ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு குற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொழும்பு 7 இல் உள்ள அவரது அலுவலகத்தில் இணையத்தளம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இணையத்தளத்தில் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரும் மக்கள் கோரிக்கைகள் சேகரிக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் நீதியரசர்இ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கருத்துத் தெரிவித்த சரத் என். சில்வா “இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களை இராணுவச் சட்டத்துக்குள் தண்டனை வழங்க முற்படுவது இதற்கு முன் நாட்டில் எப்போதும் நடந்ததில்லை” என்றும் தெரிவித்தார்.