கை திருமுறை மன்றத்தினால் பிரதி சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் பண்ணிசை வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற இந்த பண்ணிசை வகுப்புகளை கலாபூஷணம் கே. எஸ். ஆர். திருஞானசம்பந்தன் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி உதவி இந்திய தூதரகத்தில் ஹிந்தி வகுப்புகள்

கண்டி உதவி இந்தியத் தூதரகத்தால் நடத்தப்படும் ஹிந்தி மொழி வகுப்புகள் இம் மாதம் 22ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி இந்திய உதவி தூதரகம் விடுத்துள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-2011ம் ஆண்டிற்கான ஹிந்தி மொழி பாடநெறி வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 8ம் திகதி முதல் கண்டி உதவி இந்திய தூதரகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக வருவோர் காலை 9.00 மணி முதல் 4.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்பாடநெறியினை கண்டி மற்றும் அருகில் வசிப்பவர்கள் மட்டும் மேற்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு 081-2222652 அல்லது 2223786 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது

பொன்சேகா கைதானதன் எதிரொலி – பொலிஸார் கண்ணீர் புகை, தடியடி

colombo.jpgகைது செய்யப்பட்ட எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன. இப்பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று நண்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு முன்பாக எதிரணியினரால் நடத்தப்பட்ட பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் காலை 10 மணியாகும் போதே தொழில் நுட்பக்கல்லூரிப் பகுதி, டாம் வீதி, அப்துல்ஹமீத் வீதி போன்ற பகுதிகளால் மக்கள் ஊர்வலமாக முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ உருவச் சிலைப்பகுதியை நோக்கி வரத் தொடங்கினர்.

மக்கள் கூட்டம் அதிகமாக வருவதைக் கண்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த  உஷார் நிலையில் தயாரானார்கள். இதனிடையே முன்கூட்டியே ஆளும்தரப்பு ஆதரவாளர்கள் எனக்கருதப்பட்ட ஒரு குழு பிரேமதாஸ சிலைக்கு பின்பாக கூடிநின்று கற்களைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வீசத் தொடங்கினர். இதனால் இருதரப்புக்குமிடையில் மாறி மாறிக் கற்கள் எறியப்பட்டன. இதன் காரணமாக எதிரணிதரப்பில் பலர் காயமடைந்தனர்.

நண்பகல் 12 மணியாகும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அணிதிரண்டு பொலிஸ் தடைகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். இந்த வேளையில் கலகத்தடுப்புப் பொலிஸார் கண்ணீர் புகையை பிரயோகித்ததோடு குண்டாந்தடியடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முடியாமல் அவர்கள் தடுமாற்றமடைந்து காணப்பட்டனர். மகிந்தவின் அராஜகத்தை முறியடிப்போம், ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய், உண்மையான ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே, பயங்கரவாதி கருணாவுக்கு இராஜ உபசாரம், நாட்டைக்காத்த ஜெனரலுக்கு சிறையா? என்பன போன்ற பல சுலோகங்களை கோஷித்த வண்ணம் மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்தப் பேரணியை வழிநடத்தும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல்களால் இடையிடையே சிதறியோடிய மக்கள் மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த இடத்துக்கு திரும்பி வந்தவண்ணமிருந்தனர்.இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் மங்கள சமரவீர, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணாநாயக்க, தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏ.கே.எம். முஸம்மில், முஜிபுர் ரஹ்மான் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

12 மணிக்கு அங்கு வருகைதந்த ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து தமது நன்றியைத் தெரிவித்தார். அங்கு சிறிது நேரம் நின்ற பின்னர் அவர் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தமது கணவரை விடுவிக்கக் கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு எதிரணிகளின் தலைவர்களும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான மக்களும் நீதிமன்றக் கட்டிடத்துக்கு முன்னால் உள்ள பாதையில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை சத்தியாக்கிரகமிருந்த பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணி பிற்பகல் 1.15 மணியளவில் முடிவுற்றது.

இறுதியில் கருத்துத் தெரிவித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து நாடு முழுவதும் நாளாந்தம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெறும். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும்வரை போராட்டம் நடக்கும். ஆளும் தரப்பின் காடைத்தனத்துக்கோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கோ நாம் அடிபணியப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்குச் சமாந்தரமாக நேற்றைய தினம் நுவரெலியாவில் நண்பகல் 12 மணிக்கும் கம்பஹா ரயில் நிலையம் முன்பாக மாலை 5 மணிக்கும் களுத்துறை நகரில் 3.30 மணிக்கும் கண்டி மாநகரில் 4 மணிக்கும் பொலன்நறுவை நகரில் 3.30 மணிக்கும் காலி மாநகரில் 4 மணிக்கும் மாத்தறை நகரில் மாலை 4 மணிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.