கட்டுரைகள்
கட்டுரைகள்
கட்டுரைகளும் விவாதங்களும்
இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. விடுதலைப் புலிகள இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை காணப்படுகிறது.
இன்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
சேலத்தில் புதிய பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை குடியுரிமை நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அப்போது அரசுப் பேருந்து ஒன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது. பஸ் டிரைவரும், கண்டக்டரும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியில், ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், சிதம்பரம் , மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது. சில பகுதிகளில் வர்த்தர்கள் அவர்களாகவே கடைகளை அடைத்துள்ளனர். பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பாக உள்ளது.
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவுள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் இரண்டு குற்றவாளிகளாக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்தகவல் குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜீவ் கொலை வழக்கு விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பூர்வமான முடிவை மேற்கொள்ள நீதிமன்றத்தை அணுகுவோம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர்; தெரவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.
தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.
மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.
பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.
புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.
அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.
![]()
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செலவினங்களுக்காக பெற்ற தொகைகளில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் குறித்த விவகாரத்தில் தனது பங்கு குறித்து தான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் மைக்கல் மார்ட்டின் கூறியுள்ளார்.
உறுப்பினர்களால் நிறைந்திருந்த மக்களவைக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த விவகாரத்தில் பிரிட்டன் மக்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காணுவதற்காக, தான் கட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் நேற்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.
பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவியான ஆங் சான் சூ சி அவர்கள் ரங்கூனில் விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கான விதிமுறைகளை மீறினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அங்குள்ள வாவி ஒன்றை நீந்திக் கடந்து அவரது வீட்டுக்குச் சென்ற ஒரு அமெரிக்கருடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்புடையதாகும்.அந்த மனிதர் அழைப்பு ஏதும் இல்லாமலேயே அங்கு வந்ததாக ஆங் சான் சூசியின் சட்டத்தரணி வாதாடினார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக சிறிலங்கப் படைகள் வென்றுவிட்டதாக சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.