::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பும் பேசவேண்டும் – இல.கணேசன் கூறுகிறார்

eela-ganash.jpgஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அதன் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கோவையில் (18) செய்தியாளர்களிடம் கூறியதாவது;

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே, இதனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினையாகக் கருதாமல் இந்திய அரசு இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். இந்தச் சண்டையின் மூலம் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. ஆகையால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். ராஜீவ்காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

தமிழர் விரோத நடவடிக்கைகளை சோனியாகாந்தி தடுத்துநிறுத்த வேண்டும்

vmani.jpgகாங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்

thirumma.jpgஇலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,

திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.

‌வீர மரண‌ம் அடை‌யத் தயா‌ர்: தா.பா‌ண்டிய‌ன் ஆவேச‌ம்

phandiyan.jpgநா‌ம் சாக‌ப் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் அ‌ல்ல, த‌மிழனை கொ‌ல்பவ‌ர்களை சாகடி‌‌க்க ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலர் தா.பா‌ண்டிய‌ன், ஒ‌வ்வொரு த‌மிழனு‌ம் ‌வீர மரண‌ம் அடைவத‌ற்கு த‌ன்னை தயா‌ர்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். திருமாவளவனை வா‌‌‌ழ்‌த்‌தி பே‌சிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலர் தா.பா‌ண்டிய‌ன், இல‌ங்கை‌யி‌ல் நட‌க்கு‌ம் போரை உடனடியாக தடு‌த்து ‌நிறு‌த்த‌த்தா‌ன் ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ினோ‌ம்.

‌சி‌ங்களவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்டுபோட‌ச் சொ‌ல்ல‌வி‌ல்லை. ‌ச‌ந்‌திரனு‌க்கு இ‌ந்‌தியா ச‌ந்‌திராயனை அனு‌ப்‌பியது. அதை‌ப் போல இல‌ங்கையை நோ‌க்‌கி ஏவுகணையை ‌இ‌ந்‌தியா ‌வீச‌த் தேவை‌யி‌ல்லை. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினாலே போது‌ம், அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா?

இ‌ப்போது இல‌ங்கை‌யி‌ல் த‌ர்மயு‌த்த‌ம் ந‌ட‌ந்து கொ‌ண்டிரு‌‌க்‌கிறது. ‌திருமாவளவனை நா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ள்வதெ‌ல்லா‌ம் உ‌ங்க‌ள் உட‌ல் நல‌ம் கரு‌தி ‌நீ‌ங்க‌ள் இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை உடனடியாக கை‌விட வே‌ண்டு‌ம். இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்துமாறு நா‌ம் இ‌ங்கே அற‌ப்போரா‌ட்ட‌த்தை நட‌த்‌தி‌க் கொ‌ண்டி‌‌க்‌கிறோ‌ம்.

ம‌த்‌‌திய அரசை ந‌ம்‌பி ‌திருமாவளவ‌ன் இ‌த்தகையை மாபெரு‌ம் போரா‌ட்ட‌‌த்‌‌தி‌ல் ஈடுபட வே‌ண்டா‌‌ம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். நா‌ம் சாக‌ப் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் அ‌ல்ல, த‌மிழனை கொ‌ல்பவ‌ர்களை சாகடி‌‌க்க ‌பிற‌ந்தவ‌ர்க‌ள். நா‌ன் இதை மேடை அல‌ங்கார‌த்‌தி‌ற்காக சொ‌ல்ல‌வி‌ல்லை.

ஒ‌வ்வொரு த‌மிழனு‌ம் ‌வீர மரண‌ம் அடைவத‌ற்கு த‌ன்னை தயா‌ர்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். அ‌ப்போதுதா‌ன் த‌மிழனை‌க் கா‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்‌திற‌்கு ஒரு ‌தீ‌ர்வாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதை சு‌ட்டி‌க் கா‌ட்ட ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் பே‌சினா‌ர்.
 

