ஜெயபாலன் த

ஜெயபாலன் த

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன்

Protest_Londonதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Reggie_TROதமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.

தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

”எமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் வீரமரணம் அடைந்துவிட்டார்!” எஸ் பத்மநாதன் த.வி.பு

Pirabakaran_VPoddu_AmmanSoosai_Colஎமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் கடந்த 17ம் திகதி இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி யுத்தத்தில் வீரமரணமடைந்த செய்தி எனக்குத் தெரிந்த நண்பர்களுடாக உறுதி செய்யப்பட்டது. தலைவர் வீரமரணமடைந்துவிட்டார்.

அந்த மகாபாரத்த்தில் கூறப்படும் கண்ணின் பாத்திரம் போல எனது தலைவன் தனது இரு வெற்றிப் புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பினார். வெற்றிப் புதல்வர்கள் என் தலைவனின் மடியில் வந்து வீழ்ந்தார்கள். சிங்கள இராணுவத்தின் குண்டடிபட்டு. இருந்தும் மனம் தளராத தான் முன்வைத்த தனது விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்களின் விடிவை நோக்கி எமது மக்களின் சுதந்திரத்தை நோக்கி தான் எடுத்த பயணத்தை தொடர்ந்து சிங்கள இராணுவத்துடன் போராடி சண்டையில் வீரமரணம் அடைந்தது எம்மினம் மிகவும் கவலையுற்ற இந்த நேரத்தில் வீர மகா புருசரை தமிழினம் கண்டது ஒருவகையில் எமது இனத்திற்குப் பெருமைதான். அவருடைய மனைவி இறுதி மகன் பாலா இவர்களுடைய இவர்கள் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

என்னைப்பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல்களின்படி தளபதிகள் பொட்டம்மான் சூசை போன்றவர்களும் தலைவனின் பாதையில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள்.

செல்வராஜா பத்மநாதன் பிபிசி தமிழோசைக்கு இன்று (மே 24 2009)வழங்கிய செவ்வி

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதை தமிழழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நேரடி மோதலில் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

ஆனால் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் போராளிகள் குடும்ப அங்கத்தவர்கள் சரணடைந்த பின்னரே மரண தண்டனை வழங்கும் பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலைத் தகனம் செய்ததாக அறிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் நலமாகவே உள்ளார் என்று நிச்சயமாகத் தெரிவித்து இருந்த சர்வதேச இணைப்பாளர் இன்று இதனை உறுதிப்படுத்த முன்வந்தமையின் பின்னணி தெரியவரவில்லை. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

 செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

24 வைகாசி 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.

கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு  எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.

அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.

தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.

போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.

தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

செல்வராசா பத்மநாதன்
அனைத்துலக வெளியுறவுச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

முன்னைய செய்தி: பிரபாகரன் – பொட்டு அம்மான் – சூசை : புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடைசியாக இடம்பெற்ற நேருக்கு நேரான மோதலில் இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.

மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பலனளிக்காத நிலையில் கடைசியாக நடைபெற்ற மோதலில் இவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களுடைய உடலங்கள் இன்று மாலை கொழும்பிற்கு எடுத்துவரப்பட உள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் குடும்பத்தினரும் உயிரிழந்து உள்ளனர்! – எஸ் பத்மநாதன் த வி பு

LTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

Pirabakaran_Vcharles_anthony.jpgLTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ வலிமையால் வெற்றி கொண்டுள்ள அரச படைகள் மிக மோசமாக சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக செய்திகள் வெளிவருகின்றது. தங்களிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் படுகொலை செய்து வருவதாக தேசம்நெற்கு நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. மே 17ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தோல்வியை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவருடைய உடல் இன்று கண்டெடுக்கப்படும். இவருடைய உடல் மறுநாள் கண்டெடுக்கப்படும் என்று அறிவித்து ஒரு வகை சாகசமாக இக்கொலைகள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த அவலத்தின் கொடுமை என்னவெனில் தங்களது தலைவர்கள் சரணடைய மாட்டார்கள் என்று வாய்ச்சொல் வீரம் மட்டும் பேசும் புலத்து தமிழர்கள் அக்கொடுமையை வெளிக்கொண்டுவரத் தயங்குகின்றனர். தாங்களே கட்டமைத்த விம்பங்களை உடைக்க முடியாமல் பொன் விலங்கு பூட்டிய சூழ்நிலைக் கைதிகள் ஆகி உள்ளனர். சரணடைந்த தலைவர்கள் கொல்லபடுகிறார்கள் என்றால் தாங்கள் கட்டமைத்த அடங்காத் தமிழன், மறத் தமிழன், வீரத் தமிழன் என்ற விம்பங்கள் உடைந்துவிடும் என்ற அச்சத்தில் யதார்த்தத்தை உணர மறுக்கின்றனர்.

