அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

ரிபிசியின் 10 ஆண்டுகள்: வீ இராமராஜ்

Ramraj_V_TBCஅன்பான ரிபிசி நேயர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

நமது வானொலி பத்தாண்டுகளைக் கடந்து பதினோராவது ஆண்டில்காலடி எடுத்து வைக்கும் இந்த நாளில் வானலையில் உங்கள் அனைவரோடும்இ ரிபிசியின் நிர்வாகத்தினரின் சார்பில் உரையாடக் கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஆண்டுகள் பத்து கடந்துவிட்டன என்பதை நம்ப முடியாத அளவுக்கு காலம் விரைவாக ஓடிவிட்டது. அனைத்து கருத்துக்களுக்குமான தளம், நடுநிலை தவறாமை, தமிழ் மக்களின் அபிலாஷை ஆகிய நோக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கருக்கொண்ட எமது வானொலி, குழந்தையாகத் தவழ்ந்து இன்று எழுந்து நடைபோடத் தொடங்கிவிட்டது.

தான் தவழ்ந்த காலங்களிலேயே தன் முன்னால் இருந்த தடைகள், பள்ளங்கள் ஆகியவற்றை நேயர்களாகிய உங்களது கரம் பற்றி கடந்து வந்த இந்த  வானொலிக் குழந்தை, பெருந்தடைகள் பல கடந்த நிலையில் இனி கைவீசி வீறு நடை போட்டு முன்னேறும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

தமிழரின் அபிலாஷைகளுக்கான போரட்ட காலங்களில், அவற்றுக்கு சமாந்தரமாக நியாயமான விமர்சனங்களுடன் எமது வானொலி நடை போட்டதை எள்ளி நகையாடியவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள்.

தவறாக எடை போட்டவர்கள், ரிபிசி சொன்ன கருத்துக்கள் பலித்துப் போனதைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள். காழ்ப்புணர்வு கொண்டு காறி உமிழ்ந்தவர்கள் இன்று ரிபிசி காலங்கடந்து நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.

தமிழர் போராட்டப் பாதையில் தமிழ் மக்களிடையிலான ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து ரிபிசி வலியுறுத்தி வந்த கருத்துக்கள் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே உண்மையாகிப் போயிருக்கின்றன.

ரிபிசி முன்வைத்த அரசியல் விமர்சனங்களைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளமையும், தமிழரின் உரிமைக்கான ஒட்டுமொத்தப் போராட்டம் இக்கட்டு நிலையை அடைந்துள்ளதும் இன்று அனைவரும் அறிந்த ஒரு நிகழ்வு.

தமது முப்பது வருட போரட்டத்தை ஒரு மறு பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் இன்று உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நிற்கிறார்கள்.

இதற்காக பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்துக்கும் முன்பு போலவே நியாயமான விமர்சனங்களுடன் கூடிய தனது ஆதரவை ரிபிசி தாராளமாக வழங்கும் என்பதையும் இன்றைய தினத்தில் உங்களுக்கு கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் எக்கோடியில் வாழ்ந்தாலும் தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் அரசியல், மத வேறுபாடின்றி ரிபிசி தனது குரலை உயர்த்தி ஒலிக்கும். இதுவரை காலமும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடந்த நாம் அடுத்தவரின் கருத்துக்களை மதித்து, வேறுபாடுகளுக்குள் உடன்பாடு கண்டு தொடர்ந்து இணைந்து போராட வேண்டிய அவசியத்தை ரிபிசி அன்று முதல் வலியுறுத்தியே வந்துள்ளது. அதற்கான தேவையும் எமது தமிழ் சமூகத்தில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பலமாக எழுந்துள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். ரிபிசியின் கலையக மற்றும் நிர்வாக நிகழ்வுகள் கூட இந்த கொள்கைகளுக்கு ஏதுவாக ரிபிசி தொடர்ந்து நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளதையும் நேயர்கள் அவதானிக்க முடியும்.

இன்றைய இந்த 10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு கூட அதற்கு ஒரு உதாரணமாகும். கொள்கைகளால், சூழ்நிலைகளால் பிரிந்த ரிபிசியின் ஸ்தாபகர்கள், கலையக உறவுகள் எல்லாரையும் மீண்டும் அழைத்து, அணைத்துச் செல்லும் போக்கையும் ரிபிசி மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் கடைப்பிடிக்க முனைகிறது. அதற்கு ஆதரவு தந்த எமது முன்னாள் நிர்வாகிகள், கலையக உறவுகள் மற்றும் வானலை உறவுகள் ஆகியோருக்கு எனது தாழ்மையான நன்றிகள் உரித்தாகுக.

எமது சிரம காலங்களில் எங்களுக்கு உறுதுணையாக நின்று, பல்வேறு காரணங்களுக்காக இன்று எம்மைப் பிரிந்திருக்கும் எமது உண்மையான உறவுகளுக்கும் நாம் எமது அன்பு அழைப்பை விடுக்கின்றோம். உங்களின் வரவை ரிபிசி மிகுந்த வாஞ்சையுடன் எதிர்பார்க்கிறது.
ரிபிசிக்கான உங்கள் பங்களிப்புக்கள், அதுவும் நாம் மிகுந்த சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொண்டிருந்த வேளையில் நீங்கள் வழங்கிய உதவிகள் என்றும் எம்மால் மறக்க, மறுக்க முடியாதவை.

அதேவேளை அரசியல் காரணங்களுக்காக எங்களில் இருந்து இதுவரை காலமும் விலகி இருந்து வந்த புதியவர்களையும் வானலை உறவுகளாக ஏற்க நாங்கள் மிகுந்த ஆர்வத்துடனேயே இருக்கின்றோம். உங்கள் வரவு நிச்சயமாக ரிபிசியின் முற்றத்தில் புதிய மல்லிகையாக மணக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

ஆயிரம் பூக்களின் மணம் வீசும் ஒரு தோட்டமாக, ஆயிரம் கருத்துக்கள் கலக்கும் ஒரு களமாகவே என்றும் ரிபிசி இருக்க விளைகிறது. அதற்காக இதுவரை விலகி இருந்த புதிய நேயர்களுக்கும் அது அன்பு அழைப்பு விடுகிறது.

அரசியல் ரீதியான கைவிலங்குகள் நீங்கியதால் சில அரசியல் கட்சிகள் கடந்த காலங்களைப் போலல்லாது எங்களுடன் வானலையில் இணைந்ததை நேயர்கள் அவதானித்திருப்பிர்கள். அதே போன்று வானலை உறவுகளுக்கும் எமது கதவுகள் என்றும் திறந்திருக்கின்றன.

எமது அரசியல் ஆய்வாளரான விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்களும், ஜேர்மனியில் இருந்து எமக்கு உரிய பங்களிப்புக்களை வழங்கிவரும் செல்வதுரை ஜெகனாதனும் மற்றும் அரசியல் அவதானி தம்பாவும் அன்று முதல் இன்று வரை எம்முடன் இணை பிரியாது செயற்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ரிபிசியின் நிர்வாகம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

எனது மனைவியான சிவாஜினி ராம்ராஜ் அவர்களின் ரிபிசிக்கான சில பங்களிப்புகளையும் நாம் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது. அனைத்து வேளைகளிலும் ரிபிசியை தனது ஒரு குழந்தை போலவே அவர் பராமரித்து வந்துள்ளார். ஒலிபரப்பாளராக, நிர்வாகியாக அவர் செய்த கடமைகள் மறுக்க முடியாதவை. ஒரு கணவன் என்ற வகையில் அவருக்கு நான் நன்றி கூறமுடியாது. ஆயினும் ரிபிசி நிர்வாகத்தின் சார்பில் எமது நன்றியை அவருக்கும் எனது குழந்தைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது கலையகத்தை மெருகூட்டி புதிய தெழில்நுட்பத்துக்கு கொண்டு வருவதற்கு நம்பிக்கையுடன் நிதியுதவி செய்த கனவான்களுக்கும் அதேவேளை இக்கலையகத்தை வடிவமைப்பதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்த எனது நண்பன் கோபிநாத் மற்றும் எனது மைத்துனர் நீல் ராஜரட்ணத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எமக்கு தமது ஒத்தாசைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். பல நேயர்கள் எமக்காக வெளியில் இருந்தே எமது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். அரசியல் ரீதியான நெருக்கடிகள் காரணமாக, போதிய தயாரிப்பாளர்கள் இன்றி நாம் தவித்த போது, இந்த நேயர்களின் இந்த பங்களிப்பு ரிபிசி வானலையில் நீடித்திருக்க எமக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

எமது இணையத்தளத்தை முழுமையாக வடிவமைத்து ஒத்துழைப்பு வழங்குகின்ற செல்வநாயகம் கணேசலிங்கத்திற்கும் நன்றிகள். ரிபிசிக்காக புதிய குறு இசைப் பாடலை எழுதிய லோகநாதன் ஆசிரியருக்கும் நன்றி.

அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், ஒரு ஊடகம் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக எனது நண்பர்கள் பலர் ரிபிசிக்கு தொடர்ந்து கைகொடுத்து வந்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

பல வகைகளில் விளம்பரங்களைத் தந்து வந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள். இறுதியாக எமது உயிர் நாடியான நேயர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு நடுநிலையான ஊடகம் என்ற வகையில் ரிபிசி தனது பொறுப்புக்களை உணர்ந்தே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், தமிழர் அரசியலின் இன்றைய நிலை உணர்ந்து, அனைவரையும் அணைத்துச் செல்லும் போக்கை அது கடைப்பிடிக்கும் என்பதை இங்கு உறுதியாகச் சொல்கிறேன்.

நியாமான விமர்சனங்களுடன், நடுநிலை தவறாது அதன் பணி என்றும் சிறக்கும். அதேவேளை ரிபிசியும் அதனது செயற்பாடு குறித்து உங்கள்  விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறது. அத்தகைய விமர்சனங்களே எம்மை வழி நடத்தும் என்பதையும் நாம் நம்புகிறோம். அதுவே என்றும் உங்களுடன் எம்மை பிணைத்தும் வைத்திருக்கும்.
 
பாசமுடன்  வீ இராமராஜ்
நிர்வாக பணிப்பாளர்
ரிபிசி வானொலி

ரிபிசியின் 10 ஆண்டுகள்: ரிபிசி வானொலி அறிக்கை

TBC_Logoசர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் ரிபிசி தனது சேவையை ஆற்றியுள்ளது.  என 10வது நிறைவு ஆண்டையொட்டி விடுத்திருக்கும் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
 
ரிபிசி வானொலி இன்று 11வது ஆண்டில் காலடிவைக்கின்றது இதனை ஒட்டிய விசேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் சனி ஞாயிறு இரு தினங்களில் ரிபிசியின் கலையகத்தில் நடைபெற உள்ளது. அத்தோடு புதிய கலையகமும் திறந்து வைக்கப்பட உள்ளது.
 
1999ம் ஆண்டு  ஜுன் மாதம் 16ம் திகதி பணிப்பாளர் வீ.இராமராஜ் தலைமையில் எஸ்.பி ஜெயக்குமாருடன் இணைந்து இவ் வானொலி ஆரம்பிக்கபட்டது. இவ் வானொலியின் நிகழ்ச்சியினை இலங்கையின் புகழ் பூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி மயில்வாகனம் மும்மத பாடல்களை ஒலிபரப்பி ஆரம்பித்து வைத்தார்.

இவ்வானொலி சிற்றலை அலைவரிசை ஊடாக மூன்று வருடங்களாக தாயகத்திற்கான ஊரோடு உறவாட ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒலிபரப்பி நடாத்தியது. பின்னர் அதனை பொருளதார நெருக்கடி மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடைநிறுத்தி கொண்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து  ஒலிபரப்பாகும் சூரியன் எப் எம் அவுஸ்திரிலியாவில் இருந்து  ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி கனடாவில் இருந்து  ஒலிபரப்பாகும் சி.டி.ஆர் வானொலி ஆகியவற்றுடன் இணைந்து ரிபிசி வானொலி ஒரே நேரத்தில் அணைத்து நாடுகளிலும் உள்ள நேயர்களை ஒன்றினைத்து வாரந்தம் இரண்டு மணிநேர சேவையினை ஒலிபரப்பிய போதிலும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக அச்சேவைகளும் இடைநிறுத்தபட்டன.
 
ரிபிசி வானொலி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடன் இணைந்து ஊரோடு உறவாட நிகழ்ச்சினை தினம் தோரும் ஒருமணிநேரம் நடாத்தியது. விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துவுணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து நோர்வேயுடான வன்னியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மறைந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனால் ரிபிசி வானொலியின் ஒலிபரப்பினை நிறுத்தும்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட அதேவேளை இலங்கையில் உள்ள தமிழ் அமைச்சர் ஒருவரினாலும்  ரிபிசி வானொலியின் நிகழ்ச்சியினை நிறுத்த முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. அச்சேவை தற்காலிகமாக நிறுத்திய அரசு மீண்டும் சேவை தொடர்ந்து ஒலிபரப்புவதற்கு அனுமதி வழங்கியது போதிலும் வடக்கு கிழக்கு பிரிவினைக்கு ஆதரவாக வானொலி செயற்பட வேண்டும் என அரசாங்கம் வைத்த வோண்டுகோளை நிராகரித்த ரிபிசி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடனான சேவையினை இடைநிறுத்தி கொண்டது.

ரிபிசி வானொலியின் வாரந்த வெளியீடாக பூ. சீவகனை ஆசிரியராகக் கொண்டு வான்முரசு பத்திரிகை வெளியிப்பட்டது. புலிகளின் அடாவடி நடவடிக்கை காரணமாக அவ் வெளியீடும் நிறுத்தபட்டது.

இவ் வானொலியில்  புலிகளால் அல்லது அரசினால் கொல்லப்பட்ட அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் கல்விமான்கள் போராளிகள் மனித உரிமைவாதிகள் ஆகியோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் அல்லது விசேட ஒலிபரப்புகளையும் நடாத்தியுள்ளது. அத்தோடு மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மாவீரர் தின உரையினை முதன் முதலாக வன்னியில் இருந்து நேரடியாகப் பெற்று ஒலிபரப்பியதுடன் கருணாவின் மாவீரா தின உரையினையும் முதன் முதலாக ஒலிபரப்பியது.