ஒபாமா 20-ந்தேதி பதவி ஏற்பு; ஜார்ஜ்புஷ் கடைசி உரை

world_news.jpgஅமெ ரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வருகிற 20-ந்தேதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்கிறார். இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ்புஷ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறுகிறார்.ஒபாமா பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அமரிக்காவில் அதிபர் பயணம் செய்வதற்கு என்றே தனி விமானம் உள்ளது. “ஏர் போர்ஸ்-1” என்று இந்த விமானம் அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் “ஏர் போர்ஸ்-1” விமானத்தில் அதிபர் என்ற முறையில் நேற்று கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

நார்வோக் பகுதிக்கு சென்ற புஷ் ஏர் போர்ஸ்-1 விமானத்தில் நேற்று வாஷிங்டன் திரும்பினார்.40-நிமிட நேரம் பயணம் செய்து விட்டு கீழே இறங்கிய புஷ் அந்த விமானம் ஊழியர்களுடன் கை குலுக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

20-ந்தேதி ஓய்வு பெறுவதையொட்டி புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிபூர்வமான அந்த உரையில் புஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.அமெரிக்காவில் மீண்டும் அல்கொய்தா தாக்குதல் நடப்பதையும் தடுத்திருக்கிறேன் என்று தனது சாதனைகளை விளக்கி கூறினார்.

அமெரிக்காவுக்கு ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை.மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த அதிபராக வரும் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார். அவருக்கும் அவரது மனைவி,2-மகள்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புஷ் அப்போது தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் திட்டம்

laptop.jpgபாகிஸ் தானில் இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் பாராளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது. செய்தி ஒலிபரப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஹெரி ரெகிமான் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகளை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பாகிஸ்தானிலும் இந்திய தொலைக்காட்சி சேவைகளின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டுமென எம்.பி.யான தாரிக் அஜீம் கோரியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு எம்.பி.யான ஹாஜி அஜீல் தெரிவிக்கையில்; இந்தியாவின் பொழுதுபோக்கு சேவை தொலைக்காட்சிகளைத் தான் தடை செய்ய வேண்டும். செய்திச் சேவைகளைத் தடைசெய்தால் இந்தியாவின் பிரசாரங்களை அறியமுடியாதெனத் தெரிவித்தார். ஆனாலும், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்திய தொலைக்காட்சி சேவைகளிற்கு தடை விதிக்கப்படுமென ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பறவை மோதி ஆற்றில் விழுந்த விமானம்

air.jpgஅமெ ரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் உள்பட 155 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது.

இதையடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மன்ஹாட்டன் அருகே ஹட்சன் ஆற்றில் விழுந்தது.
.
ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். அப் பகுதியில் மைனஸ் 6-டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பலரும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்களும், கப்பலும் சென்றதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர்

cordan-bran.jpgஇலங் கையில் யுத்தநிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இந்த விடயம் தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி, ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்சல் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டு வீச்சால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் முற்றுகைக்குள்ளாக்கப் பட்டிருப்பதாகவும் முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்த கிழக்கு லெய்செஸ்ரர் எம்.பி. கீத் வாஸ், ஒரு தலைப்பட்சமாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவோ மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையை நிறுத்துவதற்காக யுத்தநிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்க பிரதமர் தனது நல்லெண்ணத்தை பயன்படுத்துவாரா? என்றும் இதன் மூலம் அழகிய தீவில் சமாதானத்தை திரும்ப ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் குறித்து தான் அறிந்துள்ளதாகவும் கௌரவ உறுப்பினரின் (கீத்வாஸ்) உரிமையை தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதேசமயம், இலங்கையில் அவசரமாக யுத்தநிறுத்தம் தேவையென்ற கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தனது மனதிலுள்ள விடயங்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுண், அடுத்த ஓரிரு தினங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஜேர்மன் அதிபரும் விஜயம் செய்யும் போது இந்த விடயத்தை அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வாரெனவும் தெரிவித்துள்ளார். சமாதானத்திற்காகவும் தீர்வுக்காகவும் தன்னால் உதவியளிக்க முடியுமென பல சந்தர்ப்பங்களில் கிழக்கு லெய் செஸ்ரர் எம்.பி. கீத்வாஸ் கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதன் மூலமே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் கூறியிருந்ததுடன், தனது நிலைப்பாட்டை பல தடவைகள் கூறியிருந்தார்.