அவர்களின் மயிரைக் கூட இராணுவத்தால் தொடமுடியாது, அவர்களின் சாம்பலும் கிடைக்காது என்று புராண காலத்து கதை காலேட்சபம் பாணியில் கதையளப்பிற்கு எவ்வித குறைவும் இல்லை. அரசியல் தஞ்சம் கேட்கும் போது உள்ளுணர்வை கைவிட்டு எதையும் செய்யத் தயாராக இருக்கும் புலத்து உறவுகளுக்கு பல நாள் சரியான நித்திரையின்றி, சரியான உணவின்றி மரணப் போராட்டத்தை நடத்தியவர்கள் வேறு வழியின்றி சரணடைவதை பெரும் இழுக்காக அருவருப்பாக எண்ணுவதில் எவ்வித நியாயமும் இல்லை. புலத்து உறவுகளின் வாய் வீரத்திற்காக விட்டில் பூச்சிகள் போல் போராளிகள் மடிய வேண்டிய அவசியமில்லை.

சரணடைபவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேசச் சட்டங்களை உயர்த்திப் பிடித்து அவர்களது உயிரைப் பாதுகாக்கப் போராடுவதை விடுத்து எதற்காகவோ போராடுகிறார்கள். எப்போது? எதற்காகப் போராட வேண்டும்? என்ன கோரிக்கையை முன் வைப்பது தந்திரோபாயமானது? என்பதையெல்லாம் விட்டு சலசலப்பை ஏற்படுத்துவதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.

அன்று மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. வன்னி பூர்வீக மண். அங்கிருந்து மக்களை எழுப்பக் கூடாது என்றார்கள். எங்கள் தலைவர் பிரபாகரன் என்றார்கள்.

கடைசியில் ‘புலிகளை தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்கச் சொல்லுங்கள். நாங்கள் மற்றைய விடயங்கள் பற்றி கவனிப்போம்’ என்று கூறி மாணவர் பரமேஸ்வரனின் உண்ணாவிரத்ததை பிரித்தானிய அரசு முடித்து வைத்தது. அதனைத்தான் ‘வெளியே சொல்ல முடியாத முக்கியமான விடயத்தை பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது’ என்று புலிசார்பு ஊதுகுழல்கள் சிறிது காலம் ஊதித் திரிந்தன.

இன்று புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இவர்களோ எங்கள் தலைவர்கள் எல்லாம் பூர்வீக மண்ணை விட்டுத் தப்பிச் சென்று நலமாக காட்டுக்குள் தீவு ஒன்றில் இருப்பதாக திருப்திப்பட்டுக் கொண்டு ‘தலைவருக்கே சவாலா’ என்று கூறிக்கொண்டு உலா வருகின்றனர். புலிப் போராளிகளும் தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் அந்த மண்ணோடு மண்ணாக்கப்படுவது பற்றிச் சிந்தித்து செயற்பட அவர்களால் முடியவில்லை.

நிஜமாகவே புலிகளுக்கு இறுதியாக அமைந்த இந்த யுத்தத்தின் கடைசிச் சில நாட்கள் மிக முக்கியமானது. புலிகளை வேரோடு அறுத்தெறியும் திட்டம் மிகக் கச்சிதமாக நிறைவேற்றப்படுகிறது. அதனை அறிய முடியாது புலி ஐதீகத்தை ஏற்றி மயக்கத்தில் உள்ளது புலிகளின் தமிழக புலம்பெயர் ஆதரவுத்தளம். ‘முகம் இளமையாக உள்ளது.’ ‘முகத்தைத் திருப்ப முடியாது.’ ‘சேவ் எடுக்கப்பட்டு இருக்கிறது.’ ‘மீசையில் சில மயிர்கள் மிஸ்ஸிங்’ என்று புலத்து உறவுகள் எல்லாம் குற்றவியல் பரிசோதணையில் நிபுணர்கள் ஆகிவிட்டனர். இதற்கு இந்திய புலனாய்வுச் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவரின் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

No reason to doubt the statement of the Sri Lankan Army about the death of Prabakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam ( LTTE), and other leaders of the LTTE. Doubts about the circumstances relating to their death will remain. These doubts will have no impact on the ground situation. Pointless wasting time and space analyzing the doubts.
20-May-2009 : B. Raman – Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.

இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் உண்டு. இந்த யுத்தத்தை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய புலனாய்வுத்துறை. அவர்கள் யுத்தக் களத்திலும் உள்ளனர். வே பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதில் தான் சந்தேகங்கள் என்கிறார் பி ராமன். இந்த சந்தேகங்கள் யுத்த களத்தில் உள்ள நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறும் பி ராமன் அந்த சந்தேகங்களை ஆராய்வது அர்த்தமற்றது என்கிறார்.

புலனாய்வுச் சமூகத்தைச் சேர்ந்த பி ராமனுக்கு அது அர்த்தமற்தாக இருக்கலாம் ஆனால் மனிதாபிமான நோக்கில் செயற்படும் ஒவ்வொருவரும் அதனை ஆராய்வது தவிர்க்க முடியாதது. வே பிரபாகரன் மட்டுமல்ல புலிகளின் முக்கிய தலைவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது ஆராயப்பட வேண்டும்.

அவர்கள் கொல்லப்பட்டுள்ள முறை அதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜேவிபி காலகட்டத்தில் ஜேவிபி எவ்வாறு களையெடுக்கப்பட்டதோ அதே போன்றே இன்று புலிகளின் களையெடுப்பும் நடாத்தப்படுகிறது. ஒரு வித்தியாசம் அன்று ஜேவிபி களையெடுப்பில் சிவில் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த மஹிந்த ராஜபக்ச இன்று புலிகளின் களையெடுப்பை நடத்துகின்றார்.

ஜேவிபி களையெடுப்பில் அதன் தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவ்வமைப்பின் தலைவர்கள் இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டனர். களனியாற்றில் வீசப்பட்டனர். அதே போல் இன்று புலிகளின் களையெடுப்பில் சரணடைந்த அதன் தலவர் பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சுட்டுக்கொல்லப்பட்டு நந்திக் கடற்கரையில் வீசப்படுகின்றனர்.

மே 16ல் இந்திய தேர்தல் தங்களுக்கு எதிராக அமைந்ததைத் தொடர்ந்தே புலிகள் தங்களது இறுதிக் கட்டத்தை உணர்ந்தனர். அன்று (மே 16) காலையே அவர்கள் தங்கள் கணக்குத் தவறியதை அறிந்துகொண்டனர். உடனடியாக புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் ‘எதுவும் செய்யத் தயார்’ என அமெரிக் அதிபர் ஒபாமாவிற்கு பகிரங்கமாகத் தெரிவித்தார். ‘எதுவும் செய்யத் தயார்’ என்பது சரணடையவும் தயார் என்பதையே வெளிக்காட்டி நின்றது.

புலிகள் 400 * 600 சதுர மீ பரப்புள்ள ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதன் அளவு ஒரு உதைப்பந்தாட்ட மைதானம் அளவே இருக்கும். அந்நிலையில் ஜோர்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தான் பயங்கரவாத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாட்டிற்கு செல்லப் போகிறேன் என்று மே 16ல் தெரிவித்துவிட்டு தனது பயணத்தை குறுக்கிக் கொண்டு இலங்கை பயணமானார். ஜனாதிபதி பயணமாகும் போது தெரிவித்த கூற்றும் மறுநாள் மே 17 காலை விமானத்தில் இருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கியதும் இராணுவத்தின் வெற்றியை மிக உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரு சிறு பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்ட புலிகள் தொடர்ச்சியான தாக்குதல்கள் நித்திரையின்மை பசி ஆகியவற்றினால் ஏற்படும் களைப்பு என அவர்கள் மிகக் கடுமையான உடலியல் அசௌகரியத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்த விரக்தி, வெறுமை, மனவுறுதித் தளர்வு அனைத்தும் எதிர்பார்க்கக் கூடியதே. இருந்தும் அன்று (மே 17) வெளிவந்த சூசையின் தொலைபேசி வேண்டுகோள் ‘போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.”  எனத் தெரிவித்து இருந்தது.