கடந்த 10 ஆண்டுகளாக வாரந்த அரசியல் ஆய்வினை விஸ்வலிங்கம் சிவலிங்கம் தொகுத்து வழங்கி வருவதோடு அதிக நேயர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல் அமைந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் கலந்து கொண்டு கருத்துகளை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் செல்லதுரை ஜெகநாதன் தொகுத்து வழங்கும் அரசியல் அரங்கம் மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சியாக திகழ்கிறது.

பல ஜனநாயக சக்திகள் கருத்து முரன்பாடுகள் காரணமாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவிட்டாலும் வானொலியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வத்துடன் செயற்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் தனது சேவையை ஆற்றியுள்ளது.  அனைவரும் தங்களுக்கான கருத்து சுதந்திரத்தை இவ் வானொலி ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரிபிசியின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. ரிபிசி வானொலி பணிப்பாளர் வீ.இராமராஜின் 11வது ஆண்டின் விசேட உரை சனிக்கிழமை ஒலிபரப்பாக உள்ளதுடன்   புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கலையகம் திறந்து வைப்பதுடன் 10 சிறப்பு விருந்தினர்கள் இணைந்து கொண்டு மங்கல விளக்கேற்றி வைக்க உள்ளனர்.

நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழுவை அழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்மை பயக்கும்.” – வீ.ஆனந்தசங்கரி

a_sangary.jpgவன்னி மீள் குடியேற்றம் ,அபிவிருத்தி ஆகிய இரண்டையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அவர் அக்கடிதத்தை இடம்பெயர்ந்த-மீள்குடியேற்றப்பட்ட மக்களின் இன்றைய அவல நிலை என்கிற தலையங்கத்தில் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு;

“மீள் குடியேற்றப்பட்ட ,உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலைமை பற்றி தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர என்னை அனுமதிக்கவும். பொறுமையுடனும் அவர்களின் மீது மிக்க அனுதாபத்துடனும் இதைப் படிப்பீர்களேயானால் நிச்சயமாக உங்களுக்கு என் மீது அதிருப்தி ஏற்படமட்டாது. 1970ம் ஆண்டு நீங்களும் நானும் முறையே பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். நீங்கள் நம் அனைவரிலும் இளையவராகவும், நான் உங்களிலும் 14 வயது மூத்தவராகவும் இருந்தோம். அரசியலிலும் நான் உங்களுக்கு மூத்தவனே.

நீங்களும், உங்கள் குழுவினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து உரையாடியபோது தெரிவித்த கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அக்கருத்துகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தடுப்புக்காவலில் உள்ள பிள்ளைகள் தாமதமின்றி விடுவிக்கப்படுவார்கள் என்றும், தேவைக்கேற்ப வீடுகள் புதிதாக கட்டியும் திருத்தியும் தரப்படும் என்றும் இம்மக்கள் நம்பியிருந்தனர். பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளே இடம் பெயர்ந்த மக்களின் பெறுமதி மிக்க பெரும் சொத்துக்கள். அதிகாரிகள் அப்பிள்ளைளை சிறிய அளவில் விசாரித்து விட்டு விடுதலை செய்வார்கள் என அதிகாரிகள் வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.

ஆனால் அவ்வுறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டர்கள்.இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இயக்கத்தில் ஒரு நாள் பயிற்ச்சி பெற்றவர்கள் கூட உயர் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம்நலன்புரி நிலையங்களில் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தலும் கூட வந்தது. புதுமாத்தளனில் இருந்த போது தப்பிப் போக சந்தர்ப்பங்கள் இருந்தும் போர் முனையில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுடன்தான் போகவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தனர் என்று அம்மக்களில் பலர் கூறுகின்றார்கள். அவர்களுக்கு மற்ற துன்பத்தை கொடுக்கும் விடயம் யாது எனில் யார் அவர்களது பிள்ளைகளை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்த்தார்களோ அதே ஆட்கள் இராணுவத்தின் புலனாய்வு துறையினர்களுக்கு பிள்ளைகளை அடையாளம் காட்டுகின்றனர் என்பதே.

பல தீவிர போராளிகள் பெரும் தொகைப் பணத்துடன் முகாம்களில் இருந்து தப்பி வந்து நம் நாட்டிலோ அன்றி அயல் நாடுகளிலோ பாதுகாப்பாக வாழ்கின்றனர். மேலும் சிலர் சுகந்திரமாக மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிவந்த அதே பேர்வழிகள் இன்று அரச படைகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். பல பெற்றோர்கள் இவர்களை அடையாளம் காட்டவும் தயாராக உள்ளனர். எனது ஆலோசனைகளை கேட்பீர்களேயானால் எதுவித பிரச்சனையோ எதிர்ப்போ இன்றி அவர்களை விடுதலை செய்ய முடியும். ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி, அத்தியட்சகர் தரத்தில் சேவையில் உள்ள அல்லது இளைப்பாறிய ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு கௌரவமான பிரiஜை ஆகிய மூன்று பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களையும் விசாரித்து அவர்களின் பிண்ணனி ,பெற்றோரின் அபிப்பிராயம் முதலியனவற்றை அறிந்து, ஆர்வத்துடன் இயக்கத்தில் செயற்படாதவர் எனக் கருதினால் சம்மந்தப்பட்டவரை விடுவிக்கலாம்.

இக்குழுக்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானிக்க வேண்டியது நீங்களே. இது உடனடியாக செய்யக்கூடியதாகும்.  இதே அடிப்படையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளையும் இக் குழுக்களின் சிபாரிசில் விடுவிக்கலாம் அல்லது பிணையில் செல்ல சிபார்சு செய்யலாம். கடும் போக்காக செயற்பட்ட சிலர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தெரிவிப்பீர்களேயானால் பிள்ளைகளை காணவில்லை எனத் தவிக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா ?இல்லையா என அறிந்து கொள்ள முடியும். , வன்னியிலும், வட கிழக்கின் வேறு பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ளவை ஒரு சிறிய சூறாவளியோ அல்லது ஓர் சிறிய பூமி நடுக்கமோ அல்ல என்பதையும் நாட்டின் 25 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் வாழ்ந்த சில இலட்சம் மக்களின் வாழ்வையும் அவர்களின் இருப்பிடங்களையும் நேரடியாக பாதித்துள்ள சம்பவங்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களும் அழிந்து நாசமாகி பல்லாயிரக்கணக்கான வீடுகளும் தரைமட்டமாகியும், இன்னும் பல மோசமாக உடைந்து மீளக்கட்ட வேண்டிய நிலையிலும் உள்ளன. பெரும் தொகையான வீடுகள் யன்னல், கதவுகள், வளைகள், தீராந்திகள் கூட இல்லாத நிலையில் உள்ளன. வன்னியைத் தொடர்ந்து மோசமாக வவுனியா மன்னார் மாவட்டங்களும் அடுத்ததாக யாழ்ப்பாண மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை பற்றி நான் அறியேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் கணக்கிடமுடியாதவை. சுனாமியே படுமோசமாக பெரிய அளவில் பாதிப்பை நம் நாட்டில் ஏற்படுத்திய சம்பவமாகும். சில மணித்தியாலங்களில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தாக்கத்தை ஐந்து ஆண்டுகளின் பின்பு கூட இன்னும் உணரக்கூடியதாக உள்ளது.

ஆனால் வன்னியின் பெரும்பகுதியை நாசமாக்கிய யுத்தம் சில மாதங்கள் நீடித்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னியில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பும் சொத்தழிவுகளும் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக பெரியதாகும். கண்ணால் பார்த்தால்தான் நம்ப முடியுமாதலால் நீங்கள் ஒரு தடவை இவ்வாறு நாசமாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மீளக் குடியேற்றப்பட்ட இவர்களின் பரிதாப நிலையை அண்மையில் சென்று பார்த்த போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கிளிநெச்சியில் வாழ்ந்து, அங்கே ஆசிரியராக கடமை ஆற்றி, நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அங்குள்ளவர்களில் அநேகர் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவு பரீட்சயமானவர்கள்.

யாழ் தேர்த்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய 10 பாராளுமன்ற தொகுதிகளையும் விட இருமடங்கு பெரியதாக உள்ள கிளிநொச்சி தொகுதியின் மூலை முடக்குகளை எல்லாம் நான் அறிவேன். கிளிநெச்சியை தனி மாவட்டமாக்கினேன். கரைச்சி கிராமசபை தலைவராகி 43 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தை அங்கு கொண்டுவந்ததும் நானே. கிளிநொச்சி பட்டணசபைத் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளேன். தயவு செய்து நான் அரசியல் இலாபம் தேடுகிறேன் என்று எண்ணவேண்டாம். அற்பணிப்புடனும் அக்கறையுடனும் நான் சேவை செய்த வன்னி மக்கள் தப்பாக வழி நடத்தப்பட்டுள்ளனர். என்னைப் போல் அவர்களுக்கு அக்கறையுடன் சேவையாற்ற எவரும் செல்லமாட்டார்கள். வன்னி மக்கள் தாங்கமுடியாத அளவு கஸ்ட்டப்பட்டுவிட்டார்கள். இனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வாந்துள்ளேன்.

அவர்கள் கவனிக்கப்படும் முறை எனக்கு திருப்தியில்லை. தயவு செய்து வன்னி மீள் குடியேற்றம் ,அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள். கலங்கிய குட்டையில் யாரையும் மீன் பிடிக்க விடாதீர்கள். சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வன்னியில் சேவை செய்யவிடுங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றேல் அவர்களின் நடவடிக்கைகளை அவதானியுங்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் நடந்தவற்றை மறந்து விடுங்கள். ஏன் எனில் பெரும் நிதி வளங்களை கையாளும் அரச ஸ்தாபனங்கள் கூட புலிகளுக்கு ?கப்பம்? கட்டி வந்துள்ளன. மீள் குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டு.இந்த ஸ்தாபனங்களால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளை ஏன் கெடுக்க வேண்டும்.

தென் இலங்கையை சேர்ந்த சில ஸ்தாபனங்களும் இவர்களுக்கு உதவ விரும்புகின்றன. இங்கு ஏற்பட்டுள்ள பெரும் அழிவுக்கு அரசை முழுமையாக குற்றம் கூறமுடியாவிட்டாலும் வடக்கு கிழக்கில் வீடில்லா மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசு தட்டிக் கழிக்க முடியாது. 50000 வீடுகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தமையை பாராட்டிக்கொண்டு இந்தப் பிரச்சனையில் மற்றைய நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் பேசினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன்படுவார்கள். ஒரே அடியாக அத்தனையையும் இழந்து ஒட்டாண்டியாக நிற்கும் மக்கள் நட்ட ஈடு கேட்கின்றமையை நியாயமற்ற கோரிக்கையாக கொள்ள முடியாது. நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழுவைஅழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்மை பயக்கும்.”

‘‘தடுத்து வைக்கப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா தனது மௌனத்தை கலைக்க வேண்டும்’’ தமிழர் தகவல் நடுவம்

tic_logo‘‘தடுத்து வைக்கப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா தனது மௌனத்தை கலைக்க வேண்டும்’’ என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தகவல் நடுவம் கோரியுள்ளது. யூன் 15ல் இவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 12 000 தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக மனித உரிமைச் சமூகத்தையும் குறிப்பாக ஸ்ரீலங்காவின் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த இளைஞர்கள் விடயத்தில் கவனத்தை குவிக்கும்படி தமிழர் தகவல் நடுவம் கோரி இருந்ததாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. யார் யாரைத் தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற தகவலை இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை. இத்தகவல்களை வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தடுத்து வருவதாகவும் தமிழர் தகவல் நடுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஸ்ரீலங்கா அரசின் இந்நடவடிக்கைகள் தடுத்து வைத்திருப்பவர்களின் உரிமைகளை மீறுவதுடன் தடுத்து வைக்கப்பட்டவர் தனது சட்டத்தரணியை தெரிவு செய்து பாரபட்சமற்ற நீதி விசாரணையை மேற்கொள்ளவும் தடையாக இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

முழுமையான அறிக்கை:

PRESS RELEASE
15 June 2010

Sri Lanka should break silence on Tamil youth in their captive

The Tamil Information Centre (TIC) has called on Sri Lankan government to break its silence over the details of 12,000 Tamil youths in its custody.

A year on, the TIC has also called on the human rights community and, in particular, the Sri Lanka diaspora and groups, to focus their efforts to insist on the government of Sri Lanka to release the details of the detainees who have been held incommunicado detention. The government, continues to deny, refuse to confirm and actively conceals information about the fate or whereabouts of the detainees. Incommunicado detention violates rights of detainees that are essential to a fair trial, such as the right of effective access to a lawyer of one’s choice.

Families are unable to visit their relatives who are detained, and  medical care are withheld as a means of putting pressure on detainees.

The Red Cross complains that it has had access only some of  these youth. In an attempt to appease the popular anger among Tamils over their treatment, the government has released a few dozens of these youth in recent months.

The ICRC is mandated by the international community, under the Geneva Conventions, to visit prisoners of war to verify whether they are being treated according to relevant international standards, has no access to these detainees.

Prolonged incommunicado detention contributes greatly to the likelihood of detainees being tortured or ill-treated. One of the effects of the current State of Emergency in Sri Lanka has been the application of longer terms of custody and thus an increased risk of torture, disappearances or extrajudicial executions.

Diverse and complementary action is required to abolish incommunicado detention and clear guidelines should be introduced to ensure that all detainees have immediate access to independent legal counsel.

The TIC has been receiving several appeals from parents and spouses who are desperately looking for the whereabouts of their children and husbands. “Please help! We want to know what happened to our dear ones. If they were killed, let the government confirm they were killed, we will console ourselves,” were their cries.

We urge you to stand with us to protect the rights of people in detention in Sri Lanka.

