அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நேற்றுக் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இந்த இயந்திர உபகரணங்களை உத்தி யோகபூர்வமாகக் கையளித்தார்.

அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனோடு சம்பந்த ப்பட்ட உபகரணங்களையும் நேற்று வழங்கியதுடன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதனையும் சீனத் தூதுவரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை சீனக்குடியரசு மக்கள் இலங்கையில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

ஜெனரல் சரத் தடுத்து வைப்பு சட்டவிரோதமானது : சரத் என்.சில்வா

sarath.jpgஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு குற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொழும்பு 7 இல் உள்ள அவரது அலுவலகத்தில் இணையத்தளம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இணையத்தளத்தில் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரும் மக்கள் கோரிக்கைகள் சேகரிக்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் நீதியரசர்இ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கருத்துத் தெரிவித்த சரத் என். சில்வா  “இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களை இராணுவச் சட்டத்துக்குள் தண்டனை வழங்க முற்படுவது இதற்கு முன் நாட்டில் எப்போதும் நடந்ததில்லை” என்றும் தெரிவித்தார்.

மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் – விமல் வீரவன்ச ஆவேசம்

wimal-weerawansa.gifஇலங்கை விவகாரங்களில் தலையிடும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவர் விமல் வீரவன்ச கூறினார்.

உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையைக் கூறு போடுவதும்,  எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு மீண்டும் களம் அமைத்துக்கொடுப்பதும்,  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் இரகசியத் திட்டமாகும்.  இதனை முறியடிக்க நாட்டுப்பற்றுள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரித்தானிய வெளிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்,  பிரதமர் கோடன் பிறவுண் ஆகியோருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி  கோஷங்களை எழுப்பினர். 

அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் – பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவிப்பு

rathnasiri_wicremanayake.jpgஅரச சார்பற்ற உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் திருத்தங்களை முன்மொழிவதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் சிபாரிசுகளை ஏற்கனவே கையளித்துள்ளது. அது குறித்து விரைவில் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவுமே இவ்வாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார். இதேவேளை குறிப்பிட்ட சிபாரிசுகள் சட்ட மாஅதிபருக்கு அவரது ஆலோசனையை பொறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார

குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதில் ஐவர் பலி 13 பேரை காணவில்லை

chilee_earthquake.jpgதென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிச்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானோர் பலியாகினர்.

நில நடுக்கம் ரிச்டர்  அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்தன. இதன் மையம் கடலுக்கு அருகே இருந்தது. எனவே பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்தத் தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 13 பேரை காணவில்லை.

சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தன. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கிவிட்டு, அதைவும் தாண்டி வேகமாகச் சென்றது.

எனவே அமெரிக்காவின் ஹவாய் தீவூ, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் கிழக்கு பகுதி உட்பட பசிபிக் கடல் பகுதியில் உள்ள 53 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பூகம்பம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து, ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையைத் தாண்டி வந்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் சேதம் எதுவூம் ஏற்படவில்லை. பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான போலினிசா தீவிலும் சுனாமி தாக்கியது.

விருப்பு இலக்கம் வழங்கும் பணி மும்முரம்

parliament.jpgபாராளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.

கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸார்

police_logo.jpgபாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மூலத்துக்கமைய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவது முள்ள 40 பொலிஸ் வலயங்களிலும் 413 பொலிஸ் நிலையங்களினூ டாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தேர்தல்களுக்கான பொலிஸ் ஊடக பேச்சாளர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நேற்று காஷ்மீரிலும் நில நடுக்கம்

kashmir.jpgகாஷ் மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் காணப்பட்டது. ஹெய்ட்டி மற்றும் சிலி நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானவர்கள் பலியானார்கள்.

இதற்கிடையே, காஷ்மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 இலட்சம் மக்கள் பாதிப்பு – பலியானோர் தொகை 300 ஆக உயர்வு; மீட்பு பணி துரிதம்

chile.jpgசிலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்ப ட்டதாகவும், இதுவரை முன்னூறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பான இடம்நோக்கி நகருமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளதுடன், அரசாங்க ஊடகங்கள் உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன.

கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வாகனங்கள் என்பன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் சென்று பார்வையிட்ட அந்நாட்டின் ஜனாதிபதி சுனாமி எச்சரிக்கையுள்ள பகுதிகளை அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்தார். வெளியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

சிலியை அண்மித்துள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கரையோரங்களிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு மக்களை விழிப்பூட்டியது. இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கத் தேவையான உதவிகளை சிலிக்கு வழங்கப் பல நாடுகள் முன்வந்தன. காயமடைந்த பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அரச வாகனங்களும் தனியார் பஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

இறுதியாகக் கிடைத்த தகவலின் படி ஆறு ஒன்று உடைப்பெடுத்து வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் 60 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் இலங்கையர்கள் உண்ணாவிரதம்

இந்தோனேசியாவில் பல இலங்கைத்தமிழர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  இந்தோனேசியாவில் தஞ்சும்பினேங் என்ற இடத்தில் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்கள் பதினொருபேர் தம்மை சுதந்திரமாக வெளியில் நடமாடவோ அல்லது வேறொரு நாட்டில் தஞ்சம் பெறவோ அனுமதிக்கவோ வேண்டுமென கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.