ஆனால் அதே நேரப்பகுதியில் வந்த செல்வராஜா பத்மநாதனின் வேண்டுகோள் ”இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”’ என்றது. செல்வராஜா பத்மநாதனின் கூற்றுப்படி மே 17 பிற்பகலுடன் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனமாகின. அவர் ”இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.” எனத் தெரிவித்து இருந்தார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

அதேசமயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. (மே 17 இரவு மே 18 அதிகாலை) தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்ட இருந்தது. கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார்.

அதேநேரம் முள்ளிவாய்க்காலில் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் மே 17 2009 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் மே 18 2009 அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா, கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்ததாகவும் புதினம் இணையத்தளச் செய்தி தெரிவிக்கின்றது.

மே 18 2009 அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர் என்றும் அச்செய்தி கூறுகின்றது. இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாகவும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கும் இவ்விணையத் தளம் இந்தப் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தங்களுக்கு தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் இராணுவம் மே 17 2009 காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தது. இவர்கள் மீட்கப்பட்டனரா அல்லது சரணடைவின் போது ஒப்படைக்கப்பட்டனரா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இவற்றைப் பார்க்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 17 மாலைக்குப் பின் தாக்குதல் நடத்தக் கூடிய வலுவை இழந்துள்ளனர் அல்லது தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதற்குத் தயார் நிலையில் இருந்துள்ளனர் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக உள்ளது. ஏப்ரல் 5 – 6 ல் புலிகளின் கருமையமான போராளிகள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்ட போது புலிகளின் முக்கிய இராணுவத் தலைவர்கள் ஐவரும் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தலைவர்கள் கொல்லப்பட்டனர். மே 17 சரணடைவுக்கு முன்னான தாக்குதலில் சொர்ணம் சசி மாஸ்டர் ஆகிய இரு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அனைவரும் மே 18 காலைக்குப் பின்னரேயே கொல்லப்பட்டனர். அதாவது விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான உடற் காயங்கள் இதுவரை காட்டப்பட்ட அவர்களின் உடலங்களில் காணப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சார்ள்ஸ் அன்ரனி, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை ஆகியோர் உட்பட பலர் தலைப் பகுதியில் சுடப்பட்டே கொல்லப்பட்டு உள்ளனர். புலிகளது பிஸ்டல் குழுவினர் மரண தண்டனை வழங்கும் பாணியிலேயே இலங்கை அரச படைகளும் பழிவாங்கும் வகையில் இப்படுகொலைகளைப் புரிந்திருக்கலாம் என எமக்குக் கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றது.

கொல்லப்படுபவர்கள் தலையில், காதில், முகத்தில் என சுடப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். இவர்களின் உடலின் ஏனைய பாகங்களில் சுட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியவரவில்லை. நேற்று (மே 20 2009) கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது குடும்பத்தினர் அனைவரது உடலிலும் அவர்களது தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபாவின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, கடைசி மகன் 13 வயதேயான பாலச்சந்திரன் கூட தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேர்த்தியாக உடலின் குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் உள்ள துப்பாக்கிச் சுட்டுக் காயங்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டு உள்ளதையே புலப்படுத்துவதாக முன்னாள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய போராளியொருவர் தெரிவித்தார். இது முன்பு இயக்கங்கள் மரண தண்டனை வழங்கும் பாணியான படுகொலைகள் என்பது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.

எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் புலிகள் ஆயுதங்களைப் போடும் சரணடையும் முடிவுக்கு வந்த பின் மே 17 2009 இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் முக்கிய சந்தேக நபர்கள். அவர்கள் மீது இந்திய நீதிமன்றம் பிடியாணையும் விதித்து உள்ளது. அவர்கள் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழல் இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதும் இன உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதும் உறுதியானது. அவ்வாறான ஒரு அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்தியா அவர்களை படுகொலை செய்யும்படி கேட்டிருக்கலாம் என்ற பொருத்தமான வாதம் ஒன்று வைக்கப்படுகிறது.