Tamil Information Centre
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் தமிழ் மக்களை வஞ்சித்து விட்டன. : வீ.ஆனந்தசங்கரி (தலைவர், தவிகூ)

Rehabilitation_Wanniதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் (June 7 2010) பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன.  தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நியாயப்படுத்த த.தே.கூட்டமைப்பு தவறிவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றும் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நம்பியும் சரணடைந்தவர்களாவர். அரசின் வேண்டுகோளையும் உறுதி மொழியையும்  உதாசீனம் செய்து முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையினர் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நிம்மதியாக வாழ்கின்றனர். சில அரச அதிகாரிகள், உயர்மட்ட அரசியல்வாதிகளின் உதவியுடன் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று அயல் நாடுகளிலும், பிறநாடுகளிலும் உள்@ரிலும் நிம்மதியாக வாழ, அப்பாவி மக்களின் பிள்ளைகள் இன்று தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தவர்கள் ஒரு வேளை உணவைக்கூட நிம்மதியாக உண்ண முடியாமலுள்ளனர்.  அண்மையில் விடுவிக்கப்பட்ட யாரோ ஒருவர் அநுராதபுரத்தில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டதற்காக பிடிபட்டார் என அரசு தரப்பால் கூறப்பட்ட கருத்திற்கு தகுந்த பதிலை கூட்டமைப்பினர் கொடுக்கத் தவறிவிட்டனர். ஒரு சிலரின் தவறான செயற் பாட்டிற்காக ஒட்டுமொத்த கைதிகளை தடுப்புக்காவலில் விடுதலை செய்யாமல் வைத்திருக்க முடியாதென்பதை விளக்கமாக அரசுக்கு எடுத்துக் கூற கூட்டமைப்பினர் தவறி விட்டனர். 

அன்று விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவர்களில் பலர் இன்று அரசுடன் செயற்படுகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறி சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  விவாதிக்கவில்லை? தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து சில உயர்மட்ட குழுக்களை அமைத்து அவர்களின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு ஏன் கேட்கவில்லை? படிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை விடுவிக்கும்படி ஏன் கேட்கவில்லை? அதே போல் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் நின்று கொண்டு வழக்கை எதிர்கொள்ளும் போது, தற்போது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பெற்றோரின் உறுதியுடன் வெளியில் விடும்படி ஏன் கேட்கவில்லை? இந்த யோசனைகளை நான் பல தடவைகள் முன்வைத்துள்ளேன். எத்தனை ஆயிரம் பேர் புலிகளுடன் இருந்தவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர் என்பதை அரசு அறியாதா?

அடுத்ததாக மீளக்குடியமர்ந்த வன்னி மக்களுக்கு தொழில் வசதி கருதி உதவி செய்ய முன்வருவது மிக வேடிக்கையாகும். வன்னி மக்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளுமாவர். அநேகமானேர் செலவச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இன்று அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக அரசிடம் கையேந்தி நிற்கின்றனர். உண்ண, உறங்க வசதியற்ற நிலையில் சிறு கூடாரங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு முதலில் அவசியமானது உறைவிடம். போரால் அழிவுற்ற பகுதிகளில் புலிகள் தற்போது இல்லை. ஆகவே மக்களின் வீடுளைக் கட்டிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும். இக்கடமையிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது.

போரினால் அழிவுற்ற ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், அம்மக்கள் தங்கள் விவசாயத்தின் இரு தடவை அறுவடைகள் மூலமாக தாங்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் போரினால் தங்கள் வீடுகளை இழந்த மக்கள் அரசாங்கம் தங்கள் வீடுகளைக் கடடித்தரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜனாதிபதியின் இச்செய்தியினால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது 1500 தொடக்கம் 2000 ஏக்கர் வரையிலான காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 மூடை விளைச்சல் என்று கணக்கிட்டாலும், உற்பத்திச் செலவு போக. அதிலிருந்து கிடைக்கும் இலாபம் அவர்களின் வாழ்க்கைச் செலவிற்கே போதாது.  இதே வேளை, இந்த 2000 ஏக்கர் நிலம் எத்தனைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்ன? இந்நிலையில், நெல் அறுவடையின் மூலமாக வீடுகளைக் கட்டிக்கொள்வது எவ்வாறு? இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது, சாத்தியமாகக் கூடிய விடயங்களா? இதனை ஒரு கேலிக்கூத்து என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது?

உண்மையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அதனைக் கட்டிக்கொடுக்க வெளிநாடுகளின் உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. அரசாங்கத்தின் பணத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தால் அதனைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்துலக நாடுகளிடமும் அமைப்புகளிடமும் எனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குத் தயாராகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டுக்குழு அமைக்கவிருப்பது ஆட்சேபனைக் குரியதாகும். சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக குழுவொன்றை அமைத்து இனப்பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காணவேண்டும் என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தாகும்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியமுறையை முன்மொழிந்தது சம்பந்தரா? சங்கரியரா? : ஆர் சம்பந்தனுக்கு வி ஆனந்தசங்கரி பதில்

Anandasangaree VSambanthan_R_TNAஅரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்:

இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுவாக இத்தேர்தல் சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வருவது வழக்கம். அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்க மாட்டார்களென்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன?

இலங்கைத் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்படி கூற்று கேலிக்குரியதே. கடந்த தேர்தலில் அவரது கட்சி யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 வாக்குகள் மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9% மட்டுமே. திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90% வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத்தேர்தலில் முற்று முழுதாக தமது “நாணயத்தை” இழந்து விட்டார். ஐரோப்பிய  ஒன்றியம் பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கையை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்த அளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்றல் மற்றும் C.M.E.V ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஸ்தானங்களில் 22 ஸ்தானங்களை கைப்பற்றினர்.

மேலும் மிகப்பிரபல்யமான தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை து~;ப்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசிமாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றில் கலைக்கப்பட்டிருக்க வேண்டும், அன்றேல் செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஆரம்பித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 2 ஸ்தானங்களையும் ரெலோவிற்கு 2 ஸ்தானங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் E.P.R.L.F இற்கும் தலா ஓரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஸ்தானங்களைக் கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தில் வீற்றிருந்தனர்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப் புலி இயக்கத்தினரையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியிரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தப்பாக வழிநடத்தாது இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ்மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது.

தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்தி ஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பே 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இத்தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவர். ஆனால் இப்போது “உண்மை” வெளிப்பட்டு விட்டது. கடந்த ஆறு ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமக்குரிய கடமைகளைச் செய்யாதபடியினால் கடும் ஏமாற்றத்துடன் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டவென காத்திருந்த மக்கள பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியது மட்டுமன்றி அவர்களது பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும் பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் பாதுகாக்க தவறிவிட்டனர் என்பதையும் உணருகின்றனர். செல்வாக்குமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழிகாட்டியவர்களே இப்பேரழிவுகளுக்கும், சொத்துக்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்ட ஈட்டை பெற்றுத்தருவதில் இவ் 22 பிரதிநிதிகளும் ஏன் மௌனம் சாதித்தனர்.

அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும் படி சர்வதேசமே வேண்டி நின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சி தலைவராகவோ அன்றேல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவோ இருந்தும், வடகிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்து விட்டார். கடைசி நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தப்பாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெல்ல வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் 65119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

திரு. சம்பந்தன் அவர்கள் கூறியது போல தாம் சரத் பொன் சேகாவிற்கு பெற்றுக் கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயமென்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்து கொண்ட முறையே. புத்தி ஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் சுதந்திர ஊடகவியாலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். சுருங்கக் கூறின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உல்லாசப் பயணத்திலும் சிலர் தமது பராளுமன்ற பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை இனப்பிரச்சினைகளை தெரியப்படுத்துவதாக எனக் கூறிக்கொண்டு சிலர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ச்சியுற வைப்பதில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் இன்னும் சிலர் சர்வதேச சமூகத்தை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இயங்க வைக்க போதியளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை காலத்தையும் செலவிட்டனர்.

காயமுற்ற விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும், சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டதையும் மக்களுக்கு முற்றுமுழுதாக மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள கொண்டு வரப்பட்டபோதும் யுத்த காலத்தில் இப்பேர்பட்ட இழப்புக்கள் தவிர்க்க முடியாதென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகின்றது.

இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து என்னை ஓரங்கட்ட மாபெரும் முயற்சி செய்தனர் என்பதை யாரும் மறுத்திட முடியாது. பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்பை கொண்டு திட்டமிட்டு என்னை ஏன் ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன தீங்கு செய்தேன்? நான் எவருக்கும் எப்போதும் எந்த தீங்கும் செய்யாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையாற்றி வந்தேன்.

நான் சொல்லக் கூடாத விடயமாக இருந்தாலும் தேர்தலில் எனக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு தேசிய இழப்பு மட்டுமன்றி, இதற்கு பொறுப்பானவர்களும் விரைவில் முழுநாடும் மக்களும்  உணர்வதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் கைவிடப்பட்ட அநாதைகள் என்பதையும் உணர்வார்கள். எனது அறிவுரைகளுக்கு தமிழ் மக்கள் செவிசாய்த்திருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும். சில சுயநலமிக்க தலைவர்கள் என் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவோ, அதற்கேற்ப செயற்படவோ விரும்பவில்லை. மாறாக ஒரு மனிதனின் பொறுமையின் எல்லைக்கப்பால் சென்று விமர்சனங்களையும், வீண்பழிகளையும் என் மீது வாரி இறைத்தனர். எம் நாட்டில் அரசியல் விரோதிகளை அவமதிக்கும் ‘துரோகி’ என்ற சிறப்புப்பட்டத்தையும் தந்து மகிழ்ந்தனர்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும் முன்வைத்ததும் நானே. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிகமுக்கியமான இரு வேட்பாளர்களிடம் தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச்சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்த பின்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதான இந்திய அரசியல் முறையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக இருந்தபோதும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இது பற்றி பேசியுள்ளேன்.

அதுமட்டுமன்றி பலமட்டங்களிலும் உள்ள பலருடனும் இது பற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமயப் பெரியவர்கள், வணக்கத்திற்குரிய ஆண்டகைகள், மகா நாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறையை நான் முன்வைத்தமைக்கு முதற்காரணம் ‘சமஸ்டி’ ‘ஒற்றை ஆட்சி’ ஆகிய சொற் பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும். இரண்டாவதாக பாக்கு நீரினைக்கு அப்பால் உள்ள 80,000,000 தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.

பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடு இருந்த போதும் மிக மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் அந்நாட்டின் ஐனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியமக்கள் 2வீதமாக இருந்தும் சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியராவார். தவிரவும் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும் இந்து மதமும் எமது கலாச்சாரம் பண்பாடு அத்தனையும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னும் ஒரு முக்கிய விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ் நாட்டில் அக் கோஸம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத்தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.

இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு  எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இது சம்பந்தமாக ஐனாதிபதி அவர்கள் எதுவித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஐனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும் கூட ஐனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். ஐனாதிபதித் தேர்தலின் பின்பே ஐனாதிபதி இதை கூறினார் என்பது திரு சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு. திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறு எவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஓர் தீர்வைக் காண்பதே பிரதானமானது. புத்தி ஐPவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படி இருப்பின் அதற்குரிய காரணம் என்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்ட வேண்டும் என சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டும் என்றும் எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வும், துரோகி என எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழி எனக் கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ் பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வை அடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை எற்படுத்தும். எவருக்கேனும் என் மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டு கால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்க விடக் கூடாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  இந் நாட்டில் இன்றுள்ள மிகச்சிறிய அளவிலுள்ள ஐனநாயக தமிழ் அரசியல் வாதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். எனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு  விடுதலைப் புலிகளால், மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி  அவர்கள் மக்களைக் கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ வெறுப்படையவோ தூண்டுவதில்லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுத பாணிகள் ஆக்குவதில்லை. தம் மக்கள் மீது வரி வசூலிப்பதும் இல்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஐனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்துதிரியவே. யாராவது பல்கலைக்கழக மாணவர்களை அல்லது புத்திஐPவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன்.

இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ் மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்?; கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும் அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டிபோட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராம சபையின் தலைவராக 1965ம் ஆண்டும் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டும் 1977ம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு. சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.

“ஐனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்” என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஐனநாயக வாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு  இனப்பிரச்pசனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஐனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”;.

இலங்கை சுதந்திரம் அடைந்து 2002ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிய விழாவில் ஐனாதிபதியாக தெரிவானதன் பின் முதல் அவர் தடவையாக அவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் தன் உரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் மொராகாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே, அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்தவெறி பிடித்த புலிகளின் கோரிக்கைக்கு இணங்க நாம் தயாராக இல்லை. ஆனால், நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்”;. ரூபவாகினியிலும் வேறு தொலைக்காட்சிகளிலும் இவ் உரை ஒளிபரப்பப்பட்டது.

மேலும், ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கம் அளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வேளையில் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஐh, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் பல்லாயிரக்கனக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான மக்கள் சொத்தும் பொதுச் சொத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஐPவிகளும், அரசியல் ஆய்வாளர்களும் சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப் பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரே வழி என, எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர்.

கனடாவில் இருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழ,p என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்தமை பச்சைத் துரோகமான செயலாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? ஓர் தனி மனிதனை வேட்டையாட எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி யார்? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்தசில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதேல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்த பட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து தமிழருக்கு ஒரு விரோதியை அடையாளம் கண்டுள்ளனர். அது நானே. எல்லா நேரமும் மக்களை ஏமாற்றமுடியாது. விரைவில் ஒரு நாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரும்.

குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச் சென்ற ஒரு பல்கலைக்கழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்போது ஆட்சேபித்தவன் நானே. பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஐPவன் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதையும் எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசிற்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயகத் தலைவருக்கு தென்னலங்கையிலுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும் எனது கடமையை எனது நாட்டிற்கும் இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறு  வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகிறேன் என அப்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.

பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தைப் போக்கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான இந்திய அரசியல் அமைப்பை ஏற்கவைக்குமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி 

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக வி ஆனந்தசங்கரி

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.                            

இனப்பிரச்சினைக்கான தீர்வு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.

“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.  அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்.”

நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும் சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான  எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன்.  நன்றி.

