::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

உலக கோப்பை கால்பந்து நான்காவது காலிறுதி போட்டி: ஸ்பானியா வென்றது – பராகுவே வெளியேறியது.

paraguay.jpg“தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் நான்காவது காலிறுதி‌ ஆட்டத்தில் ஸ்பானியா – பராகுவே அணிகள் மோதின.  இதில் ஸ்பானியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பராகுவே அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: ஜெர்மனி வென்றது – ஆர்ஜன்டீனா வெளியேறியது.

soccer.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் ஜெர்மனி – ஆர்ஜன்டீனா  அணிகள் மோதின. இதில் ஜெர்மனிஅணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆர்ஜன்டீனா அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி

gana.jpgஉலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.

90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.

கையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

அந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் ஹாலந்துஅணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

neda.jpg

காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும் கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா ஜேர்மனி ஒரு போட்டியிலும் ஸ்பெயின் பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.

இந்த அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடுமென்ற பொதுவான எதிர்பார்ப்புள்ளது.

இருப்பினும் ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்தத் தொடரில் அசத்தி விட்டது. எனவே, இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்தக் குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்திவிட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.

காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே. ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

காலிறுதி போட்டி விபரங்கள்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதி போட்டிகள் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பயிற்சிகளில் 8 அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலிறுதி போட்டி விபரங்கள்

ஜூலை 2, வெள்ளிக்கிழமை
நெதர்லாந்து – பிரேசில்,
இடம்: போர்ட் எலிசபெத்,
நேரம்: இரவு 7.30.

உருகுவே – கானா,
இடம்: ஜோகன்னஸ்பர்க்,
நேரம்: இரவு 12

ஜூலை 3, சனிக்கிழமை,
ஆர்ஜென்டீனா -ஜெர்மனி,
இடம்: கேப்டவுன்,
நேரம்: இரவு 7.30.

பராகுவே – ஸ்பெயின்
இடம்:  ஜோகன்னஸ்பர்க்,
நேரம்: இரவு 12.

இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு.

india1.jpgஆசிய கிண்ண நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணியை இறுதிநேரத்தில் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்று இறுதிநேரத்தில் வென்றது.  இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளன்

இலங்கை – பங்களாதேஷ் இன்று மோதல்

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கை அணி முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. 10 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புள்ள நகரில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில்  இங்கு மின்னொளியின் கீழ் (போதிய வெளிச்சமில்லை என்று புகார் எழுந்துள்ளது)  துடுப்பெடுத்தாடுவது 200 சதவீதம் கடினம் என்றும் டோனி தெரிவித்தார்.

பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வென்றது.

cr.jpgஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. முதலில் ஆடிய பங்களாதேசம் 34.5 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கண்டது.

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தம்புல்லவில் இந்திய அணி பங்களாதேச அணியை எதிர்கொண்டது. நாணயசுழச்சியில் வென்ற பங்களாதேசம் முதலில் பெட்டிங்செய்தது. ஆரம்பஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸýம் களம் இறங்கினர். 3-வது ஓவரில் தமீம் ஆட்டம் இழந்தார். அவர் 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்து முகமது அஸ்ரப்உல் 20 ஓட்டங்கள் பெற்று பெவிலியன் திரும்பினார். அடுத்து இம்ருல்லுடன் ரஹீம் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரில் இம்ருல் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் அணியில் அதிகபட்சமாக 37 ஓட்டங்கள் (35 பந்துகள்) எடுத்தார். 17-வது ஓவரில் வங்கதேசம் 100 ஓட்டங்களைக் கடந்தது. அப்போதிருந்த நிலையில் அந்த அணி 250 ஓட்டங்கள் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர். 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 167 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 34.5 ஓவரிலேயே அந்த அணி சுருண்டது. இந்திய தரப்பில் சேவாக் 2.5 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

168 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். 10-வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது மைதானத்தில் உள்ள விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால் போதிய வெளிச்சம் இல்லை. எனவே ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது விராட் கோலி 11 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பொறுப்பாக விளையாடினார். 30.1 ஓவரில் இந்திய அணி 158 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. அப்போது கம்பீர் ஆட்டம் இழந்தார். அவர் 101 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ரெய்னா களம் கண்டார். 30-வது ஓவரில் 3 மற்றும் 4 -வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி கேப்டன் தோனிஇ வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்றது.
38 ஓட்டங்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளையும் சேர்ந்து மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவை சமநிலை செய்தது நியூஸீலாந்து

ftfa.jpgஐரோப்பி யாவின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவிற்கு நிகராக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, இறுதி நேரத்தில் பதில் கோல் அடித்து தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுவரும் 2010 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில், ருஸ்டன்பர்க்கில் நடைபெற்ற எப் பிரிவு இரண்டாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே நியூ ஸீலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.

தன்னாலும் முடியும் என விளையாடிய நியுசிலாந்து அணியின் வேகத்தை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற சுலோவாகியா அணி, அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடத் துவங்கியது.  போட்டி ஆரம்பமானதை தொடர்ந்து 5ஆவது நிமிடத்தில் சுலோவாகியாவின் செஸ்டெக் டிக்கு வெளியேயிருந்துத் தூக்கி அடித்தப் பந்தை மிக அழகாக தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் விட்டேக்.

போட்டி நேரம் முடிவடைந்து, இறுதிநேரம் ஒடிக்கொண்டிருந்தபோது பெரு முயற்சியில் ஈடுபட்ட நியுநிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்தது. ஸ்மெல்ட்ஸ் அடித்து மேலெழும்பி வந்த பந்தை அதற்கெனவே காத்திருந்த வின்ஸ்டன் ரீட் தலையால் முட்டி கோலிற்குள் தள்ள போட்டி நிறைவு பெற்றது.  இந்நிலையில் தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்தது.