புலிகளின் தலைவர்கள் தங்களிடம் சரணடைந்து விட்டனர் என்பது இலங்கை அரசுக்கு கௌரவத்தை அளித்தாலும் அவர்கள் பிரிவினைவாதத்தின் குறியீடாக இருப்பதால் அவர்களை அகற்றுவது நீண்ட காலப் போக்கில் இலங்கைக்கு லாபகரமானதாக அமைந்திருக்கும். போராட்டம் பிரிவினை ஈழக் கோரிக்கைகு இதனை ஒரு பாடமாக்கவும் இலங்கை தீர்மானித்து இருக்கலாம்.

புலிகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி இருக்காவிட்டாலும் ஒரு போராட்டத்திற்கான முன்னுதாரணமாக அமைந்ததால் அவர்களை இவ்வுலகை விட்டு அகற்றுவதில் சர்வதேச வல்லாதிக்க நாடுகளுக்கும் வேறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே பயக்கெடுதியை ஏற்படுத்தும் வகையில் புலிகளின் முக்கிய தலைவர்களும் குடும்பங்களும் குழுக்குழுக்களாக அல்லது குடும்பங்களாகக் கொல்லப்படுகின்றனர்.

இலங்கை – இந்திய அரசுகளின் அதிஸ்டம் இதனைத் தட்டிக் கேட்கக் கூடிய புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் புலிகளின் தலைவர்கள் சரணடையவும் இல்லை கொல்லப்படவும் இல்லை அவர்கள் தப்பித்துக் கொண்டனர் என்பதை நிரூபிப்பதிலேயே உள்ளனர். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் இருக்கும் போது மக்களைத் தடுத்து வைத்தும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் தங்களது பயங்கரவாத நடவடிக்கையால் இலங்கை அரசைப் பாதுகாத்து அரச பயங்கரவாதத்திற்கு நியாயத்தைக் கொடுத்து வந்தனர். அவர்களின் அழிவின் போதும் அரசு மீது கடுமையான யுத்தக் குற்றங்கள் வந்தவிடாமல் ‘நாங்கள் சரணடையவும் இல்லை. அரசு எங்களைக் கொல்லவும் இல்லை’ என்று அரசைக் காப்பாற்றுகின்றனர். மகிந்த ராஜபக்ச அரசுக்கு புலி இருக்கும் போதும் ஆயிரம் பொன் அழிந்த போதும் ஆயிரம் பொன்.

யுத்தம் மே 17ல் முடிவுக்கு வந்து சில நாட்கள் ஓடிய போதும் அரசு இன்னமும் யுத்தப் பகுதிக்குள் சுயாதீன ஊடகங்களையோ மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்கவில்லை. மாறாக யுத்தப் பகுதியை துப்பரவு செய்து தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முரண்பட்ட வாக்கு மூலங்கள்:

வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை.
மே 19 2009 : செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? இல்லையா: என்பதற்கு அப்பால் யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகள் இவ்விடயத்தில் ஈடுபடுத்தப்படுவதும் கைது செய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்கள் கௌரவமாக வாழ உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம்.

இன்னமும் விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.

இந்த சரணடைவை மத்தியஸ்தம் செய்தவர்கள் யார்?
எந்த நம்பிக்கையில் இந்த சரணடைவு ஒழுங்கு செய்யப்பட்டது?
எரிக்சொல்ஹெய்ம் விஜய் நம்பியார் ஆகியோரின் ஈடுபாடு என்ன?
புலிகளின் சர்வதேச இணைப்பாளர் ஏன் இது தொடர்பாக மெளனம் காக்கின்றார?
ஐநா அப்பகுதியின் செய்மதிப் பதிவுகளை வெளியிடுமா?
இந்தச் சரணடைவில் இந்தியாவினதும் இலங்கையினதும் பாத்திரம் என்ன???????

புலிகளின் இறுதிநாட்கள் ஒரு காலக் குறிப்பு:

மே 13 2009: இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு. தமிழ்நாட்டில் இன்று (மே 14 2009) இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்.

மே 14 2009 அமெரிக்க அதிபர்  ஒபாமா:  ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” இதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுபாப்பு புலனாய்வு மற்றும் முக்கிய அதிகாரிகள் இலங்கை சம்பந்தமாக இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

May 14, 2009 : Press Trust of India / Washington: A top US official today said the Obama Administration has kept India fully informed and is working very closely with New Delhi on the current Sri Lankan crisis. “We have been working very closely with India,” the Assistant Secretary of State, Richard Boucher, told a group of South Asian journalists at the Foggy Bottom headquarters of the State Department. Boucher, who has been actively involved in the Sri Lankan crisis, said Secretary of State Hillary Clinton has had consultations with her Indian counterparts on several occasions during this period. “We had visits of Indian diplomats wherein we were able to confer closely with India,” he said.