அன்புடன்
வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி

நாடுகடந்த அரசுத் தேர்தலும் அதன் பிரித்தானியத் தேர்தல் ஆணையமும்! நடந்தது என்ன?

Vijayasingam_TGTEMay_02_Election_TGTE._._._._._.
இவ்வறிக்கை நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரித்தானிய பிரதிநிதித்துவத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய உள்விடயங்களை ஆராய்கின்றது. தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக் கூறி லண்டனுக்கு வெளியே நிராகரிக்கப்பட்ட தேர்தல் நிலையங்களின் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இவ்வறிக்கையின் கீழ் கையொப்பம் இட்டு தேர்தல் ஆணையகத்திற்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மே 31ல் வெளியான இவ்வறிக்கையின் இலத்திரனியல் பிரதி தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்ட்டு இருந்து. அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
._._._._._.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான தேர்தலை முழுமையாக ரத்துசெய்த நிலையானது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் எந்த ஒரு நிர்வாகமும் செய்ய துணியாத செயல், ஏன் எனில் ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் அதை உறுதி செய்யப்படாமலும் அங்கு கடமையாற்றிய அதிகாரிகளை மற்றும் வாக்களித்த மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது வெளியே வாழும் அனைத்து தமிழ் மனங்களையும் நிறையவே புண்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு படி மேலாக நமது ஊடகமும் என்னவென்று விசாரிக்காமல் வெளிப்படையாக எம்மை தாக்கியது பெரும் வேதனையளிக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு குழப்ப நிலையில் நாம் ஆணையகத்தையும் அதற்கு பொறுப்பானவர்களையும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களையும் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், நம்நிலையை புரியவைக்க முற்பட்ட பொழுதும் அதற்கு இன்றுவரை அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை. ஆகையால் இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் பணிபுரிந்த அனைத்து பொறுப்பானவர்களும் இணைந்து பேசி எடுத்த முடிவாகத்தான் இந்த அறிக்கையை எழுதுகின்றோம். மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எமக்குள் உள்ள நியாயங்களையும் கேள்விகளையும் மக்களாகிய உங்கள் முன் வைக்கின்றோம்.

எமது தேசத்தின் விடியலுக்காக இந்தத் தேர்தலில் நம்முடன் பணியாற்றியவர்களையும் வாக்களித்த மக்களையும் தேர்தல் ஆணையகமும் தேர்தலை ஒழங்கு செய்தவர்களும் ஒட்டுமொத்தமாக அவமதித்து புண்படுத்திய நிலையிலும் நாம் எல்லோரும் உண்மையாக உழைத்த உங்கள் அனைவர்க்கும் நன்றி கூறுகின்றோம் தொடர்ந்தும் எம்மக்களுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாய் நிற்போம்.

பிரித்தானியாவில் லண்டனைத் தவிர்ந்த வெளி மாவட்டத்தில் உள்ள மில்ரன் கீன்ஸ் (Milton Keynes) வாக்களிப்பு நிலையத்தை நோக்குவோம் – S.ஜெயாவின் வாக்குமுலம்:
மில்ரன் கீன்ஸ் தேர்தல் நிலையத்திற்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கலான வாக்குப் பெட்டி மே 1ம் திகதி இரவு 9 மணியளவில் S.ஜெயா ஆகிய எனது வீட்டில் கொண்டுவந்து தந்தார்கள். நான் லண்டனில் உள்ள தேர்தல் ஆணையகத்திற்கு மில்றன் கீன்ஸ் வாக்குச் சாவடி தேர்தல் இணைப்பாளராக பணியாற்றினேன். தேர்தல் ஆணையகத்தின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வாக்களிப்பு நிலையத்தில் நாட்டுப்பற்றும், அனுபவமும், தராதரமும் மிக்க பலரின் ஆதரவுடன் பணியாற்றினோம். மீல்ரன்கீன்ஸில் உள்ள மக்கள் தொகைக்குகேற்ப உத்தியோகத்தர்கள் வேலைசெய்தார்கள். தேர்தல் சட்ட நேரப்படி காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு ஜனநாயகமுறையில் பிரித்தானிய ஆங்கிலேயர் (observers) முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இவ் அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே நடைபெற்றது.

இரவு 9மணிரை வாக்குப் பதிவு நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் லண்டன் தேர்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு மூடும்படி திடீரெனக் கட்டளையிட்டார்கள். வாக்காளர்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கட்டளையிட்டபடி 6 மணிக்கு மூட முடியவில்லை என்று என்னால் அறிவிக்கப்பட்டது. மில்ரன் கீன்ஸ் வாக்கு நிலையத்தை உடன் மூடும்படி மாலை 6மணியில் இருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் லண்டன் ஆணையகத்தில் இருந்து வந்து கொண்டேயிருந்தது.

இறுதியாக மாலை 7மணியளவில் உங்கள் வாக்கு நிலையம் உடனடியாக மூடாவிட்டால் மில்ரன்கீன்ஸ் வாக்கு நிலையம் நிராகரிக்கப்படும் என அறிவித்தல் வந்ததது. இவ்வளவு நேரமும் வாக்களித்த 1500க்கும் மேற்பட்ட வாக்குரிமைகள் வீணாக்கப்படும் என்ற ஒரே நோக்கம் கொண்டு இரவு 8.05 மணிக்கு வாக்குச் சாவடி முறைப்படி மூடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்ட்ட “தேர்தல் சாவடி உத்தியோகத்தருக்கான கைப்புத்தகக் குறிப்பில்” 16ம் பக்கத்தில் மூன்றாம் பக்கத்தில் 2010 மே 2ம் திகதி காலை 8 மணிக்கு முன்பும் இரவு 9 மணிக்குப் பின்பும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சீட்டு விநியோகிக்கூடாது என்று குறிக்கப்பட்டது என்பதை அவதானிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் அதைச் சுட்டிக்காட்டி 55 நிமிடம் முன்னராக மூடிவிட்டீர்கள், மக்கள் வந்து திரும்பிப் போகின்றார்கள் என ஆதங்கப்பட்டார்.

இரவு 9 மணி 10 நிமிடமளவில் வாக்குச் சாவடியை விட்டு நாம் வெளியேறும் போது தேர்தல் சட்டமுறைப்படி வாக்கு நிலைய அதிகாரியிடம் வாக்குப்பெட்டியும் அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் முறையே அனைத்தும் சரிவர இருப்பதை மீளவும் இந்த ஆங்கிலேயரால் உறுதி செய்யப்பட்டபின்னர் வாக்குப்பெட்டி எடுக்க வருபவரிடம் தனது முகவரியைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். வாக்குப் பெட்டி எடுக்க வருபவர்கள் இரவு 9.30 மணிக்கு எடுக்க வருவதாகக் கூறினார்கள், பின்னர் 3ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு வருவதாகக் கூறி காலை 6.30 மணிக்குத் தான் வந்து எடுத்துச் சென்றார்கள். இதில் மில்ரன் கீன்ஸ், நோத்கம்ரன், லூட்டன் வெட்போட், ஐஸ்பரி நகரங்களில் உள்ள மக்களும் இங்கு வாக்களித்தனர்.

3ம் திகதி செய்தியை பார்த்தபோது மில்றன் கீன்ஸ், கொவன்றி நிலைய வாக்குப்பெட்டிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் 17 நிலைய வாக்குப் பெட்டிகளும் நிராகரிக்கப்படுகின்றன என்றும் தொலைக்காட்சியில் மில்ரன் கீன்ஸ் (01) வாக்குப்பெட்டியை தொடர்ந்து காட்டிக் கொண்டே கட்டுக்கட்டாக எடுப்பதையும் அதை ஒரு சிலர் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் காட்டினார்கள்.

அவதானித்தவைகள்:
1. வாக்குப் பெட்டி கவிட்டுக் கொட்டப்படாமல் பக்கவாட்டில் சரிக்கப்பட்டது. அப்போது முன் கூட்டியே வைக்கப்ப்டது போல் இரு வாக்குச் சீட்டு கட்டுக்களை ஒருவர் எடுத்து பிரித்தானியரிடம் கொடுக்க அவர் பார்வையிடுகிறார்.
2. அவர்கள் எடுத்துக் காண்பித்த வாக்குச் சீட்டுக் கட்டு எக் காராணம் கொண்டும் வாக்குப்பபெட்டியின் துவாரத்துக்கூடாக சுயாதீனமாக திணிக்கக் கூடிய அளவிற்கு அதன் துவாரம் பெரிதல்ல.
3. வாக்குப் பெட்டியை வந்து எடுத்தவர்களிடமே முழு ஆவணங்களும், மிகுதி வாக்குச் சீட்டும், வாக்குப் பெட்டியின் திறப்பும் கையளிக்கப்பட்டது.
4. இதற்கு முன்னர் வேறு இரு வாக்கு சாவடிகளுக்காண வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டது. இவற்றிலும் வாக்குச் சீட்டு கட்டுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது ஆனால் இது வரை அதுபற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளிக் கொணராது திட்டமிட்டு எமக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
5. வாக்கு நிலையத்ததை பார்வையிட்ட தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆங்கிலேயர், எமது வாக்கு நிலையத்தை அவதானித்து விட்டு முறையாகவும், திருப்தியாகவும் நடைபெறுகின்றது என்று தெரிவித்து கையொப்பம் இட்டுச் சென்றார், பார்வையிட்ட ஆங்கிலேயர் Michel Chadwwick ஆவார்.
6. எந்த முறைகேடுகளும் எமது வாக்குச் சாவடியில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க எம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.

கொவன்றி (Coventry)

எமது வாக்குச் சாவடியில் அனைத்தும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே சிறப்பாக நடைப்பெற்றுது. அனைத்து விடயங்கலிலும் தேர்தல் ஆணையகம் நேரடியாகவே எம்மை வழி நடத்தினர்.

இருப்பினும் எமக்கு கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் முடிவடையும் தறுவாயில் தேர்தல் ஆணையகத்திற்குத் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பேர்மிங்காமிற்கு (Birmingham) மேலதிகமான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் பணித்தனர்.

நாங்கள் போர்மிங்காம் சென்று கேட்டபோது அங்கு பணியில் இருந்த பொறுப்பாளர் யாருடனோ தொடர்பு கொண்டுவிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு தொடர்பு கொண்டதாகவும் உங்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினார். நாங்கள் யார் கூறினார் என்று கேட்டதற்கு திரு குணாளன் என்பவர் உங்களையும் உள்ளே அனுமதிக்கவும் வேண்டாம் ஒரு வாக்குச்சீட்டும் கொடுக்கவும் வேண்டாம் என்றும் கூறியதாக்ககூறி மீண்டும் நிராகரித்தனர். தர மறுத்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம், மேலும் போதிய அளவு வாக்குச்சீட்டு எமக்கு தராதது தேர்தல் ஆணையகத்தின் தவறு. மேலும் எந்த குளறுபடியும் எமது வாக்கு சாவடியில் நடைபெறவில்லை என்பதை நாம் உறுதிபடுத்துவோம்.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பட்சத்தில் போட்டிக்கு நின்ற வேட்பாளர்களை அழைத்து அவர்கள் முன்நிலையில் உறுதிசெய்திருக்க வேண்டும் அத்துடன் பெட்டிகள் திறக்கப்படும் பொழுது பாதுகாப்புப் பட்டிகளின் இலக்கங்கள் அனைத்தும் சரிபார்த்திருக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைபெறவில்லை, வேட்பாளர்களிடம் இது பற்றிய எந்த ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகள் நடந்தது எனும் பட்சத்தில் வாக்குநிலையத்தில் பணியாற்றிய தேர்தல் நிலைய அதிகாரிகளினதும், அவதானிப்பாளர்களினதும் கருத்துக்கள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த ஒரு கருத்துக்களும் கேட்கபடவில்லை.

கருத்துகணிப்பு வாக்கெடுப்பிற்கு (வட்டுக் கோட்டை தீர்மான) முன் தேர்தல் சம்பந்தமான அனைத்து பயிற்சி முறைககளும் பயிற்சிவிக்கப்பட்டது போல் இங்கு எதுவும் நடக்கவில்லை, மாறாக நாடுகடந்த தமிழீழ தேர்தல் மக்களின் ஆணை பெறவேண்டும் என்ற இலட்சியக் கூறிக்கோளுக்கு மாறாக ஓரிருவரின் அனுசரனைக்காகவும், அவர்களின் சுயநலத்துக்காகவும் நடைபெற்றதாக ஏன் மனசாட்சியுள்ள மனிதர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.

இந்த தேர்தல் குழறுபடிகளை திட்டமிட்டு நடாத்தியது போலவும், நீண்ட நெடுங்காலமாக மக்களுக்குப் பணிசெய்தவர்களை வீணே அதற்குள் இழுத்து அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்றும் எமது சமூகத்திற்கு முழு மனதுடன் பாடுபடுபவர்களுக்கு இப்படியொரு களங்கத்தை திட்டமிட்டே ஏற்படுத்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி எமது இனத்துக்குள் எந்த ஒரு மக்கள் கட்டமைப்பும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் எமக்குள் ஊடுருவி எம்மால் எம்மையே அழிக்கும் புதிய வழிக்கு இந்தத் தேர்தல் துணை போகியுள்ளது.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாது நாடு கடந்த அரசின் முதல் அமர்வு நாடாத்த ஒழுங்கு செய்வது எந்த ஒரு ஜெனநாயக மரபிற்கும் உட்பட்டதா என அனுபவமிக்க தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்துவாரா?

மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
எது எப்படியிருந்த போதிலும் தாயகதேச நேசிப்பு மிகுதியால் பாணியாற்றியவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் ஆணையகம் தந்த பிரிசு அவமானமே தவிர வேறொன்றும் இல்லை.

அனுபவம் மிக்க தேர்தல் ஆணையாளர் திரு விஜயசிங்கம் தலைமையில் இருந்த இந்த தேர்தல் ஆணையம் வெளிமாவட்டத்தின் 17 வாக்கு நிலையங்களை நிராகரித்த நிலையானது முன்கூட்டிய திட்டமிட்ட சதியாக இருக்கும் என்று நாம் ஏன் கருதக்கூடாது?

மேற்கூறப்பட்டவைகளை அவதானித்து பார்போமானால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை, ஆனால் நிச்சயமாக 17 வாக்கு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களோ அல்லது வாக்காள பொதுமக்களோ இந்த தேர்தலின் முறைகேடுக்கு காரணம் இல்லை. இதற்கு காரணம்
1) தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும்.
2) வாக்கு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்து செல்லும் வழியிலோ அல்லது எண்ணும் நிலையத்திலோ மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என்று நாம் நம்புகின்றோம்.

நமதும் மற்றும் வாக்காள பெருமக்களின் கோரிக்கை:
தேர்தல் ஆணையகத்துக்கு பொறுப்பானவர்களும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும், எமது மக்களிடமும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களிடமும் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும். உடனடியாக மறுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

ராஜபக்ச வருகையை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

vaiko.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்த்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.

போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்தவர் ராஜபக்ச. அவர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.

மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்ச  நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐநா சபை அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்ச, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பௌத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை ஜனாதிபதி தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி.

எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.

வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், ராஜபக்சவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.

ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, ராஜபக்ச  தில்லி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே, காலை 10 மணி அளவில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கனடா: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

Viyoogamமே 18 2009ல் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி யுத்ததத்தில் நிகழ்ந்த மிக மோசமான மனித அவலமும் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட இலங்கை அரசு தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லாததுமான அரசியல் சூழல் இலங்கை அரசுக்கு எதிரான தொர்ச்சியான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் எதிரொலியாக நீண்ட அரசியல் பின்னணியை உடையவர்களின் கூட்டு முயற்சியாக மே 18 இயக்கம் கடந்த ஆண்டு உருவானது தெரிந்ததே.

மே 22ல் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தினை நினைவுகொள்ளும் நிகழ்வு ஒன்றை மே 18 இயக்கம் கனடாவில் ஏற்பாடு செய்துள்ளது. ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்தரையாடலும்’ என்ற தலைப்பில் இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘நடந்து முடிந்த இனப்படுகொலைகளில் இருந்து மீள் எழுச்சி கொள்ளும் நாளாக மே 18யை நினைவுகூருவோம்’ என மே 18 இயக்கம் தனது அழைப்பிதழில் கேட்டுக் கொண்டு உள்ளது. ( மேலதிக தகவல்களுக்கு: May18_Movement_Discussion )

மே 18 இயக்கம் தனது அரசியல் கொள்கை இதழாக வியூகம் சஞ்சிகையை வெளியிட்டு வருவதும் அதன் வெளியீட்டு நிகழ்வு கனடா லண்டன் பாரிஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

தவிகூ தலைவரின் உள்ளக் குமுறல் – பொதுத்தேர்தல் சம்பந்தமான தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரியின் அறிக்கை

TULF Leader V AnandasangareeSambanthan_R_TNAமுகவுரை

தனது தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்திருக்கும் வாக்காளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நியாயபூர்வமான காரணங்களை கண்டுபிடிக்க அங்கலாய்க்கும் ஓர் வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல, தனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் அரை நூற்றாண்டுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதே இது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்;டமைப்பு வேட்பாளர்களும் சில அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த வேட்பாளர்களும் செய்த பொய்யானதும், குரோதமானதுமான பிரச்சாரத்தினால் வாக்காளர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயங்களை நீக்கும் விபரக் குறிப்பாகவே இது வெளிவருகிறது. சில ஆசனங்களை எடுப்பதற்காக அல்லது வேறு கட்சியிலும் பார்க்க கூடுதலான ஆசனங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை சுயநலத்துடனும், புத்திசாதுரியமற்ற முறையிலும் செயற்படாது, புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செயற்பட்டிருந்தால் இன்று நிலைமை முற்று முழுதும் வேறாக அமைந்திருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு அக்கறையும் என்னை தோற்கடிப்பதிலேயே இருக்க முழுப்பிரச்சாரத்தோடு வெட்கப்படக்கூடிய வகையில் பணத்தையும், மதுவையும் தாராளமாக வழங்கி தாம் நினைத்ததை திருப்தியாக சாதித்தனர். எனது 50 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர்கொண்ட 15 இற்கு மேற்பட்டஉள்ளுர் பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் பணமோ, பானமோ தலைகாட்டவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தோற்கடிக்கவென பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து பிரச்சாரத்துக்கு செலவிட வைத்ததாக அதன் வேட்பாளர்கள் வெட்கமின்றி கூறி கண்ணியமற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக துண்டு பிரசுரங்களும் விநியோகித்திருந்தனர். அரசு சார்பில் போட்டியிட்டவர்களுக்கு அசாதாரணமாக பலவித உதவிகளை செய்தமை பற்றி அறிந்திருந்தும் பொது மக்களால் இதுபற்றி விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் அநேகர் புதுமுகங்கள். அநேகர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும் பல்வேறு பின்னணியை கொண்டவர்களாக இருந்ததோடு பண பலம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் என்னுடன் பல ஆண்டுகள் சகபாடியாகவும், நான் தலைமை தாங்கும் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக திரு. சம்பந்தன் அவர்கள் என் நேர்மை பற்றியும், நாணயம் பற்றியும் நன்கு அறிவார். ஆனாலும் அவர் என் பக்கம் பேசமாட்டார். ஏனெனில் அவரும் திரு.அ. விநாயகமூர்த்தி அவர்களுமே நான் ஆனையிறவு முகாமை அரச படைகளிடம் மீள் அளிக்க உதவுமாறு புலிகளிடம் கோழ் சொன்னவர்களாவர். இவர்களிடம் பெற்றுக்கொண்டதை வைத்தே விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக தமது ஊடகங்கள் மூலமும், தமது கட்டுப்பாட்டிலிருந்த பல்வேறு நாட்டு ஊடகங்கள் மூலமும் எனக்கு எதிரான விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது.  புலம் பெயர் தமிழ் மக்களையும் எனக்கு விரோதமாக செயற்பட வைத்து சரியான முறையில் மூளை சலவை செய்யப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் நான் துரோக செயலில் ஈடுபட்டதாகவே நம்புகின்றனர். மறக்கவும் தயாராக இல்லை. விடுதலைப் புலிகளுடன் அவர்களின் பினாமிகளாகவும் செயற்பட்ட கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் என்னை வேட்டையாட தீவிரமாக அலையும் போது கொஞ்சம் புத்திமதிகளை சொல்லியிருக்கலாம். 2004ம் ஆண்டு தோதலின் போது இத்துடன் சேர்த்து நான் இந்தியாவில் சேலைக் கடையும், வெள்ளவத்தையில் மதுவகை வி;ற்கும் கடையை நடத்துவதாகவும் நான் தேர்தலில் இருந்து வாபஸ் ஆகிவிட்டேன் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில் எந்தவொரு நாட்டிலும் ஓர் பாதையோர கடைகூட இல்லை.

இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வாழும் போது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவசியமா? என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆனால் மிகவும் அவமதிக்கப்பட்டு, மனம் நொந்திருக்கும் போது என் பெயருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்க வேண்டிய கடமை எனக்கு உண்டல்லவா. ஏனக்கு உதவ சில பத்திரிகைகள் விரும்புவதில்லை. எனக்கு வேறு வழியின்றி நான் இதனை சிறு புத்தக வடிவில் பிரசுரிக்க விரும்புகின்றேன். ஓர் பத்திரிகை எவரேனும் ஒருவரை புகழ்வதையோ தலைமை பதவிக்கு உயர்;த்துவதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. அனால் திட்டமிட்டு பழிவாங்கும் செயற்பாடுகள் வரவேற்கதக்கதல்ல. அது பத்திரிகா தர்மமும் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு ஓர் புனிதமான கடமை உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்குள் மூன்று வௌ;வேறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் செயற்பட்டு வந்திருக்கின்றன. முதலாவது எனது தலைமையிலும். 2வது திரு. சம்பந்தன் தலைமையில் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச்செல்வனால் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), விடுதலைப் புலிகள். இவர்கள் இணைந்திருக்கும் புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றோ விடுதலைப் புலிகள், அ.இ.த.கா, டெலோ வின் ஒரு பகுதி ஆகியவை வெளியேற்றப்பட்ட பின் தெரிவாகி இருக்கின்ற 14 பேரில் 5 பேர் மட்டுமே தமிழரசு கட்சியையும் இருவர் டெலோ வையும், இருவர் ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) ஐ தவிர எஞ்சியுள்ள ஏழு பேர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பதையும் எப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டனர் என்பதையும் இவர்களை உள்ளடக்கிய மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் ஏமாற்றமடைந்திருக்கும் மக்கள் கேட்கின்றனர்.

வீ. ஆனந்தசங்கரி                           
தலைவர்- த.வி.கூ
57/48 ஸ்டான்லி வீதி
யாழ்ப்பாணம்
10-05-2010                                                                                 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை

“தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வடக்கு கிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என்று”, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள் எனக்கு ஆச்சரியத்தை தராது போனாலும் நல்லதோர் நகைச்சுவையாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இவ் ஆர்வத்தை காட்டியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். அவரிலும் சிரேஷ்ட அரசியல்வாதி நான். தேர்தலுக்கு முன்பு பத்து அம்சங்கள் கொண்ட பிரேரணையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செயற்படலாமெனவும் புதிய பிரேரணைகள் இருப்பின் சேர்க்கலாம் என்றும் இருப்பவையை திருத்தலாம் எனவும் என்னால் விடப்பட்ட கோரிக்கையை பொருட்படுத்தாது, என்னையும் எமது கட்சியையும் இல்லாததும் பொல்லாததுமான பல குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை குழப்பமடையச் செய்து வழமைபோல் தேர்தலில் தம் வெற்றியையே மையமாக கொண்டு இயங்கிவிட்டு, இன்று ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையே. திரு. இரா.சம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டுடன் விடுதலைப் புலிகளிடம் நியமனம் பெற்றே வரலாறு காணாத மோசடி மூலம் 22 உறுப்பினர்களை வென்றெடுத்து தமிழ் மக்களின் அழிவுக்கு வழிகோலியது. நியமனம் வழங்கியதே மறைந்த விடுதலைப்புலித் தலைவர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களே. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு திரு. பிரபாகரன் உட்பட பல முன்னணி தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தபின் உடனே தமது பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நானும் பாராட்டி திரு. இரா சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றிருப்பேன். இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் இறந்தமைக்கு தார்மீக பொறுப்பேற்று தம் பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துறந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ தமக்கு ஆறு ஆண்டுகள் நிலைத்திருந்த பதவியை தந்த விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனும் அவர்களின் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தமைக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அவர்கள் கொல்லப்பட்ட முறையை எதுவிதத்திலும் கண்டிக்கவும் இல்லை. அதற்கு மாறாக மறுநாளே தம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தம் அணியில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை தூக்கி வீசிவிட்டு முன்பு எதுவித கட்சிப்பணிகளிலும் ஈடுபடாத புதிய தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என நாமம் சூட்டி தேர்தலில் போட்டியிட வைத்தனர். தமக்கு பெரும் வெற்றி கிட்டியதாகவும் மக்கள் தம்மை ஏகபிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து விட்டனர் என்று கூறிக்கொண்டும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டும் மற்றவர்களுக்கு ஒன்று சேர வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்தது பற்றியோ இன்று அந்த கூட்டில் அங்கம் வகிப்பவர்கள் யார் என்பது பற்றியோ, பாராளுமன்ற உறுப்பினர்களாக எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவானார்கள் என்பது பற்றியோ தெரிவிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட 284026 வாக்குகளில் 90 வீதம் அதாவது 257329 வாக்குகள் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தேறிய பொதுத் தேர்தலில் கிடைத்தது 43.85 வீதம் மட்டுமே. அதாவது 65119 வாக்குகள். மொத்தமாக உள்ள வாக்களார்களின் எண்ணிக்கை 721359 ஆகும். இதில் வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள் 18 வீதத்தினர் மட்டுமே என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 9 வீதமே இந் நிலையில் தமக்கு தமிழ் மக்கள் ஆணை தந்துள்ளார்கள் என்று திரு. இரா சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஜனாதிபதி தேர்தலில் திரு. சரத்பொன்சேகாவிற்கு கிடைத்த வாக்குகள் தம் கோரிக்கைக்கு அமையவே கிடைத்ததென அவர் கூறியதை நான் மறுத்திருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கூற்று உண்மையானால் அவருக்கு கிடைத்த 113877 வாக்குகள் மூன்று மாதத்தில் எவ்வாறு குறைந்து 65119 ஆகியது?

தேர்தலின் போது அரசு சார்பு வேட்பாளர்கள் என்னுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மறைத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை அரசின் எடுபிடியாக எடுத்துக்காட்டி பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தோற்கடிக்க ஏவிவட்டதாக பிரச்சாரம் செய்தார்கள் நா கூசாமல் பொய்யையும் புரட்டுகளையும் அவிட்டு விட்டனர்.  என்னைப்பற்றிய எதுவித செய்தியையும் பிரசுரிக்காது சில பத்திரிகைகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்துள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பற்றிய உண்மைகள் பலவற்றை மூடிமறைத்து எந்தளவில் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதற்கு பல மடங்கு மேலாக பிரமாதப்படுத்தி பிரச்சாரம் செய்து பத்திரிகை தர்மத்தையே ஊடகவியலாளர் சிலர் கொலை செய்தனர். திரு. சம்பந்தன் பத்திரிகைகளை பாராட்டி தம் வெற்றிக்காக உழைத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது ஒன்றே போதும் நான் கூறுவதில் நியாயம் உண்டு என்பதை நிரூபிக்க.  ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இதையே செய்து எம் மக்களின் பேரழிவுக்கு காரணமாக பத்திரிகைகள் சில இருந்ததும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அவரவர் கடமையை கூட செய்ய விடாது அவர்களையும் கெடுத்தனர். நடந்தேறிய அக்கிரமங்களை, அடாவடித்தனங்களைகூட  கண்டிக்காது அவற்றை பாராட்டி புகழ்ந்தனர். அத்தகைய பெரும் பிரச்சாரத்துக்கு மத்தியில் எனது கண்டனங்கள் ,ஆலோசனைகள் புத்திமதிகள் மற்றும் பலன்மிக்க கருத்துக்கள் எதுவும் எடுபடவில்லை. எனது விளக்கங்கள் அத்தனையும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. எனக்கு துரோகி பட்டம் சூட்டவே பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டனர். 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் மிக முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியாகிய என்னை மக்கள் மத்தியில் அரசின் ஏவலாளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பத்திரிகைகளின் உதவியுடன் சித்தரித்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர். என்மீதுள்ள கோபத்தில் வஞ்சம் தீர்க்க சில பத்திரிகைகளின் நடவடிக்கையானது அப்பாவி மக்களுக்கே பாதகமாக முடிந்தது மட்டுமல்ல விடுதலைப் புலிகளினதும் தமிழினத்தினதும் அழிவுக்கே  வழிகோலியது. பத்திரிகைகள் எதுவும் என்மீது சீற்றம் கொள்வதில் எதுவித நியாயமும் இல்லை. என்னை அர்ப்பணித்து 50 ஆண்டுகாலமாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.