After every co-chair meeting involving France, Britain, the United States and Japan, Boucher said India has always been informed about it. “We always inform India and confer with India. So we are very much involved with India on the Sri Lankan situation,” Boucher said.

மே 14 2009 : முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் மே 14 2009 உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

மே 15 2009 : இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளது அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங்

மே 15 2009 : படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன், மகள், மற்றும் இரு உறவினர்கள் இன்று (மே 15 2009) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார்.

மே 15 2009: புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் மே 15 2009 கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே 16 2009: இன்று (மே 16 2009) காலை இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமான அரசியல் கட்சிகள் தோல்வியடைந்தன.

மே 16 2009: ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

மே 16 2009: ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள்இ இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மே 17 2009: வெள்ளைமுள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400*600 மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும்இ இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மே 17 2009: சூசை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி: ”ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை (மக்களை) அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை….. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது…. நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை.

நாங்கள் நேற்று முன்நாள் (மே 15 2009) இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்…. போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்…..

மே 17 2009: செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்: “எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”

மே 17 2009: ”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

மே 17 2009: இராணுவம் இன்று (மே 17 2009) காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர். இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 17 2009: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கி இருக்கலாமெனவும் இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

மே 18 2009 திவயின : இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 2009: இன்று (மே 18 2009) காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 18 2009: புதினம் – இணையத் தளம் : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று  (மே 17 2009) ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று  (மே 18 2009) அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர்.

படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று (மே 18 2009) அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் – அதாவது இன்று  (மே 18 2009) காலை பா.நடேசன் சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

18 May 09 The Economic Times : The fighting with Prabhakaran and his men erupted at 4 am Monday (May 18 2009) and was over within 90 minutes, leaving the man who had terrorized the country for over a quarter century dead near a lagoon in Mullaitivu district. Karuna, who is also an MP and vice president of the ruling Sri Lanka Freedom Party (SLFP), confirmed that the upper portion of Prabhakaran’s head was blown off. By then, the military had already killed his son Charles Anthony as well as all his top associates.

மே 18 2009: புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

May 19 2009: South Asian Media Net: “The government stance is clear. Norway is no longer the facilitators. The LTTE wanted to surrender their arms a little too late,” Dr. Kohona said.

மே 19 2009 : புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி சூசையின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கரையமுள்ளி வாய்க்காலின் சதுப்பு நிலப்பகுதியில் இவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மே 20 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

Pirabakaran_V விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.

தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.

பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது  புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.

புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.

அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.

எப்படி முடியும் இந்த யுத்தம்!!! : த ஜெயபாலன்

Erik_Solheim & Pirabaharan_V”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்”  என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்திற்குத் தெரிவித்து உள்ளார். சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்ற எல்ரிரிஈ இன் இறுதி வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது. எல்ரிரிஈ ஆயுதங்களை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க அனுமதிக்க மாட்டாது என்பதை இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 18 2009) அதிகாலை எல்ரிரிஈ வசம் உள்ள 250 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பிற்குள் இராணுவம் ஊடுருவ ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. உத்தியோக பூர்வமான அறிக்கைகளே மிகுந்த குழப்பத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு அப்பால் இன்னும் பல ஊகங்களும் செய்திகளாகின்றன. எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் எங்கே என்பது பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்குமான பேசுபொருளாகி உள்ளது.
நேற்று (மே 17 2009) மதியம் குறிப்பிடப்படாத ஒரு பகுதியில் இருந்து எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இச்செவ்வி அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் தொலைக்காட்சியிலும் பிரித்தானிய செய்தி நிறுவனமான சனல் 4 இலும் காண்பிக்கப்பட்டது. அதில் எல்ரிரிஈ இன் தலைவர் வே பிரபாகரன் இன்னமும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் ஆயுதங்களைக் கீழே போடத் தாயாராக இருப்பதாகவும் ஆனால் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என இச்செவ்வி வெளியானதன் பிற்பாடு நேற்று (மே 17 2009) மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். நேற்று தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்:
”எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதான செயன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளது. முல்லைத்தீவுப் பகுதியில் எங்களிடம் இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் உடன்பட்டு உள்ளோம். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறு பேர்வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் பொதுமக்கள்.

யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் உடன்பட்டு உள்ளார். நான் அவருடன் நான்கு மணிநேரம் உரையாடினேன். அதில் நாங்கள் அதற்கு உடன்பட்டோம். நாங்கள் இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒருவரும் பதில் தரவில்லை. யுத்தமும் நிறுத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னமும் இந்த யுத்தப் பகுதியிலேயே இருக்கின்றார். சுற்றி வளைக்கப்பட்ட இந்தப் பகுதியில் இருக்கும் போதே நான் அவருடன் கதைத்தேன். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடவே உடன்பட்டோம். சரணடையவல்ல.

நாங்கள் பொதுமக்களை ஒரு போதும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பொது மக்கள் எங்களுடைய உறவுகள் அல்லது எங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தை நம்பவில்லை. அதனால் அவர்கள் எங்களுடனேயே இருந்தனர். அவர்கள் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. இந்த முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெறுகிறது. பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகிறது. அந்த மக்கள் இலங்கை இராணுவத்திடம் செல்ல விரும்பவில்லை என்பதே நிச்சயமானது. நாங்கள் ஒரு போதும் மக்களைச் சுடவில்லை. சில சமயங்களில் இருபகுதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயப்பட்டு இருக்கலாம். நாங்கள் ஏன் எங்களது மக்களைக் கொல்ல வேண்டும்.”

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்னதாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நேற்று (மே 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோளில் ”நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இந்தியத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதியானதும் மே 16 2009ல் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் ”எதுவும் செய்யத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். அது ஆயுதங்களை ஒப்படைப்பது என்பதை மிகத் தெளிவாக நேற்று (மே 17 2009) புலிகள் அறிவித்து உள்ளனர். ”இந்த மோதல் ஒரு கசப்பான முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்த யுத்தத்தில் தங்கள் தோல்வியை எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்தார். ‘நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம். உயிரிந்தவர்களுக்காக மட்டும் நாங்கள் வேதனை அடைகின்றோம். இதற்கு மேல் எங்களால் நிற்க முடியவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் சுற்றி வளைக்கப்பட்ட சிறு நிலப்பரப்பொன்றினுள் புலிகள் உள்ளனர். அவர்களின் தலைமை அங்குள்ளனரா அல்லது வெளியேறி விட்டனரா என்பது இன்னமும் விடைகாணப்படாத வினாவாகவே உள்ளது.

மேலும் பெரும் தொகையான காயப்பட்டோர் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருக்கலாம் எனவும் அவர்கள் மிகக் கடினமான ஒரு உயிர்ப் போராட்டத்தில் உள்ளதாகவும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 72 மணிநேரத்தில் 70 000 பேர்வரை அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளியேறியவர்கள், காயப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் என வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பகுதிகளுக்கு அரசு மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்காமல் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 200 000 வரையான மக்கள் 20க்கும் உட்பட்ட முகாம்களில் நெருக்கடியில் உள்ள நிலையில் மேலும் 70 000 வரையானோர் அம்முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது முகாம்களில் மிகுந்த நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததனால் இலங்கை இராணுவத்திடம் சரணடைய மறுக்கும் புலிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அண்மைய நாட்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேதனையுடன் கழிகின்றது. இவ்வாறான ஒரு கசப்பான மிக வேதனையான சூழலுக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தான்தோண்றித் தனமான முடிவுகளுக்கும் குறுகிய அரசியல் லாபங்களுக்கும் மிகப் பாரிய விலையை இலங்கைச் சமூகம் கொடுத்து உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் சர்வதேசத்தையும் தொட்டுள்ளது. மறுமுனையில் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு வெற்றிகரமாக மூடி மறைத்து உள்ளது. இந்த யுத்தம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்திய ரணங்கள் அவ்வளவு இலகுவில் மாறிவிடாது.