நான் தமிழுக்கு செய்த துரோகம் என்ன? மக்களுக்கு நான் செய்த குற்றம்தான் என்ன? எம் மக்களின் நிலையை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து கற்பனையில் விமர்சிக்காமல் வன்னிப் பகுதி மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். கால் இல்லை, கை இல்லை, கண் இல்லை, கணவன் இல்லை,மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை, பெற்ற தாய் இல்லை, வளர்த்த தந்தை இல்லை, அண்ணன் இல்லை, தம்பி இல்லை,அக்கா இல்லை, தங்கை இல்லை, மாமா இல்லை,மாமி இல்லை இப்படி எத்தனை இல்லை என்று கடுகளவேனும் சிந்தித்தார்களா நம் மக்கள். எல்லாம் உண்டு என்று கூறுபவர்கள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள். நாம் எதை இழந்தோம் கவலைப்பட என்று கேட்பவர்களும் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை தாமே கேட்க வேண்டும். தாம் கடந்த ஆறு ஆண்டுகள் நடந்துகொண்ட முறை சரிதானா என்று? வன்னி மக்களின் இன்றைய அவல நிலைக்கு அவர்கள் பொறுப்பில்லையா? அவர்கள் எதை பறிகொடுத்தனர் கவலைப்பட. தேசியம், சுயநிர்ணயம் போன்ற மூல மந்திரங்கள் இருக்கும் வரை அவர்களை யாரும் ஏதும் செய்ய முடியாது. நம் மக்கள் தம் அடையாளத்தை இழந்து இனப்பெருக்கம் குறைந்து ஆயிரக்கணக்கில் வெளிநாடு சென்றும் மீண்டும் ஒருமுறையல்ல பல முறை உயிரிழப்பு நேர்ந்தாலும் கூட கடைசி தமிழன் இருக்கும் வரை இத் தாரக மந்திரம் வேலை செய்யும். ஆனால் மக்கள் படும் துன்பத்தை வெளிகாட்ட வேண்டிய கடமை எவருக்கும் உண்டு. அவருக்கு இவருக்கு பயந்து வாய் மூடி மௌனமாக வாழ என்னால் முடியவில்லை. கடமையை செய்தேன். பட்டம் பதவிகளை ஏற்க மறுத்து கடமையை செய்த ஒருவன் எப்படி துரோகியாக முடியும்? விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றை ஏகமனதாக அனைவரும் ஒரு தடவையேனும் கண்டித்திருந்தால் அவர்கள் திருந்தியிருப்பர். எதையேனும் சாதித்தும் இருப்பர். மக்களின் பரிதாப நிலைகண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் கண்டனம் தெரிவித்த நான் எப்படி துரோகியாக முடியும்?

விடுதலைப் புலிகளுக்கு நான் கூறிவந்த ஆலோசகைளையும் கண்டனங்களையும் அவர்கள் கவனத்துக்கு எடுத்திருந்தால் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவற்றை விடுதலைப் புலிகளை எடுக்க வற்புறுத்தியிருந்தால் பல்லாயிரக்கணக்கான எம் பிள்ளைகளின் உயிர்கள் எம் மக்களின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் அத்தனையையும் காப்பாற்றியிருக்க முடியும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு மன்றாடி கேட்டிருந்தேன். எம்மவரில் என்னைத் தவிர வேறு யார் கேட்டார்கள்? எந்த ஸ்தாபனம் கேட்டது?. ஆனால் துரோகி பட்டமே எனக்குக் கிடைத்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சுகமாக பல்வேறு வசதிகளுடன் வாழும் நம்மவர்கள் சரி அவர்களில் சிலர் நடாத்திய பத்திரிகைகள் சரி எவ்வளவு கீழ்த்தரமாக என்னை விமர்சித்திருந்தன என்பதை கூட நான் பொறுத்திருந்தேன். ஏன்? எங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் எனது தொகுதியாகிய கிளிநொச்சி அயல் மாவட்டங்களாகிய முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களே. அவர்களுக்காகவாவது பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அவர்களுக்காக நான் மௌனமாக அழுதேன். நான் அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவன். அவர்களில் பலர் இன்று இல்லை. மனம் வெதும்பி இறந்தவர்களும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.என்னால் அவர்களுக்காக செய்யக்கூடியதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான் வன்னி மக்களின் துயர்துடைக்க எழுதினேன் வெளிநாட்டு அரச தலைவர்கள்,இந்தியதலைவர்கள் கலைஞர். மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள், ஐ.நா சபை செயலாளர், ஜனாதிபதி, சமய பெரியார்கள், மகாநாயக்கர்கள், கத்தோலிக்க ஆண்டகைகள், நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டு மக்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. மனச்சாட்சி உள்ள எவரும் என் கடிதங்களை பாராட்டியிருக்க முடியுமே அன்றி குற்றம் காண முடியாது. மிகக் கவனமெடுத்து எழுதப்பட்டவை. யாரையும் நோகடிக்கும் நோக்கம் கடுகளவும் இருக்கவில்லை. இன்றுவரை ஒரு நபர் தன்னும் என் கடிதங்களில் குற்றம் காணவில்லை. அவ்வப்போது என் செய்திகளை இருட்டடிப்பு செய்த பத்திரிகைகள் அல்லது அவைமூலம் யாரும் அப்பணியை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல செயல்கள் பெரும் இனக்கலவரத்தை தூண்டுமளவுக்கு பாரதூரமானவை. அவற்றின் உள்நோக்கமும் அதுவே. அச் சந்தர்பங்களிலெல்லாம் இனவெறி ஏற்படாது சாந்தப்படுத்தியது பெருமளவில் எனது அறி;க்கைகளும், கடிதங்களுமே என பலர் கூறக் கேட்டிருக்கின்றேன். 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டபோது நாடே பற்றி எரிந்தது. நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற எத்தனையோ கொடூர சம்பவங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனைபண்ணி பார்க்க முடியாது. இதை தவிர்க்க உதவியதில் யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எனக்கு பெரும் பங்குண்டு. தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக கொழும்பில் வாழும் புத்திஜீவிகள்தானும் இக் கருத்தை மக்களுக்கு எடுத்துக்கூற தவறியமை தூரதிஷ்டமே.

இதற்கு ஆதாரமாக பல சம்பவங்களில் ஒன்றை கூற விரும்புகின்றேன். வெளிநாட்டு தூதரக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மிகக் கௌரவமான தமிழ் பெண்மணியொருவர் ஏன் இவ்வாறான கடிதங்களை எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்டபோது அதற்கு நான் நேரடியாக பதில் கூறாமல் உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரப்பிள்ளைகள் கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கின்றனரா எனத் திருப்பிக் கேட்டேன். என் கேள்வி கொழும்பில் கல்விகற்கும் தமிழ் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்புடையது என்ற அர்த்தத்தை புரிந்துகொண்ட அந்த அம்மணி அதன்பின் பல தடவை அவருடனான சந்திப்பின் போது “உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றையும் தவறாது ஒழுங்காக வாசிக்கிறேன். அவை அர்த்தம் உள்ளவை” என்று புன்னகையுடன் தெரிவிப்பார். என் எழுத்துக்களை படிப்பவர்கள் அதற்குள் மறைந்திருக்கும் நல்ல கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை. இதுதான் பிரச்சினையே? புத்திஜீவிகளுக்கேனும் புரிந்திருக்க வேண்டுமே ஏன் புரியவில்லை?

நான் ஓர் காந்தி பக்தன். 1948ம் ஆண்டு அன்னார் படுகொலை செய்யப்பட்ட நாள் எனக்கு ஞாபகமிருக்கிறது  ஜனவரி 30, யாரோ ரேடியோ செய்தி கேட்டு வந்து என் தந்தைக்கு கூறினார். மறுநாள் அன்னாருக்காக அனுதாபக் கூட்டம் எனது தந்தையாராலேயே ஒழுங்கு செய்யப்பட்டது. அன்றுதொட்டு என் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன். முடிந்தவரை அகிம்சாவாதியாகவே வாழ்ந்தேன். யாரையும் நான் என்றும் இம்சிக்கவில்லை. பொய், களவு, உருட்டு புரட்டல் எதுவும் என்னிடம் நெருங்கவில்லை. மதுவை நான் தொட்டதில்லை. அத்தகைய நான் வன்முறையை வெறுத்தேன் அகிம்சையை வளர்த்தேன். என்னுடன் பழகியவர்கள் என்னை நன்கறிவர். இயக்கங்கள் எதிலும் ஈடுபட்டவன் அல்ல. ஆயுதம் தாங்கிய பல்வேறு இயக்கங்கள் அர்த்தமற்ற கொலைகளை செய்யும் போதெல்லாம் வேதனையில் துடித்தேன். விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது அமைதி வந்துவிட்டதென முழுக்க முழுக்க நம்பினேன். ஆயுதத்தை கைவிட்ட பிரபாகரன் இனி ஆயுதத்தை தொடார் என ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தேன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தவேளை திரு பிரகாரனும் ஒரு நாள் திரு யாசீர் அரபாத் போன்று உலகை சுற்றி வரும் காலம் வருமென்று கூறியிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு அரசு பிரபாகரனை கைது செய்து சிறையிட அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென தமது சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியிருந்தது. அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தேன். திரு. பிரபாகரனின் அழைப்பை ஏற்று அனைவரும் 2002ம் ஆண்டு கிளிநொச்சிக்கு அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ அனைவரும் சென்றிருந்தோம். எனது நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளார் என்பது பற்றி திரு. பிரபாகரனை சந்தித்த போது புலனாகியது. பாராளுமன்த்தில் எனக்கும் வேறு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைகூட குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு ஒரு தடவை திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாம் சொல்வதைத்தான் பா.உ க்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டபோது அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் இனத்தின் நன்மை கருதி அவர் நாகாக்க வேண்டுமென எச்சரித்ததை குறிப்பிட்டு திரு. ரவிராஜ் பாராளுமன்ற குழுகூட்டத்தில் “சங்கரி அண்ணனால்தான் நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது” என்றார்.

விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக நாம் ஏற்க வேண்டும் என்ற யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டம் ஓன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. அ.விநாயகமூர்த்தியும் இன்று மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி திரு.குமரகுருபரனும் ஏற்க வேண்டுமென கோர அதை திரு. இரா சம்பந்தன் உட்பட அனைவரும் எதிர்த்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது. தேசிய பட்டியலில் முதலாவதாக திரு. மு.சிவசிதம்பரம் இடம்பெற வேண்டுமென நான் பிடிவாதமாக இருந்தேன். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அதை விரும்பவில்லை என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் திரு. மு.சிவசிதம்பரம் அவர்களின் உடல் நிலை ஆறு மாதத்துக்கு மட்டும் தான் நீடிக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு நியமன தினம் குறிப்பிடப்பட்து. வழமைபோல் நம்மில் ஒருவர் சில சதி வேலைகளில் ஈடுபட முற்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த யாழ் மாநகரசபைத் தேர்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது சில கட்சி ஆதரவாளர்கள் மறுத்து விட்டனர். பின்பு இலகுவான வாய்ப்பு ஏற்படுவதைக் கண்டு நீயோ நானோ என பலர் முன்வந்தனர். இவர்களில் இருவர் தம்மை தம் அனுமதியின்றி த.வி.கூ. செயற்குழுவில் சேர்த்துவிட்டோம் என்று என்மீது கடும் கோபம் கொண்டனர். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் இவர்களில் ஒருவர் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர். மற்றவர் தேசியபட்டியலில் இடம்பெற்றவர். மிகவும் கஷ்டமான ஓர் நிலைமையை சதி வேலைகளில் ஈடுபட்ட அதே நபர் எனக்கு ஏற்படுத்தினார். ஒருவரோடு மோதவிட்டு அதனால் ஏற்படும் இலாபத்தை தான் பெற்றுக் கொள்வதில் அவர் திறமைசாலி. அவர் ஏற்படுத்திய ஓர் குழப்பத்தால் பெரும் சிக்கலில் கட்சி சிக்கிக் கொண்டது. திரு.ச.அரவிந்தன், திரு. ந.ரவிராஜ் ஆகியோர் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட இளம் வேட்பாளர்களாவர். அதேபோல முதியவர் ஒருவர் நீண்டகாலமாக தமிழரசு கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளில் முக்கிய இடம் வகுத்தவர். இம் மூவரும் வேறு கட்சிகளின் மூலம் தேர்வான இருவர் எடுத்த வாக்குகளிலும் பார்க்க கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தனர். 2001ம் ஆண்டும் இடம் பெற்ற தேர்தலில் அந்நபரின் முதற் கோரிக்கை திரு.அரவிந்தனை நியமிக்காது வேறு தாம் தரும் ஓர் பேர்வழியை நியமிக்க வேண்டும் என்பதாகும். ஓர் இளைஞனை அவர் குடும்பத்தவரின் விருப்புக்கு மாறாக அச்சம் காரணமாக எவரும் போட்டியிட முன்வராத நிலையில், 2000 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வைத்தேன் இப்போது அவரை எப்படி நிறுத்த முடியும் என்றதும் அப்படியானால் திரு ரவிராஜை நீக்குங்கள் என்றதற்கு நான் அவருக்கு கொடுத்த பதில், “விரலை வெட்ட வேண்டாமென நான் கூறும் போது கையையே வெட்டுங்கள் என கேட்கின்றீர்களே” என்றேன்.  இறுதியாக தொல்லை தாங்காமல் திரு.முத்துலிங்கம் அவர்களை நியமன பட்டியிலிலிருந்து நீக்கியபோது அவரின் ஆதரவாளர்கள், இளைஞர் கூட்டம் மிக கோபமடைந்தது. அந்த நேரம் எனக்குத் தோன்றிய திடீர் யோசனைக்கமைய திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு. வடிவேற்கரசன் மற்றும் திரு. ஜெயபாலசிங்கம் போன்றவர்களுடன் ஆலோசித்து அவர்களும் கொடுத்த உத்தரவாதத்தின் பேரால் திரு முத்துலிங்கம் அவர்களின் பெயர் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

2001ம் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பிக்கின்றன, எங்கெங்கோ உருவாகிய சதி திட்டங்களின் அமுலாக்கம், வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தெரிவாகினோம். இந்தியாவிலிருந்து வருகைதந்த தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை புதிதாக ஓர் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து அவரை பாராளுமன்றத்துக்கு நானே அழைத்துச் சென்றேன். முறைப்படி பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பிரதாயப்படி வர வேண்டியவர் அவரே. அவரின் உடல்நிலை சரியில்லையெனில் அப் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் நானே. இப் பதவி அங்கத்தவர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் பதவியில்லை. புதிய உறுப்பினர்கள் தம்மை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வேளை திடீரென மட்டுநகர் பா.உ காலஞ்சென்ற திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு. இரா.சம்பந்தனை குழுத்தலைவராக பிரேரித்தபோது கண்ணியமான முறையில் அப் பிரேரணையை திரு சம்பந்தன் அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும். அவர் அதை செய்யவில்லை. நானும் பெருந்தன்மையாக மௌனமாக இருந்து விட்டேன். பின்பு நான் அறிந்தேன் திரு,திருமதி ஜோசப் பரராஜசிங்கமும், திரு.இரா.சம்பந்தனும் திரு.எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் ஏனையவர்களை அவரவர் இல்லங்களிலும் போய் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர் என்று. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் மூவரும் இனந்தெரியாத தம் வஞ்சத்தை என்மீது தீர்த்துக் கொண்டனர். இதேபோன்ற ஓர் சந்தர்ப்பத்தில் திரு. அ.அமிர்தலிங்கத்துக்கு எதிரான ஒரு சதித்திட்டத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் பெயர் பிரேரிக்கப்பட இருவரும் ஒரே அளவு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் திரு. மு.சிவசிதம்பரம் தானே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களை பிரேரித்து பெருமையை சம்பாதித்துக் கொண்டார்.  இத்துடன் முதலாவது சதித்திட்டம் நிறைவேறியது.

ஏறக்குறைய ஆறு மாதங்களாக உறுப்பினராக இருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் காலமாகியதும் திரு. இரா.சம்பந்தன் கட்சி கொடுத்த வாக்குறுதிபடியும், அதிலும் மேலாக தான் செயலாளர் நாயகம் என்ற தோரணையிலும் திரு.முத்துலிங்கம் அவர்களை தேசிய பட்டியலில் போட்டு தன் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக திரு. சிவசிதம்பரம் அவர்களின் பூதவுடல் எரிந்து கொண்டிருக்கையிலேயே திரு. ஜோசப் பரராஜசிங்கத்துடன் கிளிநொச்சிக்கு விரைந்து சென்ற திரு. சம்பந்தன், திரு. சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களை சந்தித்து வந்தபின் அவர் கேட்டுக்கொண்டார் எனக்கூறி தனது தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட திரு. துரைரட்ணசிங்கத்தை தேசிய பட்டியலில் தன் இஷ்டப்படி சேர்த்துக் கொண்டார். கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட செயலாளர் நாயகம் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் செய்யவில்லை. ஒற்றுமையை பேணும்பொருட்டு பொறுத்துக் கொண்டோம். அது கட்சி அவருக்கு கொடுத்த மன்னிப்பு இந்த நாடகத்தில் பங்கேற்ற திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு சிவாஜிலிங்கம், திரு.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன் திரு.செல்வராஜ், திரு துரைரட்ணசிங்கம், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. விநோதாரலிங்கம்  ஆகியோர் சான்று பகர்வர். இரண்டாவது சதி நாடகமும் இத்துடன் நிறைவேறியது.

அடுத்ததாக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் இறந்ததும் அவருடைய இடத்துக்கு நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஏகமனதாக தெரிவானேன். விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் அவர்களை அப்படி யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் கசப்படைந்த ஒரு சிலர் என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற தயாரானபோது போதிய ஆதரவின்மையால் மௌனமாகிவிட்டனர். ஆனாலும் திருவாளர்கள் அல்போன்ஸ்மேரி, ஆவரங்கால் சின்னத்துரை உட்பட சிலர் நம்பிக்கைத் தீர்மானமொன்று நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியும் தலைமை தாங்கிய நான் ஆர்வம் காட்டாததால் அவர்களின் முயற்சி நிறைவேறாமல் போனது. இதில் மிக்க வேடிக்கை என்னவெனில் 1993ம் ஆண்டு செயலாளர்நாயகமாக தெரிவான திரு.இரா.சம்பந்தன் கடைசிவரை பொதுச்சபையையும் கூட்டவில்லை. மகாநாட்டையும் கூட்டவில்லை. அவருடன் தெரிவான செயற்குழு உறுப்பினரில் பாதிக்குமேல் இறந்தும், வெளிநாடும் சென்று விட்டனர்.

அடுத்து சில மாதங்கள் ஓடி மறைந்தன மட்டக்களப்பு, திருகோணமலை கிளைகள் இயங்காமலே பல வருடங்கள் இருந்தன. அவை இரண்டின் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் எனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றவே தயாராக வந்தனர். அதற்கு அவர்களால் கொடுக்கப்பட்ட காரணம் ஒன்று கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டது. இரண்டு புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை திரும்பவும் அரசிடம் கொடுக்க வேண்டுமென நான் யப்பானிய விஷேட தூதர் திரு.ஆகாஷிடம் கேட்டதாக. இவ் இரண்டு காரணங்களும் முற்றிலும் பொய்யானவை. இவற்றை சத்தியம் செய்வதன் மூலம் திரு. அ. விநாயகமூர்த்தியோ அன்றி திரு. சம்பந்தனோ இன்றும் நிரூபிக்க முடியும்.

இச் சம்பவத்தின் உண்மை யாதெனில் ஒரு தடவை த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரு. ஆகாஷியை சந்திக்கச் சென்றோம். பேசிக்கொண்டிருக்கையில் திரு. விநாயகமூர்த்தி திரு ஆகாஷிடம் “ஐயா அரசிடம் 1991ம் ஆண்டு இராணுவம் நிலைகொண்டிருந்த இடத்துக்கு வாபஸ் வாங்க சொல்லுங்கள் என்றார்”. அதைகேட்ட நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். இக் கோரிக்கையின் விளைவு விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாமை அரசிடம் திரும்ப ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்படுவர் என உணர்ந்த நான் திரு.விநாயகமூர்த்தியிடம் அப்படியானால் ஆனையிறவை கேட்பார்கள். கொடுப்பீரா? என்று கேட்டேன். இம்முயற்சி இப் பெரும் தலைவர்கள் இருவரும் என்னை விடுதலைப் புலிகளுடன் முரண்பட வைக்க எடுத்த சதிமுயற்சியே அன்றி வேறொன்றுமில்லை. தலைமைப் பதவியில் பொய் புரட்டு மூலம் நிலைத்து நிற்க விரும்பும் இவர்களிடம் மக்களின் எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்கலாமா? என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே.

இதோடு சம்பந்தப்பட்ட பல முக்கியமான விடயங்களில் ஒன்றை குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். திரு.இரா.சம்பந்தன் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு கூறினார் “சங்கரி நானும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனால் அதை நான் சொல்லவில்லை. நீர் என்ன அநியாயாத்துக்கு அப்படி சொல்கிறீர் என்று. அதற்கு எனது பதில் நானும் கூறாவிட்டால் அப்போ யார் இதை கூறுவார்கள் என்றேன். விடுதலைப்புலிகள் என்மீது வெறுப்படைய செய்ய திட்டமிட்ட இச்சதியும் வெற்றிகரமாக முடிந்தது. ஒளிவு மறைவின்றி உண்மையை பேசியமையால் நான் துரோகியா?

1986ம் ஆண்டு ஓர் சந்தர்ப்பத்தில் இந்திய அரசின் ஏற்பாட்டில் பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தியாவில் தங்கியிருந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த வந்தபோது இரு சாராருக்குமிடையிலான பேச்சுவார்த்தை பல நாட்கள் நடந்தன. ஒருவேளை தவறாமல் தினமும் ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்து கொண்டவன் நான். பேச்சுவார்;த்தையில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட என் பங்களிப்பு பற்றி திரு.இரா.சம்பந்தன் குறிப்பிட்டமை அவசியமற்றதும், விஷமத்தனமானதுமாகும். 06.02.2008 தேதி தனது பாராளுமன்ற உரையில் இச்சம்பவம் பற்றி குறிப்பிடுகையில் அரசு பக்கத்தால் கலந்து கொண்டோர் பெயர்களை கூறிவிட்டு த.வி.கூ சார்பில் கலந்து கொண்டவர்கள் திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், வெ. யோகேஸ்வரன் இடைக்கிடை திரு.ஆனந்தசங்கரி நான் என விஷமத்தனமாக கூறி ஒழுங்காக பங்கு கொண்ட என்னை “இடைக்கிடை” கலந்து கொண்டதாக குறிப்பிட்டு ஒரு அணிக்கு தலைமை தாங்கும் தகுதி தனக்கில்லை என வெளிப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் தான் எப்படி நடந்து கொண்டார் பின்பு அப் பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது என்ற சுவையான நிகழ்வை அவரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். மற்றவர்களை மட்டம்தட்டி தன்னை மிகைப்படுத்தி பேசுவது திரு.இரா.சம்பந்தனுடன் கூடப்பிறந்த குணமாகும்.

திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தற்போது தலைமை தாங்குவது திரு.சேனாதிராசா அவர்களால் முறைதவறி  புத்துயிரளிக்கப்பட்ட தமிழரசு கட்சியே அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல. ஸ்தாபகராகிய தந்தை செல்வாவின் கட்டளைக்கு விரோதமாகவும் கட்சி முக்கியஸ்தர்களின் அனுசரணை இன்றியும் அப் பெயரை துஷ்பிரயோகம் செய்து மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என திரு சம்பந்தன் குழுவினர் நினைத்தால் அது வெறும் பகற் கனவாகும். தன் சிந்தனையிலேயே தெளிவில்லாமல் திரு. சம்பந்தன் செயற்படுகின்றார். அதற்கு சில பத்திரிகைகள் அவருக்கு முண்டு கொடுக்கின்றன. அவை பத்திரிகா தர்மத்தை மீறி செயற்படுவதால் நான் எதையும் இழந்து விடவில்லையென கூறமாட்டேன் ஏனெனில் 2004, 2010ல் நடந்த தேர்தல்களில் பத்திரிகைளின் அநீதியான பிரச்சாரத்தினால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது தான் உண்மை.  தம் புனிதமான கடமையை உணராது செயற்படும் பத்திரிகை மக்களுக்கு செய்வது பெரிய துரோகமாகும். பத்திரிகைகள் தம் இஷ்டம்போல் பத்திரிகை தர்மத்தை மீறி சிலரை தூக்கி வைப்பதும் சிலரை போட்டு மிதிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும். தலைவர்களை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கே. அரசுக்கும் இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. பத்திரிகைகள் நடுநிலை வகிப்பதே உத்தமமான செயலாகும். தம் சுயநல போக்கால் கண்ணியமான தலைவர்களை உருவாகாது தடுப்பதும்,அழிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமே. அவர்களின் முதற்கடமை மக்களின் நலன் பேணுவதே.

சகிப்புத் தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுக்க ஐ.நாவின் கிளை ஸ்தாபனமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனம் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த தினத்தில் மதன்ஜித் சிங் என்பவரின் பேரால் உருவாக்கப்பட்ட விருது 2006ம் ஆண்டு நவம்பர் 16 இல் எனக்கு பாரிஸ் நகரில் 1000 மக்களுக்கு மேல் பிரசன்னமாயிருந்த சபையில் ஒரு கோடி ரூபா காசோலையோடு விருதும் வழங்கப்பட்டது. இது நம் நாட்டுக்கும் குறிப்பாக எம் இனத்துக்கும் கிடைத்த பெருமையாகும். அந்த விருது பலமக்கள் முன் பிரான்ஸ் நகரில் பெற்ற என்னை என் தாய்நாட்டில் 20 தமிழர்கள்தன்னும் கூடி வாழ்த்த முடியவில்லை. அவ்விருதுகூட நான் செல்வாக்கை பாவித்து பெற்றதாக சொந்த நாட்டில் பேராசிரியராக இருந்த ஒருவர் ஒரு பத்திரிகையில் விமர்சித்திருந்தார். இக் கண்டனம் காந்திஜீ அவர்களையே அவமதிக்கும் செயலென அந்த பேராசிரியருக்கும் அப் பத்திரிகை நிறுவனத்துக்கும் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 நபர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்த மிக கண்ணியமிக்க ஒரு குழுவினரால் ஐவர் தெரிவு செய்யப்பட்டு பின் அதில் நான் தெரிவுசெய்யப்பட்டு எனக்கு வழங்கப்பட்ட விருதாகும். விருது கிடைக்கும்வரை இது பற்றிய செய்தி எதுவும் எனக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விருது கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டேன் என்பதற்காக வழங்கப்படவில்லை. நாட்டில் நடைபெறும் அடாவடித்தனங்கள், கொலைகள், போன்ற வன்முறைகளை எனது உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்துக்கு அஞ்சாமல் கண்டித்தமைக்கு கிடைத்த விருதாகும். எனது உயிருக்கு எத்தகைய அச்சுறுத்தல் இருந்ததென்பதை அனைவரும் அறிவர்.