இந்த கால்நூற்றாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெற்கில் கொண்டாடப்படுவது குறைநிலையானது. எல்ரிரிஈ மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனாலேயே அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பினை வழங்க அரசு தவறும்பட்சத்தில் புலிகள் மீளவும் தங்களைக் கட்டமைத்து தாக்குதல்களை நடத்தக் கூடிய வலுவுடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றுக்கணக்கான புலிகள் ஏற்கனவே யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களால் ஒரு மரபுரீதியான இராணுவமாக இயங்க முடியாமலிருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இராணுவ முகாமை தாக்கி அழித்துவிட்டுச் செல்லும் பலம் அவர்களிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்களுடைய சர்வதேச வலைப்பின்னலில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்நிலையில் அவர்களையும் உள்ளகப்படுத்திய ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு செல்வதன் மூலம் நிரந்தரமான ஒரு சமாதானத்தை நோக்கி இலங்கையை நகர்த்த முடியும்.

இன்று மே 17 சந்திப்பு : வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். : த ஜெயபாலன்

IDP_Campsமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Wanni IDPs : Their needs & Future

Meeting & Discussion

 17th of May 2009, Sunday, 4:30pm
 
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.

Futrher Information :

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
 
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

”தலைவர் வே பிரபாகரன் பொட்டம்மான் உள்ளே” சூசையின் மனைவி – ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” அமெரிக்க அதிபர் – ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” எஸ் பத்மநாதன் எல்ரிரிஈ

Obama_President_of_AmericaSelvarasa_Pathmanathan_LTTE

”I urge the Tamil Tigers to lay down their arms.” US President. ”we are ready to anything” S. Pathmanathan, LTTE.

”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று (மே 15 2009) கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி வழங்கிய தகவல்களின் படி எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுப் பிரிவுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் இன்னமும் அங்கேயே இருப்பதாகத் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அமெரிக்க அதிபருக்கு அளித்துள்ள பதிலின்படி எல்ரிரிஈ தங்களால் பணயம் வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்ரிரிஈ தங்கள் ஆயுதக் கிடங்குகளை வெடிக்க வைப்பதாகவும் அவர்கள் பெரும் கூட்டுத் தற்கொலைக்குத் தாக்குதலுக்கு தயாராகலாம் எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெpரிவத்து உள்ளார். இன்று வெடிமருந்து நிரப்பிய பஸ் வண்டி ஒன்றை புலிகள் 58வது படையணியை நோக்கி ஓட்டி வந்ததாகவும் அது இலக்கை அடைய முன்னரே வெடித்ததாகவும் அவ் இராணுவ அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வாறான பல தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Relted News & Articles:

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

._._._._._.

அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோள் :

”we have a humanitarian crisis that’s taking place in Sri Lanka, and I’ve been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I’m also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian team access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don’t believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.”

The United United States President Barrack ObamaStates president Barrack Obama.

._._._._._.

எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் விடுத்த பதில்: (தமிழ்நெற்றில் இருந்து)

“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people, The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity,

LTTE is extremely mindful of the civilian hardships and is prepared to take all necessary measures that would immediately stop the current carnage. The president’s call for stopping the humanitarian crisis has been heard by the LTTE and is willing to heed to his call. The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity. Our people are now at the mercy of the international community and it has to take full responsibility for the future of our people. We call on the Sri Lankan Government too to take note of the President’s call and do everything possible to stop a blood bath unfolding.

The LTTE has relentlessly fought for the rights of our people for over three decades and will always do what is best for them. President Obama’s recent remarks gives us hope that at last he has taken an active interest in the plight of our people. A military solution will not end the current conflict. A lasting, respectful and equitable solution for our people can only be reached through political means. We have always shown our preparedness to enter a political process as long as all parties were willing to act faithfully to the process.

Encouraged by the hopeful words of President Obama the LTTE is again stating its categorical position to enter a political process facilitated by neutral international parties and find a meaningful solution to the ethnic crisis. It is the best option for all people living in the island of Sri Lanka. Both the Sri Lankan Government and us, we together have to find a solution and a way to resolve the crisis. An onslaught by the Government will only result in thousands more dying and will not pave a way for a dignified and respectful outcome. We are ready to cooperate and work towards peace as Mr Obama has insisted.”

S. Pathmanathan, Head of LTTE’s International Diplomatic Relations.