அதுமட்டுமல்ல 2004ம் ஆண்டு தேர்தலை யாழப்பாணத்தில் யார் நடத்தினார்கள்? எப்படி நடத்தினார்கள்? என்பதை உலகறியும். என் சொந்த வாக்கையே நான் போடமுடியவில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 90 வீத ஆதரவை பெற்றமை பெரும் மோசடி மூலம் என்பதை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பகிரங்கப்படுத்தி இருந்தனர். அதுபற்றி விமர்சிக்காமல் ஏதோவொரு நாடு பல கோடி ரூபா எனது தேர்தலுக்கு செலவு செய்தும் நான் படுதோல்வி அடைந்ததாகவும் ஒரு பத்திரிகை எழுதியது. நான் கேட்டு வெற்றி பெற்ற பல தேர்தல்களுக்கு ஒரு சதமேனும் பணம் செலவிட்டதில்லை. மக்களே அவற்றை கவனித்துக் கொண்டனர். இப்போது கூட தேவைக்கு மேல் நான் செலவு செய்வதில்லை. இத்தகைய வேதனை தரும் திட்டமிட்ட செயல்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் தளம்பாத அரசியல் செய்த என்னை வன்முறையால் ஓர் இயக்கம் தோற்கடித்தமை நாட்டைப்பொறுத்தவரை ஓர் துன்பமான செயலாகும். இவ்வாறான செயல்கள் அத்தனையையும் எவ்வாறுதான் ஒரு சாதாரண மனிதனால் தாங்கிக்கொள்ள முடியும்?.

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பற்றி விமர்சிக்கும் எவரும் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு அவர் காலத்திலேயே அவராலேயே செயலிழக்கப்பட்ட கட்சி தமிழரசுக்கட்சி எவ்வாறு புத்துயிர் பெற்றது? யாரால் ஏன் புத்துயிர் கொடுக்கப்பட்டதென இன்றுவரை யாராலும் கேட்கப்படவில்லை. தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமரர்கள் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பூதவுடல்கள் உதயசூரியன் கொடியினால்தான் போர்த்து எடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் தமிழரசுக்கட்சி நல்ல நோக்குடன் மீள் இயங்க வைக்கப்படவில்லை என்பதை நியாயமாக செயற்படும் தந்தை செல்வாவில் நல்ல மதிப்பு வைத்திருக்கும் எவரும் ஏற்றுக்கொள்வர். எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் குற்றம் சுமத்துவது என் மீதே. பல்வேறு குற்றங்கள் புரிந்த மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களாக கணிக்கப்படும்போது ஒரு குற்றமும் செய்யாத நான் மட்டும் துரோகியா. தந்தை செல்வா உருவாக்கிய கட்சிதான் அவர் அனைவரையும் ஒற்றுமையாக்க உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தந்தை செல்வாவில் உண்மையான விசுவாசமுள்ளவர்கள் ஆதரிக்க வேண்டியது தமிழர் விடுதலைக் கூட்டணியே அன்றி தமிழரசுக்கட்சியல்ல. ஒரு தனிநபர் தன் நலனை மட்டும் கருதி தமிழரசுக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்ததால் மற்றும் சிலர் ஒதுங்க இடமின்றி தமிழரசுக்கட்சியின் சின்னமாகிய வீட்டுக்காக மட்டுமே அதனுடன் இணைந்து கொண்டனர். நானும் ஒருவனாக இருந்து தந்தையினால் உருவாக்கப்பட்ட கட்சியை பல இலட்சம் ரூபா செலவில் கட்டிக்காத்து வருகின்றேன். யுனெஸ்கோ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விருது மூலம் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை இதற்காகவே செலவிட்டேன். என் கடைசி காலத்திலும் ஓர் இலட்சியத்துக்காகவே அன்றி சுயநலன் கருதி இதை செய்யவில்லை. தலைவர் அமிர் கொலை செய்யப்பட்டதும் அவர் வகித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திரு சேனாதிராஜாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? அவர்தான் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வாரிசா? அன்று அப்பதவியினை திரு. இரா சம்பந்தன் உட்பட பலரும் விரும்பினர்.

77 வயதுவரை ஒருவராலும் அவமதிக்கப்படாதவன் இன்று சில சுயநலமிகளின் சுயநல சதியாலும் பொய் பிரச்சாரங்களினாலும் பெரும் வேதனை அடைந்துள்ளேன்.  அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் என்னை பற்றிய உண்மைகளை அறிந்திராமையால்தான் புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர்கள், சில வேட்பாளர்கள் உட்பட அரசு என்னிடம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் அள்ளி இறைத்ததாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆண்டவன் அவர்களின் அறியாமையை மன்னிக்கட்டும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை தம்பிமார்க்கு ஒன்று சொல்வேன் உணர்ந்து கொள்ளட்டும். பொய்யும், புரட்டும் என்னவென்று எனக்குத் தெரியாது. பசித்தாலும் புல்லுத் தின்னாத புலிபோன்ற ஒருவன் நான். அம்பாறை செயற்குழு உறுப்பினர் சிலருக்கு அன்றொருநாள் நான் ஓர் வாக்குறுதியை கொடுத்து அதை நிறைவேற்றிய என் செயலை அன்று கண்ட திரு. இரா சம்பந்தன், திரு. ஜோசப் பரராஜசிங்கம், திரு.செல்வராசா, திரு. துரைரட்ணசிங்கம் ஆகியோரே ஆச்சரியம் அடைந்தனர். திரு. மாவை சேனாதிராசாவை இரண்டாவது தடவையாக தேசிய பட்டியலில் இணைத்து மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களை கவனிக்குமாறு அனுப்பி வைத்த கட்சியின் தலைமை பதவியை வகிக்க சகல விதத்திலும் தகுதியானவன் என்பதை நிரூபித்த கட்சியின் தலைவன் நான்.  இந்த உண்மைகள் புத்திஜீவிகள், பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்களுக்கும் தெரியாமல் போனது வேதனையே. உரிமையுடன் நான் எடுத்திருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒரே நபருக்கு இரண்டாவது தடவையாக கிடைக்கச் செய்தமைகூட என் துரோகச் செயலா?

இன்று கூட காலம் கடந்துவிடவில்லை. நான் செய்த குற்றங்களை தமிழரசுக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து நம் மக்களை கூறுபோட்டவர்கள் பட்டியலிட்டு காட்டட்டும். எவரேனும் விசாரித்து தீர்ப்பு வழங்கட்டும். திரு. சம்பந்தன் போன்றோருக்கு மனசாட்சி இருந்தால் இப்படியொரு ஒழுங்கை செய்திருக்க வேண்டும். நான் குற்றவாளியாக காணப்பட்டால் கட்சியை விட்டு விலக பின்னிற்கமாட்டேன். அதை விடுத்து இழந்த சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கி அப்பாவி மக்களை குழப்பியடித்து பெரும் சாதனை புரிந்ததாக உலகுக்கு காட்ட வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 9 வீதம் மட்டுமே அன்றி அது மக்கள் கொடுத்த ஆணையல்ல. சில பத்திரிகைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க முன்வரலாம். அவர்களை நான் மன்றாட்டமாக வேண்டுவது தயவு செய்து என்மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அப்பாவி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தம் தலைவர்களை தமிழ் மக்கள் சுயமாக தேர்ந்தெடுக்க வழிவிடுங்கள். அதுவே மனித நீதியும் பத்திரிகை தர்மமும் ஆகும். அரசும் இதையே பின்பற்ற வேண்டும்.

சுயமாக சிந்திக்காமலும் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை உதாசீனம் செய்தும், விடுதலைப் புலிகள் கூறும் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டமையால். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக கடமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல. மீண்டும் தேசியம் சுயநிர்ணய உரிமை போன்ற சுலோகங்களுடன் தேர்தலில் போட்டியிட்டது மக்களுக்கு செய்த பெரும் துரோகமாகும். வன்னி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புக்கள் சொல்லில் அடங்கா. கிளிநொச்சி பறிபோனவுடன் விடுதலைப்புலிகளை கேட்டேன், தயவு செய்து ஓர் உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணுங்களென்று. அரசை மன்றாடி கேட்டேன், அரசு யுத்தத்தை வென்று விட்டது இனி தொடரும் போரில் ஒரு அப்பாவி உயிர்தன்னும் வீணாக அழிக்கப்படக்கூடாதென்று. தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கேட்டேன் உலகநாடுகளும் அவற்றிலுள்ள பல்வேறு அமைப்புக்களும் மனித கேடயமாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுமாறு கேட்டுள்ளனர். அதேபோல் விடுதலைப்புலிகளை கேளுங்கள் அல்லது உங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என்று. யாரும் என் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. அதன் விளைவு என்னவாயிற்று? இவர்கள் தம் பதவிகளை இராஜினாமா செய்வதாகவேனும் கூறி விடுதலைப்புலிகளை மிரட்டி இதை சாதித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பத்திரிகைகளேனும் இவர்களை கேட்கவில்லை. கேட்ட நான்தான் துரோகியா? இவர்கள் இதை செய்திருந்தால் வன்னி மக்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில் போரை இந்தியத் தேர்தல் முடிவு வரும்வரை சிலகாலம் நீடிக்கவென பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெறாத போராளி சிறுவர்கள் பலிகொடுக்கப் பட்டனர். காயப்பட்ட போராளிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். சரணடைந்து இன்று அரச பாதுகாப்பில் இருப்பவர்கள் மத்தியிலுள்ள 11000 இற்கு மேற்பட்ட போராளிகளில் ஒரு கால் துண்டிக்கப்பட்டவர்கள் 686 பேரும் இரு கால்களையும் இழந்தவர்கள் 05 பேரும், ஒரு கை இல்லாதவர்கள் 367 பேரும், இரு கைகளும் இல்லாதவர்கள் 17 பேரும், கண் பார்வை இழந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் என பலர் முகாமில் இருப்பின் இப்படியான நிலையில் உயிரிழந்தவர்கள் எத்தனை ஆயிரமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண போரில் 22000 இளைஞர்களும், யுவதிகளும், வன்னியின் இறுதிப் போரில் எத்தனை ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும்? பலிகொள்ளப்பட்டார்கள்? நம் மக்கள் இந்நிலையில் வாடி வதங்கும் போது பாராளுமன்ற பதவி அவசியமா? என்னைப் பொறுத்தவரையில் நான் 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். நம் நாட்டு பெரும் அரசியல் தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளேன். வயதும் 77ஐ தாண்டி விட்டது. இத்தேர்தலில் நான் வெல்ல வேண்டுமென ஆசைப்படவில்லை என்றும், ஓர் கடமையாக உணர்ந்தே போட்டியிடுகின்றேன் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக சத்தியம்கூட பண்ணியுள்ளேன். 1994ம் ஆண்டு ஓர் கட்சிக்கு 09 ஸ்தானங்கள் கொடுத்த நீங்கள் 2004ம் ஆண்டு 22 ஆசனங்களை த.தே.கூ. கொடுத்தீர்கள். எனது கட்சிக்கு ஒருசந்தர்ப்பம் 6 மாத காலத்துக்கேனும் தந்து பாருங்கள் என்று வருந்தி கேட்டேன். நீங்கள் ஒரு ஆசனமும் கொடுக்காது என்னை ஒதுக்கி விட்டீர்கள்.

நான் ஒற்றுமைக்கு மாறானவன் அல்ல. 2001ம் ஆண்டு ஒரு சில தமிழ்ப் பெரியார்களின் வேண்டுதலுக்கு அமைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அமைக்கப்பட்டு அவ் வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை என்மீது எதுவித காரணமும் இன்றி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஒற்றுமையை சிதைத்த திருவாளர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோருக்கு இந்த ஒற்றுமை ஞானம் அப்போ எங்கே போய் மறைந்தது. இத்தகைய செயற்பாடுகளினால் ஏற்கனவே ஒன்றுபட்டிருந்த தமிழ் இனத்திற்குள் வேற்றுமையை வளர்த்த அதே தலைவர்கள் இன்று மீண்டும் ஒற்றுமை பற்றிப் பேசுவது விந்தையே. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையை செய்யாது ஆறு ஆண்டுகளை வீணடித்து விட்டு மக்கள் மத்தியில் எந்த முகத்துடன் வருகிறார்கள் என்று பார்த்தால் 09 வீதம் மக்கள்தான் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மீதிப்பேர் ஏன் வாக்களிக்கவில்லை? இதற்கு அவர்கள் தரும் பதில்தான் என்ன? எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்கவே தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை செயலிழக்க செய்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். தமிழரசு கட்சி ஏன் புத்துயிர் பெற்றது என மக்கள் அறிய விரும்புகின்றனர்.

என் சேவையை தர முன்வந்தேன். மக்கள் ஆணை தரவில்லை என்பதிலும் பார்க்க நம் மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு வறுமையையும், படும் கஷ்டங்களையும் தீர்ப்பதாக உறுதியளித்து பணமும் பொருளும் கொடுத்து மக்களை வாங்கிவிட்டார்கள். என் தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. மக்களின் ஏழ்மைதான் விலைபோனது. சொல்லொணா துன்பத்தை அனுபவிக்கும் எம் மக்களுக்காக மௌனமாக அழுவதே அன்றி எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்றும் நம் மக்களை அழிவுக்கு கொண்டு சென்றுவிட்டு மீண்டும் அதே நிலைமைக்கு கொண்டு செல்வது அப்பாவி மக்களுக்கு செய்யப்படும் படுபாதகச் செயலாகும். என்னைப்பற்றி எவராலும் என்ன சொல்ல முடியும். அரச பணத்தை வாங்கி இறைக்கிறார் என்ற பொய்யை மட்டும்தான் திரும்பத் திரும்ப கூற முடியும். ஆனால் இது பணத்துக்காகவும் பதவிக்காகவும் விலைபோகும் ஜீவன் அல்ல என்ற நிலைப்பாடு இன்றல்ல என் உயிர் உள்ளவரை நீடிக்கும்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
57/48, ஸ்டான்லி வீதி
யாழ்ப்பாணம்
10-05-2010